என் மலர்
புதுச்சேரி

பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த ஊட்டச்சத்து வார விழா நடந்த காட்சி.
ராஜேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழா
- பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுரி ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவை நடத்தியது.
- இவ்விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார்.
புதுச்சேரி:
பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுரியும், வானூர் வட்டம் குழந்தை வளர்ச்சி திட்ட துறையும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவை நடத்தியது.
கல்லூரி செயலர் சிவகுமார் வாழ்த்துடன் நடைபெற்ற இவ்விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி, கல்லுரி முதல்வர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட விரிவாக்க அலுவலர் புவனேஸ்வரி, சித்தா ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் டாக்டர்.சண்முகம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெயபிரகாஷ், தோட்டக்கலை துணை இயக்குநர் வித்யா, வானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உஷாமுரளி, ஊராட்சி ஒன்றிய துணைபெருந்தலைவர் பருவகீர்த்தனா, மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறித்த செய்திகள் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டன. கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






