search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில்
    X

    சேலம் வழியாக சென்னை-கோவை இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 8-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இதையடுத்து சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை புறப்பட்ட இந்த ரெயில் சேலம் வந்தபோது எடுத்த படம்.

    சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில்

    • அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது.
    • 9.15 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த டைந்தது.

    சேலம்:

    நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் 11-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    அதன்படி, சென்னையில் இருந்து கோவை வரை இயக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. அதி காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு 8 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை சென்ற டைந்தது. பின்னர் 9.15 மணிக்கு சேலம் ரெயில் நிலை யத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த டைந்தது. அப்போது சேலம் கோட்ட ரெயில்வே மேலா ளர் பங்கஜ்குமார் சிங் ரெயிலில் உள்ள சிறப்பம்சங்களை பார்வையிட்டு இன்றைய பயணத்தில் தொழில்நுட்ப ரீதியில் பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா? என ஆய்வு செய்தார்.

    பின்னர் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை சென்ற டைகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மொத்தம் 16 பெட்டி களை கொண்டதாகும். இதில் உயர்தர குஷன் சீட்கள், 360 டிகிரியில் சுழலும் வகையில் இருக்கை கள், சி.சி.டி.வி கேமரா வசதி, ரெயில் ஓட்டுநரை நேரடியாக தொடர்பு கொள்ள மைக் வசதி, நவீன கழிவறை, ஏசி வசதி, வைபை, ஜி.பி.எஸ், எல்.சி.டி திரைகள், தனித்தனி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த ரெயிலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

    Next Story
    ×