search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Election"

    • டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் கலவரத்தில் ஈடுபட்டதில் 7 பேர் பலியாகினர்.
    • கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் முன்னோடி வேட்பாளராக உள்ளார். ஆனால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அதில் முக்கியமான வழக்கு, கேபிடால் கலவர வழக்கு. அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் டிரம்ப் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டினார். இந்த சூழ்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக 2021ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் (கேபிடால் கட்டிடம்) புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் பலியாகினர்.

    டிரம்ப் ஆதரவாளர்களின் கிளர்ச்சியால் 7 பேர் இறந்ததாக செனட் அறிக்கை உறுதி செய்தது. கிளர்ச்சியைத் தூண்டியதற்காக டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் செனட் சபையால் விடுவிக்கப்பட்டார். எனினும், பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பான கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவருகிறார்.

    இவ்வழக்கில் டிரம்ப், உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு இடையூறு செய்தது, அரசாங்கத்தை ஏமாற்ற சதி செய்தது மற்றும் கிளர்ச்சியைத் தூண்டுயது ஆகிய 3 முக்கிய பிரிவுகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

    இந்நிலையில் டிரூத் சோஷியல் (Truth Social) எனப்படும் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் "ஜோ பைடனின் நீதித்துறையின் வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், ஜனவரி 6 ஆம் தேதி வழக்கின் விசாரணைக்கு நான் ஒரு "இலக்கு" என்பதால் விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். அனேகமாக இது என் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கலையும், என்னை கைது செய்யும் நடவடிக்கையையும் குறிக்கலாம்" என டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

    மேலும் இது குறித்து ஒரு பேட்டியில் "என்னை இந்த நடவடிக்கை தொந்தரவு செய்கிறது. ஆனால் நான் பயப்படவில்லை. அவர்கள் மக்களை இழிவுபடுத்தவும், பயமுறுத்தவும் முயற்சிக்கிறார்கள். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் பெரிதாக மாற்றப் போகிறோம். சொல்வதற்கு அவ்வளவுதான் உள்ளது." என்று தெரிவித்தார்.

    வரும் நாட்களில அவரின் அரசியல் எதிர்காலம் எந்த திசையில் செல்லும் என்பதை இந்த வழக்கின் போக்கு முடிவு செய்யும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • தற்போது ஜோ பைடனுக்கு 80 வயதாகிறது.
    • அமெரிக்க மக்களுக்கு நான் நேர்மையாக இருப்பேன்.

    வாஷிங்டன் :

    அமெரிக்க நாட்டில் அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதையொட்டி அவர் அளித்த பேட்டியில், "அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் இது குறித்து நான் உறுதியான முடிவு எடுக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கு எனக்கு உடல்நலப் பிரச்சினை தடையாக இருந்தாலும், அமெரிக்க மக்களுக்கு நான் நேர்மையாக இருப்பேன்" என்று கூறினார்.

    தற்போது ஜோ பைடனுக்கு 80 வயதாகிறது. அடுத்த ஆண்டு அவருக்கு 81 வயதாகி விடும். ஆனாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பது, அந்தப் பதவிக்காக ஜனநாயகக்கட்சியில் போட்டியிட ஆர்வமாக உள்ள நிக்கி ஹாலே உள்ளிட்டவர்களை அதிர வைத்துள்ளது.

    குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ள டொனால்டு டிரம்புக்கு அப்போது 77 வயதாகி விடும்.

    • அமெரிக்காவில் 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.
    • இவர்களில் 4 பேர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

    வாஷிங்டன்

    அமெரிக்காவில் வருகிற 8-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.

    இந்த நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் 5 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின. இவர்களில் 4 பேர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், தங்களின் பதவியை தக்கவைக்க மீண்டும் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.

    அவர்கள் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் ஆவர். இவர்கள் 4 பேரும் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். 57 வயதான அமி பெரா பிரதிநிதிகள் சபைக்கு 6-வது முறையாகவும், ரோ கண்ணா (46), ராஜா கிருஷ்ணமூர்த்தி (49) மற்றும் பிரமிளா ஜெயபால் (57) 4-வது முறையாகவும் போட்டியிடுகின்றனர். இவர்களில் பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பதும், பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே இந்திய வம்சாவளி பெண் ஆவார்.

    இவர்கள் 4 பேரையும் தவிர்த்து மிச்சிகன் மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீ தானேதர் முதல் முறையாக பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிடுகிறார். இவரும் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராகவே களம் இறங்கியுள்ளார். இவர் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் 5-வது இந்தியராக இருப்பார்.

    • தேர்தல் நாளன்று அரசியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
    • டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் சதி மற்றும் தீமையின் பொய்களை பரப்பி வருகிறார்கள்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் வரும் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இது பிரதிபலிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டெலிவிஷனில் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமெரிக்க தேர்தல் முடிவுகளை எந்த வேட்பாளராவது ஏற்க மறுத்தால், அது நாட்டை குழப்பத்துக்கான பாதையில் தள்ளிவிடக்கூடும். இது இதுவரை நடக்காதது. இது சட்டவிரோதமானது. இது அமெரிக்காவுக்கும் எதிரானது.

    தேர்தல் நாளன்று அரசியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

    முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் சதி மற்றும் தீமையின் பொய்களை பரப்பி வருகிறார்கள்.

    2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றது என்று டிரம்ப் சொல்கிற பெரிய பொய்தான், 82 வயதான சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி மீதான தாக்குதலுக்கும், நாடாளுமன்ற தாக்குதலுக்கும் காரணம் ஆகும்.

    கடந்த 2 ஆண்டுகளில் அரசியல்வன்முறை மற்றும் வாக்காளர்கள்மீதான அச்சுறுத்தலுக்கும் இந்தப் பொய்தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் இதை எதிர்க்கட்சியான குடியரசு கட்சி நிராகரித்துள்ளது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கெவின் மெக்கார்த்தி கூறுகையில், "ஜனாதிபதி பைடன் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஏனென்றால் அவர் தனது விலைவாசி உயர்வுகளுக்கு வழிவகுத்த தனது கொள்கைகள் பற்றி அவரால் பேச முடியாது" என தெரிவித்தார்.

    அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த நாட்டின் உளவு அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்து உள்ளன. #USElection #Interference #Vote
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என எழுந்துள்ள புகார் பற்றி ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த நவம்பர் 6-ந் தேதி, ஒட்டுமொத்த பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையின் 33 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தல், டிரம்பின் 2 ஆண்டு கால ஆட்சிக்கான பொது வாக்கெடுப்பாக கருதப்பட்டதால் உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஆனால் இந்த தேர்தலிலும் ரஷியா தலையிட முயற்சிப்பதாக புகார் எழுந்தது. அத்துடன் சீனாவும் இந்த தேர்தலில் தலையிட முயற்சிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புகார் தெரிவித்தார். இதை சீனா திட்டவட்டமாக மறுத்தது. பிற எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் சீனா தலையிட்டதே இல்லை என அந்த நாட்டு அரசு கூறியது.

    ஈரான் மீதும் புகார் கூறப்பட்டது.

    தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கூடுதலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதேபோன்று செனட் சபை தேர்தலில் குடியரசு கட்சி அதிக இடங்களை பிடித்தது.

    இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை, செனட் சபை தேர்தலில் எந்தவொரு வெளிநாடும் தலையிடவில்லை என அமெரிக்காவின் 17 முன்னணி உளவு அமைப்புகள் உறுதிபட தெரிவித்துள்ளன.

    இதுபற்றி தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் டான் கோட்ஸ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-

    நமது நாட்டின் தேர்தல் உள்கட்டமைப்பில் எந்த சமரசமும் நடைபெறவில்லை. வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையிலோ, ஓட்டு எண்ணிக்கையை தடுக்கவோ, ஓட்டு எண்ணிக்கையை சரிபார்க்கவோ தடைகள் செய்யப்பட்டன என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

    2018-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரஷியா, சீனா, ஈரான் உள்ளிட்ட பிற நாடுகள் தங்கள் நலன்களை மேம்படுத்திக்கொள்வதற்காக, அமெரிக்காவை இலக்கு வைத்து நடவடிக்கைகள் எடுத்ததற்கோ, பிரசாரங்களில் தாக்கங்களை ஏற்படுத்தியதற்கோ ஆதாரம் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #USElection #Interference #Vote
    ×