என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலை காட்பாடியில் நிறுத்த வேண்டும்
    X

    சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலை காட்பாடியில் நிறுத்த வேண்டும்

    • மத்திய ரெயில்வே மந்திரிக்கு கதிர் ஆனந்த் எம்.பி. கடிதம்
    • மக்களின் மிக அவசர மற்றும் முக்கியமான கோரிக்கையாகும் என தகவல்

    வேலூர்:

    சென்னை- மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு காட்பாடி சுற்றுப்புற மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை - கோவை இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இந்த வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பரத் ரெயில் காலை 7.5 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது.

    கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயில் மாலை 5 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

    இந்த ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி ரெயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக வேலூர் தி.மு.க., எம் பி கதிர் ஆனந்த் மத்திய ரெயில்வே மந்திரி ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது;

    சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படு த்தப்பட்டதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    எனது வேலூர் மக்களவைத் தொகுதி மக்களின் சார்பாக, சென்னை - கோவை வந்தே பாரத் ரெயில் காட்பாடி அல்லது வாணியம்பாடி அல்லது ஆம்பூர் ஆகிய இடங்களில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இது இப்பகுதியில் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் மிக அவசர மற்றும் முக்கியமான கோரிக்கையாகும்.

    எனவே சென்னை-கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் விரைவு ெரயிலுக்கு காட்பாடி அல்லது வாணியம்பாடி அல்லது ஆம்பூரில் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×