என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாலிவுட்"

    இந்த படத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

    ஹாலிவுட்டில் கார் ரேஸிங்கை வைத்து இயக்கப்பட்ட பிரபலமான திரைப்பட சீரீஸ் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.

    இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன. இதற்கென உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

    இதன் 11வது மற்றும் கடைசி பாகம் ற்போது உருவாகி வருகிறது. 2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

    இந்நிலையில் படமானது 2028 மார்ச் 17 ஆம் தேதி தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் படத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கடைசி பாகத்திற்கு 'Fast forever' என பெயரிடப்பட்டுள்ளது.

    பட சீரிஸ் இன் பிரதான நாயகனான வின் டீசல் இந்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், மறைந்த நடிகர் பவுல் வால்கர் உடன் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் பாகத்தில்  தான் இருந்த புகைப்படத்தை வின் டீசல் பகிர்ந்துள்ளார். 

    இதற்கிடையே இந்த படத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு குறிப்பிடதக்கது. 

     

    'சின்னர்ஸ்' திரைப்படம் 13 பரிந்துரைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (BAFTA) விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    இதில் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட 14 பரிந்துரைகளைப் பெற்று போட்டியில் முதல் இடத்தில் உள்ளது.

    'சின்னர்ஸ்' திரைப்படம் 13 பரிந்துரைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 'ஹாம்நெட்' , 'மார்ட்டி சுப்ரீம்' மற்றும் 'சென்டிமென்டல் வேல்யூ' ஆகிய படங்களும் சிறந்த திரைப்படத்திற்கான போட்டியில் உள்ளன.

    இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி 22 அன்று லண்டனில் நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் சின்னர்ஸ் திரைப்படம் 16 பிரிவுகளிலும், ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் 13 பிரிவுகளிலும் போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    One Battle After Another திரைப்படம் 13 பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு நாமினேட் ஆகி உள்ளது.

    திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும்.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டில் 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் 24 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

    இதில் 16 பிரிவுகளில் நாமினேட் ஆகி ஆஸ்கார் வரலாற்றிலேயே அதிக பிரிவுகளில் நாமினேட் ஆன படமாக சின்னர்ஸ் (Sinners) திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

    இயக்குநர் ரையன் கூக்லர் இயக்கிய 'சின்னர்ஸ்' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒப்பனை அலங்காரம், சிறந்த ஒலி, சிறந்த விஎப்எக்ஸ், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் மற்றும் சிறந்த நடிகர் என 16 ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்போட்டியில் போட்டியிட தேர்வாகி உள்ளது.

    முன்னதாக ஆல் அபவுட் ஈவ், டைட்டானிக் மற்றும் லாலா லேண்ட் ஆகிய படங்களின் 14 பிரிவுகளில் போட்டியில் இருந்த நிலையில் சின்னர்ஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

    சின்னர்ஸ் படத்திற்கு அடுத்தபடியாக இந்த வருட ஆஸ்காரில் லியனார்டோ டி காப்ரியோ நடித்த 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) திரைப்படம் 13 பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு நாமினேட் ஆகி உள்ளது.

    அடுத்ததாக 'மார்ட்டி சுப்ரீம்', 'சென்டிமென்டல் வேல்யூ' மற்றும் 'ப்ராங்கன்ஸ்டைன்' ஆகிய படங்கள் தலா 9 பரிந்துரைகளைப் பெற்றுள்ளன.

    F1, தி சீக்ரெட் ஏஜென்ட், டிரைன் ட்ரீம்ஸ், ஹாம்நெட், பிராங்கண்ஸ்டைன், பிகோனியா உள்ளிட்ட படங்களும் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

    அதேநேரம் இந்தியாவின் சார்பில் ரேஸில் இருந்த ஜான்வி கபூரின் ஹோம்பவுண்ட் திரைப்படம் இறுதிப்போட்டிக்கு தேர்வாகாமல் ஏமாற்றம் அளித்தது. 

    • உலகப் புகழ்பெற்ற 'வாலண்டினோ' பேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
    • இது பேஷன் உலகில் 'வாலண்டினோ ரெட்' என்றே அழைக்கப்படுகிறது.

    உலகின் தலைசிறந்த பேஷன் ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவரான வாலண்டினோ கரவானி வயது முதிர்வு காரணமாக நேற்று தனது 93-வது வயதில் காலமானார்.

    இத்தாலியைச் சேர்ந்த இவர், உலகப் புகழ்பெற்ற 'வாலண்டினோ' பேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

    ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் அரச குடும்பத்தினர் வரை பலரும் வாலண்டினோவின் வாடிக்கையளர்கள் ஆவர்.

    ஆடைகளில் தனித்துவமான சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவதில் இவர் உலகப் புகழ் பெற்றவர். இது பேஷன் உலகில் 'வாலண்டினோ ரெட்' என்றே அழைக்கப்படுகிறது.

    1960-களில் இருந்து பேஷன் துறையில் கொடிகட்டிப் பறந்த இவர் 2008-ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.

    வாலன்டினோவின் வடிவமைப்புகள் இன்றும் பேஷன் உலகில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.  

    • அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 11-ம் தேதி கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.

    மினியாபோலிஸ் நகரில் ரெனி நிக்கோல் குட் என்ற பெண் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரும் மற்ற நடிகர்களும் 'பீ குட்' என்ற வாசகம் அடங்கிய பேட்ச் அணிந்து வந்திருந்தனர்.

    வெனிசுலா மீது அமெரிக்கா எடுத்து வரும் போர் நடவடிக்கை மற்றும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக 'நோ கிங்ஸ்' என்ற இயக்கத்தின் மூலம் ருப்பலோ தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் பேசிய மார்க் ருப்பலோ, டொனால்ட் டிரம்ப் உலகின் மிக மோசமான மனிதர் ஆவார். உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் அதிகாரத்தை இவரைப் போன்ற ஒருவரிடம் ஒப்படைத்திருப்பது ஆபத்தானது. இவர் பாலியல் பலாத்கார குற்றவாளி மற்றும் தண்டனை பெற்ற நபர் ஆவார். வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது என காட்டமாக விமர்சித்தார்.

    • ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் The Secret Agent விருதை வென்றது.
    • இந்தியப் பிரபலங்களில், பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்துகொண்டார்

    ஆஸ்கார் விருதுகளுக்கு அடுத்தப்படியான முக்கிய விருதுகளில் ஒன்று கோல்டன் குளோப் விருதுகள். சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனால் வழங்கப்பட்டு வரும் விருதுவிழா இந்த ஆண்டு அதன் 83 வது பதிப்பை எட்டியுள்ளது.

    2025 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைக் கௌரவிக்கும் இந்த விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் திரைப்படங்களுக்கான 14 விருதுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 13 விருதுகள் அடங்கும். மேலும் முதல் முறையாக சிறந்த பாட்காஸ்ட் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதில் "One Battle After Another" படம் அதிக விருதுகளை தட்டிச்சென்றது. "Adolescence" தொலைக்காட்சி பிரிவில் நான்கு விருதுகளை வென்றது, மேலும் "Hamnet" மற்றும் "Sinners" ஆகிய திரைப்படங்கள் தலா இரண்டு விருதுகளைப் பெற்றன.  Hamnet சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது. ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் The Secret Agent விருதை வென்றது. Sinners சிறந்த வசூல் சாதனையில் விருதுபெற்றது. சிறந்த அனிமேஷன் பிரிவில் KPop Demon Hunters விருதை வென்றது. சிறந்த இயக்குநர் விருதை பால் தாமஸ் ஆண்டர்சன் பெற்றறார். இந்த விருதுவிழாவில் இந்தியப் பிரபலங்களில், பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்துகொண்டார். 

    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் காசாவுக்கு நிவாரணம் வழங்கி வந்த 37 குழுக்களுக்கு இஸ்ரேல் தடை விதித்தது.
    • போரை விடப் பசியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு நாகரிகச் சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி.

    காசா பகுதியில் தொடரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க, பிரபல ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி ரஃபா எல்லைப் பகுதிக்கு நேரில் சென்றுள்ளார்.

    காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அங்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் காசாவுக்கு நிவாரணம் வழங்கி வந்த 37 குழுக்களுக்கு இஸ்ரேல் தடை விதித்தது.

    எல்லையில் ஆயிரக்கணக்கான லாரிகள் உணவு மற்றும் மருந்துகளுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவை காசாவுக்குள் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஐநாவின் அகதிகள் தூதராக நீண்ட காலம் பணியாற்றிய ஆஞ்சலினா ஜோலி, ரஃபா எல்லைக்கு நேரில் சென்று அங்குள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டார்.

    இதுகுறித்து பேசிய ஏஞ்சலினா, "இங்கு நடப்பது மனிதாபிமானத்திற்கு எதிரானது. பசியாலும் போரினாலும் வாடும் குழந்தைகளுக்கு உடனடியாக உதவி கிடைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே ஆஸ்கர் விரித்து வென்ற ஸ்பெயினைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகர் ஜேவியர் பார்டெம், "உதவிகளைத் தடுப்பது என்பது பொதுமக்கள் மீதான நேரடித் தாக்குதல்.

    இது போர்க்குற்றத்திற்குச் சமமானது. போரை விடப் பசியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு நாகரிகச் சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி" என்று இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    • ஓட்டல் ஊழியர்கள் அவருக்கு CPR செய்தும் பலனில்லாமல் போனது.
    • சான் பிரான்சிஸ்கோ போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

    ஆஸ்கார் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாமி லீ ஜோன்ஸ். மென் இன் பிளாக் படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார்.

    இந்நிலையில் இவரது மகளும் நடிகையுமான விக்டோரியா ஜோன்ஸ் (34), சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    சான் பிரான்சிஸ்கோவின் நோப் ஹில் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஃபேர்மாண்ட் ஓட்டலின் 14-வது மாடியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை விக்டோரியா ஜோன்ஸ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    ஓட்டல் ஊழியர்கள் அவருக்கு CPR செய்தும் பலனில்லாமல் போனது. தகவலறிந்து அங்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சான் பிரான்சிஸ்கோ போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த மரணத்தில் எந்தவித சதித்திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

    மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    போதைப்பொருள் பயன்பாடு, குடும்ப வன்முறை உள்ளிட்ட வழக்குகளில் கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை விக்டோரியா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் என நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
    • ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்ட படம் இது.

    ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடைசியாக 2023இல் வெளியான 'ஓபன்ஹெய்மர்' திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகள் வென்றது. இது அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓபன்ஹெய்மர் உடைய வாழ்க்கை கதையாகும்.

    இந்நிலையில் 'தி ஒடிஸி' என்ற புதிய படம் ஒன்றை நோலன் இயக்கி வருகிறார். இது இவரின் 13வது படம் ஆகும்.

    இதில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் என நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். புகழ்பெற்ற கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி இப்படம் உருவாகி உள்ளது.

    தற்போது 'தி ஒடிஸி' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்ட இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது. ஜமாக்ஸ் திரையில் ஒரு ஒரிஜினல் ஜமாக்ஸ் படத்தை காண அனைவரும் ஆவலுடன் உள்ளனர். 

    • இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன.
    • 11வது மற்றும் கடைசி பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படம் தற்போது உருவாகி வருகிறது.

    ஹாலிவுட்டில் கார் ரேஸிங்கை வைத்து இயக்கப்பட்ட பிரபலமான திரைப்பட சீரீஸ் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.

    இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன. இதற்கென உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

    இதன் 11வது மற்றும் கடைசி பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படம் தற்போது உருவாகி வருகிறது. 2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த கடைசி பாகத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோ இணைந்துள்ளார். இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு தலத்தில் ரொனால்டோ இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    படத்தில் ரொனால்டோ முக்கியபாத்திரம் ஒன்றில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. எனவே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ரசிகர்கள், ரொனால்டோ ரசிகர்கள் என இருவர் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

    • எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.
    • அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.

    டைட்டானிக் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் காம்ரூன்.

    தனது படங்களில் பிரமாண்டத்திற்காக அறியப்படும் கேமரூன் 2009 இல் ஒரு படத்தை இயக்கி வெளியிடுகிறார். அதுதான் 'அவதார்'.

    ஒரு திரைப்படத்தில் இவ்வளவு பிரமாண்டத்தை அதுவரை யாரும் பார்த்ததே இல்லை என்ற அளவுக்கு அவ்வளவு நுட்பமான காட்சி அமைப்புகள், நவீன VFXகள் என அப்படம் அமைந்தது.

    2154 ஆம் ஆண்டில் பண்டோரா எனும் கிரகத்தில் வசிக்கும் நவி இன மக்களைப் பற்றி ஆராய சென்று அவர்களில் ஒருவனாக மாறும் ஹீரோ ஜேக் சல்லி, அவர்களுக்காக தனது சொந்த மனித இனத்தையே எதிர்த்து போராடுவதாக படம் அமைந்திருந்தது.நெய்த்திரி என்ற நவி பெண்ணின் மீதான ஜேக் சல்லியின் காதலே இப்படத்தை நகர்த்தும் அச்சாணி.


    இப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியை பெற்று கிளாசிக் ஆனது. தொடர்ந்து கடந்த 2022 இல் அவதார் 2 ஆம் பாகமான தி வே ஆப் வாட்டர் வெளியானது.

    இது முதல் பாகம் அளவு கொண்டாடப்படவில்லை எனினும் முதலாமதை போலவே அதன் பிரமாண்ட காட்சிகளுக்காக போற்றப்பட்டது.

    இந்நிலையில் அவதார் சீரிஸ் உடைய கடைசி பாகமான ஃபயர் அண்ட் ஆஷ் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி உள்ளது.

    கதை:

    முதல் பாகத்தில் காடு, இரண்டாம் பாகத்தில் கடல் என நம்மை வியக்க வைத்த கேமரூன், இந்த மூன்றாம் பாகத்தில் பண்டோரா கிரகத்தின் எரிமலைப் பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

    அங்கு வசிக்கும் 'மாங்குவான்' எனப்படும் புதிய நவி இன மக்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் மற்ற நவி இனத்தவரைப் போல அமைதியானவர்கள் அல்ல.

    மாறாக வன்முறையும், பொறாமையும் கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இவர்களே சாம்பல் மக்கள் (Ash people) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தலைவி வராங் இந்த பாகத்தின் முக்கிய வில்லி ஆவார்.

    இந்த பாகத்தில், ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி தங்கள் குழந்தைகளைக் காக்கவும், மனிதர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் மீண்டும் போராடுகிறார்கள்.

    இவர்களுக்கு எதிராக மனிதர்களும், சாம்பல் மக்களும் கைகோர்ப்பது ஜேக்கின் குடும்பத்திற்குப் பெரும் சவாலாக அமைகிறது.

    இந்த சவாலை அவர்கள் முறியடித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஒரு மணி நேரம் கதை நகராமல் மிகவும் மெதுவாகச் செல்வது பலவீனமாகக் கருதப்படுகிறது. இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன.

    காட்சி அமைப்பு:

    படத்தின் மிகப்பெரிய பலமே அதன் VFX மற்றும் 3D தொழில்நுட்பம்தான். ஒவ்வொரு காட்சியும் மெனக்கிட்டு செதுக்கப்பட்டுள்ளது. எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.

    மலைக்க வைக்கும் அளவு, 3 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடும் வகையில், வழக்கமான கதைக்களத்தை வடிகட்டிய எடுத்த அவதார் 3, அதன் காட்சி பிரமாண்டத்திற்காக மட்டுமே வொர்த் என்று கூறமுடியும். இந்தப் படத்தை பெரிய திரையில் பார்த்தால் மட்டுமே அதன் முழுமையான அனுபவத்தைப் பெற முடியும்.

    நடிகர்கள்:

    ஹீரோ ஜேக் சல்லியாக சாம் வொர்திங்டன் தந்தையாகவும், தலைவனாகவும் முதல் 2 பாகத்தை விட முதிர்ச்சி காட்டி உள்ளார். நெய்த்திரியாக நடித்த ஜோ சால்டனா அன்பிலும் ஆக்ஷனிலும் சமமாக ஆதிக்கம் செலுத்துகிறார்.

    நெருப்பு உலகத்தின் சாம்பல் மனிதர்களின் தலைவியாக வரும் வில்லி வராங் கதாபாத்திரத்தில் ஷ்பானிஷ் நடிகை ஊனா சாப்ளின் சொல்லி அடித்திருக்கிறார். அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.

    பின்னணி இசை:

    இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்த சைமன் ஃப்ரான்ங்க்லென் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    சாம்பல் இன மக்கள் வரும் காட்சிகளில், ஆக்ஷன் காட்சிகளில் வரும் இசை ஈர்க்கிறது. குடும்ப சென்டிமென்ட்டிலும் இசையை பிழிந்திருக்கிறார் சைமன்!

    ஒட்டுமொத்தமாக அவதார் 3 ஒரு அருமையான காட்சி அனுபவம், கணிக்கக்கூடிய கதை அனுபவம். மொத்தத்தில் அவதார் 3 அறிவை விட புலன்களுக்கு ஒரு விருந்து.

    மாலைமலர் ரேட்டிங் : 3 / 5

    • 79 வயதாகும் ஸ்பீல்பெர்க் 'டிஸ்க்ளோஷர் டே படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக இருப்பது என்பது சாத்தியமற்றது.

    உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சைன்ஸ் பிக்ஷன் புனைகதை பக்கம் திரும்பியுள்ளார்.

    1982 இல் இவர் வேற்றுகிரகவாசி பற்றி இயக்கிய "E.T. தி எக்ஸ்டரா டெரஸ்ட்டியல்- " படம் உலகப் பிரசித்தம். தொடர்ந்து ஜுராசிக் பார்க் உட்பட பல்வேறு ஜானர்களில் பல கிளாசிக் படங்களை இயக்கினார் ஸ்பீல்பெர்க்.

    79 வயதாகும் ஸ்பீல்பெர்க் தற்போது 'டிஸ்க்ளோஷர் டே' என்ற வேற்றுகிரகவாசிகள் பற்றிய சைன்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார்.

    ஜோஷ் ஓ'கானர், எமிலி பிளண்ட், கோல்மன் டொமிங்கோ மற்றும் வயட் ரஸ்ஸல் போன்ற பிரபல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது 'டிஸ்க்ளோஷர் டே' டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

    "இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக இருப்பது என்பது அறிவியல் ரீதியாக சாத்தியமற்றது" என்று முன்பு ஒருமுறை ஸ்பீல்பெர்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் ஜூன் 12, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. 

    ×