என் மலர்
நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"
- ஒவ்வொரு வீட்டையும் அவர்களது பதவிக்கேற்ப அடையாளப்படுத்தியது தான் திராவிட மாடல் சாதனை.
- இளைஞர்கள் தான் தமிழ்நாட்டின் பலம், நீங்கள் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
* தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உயர்த்தும் வகையில் பொறுப்புணர்வு கூடி உள்ளது.
* ஒவ்வொரு வீட்டையும் அவர்களது பதவிக்கேற்ப அடையாளப்படுத்தியது தான் திராவிட மாடல் சாதனை.
* தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக நிலைநிறுத்த தொடர்ந்து பாடுபடுவேன்.
* அரசின் திட்டங்கள் மக்களுக்கு சேர்ந்து இருப்பதற்கு முக்கியமான காரணம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான்.
* ஒரு கிராம நிர்வாக அலுவலர் சரியாக இருந்தால் அந்த கிராமம் வளர்ச்சி அடையும்.
* டி.என்.பி.எஸ்.சி. மூலம் 45,126 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 12,894 பேர் பணியில் சேர்ந்துள்ளனர்.
* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இல்லம் தேடி கல்வி, உங்களுடன் ஸ்டாலின் ஆகியவை முன்னோடி திட்டங்கள்.
* கடந்த 5 ஆண்டுகளில் 1.56 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.
* தனியார் முதலீட்டில் 38 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்திருக்கிறோம்.
* இளைஞர்கள் தான் தமிழ்நாட்டின் பலம், நீங்கள் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும்.
* மனசாட்சியுடன் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.
- தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம்.
2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?
செப்டம்பர் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை "விடியா ஆட்சி வீட்டு பில்லே சாட்சி" என்று வீடு வீடாக சென்று அ.தி.மு.க. அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?
இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே. யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.
"அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- இன்று காலை குட் மார்னிங் மட்டுமல்ல, சூப்பர் மார்னிங்காக அமைந்திருக்கிறது.
- தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து ரூ.5000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
* மன நிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.
* இன்று காலை குட் மார்னிங் மட்டுமல்ல, சூப்பர் மார்னிங்காக அமைந்திருக்கிறது.
* 1.31 கோடி மகளிருக்கு சிறப்புத்தொகுப்பாக ரூ.5000 வழங்கி விட்டு வந்திருக்கிறேன்.
* வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று நினைக்காமல் அனைவருக்குமான முதலமைச்சராக உள்ளேன்.
* தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து ரூ.5000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
* உணர்ச்சிப்பெருக்கின் உச்சத்துடன் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன்.
* மகிழ்ச்சியுடன் பொறுப்புணர்வும் அதிகரித்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.
- தன்னம்பிக்கை கொண்ட பெண்களாக மாற்றியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு தடுக்க முயற்சிப்பதாக கூறி, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே அறிவித்து இருப்பதற்கு தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த X தளப் பதிவில் அவர், "மத்திய அரசு மகளிர் உரிமை மானியங்களை தடுக்க இருப்பதாக கூறி, முன்கூட்டியே அறிவித்துள்ளதாக தெரிவித்து இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய அரசு அதை தடுக்க முயற்சிப்பதால் தான், தனது அனைத்து தோல்விகளுக்கும் மத்திய அரசை குறை கூறும் பழக்கம் அவருக்கு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட அது தடுக்கப்படவில்லை என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மேலும் எந்தவொரு முடிவும் மத்திய அரசிடமிருந்து அல்ல, தேர்தல் ஆணையத்திடம் இருந்து வர வேண்டும். தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் இதை அறிவிக்கிறார். தமிழகத்தில் நிலவும் அதிக எதிர்ப்பு காரணமாக திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.
90 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணக்குகளில் ஒரே இரவில் அதைப் பெற்றதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள். இதற்காக ஜன்தன் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் இந்தியாவை தொடங்கிய நமது மாண்புமிகு பிரதமருக்கு தமிழக முதல்வர் பாராட்ட வேண்டும், நன்றி சொல்ல வேண்டும்.
மாண்புமிகு நரேந்திர மோடியின் முத்ரா கடன்கள் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனளித்துள்ளன, இது அவர்களை தொழில் முனைவோராகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்களாகவும் மாற்றியுள்ளது.
பெண்களுக்கான ஊக்கத்தொகையை அறிவித்து டாஸ்மாக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் ஒரு கணக்கெடுப்பு குடிகாரனைக் கொண்ட ஒரு குடும்பம் மாதத்திற்கு 6000 ரூபாய்க்கு மேல் மதுபானத்திற்காக செலவிடுவதாகக் கூறுகிறது.
தமிழ்நாடு அரசு கடன் ரூ. 4.5 லட்சம் கோடியில் இருந்து ரூ. 9.5 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. அதாவது ஒரு தமிழரின் கடனை ரூ. 1.4 லட்சமாகவும், வட்டிக்கு 40,000 ஆகவும் உயர்த்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 2000 அறிவித்துள்ளார், அதை தமிழக முதல்வர் இப்போது நகலெடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிகையாளர் திமுக அமைச்சரிடம் பொங்கல் ஊக்கத்தொகை ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டபோது, இந்த ஆண்டு கொடுத்தால் மக்கள் மறந்துவிடுவார்கள், அடுத்த ஆண்டு வழங்குவோம் என்று பதிலளித்தார், அவர்கள் அதைச் செய்தார்கள். இவை அனைத்தும் மு.க. ஸ்டாலின் தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக அறிவிக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்தி.
- மகளிர் உரிமைத் தொகை அடுத்த 2 மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தி இருக்கும் திட்டத்தை காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதி மணி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறேன். ரூ. 5000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும், எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்திகள்.
பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும், கவனத்தோடும் செலவிடப்படும். வீட்டுக்கும், நாட்டிற்கும் பயன்படும். அவர்கள் அதை தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தித்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன்.
மகளிர் உரிமைத் தொகை அடுத்த 2 மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி செய்த பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
- கோடைக்கால சிறப்பு தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று வரவு வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இம்மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று வரவு வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். எதிர்பாராத இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு!
சட்டமன்றத் தேர்தலைக் காட்டி அடுத்த சில மாதங்களுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை' தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என, 1.31 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் இன்று காலை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில், திராவிட மாடல் 2.0-இல் மகளிருக்கான உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டு மகளிர் வெல்லும் தமிழ் பெண்கள்-ஆக நடைபோட என்றும் துணை நிற்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
- முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
வெல்வோம்_ஒன்றாக!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை.
- தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
வெல்வோம்_ஒன்றாக!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது.
- தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக என தெரிவித்தார்.
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
பட்ஜெட்டில் "ஜீரோ" கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா?
தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு "ஜீரோ"-வைத் திருப்பியளிப்போம்.
தமிழ்நாடு vs தேசிய ஜனநாயகக் கூட்டணி எனும் இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக! என பதிவிட்டுள்ளார்.
- கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பந்தம் மேற்கொண்ட 1,179 திட்டங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
- அரசியல் பாகுபாடு பார்க்காமல் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
சென்னை:
சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பந்தம் மேற்கொண்ட 1,179 திட்டங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 36.52 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியை விட தமிழ கத்தின் வளர்ச்சி 3 மடங்கு அதிகமாக உள்ளது. 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
தொழில் துறையினருக்கு நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இப்போது முன்னணியில் உள்ளது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றி உள்ளோம். அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சியடைய கவனமாக செயல்பட்டு வருகிறோம்.
தொழில் துறையில் நாங்கள் செய்த சாதனைகளை அடுத்து வரக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நாங்கள் தான் முறியடிப்போம். கடந்த 5 ஆண்டுகளில் 7 டைடல் பூங்காக்களை உருவாக்கி உள்ளோம்.
இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41 சதவீதமாகும். திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல். மக்களுக்கான மாடல். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம். அரசியல் பாகுபாடு பார்க்காமல் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- "தேர்வுக்களம்" என்னும் கைபேசி செயலியையும் அறிமுகப்படுத்துகிறார்.
- ஒன்றிய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதி.
சென்னை:
சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.
அதைத் தொடர்ந்து, சென்னை செனாய் நகரில் 62 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 தேர்வர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, முதல் கட்டமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய சேவைகள் நெறிப்படுத்தப்பட்டு, கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்துகிறார்.
அனைத்து விதமான நடைமுறைகளையும் கைபேசியிலேயே எளிதாகக் கையாளும் விதமாக "தேர்வுக்களம்" என்னும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஒன்றிய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
அரசு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, திட்ட மேலாண்மை உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக் கொள்ள கட்டணமின்றி பயின்றிட பயிற்சிகள் வழங்கும் இணைய தளத்தை தொடங்கி வைத்து, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் பணியாளர்களுக்கு கல்லூரியின் வளாகத்திலேயே 3 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 அடுக்ககத்தில் 8 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
- முதலீடுகள் செயலாக்க மாநாடு என்பது இந்தியாவில் எங்கும் இல்லாத ஒன்று.
சென்னை கிண்டியில் 'CONVERSION CONCLAVE 2026' மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல், மக்கள் வளர்ச்சிக்கான மாடல்.
* தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கான பதில் இந்த மாநாடு.
* 'CONVERSION CONCLAVE 2026' மாநாட்டில் மட்டும் 52 நிறுவனங்களின் திறப்பு விழா நடந்துள்ளது.
* தொழில்துறையில் செய்த சாதனைகளை நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்து முறியடிப்போம்.
* தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெறுவதை பார்த்து பார்த்து உறுதி செய்கிறோம்.
* முதலீடுகள் செயலாக்க மாநாடு என்பது இந்தியாவில் எங்குமே இல்லாத ஒன்றை நடத்தி வருகிறோம்.
* தமிழ்நாடு தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
* இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு மட்டும் 41 சதவீதமாக உள்ளது.
* முதலீடுகள் செயலாக்க மாநாடு என்பது இந்தியாவில் எங்கும் இல்லாத ஒன்று.
* அனைத்து தொழில்துறையினருக்கும் நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
* தமிழ்நாடு தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
* கடந்த ஆண்டு இந்தியாவின் உற்பத்தி திறன் 4.5 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 14.7 சதவீதமாக உள்ளது.
* இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.






