search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "husband dispute"

  பெரியபாளையம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளுடன் மாயமான பெண் சென்னையில் மீட்கப்பட்டார்.

  பெரியபாளையம்:

  திருவள்ளூர் மாவட்டம், ஆரணி தூட்டார் தெருவைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (38). ஆரணி பஸ் நிறுத்தம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (31). இவர்களுக்கு 9 வயது, 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  நேற்று முன்தினம் பாக்யராஜூக்கும் அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர், கடைக்கு வந்த பாக்யராஜ் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் 9 வயது மகள் மட்டும் தனியாக இருந்தார். குழந்தையிடம் பாக்யராஜ் விசாரித்தபோது ஜெயலட்சுமி தனது 2-வது மகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றதாக கூறினார்.

  இதனால் ஜெயலட்சுமியையும் தனது மகளையும், பாக்யராஜ் உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

  இதனால் மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தருமாறு பாக்யராஜ் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட னர்.

  அப்போது, ஜெயலட்சுமி சென்னை அனகாபுத்தூரில் இருப்பதை போலீசார் அறிந்து விரைந்து சென்றனர். கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு தனது சித்தி வீட்டிற்கு ஜெயலட்சுமி வந்ததை போலீசார் அறிந்தனர்.

  பின்னர், ஜெயலட்சுமியையும் அவரது மகளையும் மீட்டு ஆரணிக்கு அழைத்து வந்து பாக்யராஜிடம் ஒப்படைத்தனர். கணவன்- மனைவிக்கு போலீசார் அறிவுரை வழங்கி சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

  கபிஸ்தலம் அருகே கணவர் பேசாததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கபிஸ்தலம்:

  தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தேவங்குடி அண்ணாமலை நகரில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 27) இவர்களுக்கு திருமணமாகி 6 வருடமாகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பேசவில்லை. கணவர் பேசாததால் மனமுடைந்த கலைச்செல்வி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து கலைச்செல்வியின் தந்தை காசிநாதன் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தன் மகள் இறந்ததில் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார் அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் கலைச்செல்விக்கு திருமணமாகி 6 வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்தாரா? எனவும் தஞ்சாவூர் ஆர்.டி.ஒ விசாரணை நடத்தி வருகிறார்.

  3 பெண் குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

  உசிலம்பட்டி:

  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். கோவையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 37). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

  ஆண் வாரிசு இல்லாததால் கணவன்- மனைவி க்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் உமா மகேஸ்வரி வி‌ஷம் குடித்து விட்டதாக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இது குறித்து உமா மகேஸ்வரியின் தந்தை ராஜ வடிவேல் எழுமலை போலீசில் புகார் செய்துள்ளார். அதில், எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

  அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான சினிமாவில் பள்ளி காதலர்கள் மீண்டும் சந்தித்து காதலிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதுபோல பள்ளிக் காதலனை மீண்டும் சந்தித்த இளம்பெண் கணவரை பிரிந்து காதலனை மணந்துள்ளார்.
  ஜோலார்பேட்டை:

  வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவருக்கும் சாலை நகர் பகுதியை சேர்ந்த உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

  திருமணத்தின் போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் தகராறு வந்ததுள்ளது.

  பின்னர் சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி திருமணம் ஆன சில தினங்களிலேயே இளம்பெண் கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.

  சில நாட்கள் கழித்து மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர கணவர் சக்திவேல், மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். கோபமாக இருப்பதாக காட்டிக் கொண்ட இளம்பெண், கணவர் சக்திவேலுவுடன் செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அப்போது அவரது மனைவி வேறொரு வாலிபருடன் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் தாலியுடன் ஜோடியா கிரிவலம் செல்வதை கண்டு திடுக்கிட்டார்.

  அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது அவர்கள் புதுமண தம்பதிகள் போல நடந்து கொள்வதை கண்டு சந்தேகம், அடைந்து அவர்களை மறித்துள்ளார்.

  அப்போது இளம்பெண்ணுடன் கிரிவலம் வந்தவர் அவரது பள்ளி பருவ காதலன் கார்த்திக் என்பதும் அவரை புதிதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

  இதையடுத்து சக்திவேல் தனது மனைவி தன்னை ஏமாற்றி வேறொரு வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டதாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  போலீஸ் விசாரணையில் இளம்பெண்ணின் காதல் திருவிளையாடல் வெளிச்சத்துக்கு வந்தது.

  இளம்பெண் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது கார்த்திக்கை காதலித்தார். இருவரும் வெவ்வேறு பிரினர் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இளம்பெண்ணை சாலை நகரில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்புக்கு தங்க வைத்துள்ளனர்.

  அங்கு 2 மாதம் தங்கி இருந்த நிலையில் சக்திவேலுவுக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

  கணவன் வீட்டாரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் பழைய காதலன் கார்த்திக்கை சந்தித்து பேசி உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் ஜோடியாக கிரிவலம் வந்தது தெரியவந்தது.

  இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  செந்துறை: 

  அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் இளம்வைதி (வயது 32).இவரது மனைவி கனிமொழி (27) . இவர்கள் காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். நித்தீஸ் (6) தீபக் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.  இளம்வைதி சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மாதத்திற்கு இருமுறை ஊருக்கு வந்து செல்வார். நேற்று வீட்டிற்கு வந்த அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.

  இந்த நிலையில் கனிமொழி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். கனிமொழியின் தந்தை கண்ணையன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் கனிமொழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

  மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கனிமொழி தற்கொலை செய்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
  கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் வி‌ஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  செஞ்சி:

  விழுப்புரம் அருகே உள்ள அதனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது30).இவருக்கும் சென்னை கோவினம்பாக்கத்தை சேர்ந்த தண்டபாணி மகள்புஷ்பா (27) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

  இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த புஷ்பா வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு கெடார் போலீசார் சென்று சிகிச்சை பெற்று வரும் புஷ்பாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது புஷ்பா கூறியதாவது-

  எனது கணவர் என்னை ஆபாசமாக பேசி அடித்து உதைத்து வந்தார். மேலும் மாமியார் பானுமதி பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கிவரும்படி சித்ரவதை செய்தார் என கூறியுள்ளார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கடன் பணத்தை எடுத்து கணவர் மது குடித்ததால் மகளிர்குழு தலைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி நிலா (வயது 23). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

  நிலா மகளிர்குழு தலைவியாக இருந்து வந்தார். அவர் குழுவில் இருந்து ரூ.25 ஆயிரம் கடனாக வாங்கி வைத்திருந்தார்.

  அந்த பணத்தை எடுத்து மதியழகன் மது குடித்துள்ளார். இதுபற்றி அறிந்த நிலா மதியழகனை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நிலா தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுபற்றிய புகாரின் பேரில் வடபாதிமங்கலம் இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  மகளிர்குழு தலைவி தீக்குளித்து இறந்த சம்பவம் கருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  எட்டயபுரத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  எட்டயபுரம்:

  எட்டயபுரம் அருகே உள்ள அயன்கரிசல்குளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயனமூர்த்தி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா(வயது 25). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, நவின்(3), சுபாஷ்ஸ்ரீ(1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

  நாராயணமூர்த்திக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடித்துவிட்டு வந்து தினமும் தகராறு செய்துவந்துள்ளார். வீட்டிற்கு செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்கையில் வெறுப்படைந்த சத்யா நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து தகவலறிந்த மாசார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, தனிப்பிரிவு தலைமை காவலர் சகாதேவன் ஆகியோர் விரைந்து வந்து சத்யா உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாசார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சத்யாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக கோவில்பட்டி ஆர்.டி.ஓ.விஜயா தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

  ×