'சூர்யா 47'-ல் 'ஆவேஷம்' புகழ் பிரணவ் ராஜ்?

‘கருப்பு’ அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.இன்னும் சில மலையாள நடிகர்கள் படத்தில் இணைய உள்ளதாக தகவல்
'சூர்யா 47'-ல் 'ஆவேஷம்' புகழ் பிரணவ் ராஜ்?
Published on

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'ரெட்ரோ'. இந்தப் படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் த்ரிஷா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 47-வது படத்தை 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இதில் சூர்யா போலீசாக நடிக்கிறார். நஸ்ரியா ஜோடியாக நடிக்க உள்ளார். பிரேமலு படத்தில் நடித்த நஸ்லேன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள், இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். 

இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. இந்நிலையில் இப்படத்தில் ஆவேஷம் புகழ் பிரணவ் ராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com