என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காற்று மாசு"
- மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.
- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு புதிய அங்கீகாரம்.
பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.
நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது. அந்த வகையில், போக்குவரத்து மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வந்த சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை பாராட்டும் வகையிலும், அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும் லண்டன் பாராளுமன்றத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு "கிரீன் ஆப்பிள் சுற்றுச்சூழல் விருது" வழங்கப்பட்டு இருக்கிறது.
கார்பன் குறைப்பு பிரிவில் சென்னை மெட்ரோ ரெயில் இந்தியா நிறுவனம் தங்கம் வென்றதை அடுத்து இந்த விருதுக்கான சான்றிதழ் மற்றும் பச்சை நிற ஆப்பிள் சின்னம் ஒன்றும் கோப்பையாக வழங்கப்பட்டு இருக்கிறது.
- காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
- கடந்த 17-ந்தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. அது நேற்று 319 ஆக குறைந்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிக அளவில் இருந்தது.
காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் தற்போது காற்று மாசு குறைந்துள்ளது. கடந்த 17-ந்தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. அது நேற்று 319 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து டெல்லியில் நாளை (20-ந்தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி மாநில அரசு தெரிவித்து உள்ளது.
அதேபோல் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து இருந்த நேரத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் டெல்லியில் நுழைய தேசிய காற்றுத்தர மேலாண்மை ஆணையம் தடை விதித்து இருந்தது.
தற்போது காற்று மாசு குறைந்ததை தொடர்ந்து டெல்லி நகருக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையும் நீக்கப்பட்டு உள்ளது.
- சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது.
- வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 2 வாரம் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. தீபாவளிக்கு முன்னர் காற்று மாசு ஓரளவு குறைந்தது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசால் மீண்டும் காற்று மாசு அதிகரித்தது. காற்றின் தரம் குறைந்து நகரம் முழுவதையும் மூடு பனி ஆக்கிரமித்து இருப்பது போல் காணப்படுகிறது.
எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். புறநகர் பகுதிகளில் இருந்து காற்று மாசு டெல்லியின் மைய பகுதியிலும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. வரலாறு காணாத வகையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
நேற்று மதியம் மத்திய அரசின் ஷபார் செயலியின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ) 445 ஆக இருந்தது, சில இடங்களில் 520-க்கு மேல் பதிவாகியது.
101 மற்றும் 200-க்கு இடைப்பட்ட நிலைகள் மிதமானதாகக் கருதப்படுகின்றன.
அதே சமயம் 201 மற்றும் 300-க்கு இடைப்பட்டவை மோசமானவை. 301 மற்றும் 400 க்கு இடையில் மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் 400 ஐ விட அதிகமான எண்ணிக்கை கடுமையானது என்று கருதப்படுகிறது.
ஆனால் சில பகுதிகளில் டெல்லியின் காற்றின்தரம் (ஏ.கியூ.ஐ) பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது.
டெல்லியின் நச்சுக் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 ல் இருந்து 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று நுரையீரல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதிக அளவு மாசுபாடுகளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
இது தோல் மற்றும் கண் எரிச்சலைத் தூண்டும் மற்றும் ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் திறன் இழப்பு, எம்பிஸிமா, புற்றுநோய் மற்றும் கடுமையான நரம்பியல், இருதய மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும்.
டெல்லி அரசு கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி அதிகளவிலான பட்டாசு வெடித்ததே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாகும் என கூறப்படுகிறது.
வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தார். எல்லையில் சோதனை நடத்தினார்.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மட்டுமே நகருக்குள் அனுமதித்தார். மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினார். இதனை கடுமையாக பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தீபாவளிக்கு முன்பு காற்று மாசு குறைவாக இருந்தது. பட்டாசு அதிகளவில் வெடித்ததால் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று மாநில அரசும், மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 445 என்ற அளவில் உள்ளதாகவும் அது உலகளவில் காற்று மாசு பட்டியலில் டெல்லி முதலிடத்தைபிடித்துள்ளது என்றும் கூறியுள்ளது.
இந்த பட்டியலில் 6-வது இடத்தில் மும்பையும், 7-வது இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது.
- டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
- டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். பல்வேறு பகுதிகளில் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு கடுமையான சூழல் நிலவி வரும் நிலையில் பட்டாசு வெடிக்க டெல்லி அரசு 3வது ஆண்டாக தடை செய்தது. இந்த உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது.
பட்டாசு வெடிக்க தடை உள்ள நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
தெற்கு டெல்லியின் சர்தர்பூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் மக்கள் அதிகளவில் பட்டாசு வெடித்தனர். அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களும் சிறு, சிறு பட்டாசுகளை குழந்தை களுக்கு விற்பனை செய்தனர். தெற்கு டெல்லி யின் கிழக்கு கைலாஷ் பகுதியி லும் சிலர் பட்டாசு வெடித்தனர். ஷாபூர் காட் மற்றும் ஹவுஸ் காஸ் பகுதியில் மக்கள் அதிகளவில் பட்டாசு வெடித்தனர். அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் ஏராளமானோர் கூடி பட்டாசு வெடித்தனர். இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடித்தது மிகவும் குறைவு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பட்டாசு வெடிக்க தடை இருந்த போதிலும் மக்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
- தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கப்படுகிறது.
- மணலியில் காற்று மாசு அளவு 224 ஆக பதிவு.
சென்னையில் இன்று (நவம்பர் 12) மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு 178 குறியீடாக பதிவாகி இருக்கிறது. நவம்பர் 10-ம் தேதி காற்று மாசு அளவு 83-ஆக இருந்த நிலையில், நேற்றைய காற்று மாசு அளவு 115 ஆகவும், இன்று 178 ஆகவும் அதிகரித்து உள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசு வெடித்து வருவதால், காற்று மாசு அதிகரித்து இருக்கும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் தெரிவித்து உள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அளவு பதிவு செய்யப்பட்டதில், மணலியில் அதிகபட்சமாக காற்று மாசின் அளவு 224 ஆக பதிவாகி இருக்கிறது.
இதே போன்று பெருங்குடியில் காற்று மாசு அளவு 221 ஆகவும், ஆலந்தூரில் 188 ஆகவும், வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 ஆகவும் பதிவாகி உள்ளது. சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் காற்று மாசு அளவு 170-க்கும் அதிகமாகவே பதிவாகி இருக்கிறது.
- ஆக்டோபர் 28ம் தேதி முதல் நகரம் இரண்டு வாரங்களுக்கு "மிகவும் மோசமான" முதல் "கடுமையான" காற்றின் தரத்தை அனுபவித்தது.
- புகையிலை பொருட்களை புகைபிடிக்க வேண்டாம், மூடிய வளாகங்களில் கொசுவர்த்திகள் மற்றும் தூபக் குச்சிகளை எரிப்பதைத் தவிர்க்கவும்.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால், மூச்சுத் திணறல் போன்ற உடல் உபாதைகளால் பொது மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதனால், வாகனங்களில் இரட்டை இலக்க திட்டம் போன்ற நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்தது.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், காற்று மாசு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் டெல்லி சுகாதாரத்துறை பொது மக்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, பொது மக்கள் காலை நடைபயிற்சியைத் தவிர்ப்பது முதல் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று வரை டெல்லியில் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், அடிப்படை உடல் உபாதைகள் உள்ள நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
இன்று காலை 7 மணியளவில், தலைநகரின் காற்றின் தரக் குறியீடு 219ஆக இருந்தது. இது கடந்த வியாழன் 24 மணி நேர சராசரி 437 உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். ஆக்டோபர் 28ம் தேதி முதல் நகரம் இரண்டு வாரங்களுக்கு "மிகவும் மோசமான" முதல் "கடுமையான" காற்றின் தரத்தை அனுபவித்தது.
தீபாவளியைத் தொடர்ந்து காற்றின்தரம் மோசமடையும் என்பதால், டெல்லி அரசின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள பொது சுகாதார ஆலோசனையானது பட்டாசுகளை எரிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மெதுவான மற்றும் அதிக போக்குவரத்து சாலைகள், மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அருகிலுள்ள பகுதிகள், கட்டுமானம்/இடிக்கும் இடங்கள் போன்ற அதிக காற்று மாசு உள்ள இடங்களைத் தவிர்க்கவும். வெளியில் காலை மற்றும் மாலை நடைப்பயிற்சி, ஜாக், ஓட்டம், உடற்பயிற்சி, குறிப்பாக கடுமையான காற்றின் தரக் குறியீடு உள்ள நாட்களில் தவிர்க்கவும்.
புகையிலை பொருட்களை புகைபிடிக்க வேண்டாம், மூடிய வளாகங்களில் கொசுவர்த்திகள் மற்றும் தூபக் குச்சிகளை எரிப்பதைத் தவிர்க்கவும். மரம், இலைகள், கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறது.
மக்கள் தங்கள் கண்களை ஓடும் நீரில் கழுவவும், வெதுவெதுப்பான நீரில் அடிக்கடி வாய் கொப்பளிக்கவும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ணவும் அறிவுறுத்துகிறது.
மூச்சுத்திணறல், மயக்கம், இருமல், மார்பு அசௌகரியம் அல்லது வலி, கண்களில் எரிச்சல் (சிவப்பு அல்லது நீர்நிலை), பொது போக்குவரத்து அல்லது கார் குளங்களைப் பயன்படுத்துதல், வீடுகள் மற்றும் பணியிடங்களுக்குள் பெறுக்குவதற்கு பதிலாக ஈரமான துணிகளைக் கொண்டு அடிக்கடி துடைப்பதை வழக்கமாக செய்யுங்கள்.
அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்ட நோயாளிகள் குறிப்பாக நீண்டகால நுரையீரல் மற்றும் இருதய பிரச்சினைகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
- தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
- அதிக அளவில் பட்டாசு வெடிப்பதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் தற்போதே பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாட தொடங்கிவிட்டனர். அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நேற்று இரவு முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கியுள்ளதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னையில் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்குச் சென்றுள்ளது.
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் காற்று மாசின் தரம் 230 ஆக உயர்ந்துள்ளது. காற்று மாசின் தரம் பெருங்குடியில் 169, அரும்பாக்கத்தில் 134, வேலூரில் 123, ராயபுரத்தில் 121, கொடுங்கையூரில் 112 ஆக உயர்ந்துள்ளது.
காற்று மாசு அதிகரிப்பால் ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
- டெல்லியின் அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு.
- செயற்கை மழை மூலமாக காற்று மாசை குறைக்க டெல்லி அரசு திட்டம்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக காற்று மாசு மிகவும் மோசகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர உச்சநீதிமன்றம் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயற்கை மழை மூலமாக காற்று மாசுவை குறைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை திடீரென டெல்லியில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக மாசுவால் சூழப்பட்ட டெல்லி, இன்று காலை பளிச்சென ஆகியுள்ளது. காற்று மாசு மறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், நடைபயிற்சி மேற்கொள்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
என்றாலும், முதியவர்கள் வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்து செல்வது சிறந்ததாகும். டெல்லியில் அருகில் உள்ள மாநிலங்கள் விவசாயக்கழிவுகளை எரிப்பதால், குளிர்காலத்தில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை டெல்லி எதிர்கொண்டு வருகிறது.
- ஐ.ஐ.டி. குழுவிடம் விரிவான திட்டத்தை டெல்லி அரசு கேட்டுள்ளது.
- செயற்கை மழையை உருவாக்க குறைந்த பட்சம் 40 சதவீத மேக மூட்டம் அவசியம் என்று ஐ.ஐ.டி. குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடுமையாக இருந்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு 480-க்கு மேல் சென்றது. இன்று காலை டெல்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 421-ஆக இருந்தது.
இது கடுமையான பிரிவில் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். காற்று மாசை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய், நிதி மந்திரி அதிஷி ஆகியோர் ஐ.ஐ.டி. கான்பூர் குழுவுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தற்போது ஐ.ஐ.டி. குழுவிடம் விரிவான திட்டத்தை டெல்லி அரசு கேட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த திட்டம் பற்றி டெல்லி அரசு சமர்பிக்க உள்ளது. கோர்ட்டு அனுமதி அளித்தால் டெல்லி, மத்திய அரசும் செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்தும். செயற்கை மழையை உருவாக்க குறைந்த பட்சம் 40 சதவீத மேக மூட்டம் அவசியம் என்று ஐ.ஐ.டி. குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேக மூட்டம் வருகிற 20, 21-ந் தேதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அன்று செயற்கை மழையை பெய்ய வைக்கலாம் என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.
- டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
- காற்று மாசு அதிகரிப்பால் காற்றின் தரம் அங்கு மிகவும் மோசமடைந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில், காற்று மாசு அதிகரித்து வருவதன் எதிரொலியாக டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் டிசம்பர் மாத குளிர்கால விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வரும் 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என டெல்லி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.