என் மலர்
வழிபாடு
- 108 திவ்யதேச திருத்தலங்களில் 17-வது தலம்.
- மறுபிறவியின்றி வீடு பேறளிக்கும் பெருமாளாக வழிபடப்படுகின்றார்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரி ராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைணவத்தலங்களில் திவ்யதேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. காளமேகப்புலவர் ஒரு நயமான பாடலை பாடியிருக்கிறார்.
``கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது''
இத்திருத்தலத்துப் பெருமாள் மறுபிறவியின்றி வீடு பேறளிக்கும் பெருமாளாக வழிபடப்படுகின்றார். இந்த கண்ணபுரத்தானைப் பெரியாழ்வார், குலசேகரர், மங்கை மன்னன், நம்மாழ்வார் நால்வரும் மங்களா சாசனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து பாடிய பாடல்கள் 128 என்றால், அதில் 104 பாடல்கள் திருமங்கை மன்னன் பாடியவை. கலியனான திருமங்கை மன்னனுக்கு இக்கண்ணபுரத்து அம்மானிடம் உள்ள ஈடுபாடு எழுத்தில் அடங்காது. மாசிமக விழாவில் இன்று கருடசேவை.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
- அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23-ந்தேதி மாலை 4.22 மணிக்கு தொடங்கி, 24-ந் தேதி மாலை 6.18 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே, 23-ந்தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித் துள்ளது. இதையொட்டி, கோவிலில் பக்தர்கள் விரை வாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம்.
- ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் கட்டண சேவா டிக்கெட்டுகளுக்கான மே மாத டிக்கெட்கள் இன்று காலை வெளியிடப்பட்டன.
இதில் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கலுக்கு ஆன்லைன் பதிவு 21-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.
அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதிப அலங்கர சேவைகளுக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் மே மாத டிக்கெட்கள் வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மே மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.
மே மாதத்திற்கான. அங்கப்பிரதட்சணம் இலவச டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.
மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வருகிற 23-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.
- சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம், அலங்காரம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 7 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: தசமி நண்பகல் 12.55 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: மிருகசீரிஷம் பிற்பகல் 2.21 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. காங்கேயம் முருகப்பெருமான் தெய்வானை திருமணக்காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுபம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-ஆக்கம்
கடகம்-சாந்தம்
சிம்மம்-தாமதம்
கன்னி-செலவு
துலாம்- புகழ்
விருச்சிகம்-வெற்றி
தனுசு- ஊக்கம்
மகரம்-அறிவு
கும்பம்-முயற்சி
மீனம்-லாபம்
- ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
- மதுரையில் இன்மையில் நன்மை தருவார் கேடய சப்பரத்தில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 6 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி நண்பகல் 1.10 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 1.57 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் மரத்தோளுக்கினியானில் பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் கஜேந்தர மோட்சம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் விழா தொடக்கம். மதுரையில் இன்மையில் நன்மை தருவார் கேடய சப்பரத்தில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம் - லாபம்
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - கடமை
கடகம் - உண்மை
சிம்மம் - வரவு
கன்னி - உழைப்பு
துலாம் - கடமை
விருச்சிகம் - செலவு
தனுசு - களிப்பு
மகரம் - புகழ்
கும்பம் - பொறுப்பு
மீனம் - மகிழ்ச்சி
- திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 5 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி நண்பகல் 1.52 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: கிருத்திகை நண்பகல் 2.02 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி. குடந்தை ஸ்ரீசக்கரபாணி சந்திரபிரபையில் புறப்பாடு. மதுரை கூடலழகர் கள்ளர் திருக்கோலமாய் காட்சி. கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-அன்பு
கடகம்-உயர்வு
சிம்மம்-களிப்பு
கன்னி-வரவு
துலாம்- பெருமை
விருச்சிகம்-பரிவு
தனுசு- உவகை
மகரம்-களிப்பு
கும்பம்-பொறுமை
மீனம்-நன்மை
- பஞ்சமுக ஹனுமானை வழிடுதல் நல்ல பலனை கொடுக்கும்.
- ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும்.
வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் தோல்வியே ஏற்படுகிறது என வருந்துகிறீர்களா அல்லது துரதிருஷ்டம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம் குளிக்கும் போது செய்ய வேண்டியவை.
அதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். இதன் மூலம், விஷ்ணு பகவான் மற்றும் பிரஹஸ்பதி தேவைனின் அருள் நீங்காமல் இருக்கும். இதன் காரணமாக உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மாலையில் குளிக்கும் போது, தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இது அனைத்து எதிர்மறைகளையும் நீக்குகிறது.

அனுமனை வணங்குதல்
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நிதி அல்லது பிற பிரச்சினைகள் இருந்தால், பஞ்சமுக அனுமானை வழிடுதல் நல்ல பலனை கொடுக்கும். முடிந்தால், தினமும் அல்லது ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அனுமான் கோவிலுக்குச் சென்று பஞ்சமுக அனுமானின் முன் தீபம் ஏற்றி அனுமன் சாலிசாவை படித்தால், அனுமனின் அருளால் பணம், வேலை, எதிரிகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

துளசிக்கு முன் தீபம் ஏற்றவும்
தினமும் துளசிக்கு அருகில் தீபம் ஏற்றி வழிபட்டால், அவர் தனது வாழ்வில் இருந்து அனைத்து வகையான எதிர்மறை சக்திகளில் இருந்தும் காப்பாற்றப்படுவார் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கூட, அதன் பலன்களை உணர்ந்து, இது மிகவும் மங்களகரமான செயல் எனக் கருதுகின்றனர்.

சங்கு வழிபாடும் பலன் தரும்
உங்கள் வீட்டின் சில பகுதியில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது கண்டாலோ, குறைபாடு அந்த இடத்தில் காலையிலும் மாலையிலும் சங்கு ஊத வேண்டும். வீட்டில் சங்கு இல்லாவிட்டால், அதற்குப் பதிலாக வணங்கிய பின் மணியையும் அடிக்கலாம். வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றல் மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்படுகிறது.
நின்று போன கடிகாரம் வீட்டில் இருக்க கூடாது
வாஸ்து சாஸ்திரத்தில் இயங்காமல் நின்று போன கடிகாரம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. நின்று போன கடிகாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை நிறுத்துகிறது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் நின்று போன கடிகாரம் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய முயற்சிக்கவும் அல்லது வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இது தவிர, காலணிகள்-செருப்புகள் அல்லது ஆடம்பரமான பொருட்களை படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது, ஏனெனில் அது லட்சுமி தேவி வரும் பாதையை தடுக்கிறது என்று நம்பப்படுகிறது.
- ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று நடந்தது. இதனையொட்டி ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார். நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.
சாமி வீதி உலாவை காண கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 4 மாட வீதிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இன்று அதிகாலை 5-30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அப்போது மாட வீதிகளில் இருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து கோவிந்தா கோவிந்தா என விண்ணைமுட்டும் அளவுக்கு பக்தி பரவ சத்துடன் கோஷமிட்டனர். வாகன ஊர்வலத்தின் முன்பாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷம் வாகனத்திலும், 11 முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடந்தது.
மாலை 4 முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும் 6 முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலை யான் வீதிஉலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் உலா வருகிறார்.
ரதசப்தமி விழாவை காண வந்த பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், மோர் உள்ளிட்டவை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டன.
சுகாதார துறை சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.
மேலும் நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு மலிகா கார்க் தலைமையில் 650 போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் காட்சியளிப்பது பரவசத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
- துளசி மாலையில் 108 மணிகள் இருப்பது வழக்கம்.
- அனுதினமும் ஆராதித்து வர நம் சகல துன்பங்களும் நீங்கும்.
வைத்திருப்பதற்கும் வணங்கி அணிவதற்கும் துளசியை போன்றதொரு புனித தாவரத்தை நாம் காண முடியும். துளசியை போலவே, துளசி மாலையும் பெரும் முக்கியத்துவம் பெற்றது.
உங்கள் கழுத்திலோ அல்லது மணிகட்டிலோ நீங்கள் துளசி மாலையை அணிகிற போது அலாதியான ஒரு பாதுகாப்பு உணர்வு மேலெழும். இதை சற்று நவீன அறிவியலுடன் தொடர்புபடுத்தினால் துளசி மாலையை தொடர்ந்து அணிவதால், இன்றைய காலத்தின் மன அழுத்தங்களில் இருந்து விடுபட முடிகிறது என்கின்றனர்.
துளசி மாலையை ஏந்தியவாறு சொல்லப்படும் மந்திரம் "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே பார்ப்பதற்கு மிக எளிதான மந்திரமாக தோன்றினாலும் கலியுக பாவங்களில் இருந்து நமக்கு முக்தி அளிக்க கூடிய முக்கிய மந்திரம் இது என்கின்றனர் பெரியோர். இதில் இருக்கும் மற்றொரு முக்கிய அம்சம், பார்ப்பதற்கு இந்த சாதனா எளிமையாக இருப்பதாலேயே பலரும் எளிமையானது தானே என இதை கூட கடைப்பிடிக்காமல் விட்டு விடுகின்றனர்.
இந்த மாலையை கையில் வைத்திருக்கும் அல்லது அணிந்திருக்கும் எவரும் இந்த வித்தியாசத்தை உணரக்கூடும். அதாவது, அவர்கள் இந்த மாலையுடன் இருக்கும் போது, அவர்களின் கவனம் சிதறாமல் மிகவும் கவனத்துடன் பிரார்த்தனையில் வழிபாட்டில் இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி கையில் துளசி மாலையை வைத்தவாறே மந்திரத்தை உச்ரிப்பது நம்மை கிருஷ்ண பெருமானுக்கு மிக அருகில் எடுத்து செல்லும் வல்லமை கொண்டது என நம்புகின்றனர் பக்தர்கள்.
இந்த துளசி மாலையில் 108 மணிகள் இருப்பது வழக்கம். இந்த மணிகளை ஒவ்வொன்றாக நகர்த்தி மந்திரம் அல்லது ஸ்லோகம் சொல்கிற போது ஒலியின் சக்தி நம்மை சுற்றி உருவாகிறது. இதன் மூலம் எளிமையாக நாம் தியான நிலைக்குள் சென்று விட முடியும். இத்தனை வல்லமைகளையும் பெற்ற துளசி மாலையை நாம் அனுதினமும் ஆராதித்து வர நம் சகல துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் வெறும் தண்ணீரை கூட புனித நீராக மாற்றும் துளசி நம் வாழ்வையும் அர்த்தம் மிகுந்ததாக மாற்றும்.
- கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு.
- குருவின் ஆசிர்வாதத்தை தான் குரு பலன் என்கிறோம்.
கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு. குருவின் ஆசிர்வாதத்தை தான் குரு பலன் என்கிறோம். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். அத்தகைய குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.
* குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.
* குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு வேலை கிடைக்கும்.
* குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனுகூலம் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.
* குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு வாகன யோகம் கிடைக்கும்.
* குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
* குரு பகவான் 6-ல் இருந்தால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.
* குரு பகவான் 7-ல் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
* குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.
* குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.
* குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.
* குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.
* குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.
- மஞ்சள் தூள் வைத்துக் கொண்டு நீராடுவது சம்பிரதாயம்.
- நீராடிய பிறகு சூரியனுக்கு அர்க்கியம் தருவது விசேஷம்.
ரத சப்தமி அன்று காலையில், சுமங்கலிகள் ஏழு எருக்கம் இலைகளை (தலை மீது 3, வலது புஜத்தில் 2, இடது புஜத்தில் 2 ) அட்சதை மற்றும் மஞ்சள் தூள் வைத்துக் கொண்டு நீராடுவது சம்பிரதாயம். ஆண்கள் எருக்கம் இலைகளில் அட்சதை மட்டுமே வைத்து நீராட வேண்டும். நீராடிய பிறகு சூரியனுக்கு அர்க்கியம் தருவது விசேஷம். நீராடும்போது கீழ் கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைச் சொல்வது நன்மை தரும்.
ஸப்த ஸப்தப்ரியே தேவி ஸப்த வோதைக தீபிகே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்
யதா ஜன்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸி ஜன்மஸி
தன்மே சோகஞ்ச மோஹஞ்ச மாகரீ ஹந்தஸப்தயீ
ஏதத் ஜன்ம க்ருதம் பாபம் யத்ச ஜன்மாந்த ரார்ஜிதம்
மனோவாக்காய ஜம் பாபம் ஜ்ஞாதாஜ்ஞாதேச புன
சூரிய அர்க்கியமும்.. மந்திரமும்..
சூரியனுக்கு அர்க்கியம் கொடுக்கும்போது, வலது கையில் அட்சதை, பூ, சந்தனம், குங்குமம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, பாலும் தண்ணீரும் கலந்த நீரை ஒரு கிண்ணத்தில் இடது கையால் எடுத்து, வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றும் நீரானது, ஒரு நல்ல தட்டில் (பித்தளை அல்லது செப்பு) விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் கீழே சொல்லியுள்ள மந்திரத்தை சொல்லவும்.
ஸப்த ஸப்திவஹ ப்ரீத ஸப்தலோக ப்ரதீபன்
ஸப்தமீ ஸஹிதோதேவ க்ருஹாணார்க்யம் திவாகர
திவாகராய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்
இதி ஸப்த விதம் பாபம் ஸ்நாநான் மே ஸப்தஸப்திதே
ஸப்தவ்யாதி ஸமாயுக்தம் ஹர மாகரி ஸப்தமி
- சூரிய பகவானை வழிபடுவது சிறப்பானது.
- பீஷ்மரின் கர்மா விலகிய தினமாகவும் சொல்லப்படுகிறது.
பல யுகங்களுக்கு முன் சூரிய பகவானின் ஒளி குறைந்தது. இதைக் கண்ட முப்பத்துமுக்கோடி தேவர்களும், பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, விஸ்வகர்மாவை அழைத்து `சூரிய பகவானுக்கு விசேஷமான ஒளியை உண்டாக்க வேண்டும்' என்று கட்டளைவிட்டார்.
அதன்படி விஸ்வகர்மா தன் திறமையால் அற்புதமான ஒளியை சூரியனுக்கு உருவாக்கிக் கொடுத்தார். இந்த தினத்தையே `ரத சப்தமி' என்று அழைக்கின்றோம். தை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதிக்கு, `ரத சப்தமி' என்று பெயர்.
சூரிய பகவான் தன் ஒளியை மீண்டும் சிறப்பாகப் பெற்ற தினம் என்பதால், ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபடுவது சிறப்பானது.
மேலும் இந்த ரத சப்தமி, பீஷ்மரின் கர்மா விலகிய தினமாகவும் சொல்லப்படுகிறது. இன்று சூரிய பகவானை வழிபட்டால், பீஷ்மருக்கு அருளியதுபோல இறைவன், நமக்கும் அருள்வார் என்பது நம்பிக்கை.
பீஷ்மர் என்ற சொல்லிற்கு 'பயங்கர சபதம் செய்தவர்' என்று பொருள். இவர் நைஷ்டிக பிரம்மச்சாரி ஆவார். திருமணம் ஆகாமல், தன்னுடைய கலைகளைக் கொண்டிருப்பவர், `பிரம்மச்சாரி' என்று அழைக்கப்படுகிறார். அதே நேரம் 'வாழ்நாள் முழுக்க திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று, சங்கல்பம் செய்து வாழ்பவர்கள் `நைஷ்டிக பிரம்மச்சாரி' எனப்படுகிறார்கள்.
பீஷ்மருக்கு, அவர் விரும்பிய போது மரணம் அடைய முடியும் என்ற வரம் இருந்தது. அவர் பெண்களை எதிர்த்து யுத்தம் செய்ய மாட்டார். மகாபாரதத்தில் (பீஷ்ம பர்வம்) பத்தாவது நாள் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்த யுத்தத்தில் அர்ச்சுனனுடன் சிகண்டி வந்தான்.
சிகண்டி முன்பிறவியில் 'அம்பா' என்னும் பெண்ணாக, காசிராஜனின் மூத்த மகளாக வளர்ந்தாள். இவள் அம்பிகா, அம்பாலிகா ஆகியோரின் சகோதரி. இந்த மூன்று பெண்களுக்கும் சுயவரம் நடந்த பொழுது, அஸ்தினாபுரத்தில் தன்னுடைய குலம் விருத்தியாவதற்காக விசித்திரவீரியனுக்கு மணம் முடிக்க, அவர்கள் மூவரையும் பீஷ்மர் போர் புரிந்து தூக்கிவந்தார்.
இதில் அம்பா, 'சால்வ நாட்டு மன்னனிடம் மனதை பறிகொடுத்து விட்டேன். எனவே விசித்திர வீரியனை திருமணம் செய்து கொள்ளமாட்டேன்' என்று கூறியதால், அவளை திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் பீஷ்மரிடம் தோற்றதால், போரில் வெல்லப்பட்ட அம்பாவை திருமணம் செய்ய சால்வ நாட்டு மன்னன் மறுத்துவிட்டான்.
இதனால் மீண்டும் அஸ்தினாபுரம் வந்த அம்பா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பீஷ்மரிடம் கேட்டாள். அவரோ `நான் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி' என்று கூறி மறுத்தார். இதனால் கோபம் கொண்ட அம்பா, 'என்னால்தான் உன் உயிர் பிரியும்' என்று சபதம் செய்து தன்னை மாய்த்துக் கொண்டாள்.
அவளே மறுபிறவியில் சிகண்டியாக பிறந்தாள். சிகண்டி பிறக்கும்போது பெண்ணாக இருந்து ஆணாக மாறியவள். எனவே அவளை எதிர்த்து யுத்தம் செய்ய பீஷ்மர் விரும்பவில்லை. யுத்த களத்தில் பலரையும் பதறவைத்த பீஷ்மர், சிகண்டியிடம் ``நீ யுத்தம் செய் அல்லது செய்யாமல் போ.. ஆனால் என்னை பொறுத்தவரை நீ பெண்தான். உன்னை எதிர்க்க மாட்டேன்' என்று யுத்தம் செய்வதை நிறுத்தினார்.
இதையடுத்து சிகண்டி கூர்மையான அம்புகளால் பீஷ்மரை துளைத்தாள். ஆனால் அவருக்கு பெரிய துயர் எதுவும் உண்டாகவில்லை. அப்போது அர்ச்சுனன், தன்னுடைய அம்புகளை எய்தான். அது பீஷ்மரின் மார்பை துளைத்தது. அவர் கீழே விழுந்தார். அம்புகள் அவர் உடலை தாங்கியது. அதனால் அவர் உடல் மண்ணைத் தொடவில்லை. இருப்பினும் தலை தொங்கிக் கொண்டிருந்தது.
அப்போது அர்ச்சுனன் தன் வில்லில் இருந்து மூன்று பானங்களை எய்தான். அவை முக்காலியைப் போல் அவர் தலையைத் தாங்கின. தன்னுடைய இறப்பை தானே தீர்மானிக்கும் வரம் பெற்றிருந்ததால், உத்தராயன காலத்தில் தன் உயிரைத் துறக்க பீஷ்மர் எண்ணியிருந்தார். ஆனால் அவருக்கு மரணம் வரவில்லை.

இதனால் அவா் அங்கு வந்த வியாசரிடம் "நான் என்ன பாவம் செய்தேன்?" என்று கேட்டார். அதற்கு வியாசர், "நீ பாவம் செய்யவில்லை. இருப்பினும் பாவங்களுக்கு துணை போனாய். என்னை காப்பாற்றுங்கள் என திரவுபதி கேட்ட பொழுது, அவளுக்கு நடந்த கொடுமையை நீ தடுக்கவில்லை. உன் கண்களால் அதை பார்த்தாய். தலை குனிந்தாய். துச்சாதனனை எதிர்க்கக் கூடிய அளவு உனக்கு பலம் இருந்தும், ஆயுதங்களை கையில் ஏந்தவில்லை. மவுனமானாய். இப்படி அனைத்து அங்கங்களாலும் பாவம் செய்ததன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறாய்" என்றார்.
``இதற்கு என்ன பிராயச்சித்தம்'' என்று பீஷ்மர் கேட்க, "நீ அங்கங்களினால் செய்த பாவம் நீங்க வேண்டும். அதன்பின் உனக்கு மரணம் உண்டாகும். எனவே சூரியனுக்கு உகந்த எருக்கம் இல்லைகளை உன் உடலில் பரப்புகிறேன். எருக்க இல்லையை 'அர்க்க பத்திரம்' என்பார்கள். அதன் மூலமாக உன்னுடைய கர்மா விலகி உனக்கு மரணம் உண்டாகும்" என்றார். அதன்படி பீஷ்மர் செய்த பாவங்களுக்கான கர்மா விலகிய தினம், ரத சப்தமி ஆகும்.
விரதம் இருப்பது எப்படி?
ரதசப்தமி விரதம் இருக்க நினைப்பவர்கள், காலை எழுந்து எருக்கம் இலையை தலையில் வைத்து, அதற்கான சுலோகத்தை சொல்லி நீராட வேண்டும். இலந்தை இலையை தலையில் வைத்துக் கொண்டு மஞ்சள் சேர்த்து நீராடும் வழக்கமும் உண்டு. இதில் தந்தை இல்லாதவர்களும், கணவனை இழந்த பெண்களும், வெண்மையான பச்சரிசி உடன் கருப்பு எள்ளும் கலந்து தலையில் வைத்து நீராட வேண்டும்.
ரதசப்தமி அன்று காலை ஒரு சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி அழகான ரதம் வரைய வேண்டும். அதன்பின் சூரிய - சந்திரர்கள் பவனி வருவதாக வரைந்து (கோலமிட்டு), சந்தனம், குங்குமம், அட்சதை, பல வாசனை மலர்களால் வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்விதம் சூரிய நாராயணரை பூஜித்த பின், சர்க்கரை பொங்கல், உளுந்து வடை போன்றவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சூரிய பகவானை முறைப்படி நீராடி வழிபாடு செய்வதால் இல்லத்தில் உள்ள தோஷங்கள் விலகும்.
பூஜை முடிந்தபின் கீழ்கண்ட 12 நாமங்களை சொல்லி சூரிய பகவானை பன்னிரண்டு தடவை வணங்க வேண்டும்.
1) ஓம் மித்ராய நமஹ,
2) ஓம் ரவையே நமஹ,
3) ஓம் சூர்யாய நமஹ,
4) ஓம் பானவே நமஹ,
5) ஓம் ககாய நமஹ,
6) ஓம் பூஷ்னே நமஹ,
7) ஓம் ஹிரண்யகர்பாய நமஹ,
8) ஓம் மரீசயே நமஹ,
9) ஓம் ஆதித்யாய நமஹ,
10) ஓம் ஸவித்ரே நமஹ,
11) ஓம் அர்காய நமஹ,
12) ஓம் பாஸ்கராய நமஹ.






