அ.தி.மு.க.-பா.ஜ.க-வின் சதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்- ஜோதி மணி வரவேற்பு

மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்தி.மகளிர் உரிமைத் தொகை அடுத்த 2 மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி.
அ.தி.மு.க.-பா.ஜ.க-வின் சதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்- ஜோதி மணி வரவேற்பு
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தி இருக்கும் திட்டத்தை காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதி மணி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறேன். ரூ. 5000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும், எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்திகள்.

பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும், கவனத்தோடும் செலவிடப்படும். வீட்டுக்கும், நாட்டிற்கும் பயன்படும். அவர்கள் அதை தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தித்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

மகளிர் உரிமைத் தொகை அடுத்த 2 மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி செய்த பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com