search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோ பைடன்"

    • சில தினங்களுக்கு முன் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
    • தேர்தலில் இருந்து விலகிய பிறகு, முதல்முறையாக தொலைகாட்சியில் உரையாற்றினார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட அதிபர் ஜோ பைடன், சில தினங்களுக்கு முன் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

    மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாகவும், அவருக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த அதிபர் பைடன், தேர்தலில் இருந்து விலகிய பிறகு, நேற்று முதல்முறையாக தொலைகாட்சியில் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "ஆபத்தில் இருக்கும் நமது ஜனநாயகத்தை பாதுகாப்பது, எத்தனை பெரிய பதவிகளை விட மிகமுக்கியமான ஒன்று. புதிய தலைமுறையிடம் ஜோதியை வழங்குவது தான் சிறந்த வழியாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன்."

    "இது தான் நம் நாட்டை ஒருங்கிணைக்கும் தலைசிறந்த வழி. அடுத்த ஆறு மாத காலம், அதிபராக மேற்கொள்ள வேண்டிய பணிகளில் முழு கவனம் செலுத்துவேன்," என்று தெரிவித்தார்.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்று அழைத்தார்.
    • அவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறி வந்தனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.

    மீண்டும் அதிபர் தேர்தலில் களம் காணும் ஜோ பைடனுக்கு துவக்கம் முதலே அமோக வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், அவரது உடல்நிலையும் அவருக்கு எதிராக இருந்தது. டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் இந்த விஷயம் பொதுவெளியில் அம்பலமானது. டிரம்ப் உடன் பேசும் போது தடுமாறிய பைடன், அதன்பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்று அழைத்தார்.

    இதோடு துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை டிரம்ப் என்று அழைத்தார். இந்த சம்பவங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜோ பைடனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர்.

    இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.

    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "ஜனநாயக கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன்."

    "இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்-க்கு என் முழு ஆதரவு, ஒப்புதலை வழங்குகிறேன். ஜனநாயகவாதிகள் ஒன்றுகூடி டிரம்ப்-ஐ தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஜோ டைபனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டெலாவேரில் உள்ள ரெஹோபோத் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
    • இருப்பினும் அவருக்கு உடல் தளர்வு, இருமல், தொண்டை கரகரப்பு உள்ளது.

    இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிபர் ஜோ டைபனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டெலாவேரில் உள்ள ரெஹோபோத் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

    இந்நிலையில், ஜோ பைடன் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிபருக்கான கடமைகளை தொடர்கிறார் என்று வெள்ளை மாளிகை மருத்துவர் கூறியுள்ளார்.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பைடன், கொரோனாவுக்கான 6-வது டோஸ் கோவிட் எதிர்ப்பு மாத்திரையை உட்கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு உடல் தளர்வு, இருமல், தொண்டை கரகரப்பு உள்ளது. அவரது நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச விகிதம் மற்றும் வெப்பநிலை அனைத்தும் சாதாரண வரம்புகளுக்குள் உள்ளது என்று மருத்துவர் கெவின் சி ஓ கானர் கூறினார்.

    முன்னதாக அதிபர் பைடன் அளித்த ஒரு பேட்டியில், தனக்கு ஏதேனும் அவசர மருத்துவ கோளாறு ஏற்படும் பட்சத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
    • பைடன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.

    81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அதற்கு ஏற்றாற்போல் அண்மைக்காலமாக அவருடைய நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.

    ஜனாதிபதி தேர்தலையொட்டி டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.

    இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் தேர்தலில் போட்டியிடுவேன் என பைடன் பிடிவாதமாக உள்ளார்.

    இந்த நிலையில் ஜோ பைடன் தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அவரது மனநலம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், பைடன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் அந்த பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுக்க செல்கிறார். அப்போது பைடனின் மனைவி பதற்றத்துடன் ஓடி வந்து பைடனை தடுத்து அவருக்கு புரிய வைக்கிறார். அதன் பின்னர் பைடன் அதிர்ச்சியுடன் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.

    இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் விவாதங்களை உண்டாக்கி உள்ளது. பலரும் பைடனின் இந்த செயலை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
    • அதிபர் உடல்நிலை சரியாக வேண்டும்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரம் அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, வாஷிங்டனில் வைத்து அதிபர் பைடனை சந்திக்கலாம்.

    எனினும், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் அதிபர் பைடனின் உடல்நிலையை பொருத்தே இதுபற்றிய இறுதி முடிவு எட்டப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    "பிரதமர் நேதன்யாகு நகரில் இருக்கும் போது, இருநாட்டு தலைவர்களும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனினும், தற்போதைய சூழலில் எதையும் உறுதியாக கூறிவிட முடியாது. அதிபர் உடல்நிலை சரியாக வேண்டும், அவருக்கு கொரோனா பாதிப்பு குணமடைய வேண்டும்," என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

    இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் பட்சத்தில் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் குறித்த ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக அதிபர் பைடன் ஹமாஸ் உடன் அமைதி ஒபந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
    • செய்தியாளர்களிடம் வெற்றி செய்கையை காண்பித்து சென்றார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார்.

    தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து லாஸ் வேகாஸ் பயணத்தை ரத்து செய்த ஜோ பைடன், தான் நன்றாக இருப்பதை கூறும் வகையில் செய்தியாளர்களிடம் வெற்றி செய்கையை காண்பித்து சென்றார்.

    சில நாட்களாக சளி தொந்தரவு, இருமலால் ஜோ பைடன் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, டெலாவேரில் உள்ள ரெஹோபோத் வீட்டில் பைடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

    முன்னதாக அதிபர் பைடன் அளித்த பேட்டியில், தனக்கு ஏதேனும் அவசர மருத்துவ கோளாறு ஏற்படும் பட்சத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து இருந்தார்.

    • வேட்பாளர்கள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
    • டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

    அதிபர் தேர்தலை ஒட்டி அந்நாட்டு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இரு வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதில் டிரம்ப் நூலிழையில் உயிர்தப்பினார். இந்த சம்பவம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர், அதே இடத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், முன்னாள் அதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட AR-15 ரக துப்பாக்கிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட வேண்டும் என்று அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

    லாஸ் வேகாசில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் பைடன், "போரில் பயன்படுத்தக்கூடிய இது போன்ற ஆயுதங்களை அமெரிக்க வீதிகளில் இருந்து அகற்ற என்னுடன் இணையுங்கள். டொனால்டு டிரம்ப்-ஐ சுடுவதற்கு AR-15 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. இவற்றின் பயன்பாட்டை சட்டவிரோதமாக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • அந்நாட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்தது.
    • அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நூலிழையில் உயிர்பிழைத்தார். முன்னாள் அதிபர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குல் அந்நாட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது.

    இந்த நிலையில், முன்னாள் அதிபர் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

     


    அப்போது பேசிய அவர், "இந்த நாட்டின் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியது. இதனை குளிர்விக்கும் நேரம் வந்துவிட்டது. அரசியல் களம் உண்மையான போர் களமாகவோ, கொலை களமாகவோ மாறிவிட கூடாது. இது சோதனை காலக்கட்டம். இந்த நேரத்தில் வாக்குப் பெட்டி தான் போர் பெட்டி," என்று தெரிவித்தார்.

    தேர்தல் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியர் அதே இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்தியது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அமெரிக்காவில் முன்னாள் அதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டு பாதுகாப்பு துறை மீது ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    • 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும் தடுமாற்றமும் குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
    • நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'ரஷிய அதிபர் புதின்' என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

    அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தற்போதய அதிபர் ஜோ பைடனின் செயல்கலும் பேச்சும் சமீப காலமாக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. மீண்டும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிற்கும் 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும்  தடுமாற்றமும் குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    சமீபத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்புடன் நேருக்கு நேர் நடந்த விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடனின் உரையில் அதிக இடத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. சில நொடிகளுக்கு எந்த அசைவும் இன்றி ஜோ பைடன் உறைந்து நின்ற சம்பவமும் நடந்தது. அதைத்தொடர்ந்து ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்க வேண்டுமா என அவரது கட்சிக்குள்ளேயே கூச்சல் குழப்பங்கள் எழுந்துள்ளன. தான் ஒருபோதும் தேர்தலில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று பைடன் உறுதியாக நிற்கிறார்.

    ஆனால் பைடனின் பேச்சில் உள்ள தடுமாற்றம் குறைந்தபாடில்லை. நேற்று அமெரிக்காவில் வைத்து  நடந்த நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'ரஷிய அதிபர் புதின்' என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இன்று நடந்த பிக் பாய் கருத்தரங்கத்தில் துணை அதிபர் காமலா ஹாரிஸ் என்று சொல்வதற்கு பதிலாக 'துணை அதிபர் டிரம்ப்' என்று பைடன்  குறிப்பிட்டுள்ள வீடியோவும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

    இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி  பைடனின் தடுமாற்றம் குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார். டிரம்ப் விமர்சனத்தைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், 'அவர் [டிரம்ப்] சொல்வதைக் கேளுங்கள்' என்று தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு பைடன் தன்னையே கறுப்பின துணை அதிபருடன் அதிபராக பணியாற்றும் அமரிக்காவின் முதல் கறுப்பினப்  பெண் தான்தான் என்று பைடன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தன்மீதான சந்தேகங்களை நீக்க மருத்துவர்கள் பரிமதுரையின்பேரில் நரம்பியல் பரிசோதனைக்கும் தான் தயார் என்று பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன்.
    • இந்த பந்தயத்தில் இறுதிவரை ஓடிக் கொண்டு இருப்பேன்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர். எனினும், தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அதிபர் பைடன், "டொனால்ட் டிரம்ப்-ஐ தேர்தலில் வீழ்த்த முடியும் என்று முழுமையாக நான் நம்பவில்லை என்றால், மீண்டும் போட்டியிட மாட்டேன். ஊடகம் மற்றும் பல்வேறு தகவல்களுக்கு மத்தியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளேன். இந்த பந்தயத்தில் இறுதிவரை ஓடிக் கொண்டே இருப்பேன். டொனால்ட் டிரம்ப்-ஐ வீழ்த்துவேன்."

    "ஜனநாயக கட்சி சார்பில் இறுதி வேட்பாளர் தேர்வுக்கு இன்னும் 42 நாட்களும், பொது தேர்தல் துவங்க 119 நாட்களும் உள்ளன. எதிர்காலம் பற்றிய தெளிவின்மை மற்றும் தீர்மானங்களில் பலவீனம் ஏற்பட்டால் அது டிரம்ப்-க்கு சாதகமாக மாறி நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த தருணத்தில் நாம் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த கட்சியாக டொனால்ட் டிரம்ப்-ஐ வீழ்த்த வேண்டும்," என்று தெரிவித்தார். 


    • டிரம்புடனான விவாதத்தின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.
    • அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு கடவுள் கூறினால் மட்டுமே வெளியேறுவேன்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்பது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முந்தைய நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 26-ந்தேதி நடந்தது. இதில் அதிபர் ஜோபைடன், டொனால்டு டிரம்ப் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

    டிரம்ப் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். 81 வயதான அவரால் சரிவர பதில் அளிக்க முடியவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை நேரடி விவாதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நேரடி விவாதத்தில் ஜோ பைடனுக்கு பின்னடைவு ஏற்பட்டதால் அவர் தோல்வியை தழுவலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனால் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனை மாற்ற வேண்டும் என அவரது சொந்த கட்சியினரே கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

    வயதானாலும் தேர்தலில் போட்டியிடுவதில் ஜோ பைடன் உறுதியாக இருந்து வருகிறார். இது தொடர்பாக அவர் பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    டிரம்புடனான விவாதத்தின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சளி பிடித்து இருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தேன். நேரடி விவாதத்தில் சரியாக செயல்படாததற்கு நான்தான் காரணம். இதில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஜனநாயக கட்சியில் எனக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    பெரும்பாலான தலைவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு கடவுள் கூறினால் மட்டுமே வெளியேறுவேன். நான் போட்டியில் இருந்து வெளியேறும் எண்ணம் எதுவும் இல்லை. மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

    • இந்த விவாத நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.
    • அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர்.

    இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகவும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார்.

    எனவே இந்த விவாத  நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பைடன் அதன்பின் ஆற்றிய உரையிலும்கூட டெலிபிராம்டரில் END OF THE QUOTE - உரை முடிந்தது என்று எழுதப்பட்டிருந்ததையும் சேர்த்து வாசித்தது சர்ச்சையாகியுள்ளது.

    அவரது கட்சிக்குள்ளிருப்பவர்களே பைடன் அதிபர் தேர்தலில் நிற்காமல் இருப்பதே நல்லது என்று கருத்து கூறி வருகின்றனர். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்சல் ஒபாமா பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர். பைடனின் தடுமாற்றம் அமெரிக்க மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிஎன்என் தொலைக்காட்சி தற்போது கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதன்படி தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி, டிரம்பா பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர்.

    அதேசமயம் டிரம்பா கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிரம்பை விட வெறும் 6 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே கமலா ஹாரிஸ் உள்ளார். டிரம்பை விட மிட்ச்சல் ஒபாமா 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

     

    ஆனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கமலா ஹாரிஸுக்கு பெண் வாக்காளர்களின் ஆதாரவு கணிசமாக உள்ளது. எனவே கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக அதிக வாய்ப்பு உள்ளது என்று இதன்மூலம் தெரியவருகிறது. 

    ×