search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை- கோவை வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நிறுத்தம் இல்லை
    X

    ஜோலார்பேட்டை வழியாக வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. 

    சென்னை- கோவை வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நிறுத்தம் இல்லை

    • பயணிகள் ஏமாற்றம்
    • காலை 7.05 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது

    வேலூர்:

    தமிழ்நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரெயில் நிலையத்துக்கு தினமும் சராசரியாக சுமார் 38,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் ரூ.360 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

    இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வந்தே பாரத் ரெயில்கள் 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதில் சென்னை-மைசூர் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த வந்தே பாரத் ரெயில் புதன்கிழமை தவிர அனைத்து வார நாட்களிலும் சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20-க்கு மைசூரை சென்றடைகிறது. இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

    இதனால் காட்பாடி, வேலூர், அரக்கோணம், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அனைத்துப் பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த ரெயிலில் 4 மாதத்தில் காட்பாடியில் இருந்து மட்டும் 19,176 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.

    காட்பாடியில் சென்னை- மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு காட்பாடி சுற்றுப்புற மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை - கோவை இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இந்த வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று காலை நடந்தது. சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பரத் ரெயில் காலை 7.5 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது.

    கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயில் மாலை 5 மணிக்கு காட்பாடி ெரயில் நிலையத்தை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ெரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி ரெயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    சென்னை மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில் சென்னை கோவை வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×