என் மலர்
வழிபாடு
- வீரராகவன் விறகை வீட்டிற்குள் எடுத்து வந்து, சந்தனம், குங்குமம் பூசி, பூஜை செய்யத் தொடங்கினான்.
- கிராம மக்கள் அனைவரும் அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டனர்.
செங்கழுநீர் அம்மன் கோவில்
புதுச்சேரியில் வீராம்பட்டினம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது செங்கழுநீர் அம்மன் கோவில். பல பெருமைகளை கொண்ட இக்கோவிலில் நடக்கும் தேர்த் திருவிழா மிகவும் விசேஷமானதாகும். இக்கோவிலை பற்றி இங்கு பார்ப்போம்.
தல வரலாறு
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, வீராம்பட்டினம் என்ற கிராமத்தில் வீரராகவன் என்ற மீனவன் வசித்து வந்தான். இவன் அதீத தெய்வ பக்தி கொண்டவன். ஒரு நாள் காலை வேளையில், அருகிலுள்ள ஓடையில் மீன்பிடிக்கச் சென்றான். காலையில் இருந்து மீன் பிடிப்பதற்கு வலை வீசியும் சூரியன் மறையும் வரை ஒரு மீன் கூட கிடைக்கவில்லை. இதனால் மிகவும் வருத்தம் அடைந்தான்.
வீடு திரும்புவதற்கு முன்பு இறுதியாக ஒருமுறை ஓடையில் வலையை வீசினான். அவன் வலையை இழுக்கும்போது, வலை கனமாக இருப்பதை உணர்ந்தான். வலையில் சிக்கி இருப்பது ஒரு மீன் தான் என்று மகிழ்ச்சியுடன் வலையை இழுத்தான். ஆனால் வலையில் ஒரு பெரிய மரத்துண்டு இருப்பதை பார்த்து ஏமாற்றம் அடைந்தான். அவன் அந்த மரத்துண்டை வீட்டிற்கு எடுத்துச் சென்று கொல்லைப்புறத்தில் போட்டான்.
ஒரு நாள் அவரது மனைவிக்கு சமையல் செய்வதற்கு விறகு கிடைக்கவில்லை. அதனால் கொல்லைப்புறத்தில் போட்ட விறகுத்துண்டை எடுத்து கோடரியால் வெட்ட முயன்றான். ஆனால் கோடரியால் வெட்டியும் மரத்துண்டு பிளக்கவில்லை. கோடரி பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. இதை பார்த்ததும் அவரும், அவர் மனைவியும் அதிர்ந்து போனார்கள்.
உடனே வீரராகவன், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தான். இதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள் இந்த அதிசயத்தை வந்து பார்த்து வியந்தனர். இதையடுத்து வீரராகவன் விறகை வீட்டிற்குள் எடுத்து வந்து, சந்தனம், குங்குமம் பூசி, பூஜை செய்யத் தொடங்கினான். இந்த சம்பவத்துக்கு பிறகு அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் ஏற்பட்டது.
சில நாட்களுக்குப் பிறகு, வீரராகவனின் கனவில் தோன்றிய அம்மன், ''பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீக அருள் பெற்ற ரேணுகைதான் நான். நான் அன்னை பராசக்தியின் அம்சம். இந்த பகுதியில் வாழும் மக்கள் செய்த தவத்தின் பயனாக, இங்கு கோவில் கொண்டு மக்களுக்கு அருள் வழங்க வந்துள்ளேன். என்னுடைய வருகையை உணர்த்தவே, எனது அடையாளமாக உனக்கு இந்த மரத்துண்டு கிடைத்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த சித்தர்பீடம் ஒன்று உள்ளது. அதுவே எனக்கு ஏற்ற இடம். அங்கு இந்த மரத்துண்டை வைத்து, அதன்மேல் எனது திருவுருவை பிரதிஷ்டை செய்யுங்கள். என்னை செங்கழுநீர் அம்மன் என்று அழைத்து வழிபட்டு வாருங்கள்'' என்று கூறி மறைந்தார்.
மறுநாள் வீரராகவன், தான் கண்ட கனவுப் பற்றி கிராம மக்களுக்குத் தெரிவித்தான். உடனே கிராம மக்கள் அனைவரும் அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டனர். அப்போது ஒரு அடர்ந்த புதர் பகுதியில் ஒரு எறும்புப் புற்று இருப்பதை கண்டனர். அதிலிருந்து ஒரு பாம்பு வெளியே வந்து, படம் எடுத்து தரையில் மூன்று முறை அடித்து, சிலையை நிறுவ வேண்டிய இடத்தைக் காட்டியது. அதன்பின் ஊர் மக்கள் அந்த இடத்தை தோண்டி சுத்தம் செய்தனர். அதைத் தொடர்ந்து வலையில் இருந்து எடுக்கப்பட்ட மரத்துண்டு கொண்டு வரப்பட்டு பீடம் அமைத்தனர். அதன்மேல், அம்மன் சிரசை நிறுவி அம்மனை எழுந்தருள செய்து, 'செங்கழுநீர் அம்மன்' என்ற திருநாமம் இட்டு அழைத்து வருகின்றனர்.
ஆலயம் அமைய வேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்டிய அந்த பாம்பு, புற்றுக்கும் கோவிலுக்கும் இடையே போய்வந்துகொண்டிருந்தது. அடிக்கடி அன்னையின் திருமேனியில் ஏறி அணிகலன் போல் சுற்றிக்கொண்டும் காட்சி தந்தது. இதனால் அந்த நாகத்தையும் தெய்வச் சின்னமாகவே கருதி மக்கள் வழிபட்டு வந்தனர். சில காலங்கள் கழிந்த பிறகு, பீடமும் சிரசும் பிரதிஷ்டை செய்யப்பட்ட கருவறையில் தேவதாரு மரத்தால் தேவியின் முழு உருவமும் அமைக்கப்பட்டது.
கோவில் அமைப்பு
பல நூற்றாண்டுகளாக ஒரு சிறிய குடிசையிலிருந்த இந்தக் கோவில், படிப்படியாக வளர்ச்சியடைந்து ஒரு பெரிய கோவிலாக உருவெடுத்தது. கோவில், முன் கோபுரம், சுற்று மதில்கள், பிரகார மண்டபம், அழகிய சுதைச் சிற்பங்கள் என்று அழகுற காட்சி தருகிறது. அன்னை நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு திசை பார்த்தவாறு அருள்பாலிக்கிறார். அன்னையின் திருக்கரங்களில் உடுக்கை, கபாலம், வாள், கப்பரை ஆகியவை உள்ளன. தொடக்கத்தில் இந்த செங்கழுநீர் அம்மனை மீனவ இன மக்கள் மட்டுமே வணங்கி வழிபட்டு வந்தனர். பின்னர், புதுச்சேரி மற்றும் தமிழகத்திலுள்ள மக்களும் செங்கழுநீர் அம்மனை தங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு கோவில் தேர் உருவாக்கப்பட்டது, மேலும் புதுச்சேரி மாகாணத்தில் கோவில் தேர் கொண்ட முதல் கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நடக்கும் தேர்த் திருவிழாவை புதுச்சேரி கவர்னர் தேர் வடத்தை இழுத்து தொடங்கிவைப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
தீராத நோய்கள் அகலவும், கண் பார்வைக் கோளாறு நீங்கவும், திருமணப் பேறு, குழந்தைப் பேறு கிடைக்க வேண்டியும் வருபவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக இந்த அம்மன் விளங்குவதால், அன்னையை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.
திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ச்சியாக ஆறு வெள்ளிக்கிழமைகள் வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும். ஆறாம் வெள்ளியன்று முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட தேரில் செங்கழுநீர் அம்மன் திருவீதி உலா வருவார்.
ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
அமைவிடம்
புதுச்சேரி - கடலூர் நெடுஞ்சாலையில் உள்ளது அரியாங்குப்பம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வீராம்பட்டினம் உள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து வீராம்பட்டினத்திற்கு டவுன் பஸ் வசதியும் உண்டு.
- கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது.
- வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார்.
சங்கர ராமேஸ்வரர் கோவில் தோற்றம்
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, சுமார் 500 ஆண்டுகள் பழமையான சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் மூலவர் சங்கர ராமேஸ்வரர், அம்பிகை பாகம்பிரியாள்.
தல வரலாறு
தூத்துக்குடியின் பழம்பெயர் 'திருமந்திர நகர்' என்பதாகும். இங்குதான் சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு வரையறுத்ததாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த இடம் 'திருமந்திர நகர்' என்று அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் பசுமை நிறைந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார். அதுவே இந்த சங்கர ராமேஸ் வரர் கோவில் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனை காசியப முனிவர், கவுதமர், பரத்துவாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.
பிற்கால குறுநில மன்னரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார். இவருக்கு குழந்தை பேறு இல்லை. இதனால் மனம் வருந்திய மன்னன், காசி போன்ற புண்ணிய திருத்தலங் களுக்குச் சென்று புனித நீராடி வந்தார். ஒரு சமயம் மன்னன் தனது பரிவாரங்களுடன் புனித நீராடச் செல்லும்போது, இறைவனது குரல் "பாண்டியா, திருமந்திர நகரில் உள்ள காசிக்கு நிகரான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா'' என அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து சங்கரராம பாண்டியன் வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி காசியப முனிவர் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு திருக்கோவில் ஒன்றை எழுப்பினார்.
கோவில் அமைப்பு
கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. இக்கோவிலை ஒட்டி பெருமாள் கோவிலும் உள்ளது. இறைவன் சன்னிதி முன்பு அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. இத்தல இறைவன் லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியபடி இரண்டு திருக் கரங்களில் ஒரு கரத்தில் தாமரை ஏந்தியும், மற்றொரு கரத்தை இடையோடு தொங்க விட்டபடியும் பார்க்க ஒரு நாட்டிய மங்கைபோல் காட்சி அளிக் கிறார்.
இறைவன் எதிரில் உயர்ந்த கொடி மரம், நந்தி உள்ளன. அதனை கடந்தவுடன் வாசலின் இருபுறமும் சூரியன், சந்திரன் உள்ளனர். சூரியனை ஒட்டி அதிகார நந்தி கைகூப்பியபடி உள்ளார். கருவறை வாசலில் அழகிய விநாயகர் தனிச் சன்னிதியில் அருள்கிறார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகார சன்னிதிகளாக தென்புறம் அறுபத்துமூவர், தென்மேற்கில் விநாயகர், அடுத்து புறச்சுற்றில் கிழக்கு நோக்கிய பஞ்ச லிங்கங்கள் உள்ளன. எதிரில் சிறிய நந்திகளும் உள்ளன.
வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார். அருகில் தெற்கு நோக்கியபடி உற்சவ திருமேனியுடன் முருகன் சன்னிதியும் உள்ளது. வடப்புற சுற்றில் தெற்கு நோக்கிய இரு மாடங்களில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் உள்ளனர். அதே சுற்றில் தெற்கு நோக்கிய சனிபகவான் சன்னிதி உள்ளது.
அழகிய மண்டபத்தில் வடகிழக்கில் நடராஜர் சிவகாமியுடன் உள்ளார். அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அதில் சனிபகவான் கையில் வில் அம்புடன் உள்ளார். மற்ற கிரகங்களும் கையில் ஆயுதங்களுடன் வாகனத்தில் உள்ளனர்.
இரண்டாம் பிரகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், ஐயப்பன் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலில் உள்ள 'வாஞ்சா புஷ்கரணி' என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம், வைகாசியில் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி, புரட்டாசியில் நவராத்திரி மற்றும் பாரிவேட்டை, ஐப்பசியில் திருக்கல்யாணம், கார்த்திகையில் சொக்கபனை ஏற்றுதல், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, தை மாதத்தில் தைப்பூசம் மற்றும் தெப்பத் திருவிழா, மாசியில் மகா சிவராத்திரி, பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் மாங்கனி பெற்ற நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும்.
ரிஷபம்
போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர்.
மிதுனம்
விடிகாலையிலேயே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம்.
கடகம்
நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்க சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிவாலய வழிபாட்டால் சிறப்புகள் வந்து சேரும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பயணங்கள் பலன் தரும். ஆரோக்கியம் சீராகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கன்னி
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். எந்த காரியத்தையும் எடுத்தோம். முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
விருச்சிகம்
இன்னல்கள் தீர இறைவனைப் பணிய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
தனுசு
மகிழ்ச்சி கூடும் நாள். மங்கலச் செய்தி வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களும் ஒத்துழைப்புத் தருவர்.
மகரம்
புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் நடைபெறும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கும்பம்
சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை முடிக்க அதிக அலைச்சல் ஏற்படலாம்.
மீனம்
நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். அன்னிய தேச அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-4 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி பிற்பகல் 3.03 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : புனர்பூசம் பின்னிரவு 2.06 மணி வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய சுபமுகூர்த்த தினம், பிரதோஷம் சிவன் கோவில்களில் அபிஷேகம்
இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் உருகு சட்டச் சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவ திருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், திருசாவூர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-வரவு
மிதுனம்-செலவு
கடகம்-நிறைவு
சிம்மம்-தெளிவு
கன்னி-மேன்மை
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-களிப்பு
தனுசு- உறுதி
மகரம்-பயணம்
கும்பம்-திடம்
மீனம்-கண்ணியம்
- முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
- பக்தர்கள் தங்களது வாகனங்களில் வருவதை தவிர்த்து அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 24 -ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில் ஏழுமலையான் தினமும் காலை, இரவு என 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு செப்டம்பர் 24-ந் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்றம் நடைபெறும் அன்று மாநில அரசு சார்பில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான செப்டம்பர் 28-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான அக்டோபர் 2-ந் தேதி அங்குள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெற உள்ளது.
பிரமோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் குறித்து நேற்று அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் வெங்காய சவுத்ரி, திருப்பதி கலெக்டர் வெங்கடேஷ் வரலு, போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷ வர்தன் மற்றும் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது, போலீசார் உடன் இணைந்து தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது பக்தர்களை நெறிமுறைபடுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்கள் தங்களது வாகனங்களில் மலைக்கு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் தங்களது வாகனங்களில் வருவதை தவிர்த்து அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டும். அலிபிரி வாகன சோதனை சாவடியில் வாகனங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
- திருச்செந்தூர் முருகப் பெருமான் கோ ரத உற்சவம்.
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி.
இந்த வார விசேஷங்கள்
19-ந் தேதி (செவ்வாய்)
* சர்வ ஏகாதசி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
* திருச்செந்தூர் முருகப் பெருமான் கோ ரத உற்சவம்.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் விழா தொடக்கம்.
* மிலட்டூர், தேவகோட்டை, திண்டுக்கல் தலங்களில் விநாயகர் பவனி.
* மேல்நோக்கு நாள்.
20-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
21-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* நெல்லை நகரம் சந்தி விநாயகர் வருசாபிஷேகம்.
* திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.
* பெருவயல் முருகப் பெருமான் பவனி.
* மேல்நோக்கு நாள்.
22-ந் தேதி (வெள்ளி)
* அமாவாசை.
* திருச்செந்தூர் முருகப் பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், இரவு வெள்ளி கமல வாகனத்திலும் பவனி.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் திருபவித்ர உற்சவம் ஆரம்பம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்
* பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
23-ந் தேதி (சனி)
* திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ரத உற்சவம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம்.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந் தேதி (ஞாயிறு)
* திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி
* தெப்ப உற்சவம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
25-ந் தேதி (திங்கள்)
* திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி மஞ்சள் நீராடல்.
* உப்பூர் விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
- 6-ம் நாளான வருகிற 23-ந்தேதி, கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது.
- ஆண்டுக்கு ஒரு முறைதான் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் இரவில் விநாயகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நேற்று இரவு மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். இன்று இரவு சிம்ம வாகனத்திலும், நாளை பூத வாகனத்திலும் உலா வருகிறார்.
6-ம் நாளான வருகிற 23-ந்தேதி, கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது.
9-வது நாளான வருகிற 26-ந்தேதி மாலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
இதற்கிடையே அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர், சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். ஆண்டுக்கு ஒரு முறைதான், மூலவருக்கு இந்த சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். 10-ம் நாளான வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பக விநாயகர் எழுந்தருள்கிறார். அதன் பின்னர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நடக்கிறது.
- நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள்.
- பல நாட்களாக நினைத்த காரியம் இன்று எளிதில் முடியும்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
ரிஷபம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். நம்பிக்கைக்குரியவிதம் நண்பர்கள் நடந்துகொள்வர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் போட்டிகள் அகலும்.
மிதுனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு.
கடகம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதிலும் கூடுதல் கவனம் தேவை. தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் வரலாம்.
சிம்மம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும்.
கன்னி
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கனவுகள் நனவாகும். வருமானம் திருப்தி தரும். விண்ணப்பித்த வேலை விரைவில் கிடைப்பதற்கான தகவல் வந்து சேரும்.
துலாம்
பகை அகலும் நாள். பல நாட்களாக நினைத்த காரியம் இன்று எளிதில் முடியும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.
விருச்சிகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாகத் தெரியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி உண்டு.
தனுசு
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். மனக்குழப்பம் அகலும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு வேறு ஊருக்குச் செல்ல நேரிடலாம்.
மகரம்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் எண்ணம் ஏற்படும்.
கும்பம்
வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-3 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி மாலை 4.42 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 2.50 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாகயர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சின்ன வாகனத்திலும் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-இரக்கம்
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-சாந்தம்
சிம்மம்-உண்மை
கன்னி-உவகை
துலாம்- அனுகூலம்
விருச்சிகம்-நன்மை
தனுசு- சுகம்
மகரம்-செலவு
கும்பம்-லாபம்
மீனம்-நிறைவு
- பெண்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
- பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். இரண்டு முரண்பாடான கிரகங்களின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே திடீர் திடீரென மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துசேரும். குருவின் பார்வை இருப்பதால் காரியங்கள் துரிதமாக நடைபெறும். கல்யாண முயற்சிகள் கைகூடும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 8-ல் வருவது நல்ல நேரம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத சில நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பொறுப்புகள் கிடைக்கும். புனிதப் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உங்களுக்கு இடையூறு செய்த உயர் அதிகாரி மாறுதலாகிச் செல்வார். கடன் சுமை குறைய நீங்கள் கையாண்ட நூதன யுக்திகள் பலன் தரும்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது, எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் அகலும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். 'வாழ்க்கைத் துணைக்கு இதுவரை நல்ல வேலை அமையவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைக்கும். உத்தியோகத்தில உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பர். ஒரு சிலர் பணிபுரியும் இடத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, சொத்துகளால் லாபம் உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் முடிவிற்கு வரும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் யோகம் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அவர் களின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ முயற்சி செய்தால் அனுகூலம் உண்டு.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரன், குருவிற்கு பகைக்கிரகம் என்பதால், திடீர் திடீரென லாபம் வருவதுபோலவே, திடீர் திடீரென விரயங்களும் வந்து கொண்டேயிருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. சுபவிரயம் அதிகரிக்கும். இடமாற்றம் இனிமை தரும் விதத்தில் அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமைப் பதவிகள் தேடிவரும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ- மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை கூடினாலும் அதை சமாளிப்பீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 23, 24, 28, 29, செப்டம்பர்: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
மகரம்
மகர ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ் சரிக்கிறார். அவரோடு கூட ராகுவும் இணைந்திருக்கிறார். ராகுவைப் போல கொடுப்பானுமில்லை என்பார்கள். அந்த அடிப்படையில் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருப்பதால் செலவுகள் நிறைய ஏற்படும். சுபச் செலவுகளாக செய்வது நல்லது. இடர்பாடுகளுக்கு நடுவில் முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் வருமானப் பற்றாக்குறை ஏற்படாது. இதுபோன்ற வக்ர காலங்களில் இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது நல்லது.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது, புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ் கூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் அகலும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கி வந்த உங்களுக்கு, தொடர்ந்து வருமானம் வந்து கொண்டேயிருக்கும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி 8-ல் வருவது நல்ல நேரம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் அமையலாம். வெளிநாடு சென்று பணிபுரியவேண்டும் என்று விரும்பு பவர்களுக்கு, அதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். பொதுவாழ்வில் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை எதிர்பார்த்த பொறுப்புகள் இப்பொழுது கிடைக்கும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வருவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். வியாபாரம் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவு தருவர். வளர்ச்சி அதிகரிக்கும் நேரம் இது. இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். கட்டிடம் கட்டும் பணி தொடரும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரத்தில், கொஞ்சம் கவனமாகச் செயல்பட வேண்டும். விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவு குறையும். தொழிலில் யாரையும் நம்பிச் செயல்பட இயலாது. தொழில் போட்டிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குத் தலைமையின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். பணவரவு திருப்தி தரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 20, 25, 26, 30, 31, செப்டம்பர்: 1, 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். பகைக் கிரகமான சூரியன் அவரைப் பார்க்கிறார். மேலும் சனியோடு, ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால் இம்மாதம் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டிய மாதமாகும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இனம்புரியாத கவலை மேலோங்கும். வீண்பழிகள் வீடு தேடி வரலாம். பிறருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியலாம். அதோடு அஷ்டமத்தில் செவ்வாயும் சஞ்சரிப்பதால் வாகனத்தாலும் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். குலதெய்வ வழிபாடு நன்மையை வழங்கும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் கடகத்திற்கு வரும்போது உத்தியோகத்தில் சில மாற்றங்களும், ஏற்றங்களும் வரலாம். 'புத சுக்ர யோகம்' ஏற்படும் இந்த நேரத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வருமான உயர்விற்கு வழிபிறக்கும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கை கொடுக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து லாபத்தை வரவழைத்துக் கொடுக்க முன்வருவர்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் சிம்மத்திற்கு வரும்போது, பிள்ளைகள் வழியில் சில விரயங்கள் ஏற்படலாம். அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து மாறுதல்கள் வரலாம். வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறவர்களுக்கு அது கைகூடும். வீடு மாற்றம் திருப்திகரமாக அமையும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்கிச் செல்லும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இதுவரை தாமதமான இடமாற்றம் இப்போது கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை அனுபவஸ்தர்களை கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. சிம்மத்தில் இருக்கும் சூரியனோடு புதன் சேருவதால் 'புத ஆதித்ய யோகம்' உருவாகிறது. எனவே அரசியல் உலகில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரியின் நிர்ப்பந்தத்தின் காரணமாக தடைப்பட்ட பதவி உயர்வு இப்பொழுது கிடைப்பதுடன் இடமாற்றமும் சேர்ந்து வரலாம்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்லநேரம் தான். இடம், பூமி வாங்குவது போன்றவற்றில் இருந்த தடை அகலும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்கும். அதன் மூலம் வருகின்ற லாபத்தை தொழிலுக்கான மூலதனமாக்குவீர்கள். நீண்ட நாட்களாக பஞ்சாயத்து செய்தும் முடிவடையாத சொத்துப் பிரச்சினை இப்பொழுது முடிவிற்கு வரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். திருமணத் தடை அகலும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினை அகலும். பிரபலங்களின் ஒத்துழைப்போடு இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவி களுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 28, 29, செப்டம்பர்: 2, 3, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மீனம்
மீன ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கை கூடும். கூட்டுத் தொழில்புரிவோர் தனித்து இயங்க முற்படுவர். ஆனால் பிரச்சினைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பொதுவாழ்விலே எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்காது. புதிய முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்து அலைமோதும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இதுபோன்ற நேரங்களில் உடல்நிலையிலும் கவனம் தேவை. உடன் இருப்பவர்களிடமும் கவனத்தோடு இருப்பது நல்லது.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்ற வற்றில் கவனம் செலுத்துவீர்கள். சொத்துகள் வாங்கும் பொழுது வில்லங்கம் பார்த்து வாங்க வேண்டும். இல்லையேல் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் தகராறுகள் அதிகரிக்கும். 'பஞ்சாயத்துகள் இழுபறி நிலையில் இருக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள். 'தொழில் போட்டிகளை சமாளிக்க இயலவில்லையே' என்று வருத்தப்படுவீர்கள். பிறரிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலும் அது நடைபெறாமல் போகலாம்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்கு கிறார். எனவே மேல் படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். தைரியமும், தன்னம்பிக்கையும் கொஞ்சம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் பொழுது, தன் வீட்டைத் தானே பார்ப்பதால் 2-ம் இடம் புனிதமடைகிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். பணத்தேவை எளிதில் பூர்த்தியாகும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழிவகுத்துக் கொடுப்பர்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வருவது அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப, நற்பலன்கள் ஏராளமாக நடைபெறும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். தொழில் வளர்ச்சி உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். கலைஞர்களுக்கு ஆதரவு கூடும். மாணவ - மாணவிகளுக்கு சாதனைகள் நிகழ்த்தும் நேரம் இது. பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 19, 20, 29, 30, 31, செப்டம்பர்: 1, 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.
- சுவாமி புறப்பாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
- வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனம் உருகி தரிசித்தனர் .
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர் .
மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் ஆவணி பெருந் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணிப் பெருந்திரு விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது.
இரவில் உற்சவர் முத்து மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுவாமி புறப்பாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனம் உருகி தரிசித்தனர் .
ஆவணி பெருந்திரு விழாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி திருத்தேரோட்டம், 16 ஆம் தேதி தேதி கொடியிறக்கம், விடையாற்றி அபிஷேகம், அக்டோபர் 5 ஆம் தேதி தெப்பத் திருவிழா, 7-ந் தேதி தெப்ப விடையாற்றி விழா ஆகியவை நடைபெறவுள்ளன.
- பெண்களுக்கு வருமானம் உயரும்.
- குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இது யோகம்தான். ஆனால் அவரை பார்க்கும் சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் பகைக் கிரகங்கள். எனவே இடர்பாடுகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்பார்ப்புகள் நிறை வேறுவதில் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. தொழிலில் கூட்டாளிகளால் அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டேயிருக்கும். தொழிலில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியா னவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது தொழில் மாற்ற சிந்தனைகள் மேலோங்கும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களுக்கு, அதற்காக எடுத்த முயற்சி கைகூடும். குறிப்பாக கடகத்தில் சஞ்சரிக்கும் புதனோடு சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால் தேவைக்கேற்ற பொருளாதாரம் வந்துசேரும். திடீர் மாற்றம் மன வருத்தத்தை உருவாக்கும். பெண் வழிப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். தொழில் கூட்டாளிகள் உங்களை விட்டு விலகினாலும், புதிய கூட்டாளிகள் வந்திணையும் வாய்ப்பு உண்டு.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன - லாபாதிபதியான புதன், உங்கள் ராசி யிலேயே சஞ்சரிக்கும் நேரம் ஒரு உன்னதமான நேரமாகும். பணவரவு திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். உறவினர்களோடு இருந்த கருத்து வேறுபாடு அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். குடும்ப உற வினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வெளிநாடு செல்லும் யோகமும், அதற்காக எடுத்த முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். குறிப்பாக வருமானம் உயரும். இந்த நேரத்தில் கடன்சுமை குறைய வழிபிறக்கும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இருந்த குறுக்கீடுகள் விலகும். வாடகை கட்டிடத்தில் உள்ள தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கு வருவது யோகம்தான். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். ஸ்தம்பித்து நின்ற தொழில் தானாக நடைபெறும். தொழிலை விரிவு செய்ய வள்ளல்களின் ஒத்துழைப்பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் பிறக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். உத்தி யோகத்தில் உள்ளவர்களிடம் மேலதிகாரிகள் ஆதரவாக நடந்துகொள்வர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நன்மையைத் தரும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 18, 19, 25, 26, 30, 31, செப்டம்பர்: 1, 11, 12, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
கன்னி
கன்னி ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் அஷ்டமாதிபதியான செவ்வாய் உங்கள் ராசியில் இருக்கிறார். எனவே பணம் ஒருபுறம் வந்தாலும், மறுபுறம் விரயங்களும் வந்தபடியே இருக்கும். இழப்புகளும் எதிர்பாராத குறுக்கீடுகளும் வந்து கொண்டே இருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். திடீர், திடீரென சோதனைகள் வரலாம். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வருவது மிகவும் அற்புதமான நேரமாகும். பொதுவாக தனாதிபதி வலுவாக இருப்பதால் எந்த காரியமும் செய்யலாம். அந்த அடிப்படையில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு வழிபிறக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது பல வழி களிலும் விரயங்கள் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். காலையில் ஒரு ஊர், மதியம் ஒரு ஊர், மாலையில் ஒரு ஊர் என்று செல்லும் விதத்தில் அலைச்சல் அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியச் சீர்கேடுகள் உருவாகும். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் உங்களைவிட்டு விலகலாம். நாடு மாற்றம் செய்ய நினைத்தவர்களுக்கு அது தாமதப்படும். வெளிநாட்டில் உள்ளவர்களின் வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் அது விரும்பும் விதத்தில் அமையாது. அரசியல் களத்தில் உள்ளவர்கள் மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள இயலாது.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தன ஸ்தானத்திற்கு வந்து, தன் வீட்டைத் தானே பார்க்கப்போகிறார். எனவே சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும். துணிந்து எடுத்த முடிவுகளால் மற்றவர்கள் ஆச்சரியப்படுவர். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். வருமானப் பற்றாக்குறை அகலும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் உறுதியாகலாம். கொடுக்கல்- வாங்கல்களில் ஏற்பட்ட இடையூறு அகலும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படலாம். அதில் இருந்து விடுபட அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, பழைய வியாபாரம் லாபத்தைப் பெற்றுத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு, உயர் அதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல திருப்பம் ஏற்படும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். கவனம் தேவை. உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 21, 22, 28, 29, செப்டம்பர்: 2, 3, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். பொதுவாக 9-ம் இடம் பலம்பெறும்பொழுது பொன், பொருள் சேர்க்கை, பொருளாதார நிலையில் உயர்வு போன்றவை ஏற்படும். மேலும் குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால், சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாளாக துன்புறுத்தி வரும் நோய் அகலும். பிள்ளை களின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்த தடை அகலும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும் வகையில் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சம்பள உயர்வுடன் புதிய வேலை கிடைத்து மகிழ்ச்சி காண்பர். சனி - சூரியன் பார்வை இருப்பதால் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்தி பலம் பார்த்து செயல்படுவது நல்லது. இந்த நேரத்தில் 'புத ஆதித்ய யோக'மும் நடைபெறுவதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு செவ்வாய் வருவது நல்ல நேரம்தான். தன - சப்தமாதிபதியாக விளங்கும் செவ்வாய், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். சொத்துக்களால் வந்த பிரச்சினை அகலும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கும் சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வருவதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனதளவில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல்வாதியாக இருந்தால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு ஆதரவு கூடும். மாணவ-மாணவியர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் உயரும். இல்லம் தேடி நல்ல தகவல் வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 19, 20, 23, 24, 31, செப்டம்பர்: 1, 5, 6, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிகின்றது. எனவே தொட்டது துலங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். இடம், பூமி சேர்க்கையும், எடுத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் பரவும். வருமானம் பெருக வழியமைத்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராகி உற்சாகத்துடன் இயங்கு வீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்த சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல விதமாக முடியும். நாடாளும் நபர்களின் நட்பால் புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது சகல பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். வாகன யோகம் முதல் வளர்ச்சி தரும் யோகம் வரை அனைத்தும் வந்து சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். உதிரி வருமானங்கள் பெருகும். 'புத சுக்ர யோகம்' இருப்பதால் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாக வந்துசேரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். கிளைத் தொழில்கள் தொடங்கவும் முயற்சி செய்வீர்கள். செய்யும் முயற்சி கைகூடும். புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்தபடியே ஒருசிலருக்கு சுயதொழில் செய்யும் சூழலும் உருவாகும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இனிய பலன்கள் ஏராளமாக நடை பெறும் நேரம் இது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பவர் செவ்வாய். அவர் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். வருமானம் உயரும். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது வளர்ச்சி கூடும். வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். புகழ் பெற்றவர்களின் சந்திப்பால் வளர்ச்சி கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, அதை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு வரன்கள் வாசல் தேடி வரும் நேரம் இது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 20, 21, 22, 26, 27, 28, செப்டம்பர்: 2, 3, 4, 7, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.






