என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-20 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி இரவு 6.21 மணி வரை. பிறகு தசமி.

    நட்சத்திரம் : சித்திரை இரவு 6.58 மணி வரை பிறகு சுவாதி.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி குதிரை வாகனத்தில் பவனி. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்பிரான் ரதோற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-மாற்றம்

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-பக்தி

    கன்னி-கவனம்

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- களிப்பு

    மகரம்-துணிவு

    கும்பம்-சுபம்

    மீனம்-வரவு

    • கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • தான்ய வழிபாடு, முதன்மைத் திருக்குட வழிபாடு, பரிகார வேள்வி, திருக்குட வழிபாடு, மூலவர் திருக்குட அபிஷேகம், நண்பகல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. கோவிலில் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மற்றும் கோவில் நிதியில் இருந்து. ரூ.100 கோடி என ரூ.300 கோடியில் 90 சதவீத மெகா திட்ட வளாக பணிகள் நிறைவு பெற்று தக்கார் அருள் முருகன் தலைமையில் மகா கும்பாபிஷேகப் பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 12 கால யாக பூஜை நடக்கிறது. நேற்று இரவு கோவில் கலையரங்கில் மாதவி வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜை தொடங்கியது.

    இதில் தான்ய வழிபாடு, முதன்மைத் திருக்குட வழிபாடு, பரிகார வேள்வி, திருக்குட வழிபாடு, மூலவர் திருக்குட அபிஷேகம், நண்பகல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது. மாலையில் 5-ம் கால யாக பூஜை நடக்கிறது அதில் தான்ய வழிபாடு வேள்விச் சாலை தூய்மை ஆகியவை நடக்கிறது.

    வருகிற 7-ந் தேதி அதிகாலை 4மணிக்கு 12-ம் கால வேள்வி வழிபாடு, வேள்வி, மகா தீபாராதனை, யாத்ரா தானம், காலை 5.30 மணிக்கு கடம் மூலாலயப் பிரவேசம், 6.15மணிக்கு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல், சுவாமி சண்முகர், ஜெயந்தி நாதர், நடராஜர்,குமரவிடங்க பெருமான் மற்றும் உள், வெளி பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பெரு நன்னீராட்டு, காலை 9 மணிக்கு சண்முகர் உருகு சட்ட சேவை நடைபெற்று சண்முகர் விலாசம் சேருதல் நடக்கிறது. பின்னர் சிறப்பு அபிஷேகம் இரவு 7மணிக்கு தங்க திருவாபரணம் அணிவித்து அலங்காரமாகி சண்முகர் தீப வழிபாடு பரிவார மூர்த்திகளுடன் வீதிஉலா வந்து சேர்க்கையில் சேர்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளார்கள் செய்து வருகின்றனர்.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம்.
    • ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-19 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி மாலை 4.32 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : அஸ்தம் மாலை 4.33 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம், அபிஷேகம்

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கண்டதேவி, காணாடுகாத்தான் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சி. திருக்கோளக்குடி ஸ்ரீ கோளபுரீஸ்வரர் திருக்கல்யாணம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம். குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு அபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-களிப்பு

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-இன்பம்

    கடகம்-இரக்கம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-பண்பு

    துலாம்- பணிவு

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- வெற்றி

    மகரம்-சுகம்

    கும்பம்-லாபம்

    மீனம்-ஆதரவு

    • ஆனி உத்திர தரிசனம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-18 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி பிற்பகல் 2.59 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : உத்திரம் பிற்பகல் 2.21 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுபமுகூர்த்த தினம், நடராஜருக்கு அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்

    இன்று சுபமுகூர்த்த தினம். நடராஜர் அபிஷேகம். ஆனி உத்திர தரிசனம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம். கண்டதேவி ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம்.

    ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருப்பெருந்துறை, ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடக்கரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-லாபம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-போட்டி

    கன்னி-பயிற்சி

    துலாம்- நலம்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- நிறைவு

    மகரம்-புகழ்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-பரிசு

    • ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
    • மேகம் தவழும் உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப் பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    நெய்தவழ் மூவெரி காவல்ஓம்பு

    நேர்புரி நூல்மறை யாளர்ஏத்த

    மைதவழ் மாடம் மலிந்தவீதி

    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

    செய்தவ நான்மறை யோர்கள்ஏத்தும்

    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

    கைதவழ் கூர்எரி ஏந்திஆடும்

    கணபதி ஈச்சரம் காமுறவே.

    -திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    நெய் சொரிந்து மூன்று வகையான வேள்வித் தீயை பேணி வளர்க்கும் அந்தணர்கள் போற்ற, மேகம் தவழும் உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம். இங்கு வீற்றிருக்கும் இறைவனே! வேள்வி செய்வதை தவமாக போற்றும் நான்மறையாளர்கள் பாராட்டி புகழும் செங்காட்டங்குடியில் திருக்கரத்தில் பெரிய தீயை ஏந்தி நடனம் புரிவதற்கு ஏற்ற இடமாக கணபதி ஈச்சரத்தை விருப்பம் கொள்ள என்ன காரணம்? சொல்வாயாக!

    • ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் பவனி.
    • கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    இந்த வார விசேஷங்கள்

    1-ந் தேதி (செவ்வாய்)

    * சஷ்டி விரதம்.

    * சிதம்பரம் நடராஜர் ரத உற்சவம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    * ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி சேஷ வாகனத்தில் பவனி.

    * மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் ஆண்டவர் ஊஞ்சல் காட்சி.

    * கீழ்நோக்கு நாள்.

    2-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * ஆனி உத்திர தரிசனம்.

    * சிதம்பரம் நடராஜர் ஆனி திருமஞ்சனம்.

    * ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் பவனி.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் விழா தொடக்கம்.

    * மேல்நோக்கு நாள்.

    3-ந் தேதி (வியாழன்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    * கண்டதேவி, கானாடு காத்தான் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    * திருவில்லிபுத்தூர் பட்டர்பிரான் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.

    * மதுராந்தகம் கோதண்டராமசுவாமி விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    4-ந் தேதி (வெள்ளி)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம சுவாமி ஆனி உற்சவம்.

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் விழா தொடக்கம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    5-ந் தேதி (சனி)

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.

    * வீரவநல்லூர் பூமிநாத சுவாமி தெப்ப உற்சவம்.

    * திருநெல்வேலி சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.

    * சமநோக்கு நாள்.

    6-ந் தேதி (ஞாயிறு)

    * சர்வ ஏகாதசி.

    * கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    * திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சப்தாவர்ணம்.

    * கீழ்நோக்கு நாள்.

    7-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி அழகியசிங்கர் புறப்பாடு.

    * திருத்தங்கல் அப்பன் சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.

    * திருச்செந்தூர் சுப்பிரமணியருக்கு வருசாபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    • சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவனடியாகள் சிவ கோஷங்களை எழுப்பினர்.
    • தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர்.

    சிதம்பரம்:

    பூலோக கைலாயம் என்ற ழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடை பெற்றது. ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

    முன்னதாக இன்று அதிகாலை சித்சபையில் இருந்து புறப்பட்ட சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரர், தேர் நிலையான கீழரத வீதியில் தனித்தனியே அமைக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டனர்.

    சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவனடியாகள் சிவ கோஷங்களை எழுப்பினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர். திரளான பக்தர்கள் இன்று காலை 8 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதனை தொடர்ந்து சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர், அம்மன் தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

    முன்னதாக தேரின் முன்பு பெண்கள் கும்மியடித்த படியும், ரத வீதிகளில் கோலம் போட்டபடியும் சென்றனர். மேலும் பக்தர்கள் சிவன்-பார்வதி வேடமிட்டபடி நடனமாடி சென்றனர்.

    தேரானது கீழரதவீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழி யாக மீண்டும் தேர்நிலையான கீழரத வீதிக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும். பின்னர் இரவு 8 மணிக்கு சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

    நாளை ஜூலை 2-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சி யும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் சாமிகள் முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு முன்னுக்குப் பின்னுமாய் 3 முறை நடனமாடி பக்தர்களுக்கு ஆனித்திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டு மல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஜூலை 3-ந் தேதி பஞ்ச மூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலா நடக்கிறது. 4-ந் தேதி ஞானகாச பிரகாசம் கோவில் குளத்தில் தெப்போற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    உற்சவ ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவிற்கான பாதுகாப்பு பணியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம் நகராட்சி சார்பில் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில், தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் பணியை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம்.
    • வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-17 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி நண்பகல் 1.49 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : பூரம் நண்பகல் 12.33 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

    இன்று குமார சஷ்டி. சஷ்டி விரதம். சகல சிவன் கோவில்களிலும் ஸ்ரீ நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் ரதோற்சவம். திருக்கோளக்குடி ஸ்ரீ களோபுரீஸ்வரர் பவனி. கண்டதேவி ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.

    திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தல மான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-பொறுமை

    மிதுனம்-நிறைவு

    கடகம்-இன்பம்

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- கடமை

    விருச்சிகம்-கண்ணியம்

    தனுசு- கட்டுப்பாடு

    மகரம்-ஓய்வு

    கும்பம்-முயற்சி

    மீனம்-பக்தி

    • நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதேப்போல் தஞ்சாவூர் மேலவீதி கொங்கணேஸ்வர சுவாமி கோவிலில் குருபூஜை வழிபாடை முன்னிட்டு மாணிக்கவாசகர் உட்பட நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சிவனடியார்கள் திருவாசகம் பாடல் பாடினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரை தரிசனம் செய்தனர்.

    • மகா மண்டபத்தில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
    • சரியாக காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலின் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பிரதான கொடி மரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சரியாக காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து நான்கு ரத வீதிகளிலும் உலா வருவார்கள். தேரோட்டம் நிகழ்ச்சி வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது. 

    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம்.
    • நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-16 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பஞ்சமி நண்பகல் 1.08 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : மகம் காலை 11.12 மணி வரை பிறகு பூரம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர் ஹம்ச வாகனத்திலும் சுவாமி, பெரிய பெருமாள் கருட வாகனத்திலும் புறப்பாடு. அமர்ந்தி நாயனார் குருபூஜை. கண்டனூர் ஸ்ரீ மீனாட்சி வீதியுலா. ராஜபாளையம் பெத்தநல்லூர் ஸ்ரீ மயூரநாதர் உற்சவம் ஆரம்பம். திருவிடைமருதூர், ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர்,

    பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-அன்பு

    கடகம்-ஆசை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-துணிவு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- நலம்

    மகரம்-உதவி

    கும்பம்-நட்பு

    மீனம்-நலம்

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-15 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி நண்பகல் 12.58 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : ஆயில்யம் காலை 10.23 மணி வரை பிறகு மகம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை

    இன்று சதுர்த்தி விரதம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்ட ராமர் அனுமன் வாகனத்தில் வீதிஉலா. திருக்கோளக்குடி, கண்டதேவி கோவில்களில் உற்சவம் ஆரம்பம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. ஸ்ரீ மாணிக்கவாசகர் குரு பூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உறுதி

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-சுகம்

    கடகம்-உயர்வு

    சிம்மம்-தெளிவு

    கன்னி-சுபம்

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- பிரீதி

    மகரம்-நிறைவு

    கும்பம்-அமைதி

    மீனம்-லாபம்

    ×