என் மலர்

  நீங்கள் தேடியது "Vande Bharat Rail"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 'சிலீப்பர்' சீட்டுகள் அமைக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்க 'ஐ.சி.எப்.' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
  • புதிய 10 ரெயில்கள் தயாரிக்க ரூ.675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  சென்னை:

  சென்னை 'ஐ.சி.எப்.' நிறுவனம் சார்பில் வந்தே பாரத் அதிவேக விரைவு ரெயில்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சீட்களில் உட்கார்ந்து மட்டுமே பயணம் செய்ய முடியும்.

  இந்நிலையில் பயணிகள் வசதிக்காக புதிதாக தூங்கும் வசதியுடன் கூடிய 'சிலீப்பர்' சீட்டுகள் அமைக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்க 'ஐ.சி.எப்.' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

  இதற்காக பெங்களூருவில் உள்ள 'பி.இ.எம்.எல்.' தொழிற்சாலையில் இதற்கான மாடல் வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 3 வாரத்தில் இந்த மாதிரி வடிவம் தயாரிக்கப்படுகிறது. மாதிரி வடிவம் அந்த ரெயில் ஒப்புதலானவுடன், 'வந்தே பாரத் சிலீப்பர்' புதிய ரெயில்கள் தயாரிக்கப்படும்.

  'வந்தே பாரத்' படுக்கை வசதியுடன் கூடிய புதிய 10 ரெயில்கள் தயாரிக்க ரூ.675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  மேற்கு வங்காளத்தில் உள்ள 'பெல்' திட்டாக் தொழிற்சாலையில் இந்த ரெயில் பெட்டிக்கான ஆரம்பகட்ட பணிகள் நடக்கிறது. ஐ.சி.எப். கூட்டு முயற்சியுடன் 80 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

  சென்னை ஐ.சி.எப். நிறுவனத்தில் இதன் இறுதி கட்டப் பணிகள் நடைபெற உள்ளது.

  இதுகுறித்து ஐ.சி.எப். நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  புதிய வந்தே பாரத் ரெயிலில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளுடன் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

  இந்த புதிய ரெயிலில் ஏ.சி. 2-வது வகுப்பு, ஏ.சி. 3-வது வகுப்பு, பெட்டிகள் அமைக்கப்படுகிறது. 10 புதிய ரெயில்கள் ரூ.675 கோடியில் தயாரிக்கப்படுகிறது.

  ஏ.சி.3-ம் வகுப்பு ரெயில் பெட்டிகள் அழகிய உயர்தர வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. அகலமான ஜன்னல், மின்விளக்கு வசதியுடன் சிறப்பாக உலகதரத்துடன் தயாரிக்கப்படுகிறது.

  மேல் படுக்கைக்கு பயணிகள் எளிதில் செல்ல 6 படி ஏணிகள் அமைக்கப்படும். இது பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் வீதம் உருவாக்கப்படுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ரெயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏசி பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர்.
  • மறுமார்க்கமாக இன்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்படுகிறது.

  நெல்லை:

  நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலை கடந்த 24-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட நிலையில், மறுநாள்(25-ந்தேதி) சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லை வந்தடைந்தது.

  இந்நிலையில் இன்று ரெயில்வே கால அட்டவணைப்படி நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. ஏற்கனவே இந்த ரெயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் பொங்கல் வரையிலும் விற்றுத்தீர்ந்து விட்ட நிலையில் இன்று காலை நெல்லையில் இருந்து பயணிகளுடன் தனது பயணத்தை வந்தே பாரத் முதல் முறையாக தொடங்கியது.

  இந்த ரெயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏசி பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர். இதேபோல் மதுரையில் இருந்து எக்சிகியூட்டிவ் பெட்டியில் 10 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 97 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர். முதல் நாளான இன்று மொத்தமாக எக்சிகியூட்டிவ் பெட்டியில் 52 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 487 பேரும் என மொத்தம் 539 பேருடன் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

  மறுமார்க்கமாக இன்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்படுகிறது. அதிலும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

  இதற்கிடையே இரவு 10.40 மணிக்கு இந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைவதால் நெல்லை மாவட்டம் திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்த வந்தே பாரத் ரெயிலுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி முருகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  மதுரை

  தென் தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

  இதைத்தொடர்ந்து தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டனர். அவர்கள் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தனர். ரெயில் மதுரைக்கு வந்தபோது மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மேளதாளங்கள் முழங்க கரகாட்டத்துடன் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மேயர் இந்திராணி, மாநில பா.ஜ.க. பொதுச் செய லாளர் ராமசீனிவாசன், பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட செயலாளர் சுப்பாநாகுலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் துரை பாலமுருகன், ஊடக பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி மாவட்ட செயலாளர் ஓம்சக்தி தனலட்சுமி, தமிழிசை சவுந்தரராஜன் நற்பணி இயக்க நிர்வாகிகள் நாச்சியப்பன், கருப்பையா, ரெயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  முன்னதாக பா.ஜ.க. வினர் ரெயிலில் பயணம் செய்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய மந்திரி முருகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • 9 வந்தே பாரத் ரெயில்களை திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

  சென்னை:

  பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

  திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கும் என 2 புதிய ரெயில்கள் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும் இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

  எனவே வந்தே பாரத் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எங்கக்காடு ரெயில்வே கேட் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி கற்கள் வீசப்பட்டன.
  • ரெயில்கள் மீது கல்வீசியது பள்ளி மாணவர்கள் 5 பேர் என்பது கண்டறியப்பட்டது.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலத்தில் ரெயில்களின் மீது கல்வீசும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. வந்தே பாரத் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது கல்வீச்சில் சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் கடந்த மாதம் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில் நாகர்கோவில் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ், பெங்களூரு செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது வடக்கஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள எங்கக்காடு ரெயில்வே கேட் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி கற்கள் வீசப்பட்டன.

  இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயில்கள் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருச்சூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் குட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், ரெயில்கள் மீது கல்வீசியது பள்ளி மாணவர்கள் 5 பேர் என்பது கண்டறியப்பட்டது. அந்த மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
  • சென்னை-விழுப்புரம் வழித்தடத்தில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது.

  சென்னை:

  சென்னை ஐ.சி.எப்-ல் தற்போது வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. இங்கு இதுவரை 33 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

  இவற்றில் 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

  தெற்கு ரெயில்வேயில் சென்னை சென்ட்ரல்-மைசூர், சென்னை சென்ட்ரல்-கோவை, காசர்கோடு-திருவனந்தபுரம் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த 3 வந்தே பாரத் ரெயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை-திருப்பதி, சென்னை எழும்பூர்-நெல்லை இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  இதற்கிடையில் 31, 32, 33-வது வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில், 31-வது வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு, சாம்பல் நிறம் கொண்ட இந்த ரெயில் சமீபத்தில்தான் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருந்தது. இந்த ரெயில் மங்களூரு-பாலக்காடு அல்லது சென்னை-மங்களூரு இடையே இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

  இந்நிலையில் சென்னை எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

  சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படுகின்றன. இதேபோல தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில் பாதைகளின் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

  சென்னை-விழுப்புரம் வழித்தடத்தில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த பாதை மேம்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரெயில் குறைந்தபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட வேண்டும். எனவே குறிப்பிட்ட வழித்தடத்தில் வேகத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  இப்பணி விரைவில் முடிந்து விடும். இந்த பணி முடிந்த பிறகு சென்னை எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயில் சேவை வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவை ரெயில்வே வாரியம் எடுக்கும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கேரளாவிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டு அதற்கான பெட்டிகள் கேரளா வந்தடைந்தது.
  • விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

  திருவனந்தபுரம்:

  இந்தியா முழுவதும் அதிநவீன வசதிகள் அடங்கிய வந்தே பாரத் ரெயில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் காசர்கோடு-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டு அதற்கான பெட்டிகள் கேரளா வந்தடைந்தது. தற்போது இந்த ரெயில் மங்களூரு-எர்ணாகுளம் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  முன்னதாக திருவனந்தபுரம் வரை வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் சில நடைமுறை சிக்கல் காரணமாக எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. மங்களூரு சென்ட்ரலில் வந்தே பாரத் ரெயில்களில் பராமரிப்புக்கான மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் சோதனை ஓட்டம் நடை பெற உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாக்குதலில் ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த கண்ணாடி ஜன்னலில் விரசல் ஏற்பட்டது.
  • கடந்த வாரமும் வந்தே பாரத் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை கடந்தசில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மலப்புரம் மாவட்டம் தனூர் மற்றும் பரப்பனங்காடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

  இந்த தாக்குதலில் ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த கண்ணாடி ஜன்னலில் விரசல் ஏற்பட்டது. அதிரஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் கடந்த வாரம் தலச்சேரி-மாஹே ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது வந்தே பாரத் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • வந்தே பாரத் ரெயில் சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்னையை வந்தடையும்.
  • விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு 3-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

  இந்த ரெயிலை வருகிற 7-ந் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார்.

  8-ந்தேதி முதல் பயணிகள் ரெயில்வே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம் வந்தே பாரத் ரெயில் விஜயவாடாவில் இருந்து கூடூர், ரேணிகுண்டா, வழியாக சென்னைக்கு வந்து அடைகிறது.

  இதே மார்க்கத்தில் சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

  விஜயவாடாவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்னையை வந்தடையும். முக்கிய 2 நகரங்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு பெற்று உள்ளது.

  வழியில் இந்த ரெயில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

  திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என விஜயவாடா கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெற்கு மத்திய ரெயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

  ஆந்திராவில் ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திரா பாத்திற்கும், செகந்திரா பாத்தில் இருந்து திருப்பதிக்கு என 2 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

  தற்போது விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு 3-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்றுவிட்டார்.
  • போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  திருப்பதி:

  தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரவந்தி. இவர் அந்த மாநில அரசு சமூக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று செகந்திராபாத்திலிருந்து திருப்பதி செல்வதற்கு புறப்பட்டு வந்தார்.

  செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1-ல் அவர் திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்காக காத்திருந்தார்.

  வந்தே பாரத் ரெயில் வந்து நின்றதும் அதில் இருந்து ஏராளமான பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

  ஸ்ரவந்தி கூட்டத்திற்கு நடுவே ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு ஓடினார்.

  இதனால் அதிர்ச்சடைந்த ஸ்ரவந்தி அலறி கூச்சலிட்டார்.

  அதற்குள் மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்று விட்டார்.

  ஸ்ரவந்தி வைத்திருந்த பையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது.

  இதுகுறித்த செகந்திராபாத் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

  அதில் தனது பையில் வைத்திருந்த வைர நெக்லஸ் உட்பட ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.

  போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரெயில்களில் ஏறும்போது பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin