என் மலர்
இந்தியா

காற்று மாசு
காற்று மாசு விவகாரம் - 4 மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது தேசிய மனித உரிமை ஆணையம்
- காற்று மாசுபாட்டால் நொய்டாவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
- காற்று மாசால் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பயிர் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்றவற்றால் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு அபாயகர கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மனித உயிருக்கு டெல்லியில் நிலவும் காற்று மாசு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மனிதனின் ஆயுட்காலம் குறைவதாகவும் வெளியான பத்திரிகை செய்தி அடிப்படையில், இதை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஆணையத்தின் உத்தரவின் பேரில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், காற்று மாசு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வருமாறு டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் 10-ம் தேதி நேரிலோ அல்லது காணொலி மூலமோ ஆஜராகுமாறு அதில் தெரிவித்துள்ளது.






