என் மலர்
நீங்கள் தேடியது "சூர்யா"
- 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் குறித்து திரைபிரபலங்கள் பலரும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காயத்ரி ரகுராம்நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

காயத்ரி ரகுராம் - சூர்யா
இப்படம் குறித்து சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பல திரைபிரபலங்களும் படம் குறித்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ராக்கெட்ரி படத்தை பார்த்த காயத்ரி ரகுராம் தனது சமுக வலைத்தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியர் இல்லையா? இந்தியா வாழ்க என்று சொல்வதில் பெருமையாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பல விவாதங்களை கிளப்பி உள்ளது.
ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா? pic.twitter.com/7FBw0urTMO
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) July 5, 2022
- இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
- இந்த படம் இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் ஜூன் 1-ஆம் தேதி வெளியான மாதவனின் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

சூர்யா
இதைத்தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'சூர்யா 41'. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.
இதனிடையே நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா ஹெக்டே
அதன்படி, இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஒரு சில காரணங்களுக்காக யூ.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தின் மூலம் பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
- இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்
சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக சூர்யா எந்தவித சம்பளமும் பெறவில்லை என மாதவன் சமீபத்தில் கூறினார். இந்நிலையில், நடிகர் மாதவன் மற்றும் சூர்யா இருவரும் சமூக வலைதளத்தில் அவர்களின் நீண்டகால நட்பு மற்றும் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வந்தனர்.

சூர்யா - மாதவன்
அப்போது பேசிய மாதவன், " சூர்யா நடிப்பில் வெளியாகிய 'கஜினி' படத்தில் நடிப்பதற்கான முதல் வாய்ப்பு எனக்கு தான் கிடைத்தது. ஆனால் அந்தப் படத்தின் இரண்டாவது பாதி பிடிக்காததால் அந்த கதையை நிராகரித்து விட்டேன். தொடர்ந்து அந்தப் படத்தில் கமிட்டான சூர்யா, தன்னை வருத்திக்கொண்டு நடித்ததை பார்த்து நான் வியப்படைந்தேன்" என கூறினார்.
- ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார்.
- ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார்.

சூர்யா - மு.க.ஸ்டாலின்
ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூர்யாவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் "தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கார் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!" என்று தெரிவித்திருந்தார்.

சூர்யா - மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் நடிகர் சூர்யா, தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். சூர்யா வெளியிட்டுள்ள அந்த பதிவில், "தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்" என்று கூறியுள்ளார்.
தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் 🙏🏽 @mkstalin https://t.co/hkqUGRTCmV
— Suriya Sivakumar (@Suriya_offl) June 29, 2022
- 2022-ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்வுக்கு ஆஸ்கர் குழு 397 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
- இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் இடம் பெற்றுள்ளனர்.
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இதைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சூர்யா - முதல்வர் ஸ்டாலின்
இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கஜோலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்கர் பேனலுக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார். நடிகர் சூர்யாவை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2022
வானமே எல்லை!
- திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது.
- ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர்கள், இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது.

கஜோல்
இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும், புதிய உறுப்பினர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள். நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்
இப்படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக மாதவன் முன்பே அறிவித்திருந்தார். ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாதவன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதன்பின் அதுகுறித்து விளக்கம் அளித்து மாதவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா ராக்கெட்ரி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவை மாதவன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், மாதவன் சூர்யாவை தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று அறிமுகப்படுத்திவைக்கிறார். நம்பி நாராயணன், தான் சூர்யா மற்றும் அவரின் தந்தை சிவகுமாரின் ரசிகன் என்று கூறுகிறார். இது வீடியோ குறித்து பதிவிட்டுள்ள மாதவன் நம்பி நாராயணன் சார் சூர்யா மற்றும் அவரது தந்தையின் படங்களின் தீவிர ரசிகர். என் சகோதரர் சூர்யாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணர முடியும் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நம்பி நாராயணன் சார் சூர்யா மற்றும் அவரது தந்தையின் படங்களின் தீவிர ரசிகர்.@Suriya_offl . Only my bro can make me feel sooo good .❤️❤️🚀🚀🙏🙏 https://t.co/2DXe62TelR
— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 28, 2022
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம்.
- இப்படம் மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூல் ரூ.400 கோடியை தாண்டி விடும் என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. இந்த வெற்றியால் திரையுலகினர் பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். இளையராஜாவும் வாழ்த்துத்துகள் சகோதரரே என்று சமூக வலைத்தளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வெற்றிக்கு காரணமானவர்களுக்கு பரிசு கொடுத்த கமல்ஹாசன், முதலில் கவுரவ வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை வீடு தேடிப்போய் பரிசளித்தார். உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் வாங்கிக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.

சூர்யா - கமல்
இந்த நிலையில் சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் புதிதாக வாங்கிக் கொடுக்கப்பட்ட வாட்ச் இல்லை என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய சமயத்தில் முதன் முதலில் வாங்கிய விலை அதிகமான பொருள் இந்த ரோலக்ஸ் வாட்ச்தான். இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தார். மனதுக்கு நெருக்கமான இந்த வாட்ச்சைத்தான் சூர்யாவுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன் என்று லோகேஷ் கூறியுள்ளார்.
- சூர்யா கைது செய்யப்பட்டதால் பாஜகவினர் காவல்நிலையம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- விபத்தை ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் சூர்யா மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டு
திருச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் கடந்த 11ம் தேதி நடந்த விபத்து தொடர்பாக, பாஜகவின் ஓபிசி பிரிவு செயலாளரும், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சூர்யா குற்றம்சாட்டினார்.
திருச்சியில் இன்று பேட்டி அளித்த சூர்யா, விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். என்னை கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறார்கள், என்றார்.
அவர் பேட்டி அளித்த சிறிது நேரத்தில் சூரியாவை கன்டோன்மென்ட் காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த பாஜகவினர் அங்கு திரண்டு வந்து காவல்நிலையம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
விபத்து நடந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. விபத்தை ஏற்படுத்தியவர் மீது தவறு உள்ள நிலையில், சூர்யா மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஆனால், தனியார் பேருந்து மோதியதில் தனது கார் சேதமடைந்ததாக கூறி சூர்யா நஷ்ட ஈடு கேட்டு மிரட்டியதாகவும், நஷ்ட ஈடு வழங்க மறுத்ததால் அந்த பேருந்தை சூரியா எடுத்து வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சூரியாவை கைது செய்ததாக காவல்நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்புதான் சூரியா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் “தி வாரியர்” உருவாகி வருகிறது.
- இப்படத்தில் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக ராம் பொத்தினேனி நடித்து வருகிறார்.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் திரைப்படம் "தி வாரியர்". தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்துள்ளார்.
இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கும் தி வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்கவுள்ளார்.

தி வாரியர் - விசில்
ராம் பொத்தினேனி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சிலம்பரசன் பாடிய புல்லட் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள விசில் பாடலை நடிகர் சூர்யா அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆந்தோனி தாசன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இணைந்து பாடியுள்ள இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
Here's the #WhistleSong from #TheWarriorrhttps://t.co/4v4ED7InOz
— Suriya Sivakumar (@Suriya_offl) June 22, 2022
All the best for a super success!! @dirlingusamy @ThisIsDSP @RamSayz @AadhiOfficial @IamKrithiShetty
- விக்ரம் படத்தில் 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா.
- சுதா கொங்கரா இயக்கி வரும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் சூர்யா நடித்துள்ளார்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது.

அக்ஷய் குமார் - சூர்யா
கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'விக்ரம்' படத்தில் 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார். விக்ரம் படத்தில் இவரின் கதாப்பாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சூர்யா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், அக்ஷய்குமார் மடியில் சூர்யா சாய்ந்து கிடக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சூர்யா எந்த கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி, படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
.@akshaykumar sir to see you as #VIR was nostalgic! @Sudha_Kongara can see our story beautifully coming alive again #Maara! Enjoyed every minute with team #SooraraiPottru Hindi in a brief cameo! @vikramix pic.twitter.com/ZNQNGQO2Fq
— Suriya Sivakumar (@Suriya_offl) June 15, 2022