என் மலர்
தோஷ பரிகாரங்கள்
பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. நாக தோஷத்திற்கு வீட்டில் பரிகார பூஜை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளவர்கள் இந்த ஸ்ரீநாகராஜ பூஜையை செய்வது நல்லது. சுவற்றிலோ அட்டையிலோ வேறு பொருளின் மீதோ நாகத்தை வரையலாம். அரிசி மாவில் ஜலத்தை விட்டுக்கரைத்து, ஏழு பாம்புகள் வரைய வேண்டும். மேலே தலை கீழே வால் இருக்க வேண்டும். பூஜை செய்பவர்களின் கைக்கு ஒரு முழு அளவில் கிழக்கு முகமாக வரைய வேண்டும்.
வடக்கு முகமாக அமர்ந்து, பூஜையை பெண்களோ அல்லது ஆண்களோ அமாவாசைக்கு பிறகு வரும் சஷ்டி அன்று செய்ய வேண்டும். நிவேதன பொருளாக தேங்காய் பழம் இருக்கலாம். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கஞ்சிவடிக்காத சாதத்தை நிவேதனம் செய்து உப்பில்லாமல் சாப்பிடலாம். இரவில் பால் பழம் சாப்பிடுவது நல்லது.
மகளிர் ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டியன்று பாம்பையும், அது குடியிருக்கும் புற்றை யும் வழிபட வேண்டும். தங்கம், வெள்ளி, செம்பு முதலியவற்றில் ஏதாவது ஒரு உலோகத்தில் நாக உருவத்தை செய்து அவ்வடிவத்தை பூஜை அறை யில் வைக்க வேண்டும். சஷ்டி தினத்தன்று பூஜை அறையில் கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அன்று உபவாசம் இருப்பது நல்லது. மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி அதன் பின்னர் உணவருந்தி உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் உடல் நலம், மனநலம், குடும்ப நலம், மகப்பேறு ஆகியவை உண்டாகும். நாகதோஷம் நீங்கும்.
பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது.
குழந்தை இல்லாதவர்கள் நாகத்தை சிலை வடிவில் அமைத்து ஆறுமாதம் தண்ணீரிலும் ஆறுமாதம் நெய்யிலும் வைத்து பூஜை செய்து அரச மரத்தில் வைத்து வழிபடுவார்கள்.
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் வேள்வி செய்யும் பொழுது நாக சக்கரம் வரையப்படுகிறது. மேல்மருவத்தூர் கோவில் கருவறையில் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க ஆதிபராசக்தி அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளை செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு எந்த பரிகார பூஜை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும். அதே போல்
பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்
அவருக்கு செய்பவைகளில் சில,
- வடைமாலை சாத்துதல்
- செந்தூரக்காப்பு அணிவித்தல்
- வெண்ணெய் காப்பு சாத்துதல்
- ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.

நாக தோஷத்தை போக்க நாக சிலையை பிரதிஷ்டை செய்யலாம். தோஷமுள்ளவர்கள் கீழுள்ள ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் நாகப்பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கும்.
ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12-வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும். இந்த தோஷத்தை போக்க நாக சிலையை பிரதிஷ்டை செய்யலாம்.
நாகப்பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும், பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
ஆகவே தோஷமுள்ளவர்கள் கீழுள்ள ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் நாகப்பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கும் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர்.
ராமநாதர்-ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), முத்தால பரமேஸ்வரியம்மன் -பரமக்குடி (ராமநாதபுரம்), மகுடேஸ்வரர்-கொடுமுடி (ஈரோடு), அனந்தீஷ்வரர்-சிதம்பரம் (கடலூர்), முத்துக்குமரர் -பரங்கிப்பேட்டை (கடலூர்), நாகராஜா சுவாமி -நாகர்கோவில் (கன்னியாகுமரி),குமரக்கோட்ட முருகன்- காஞ்சீபுரம் (காஞ்சீபுரம்).

பச்சைவண்ணப் பெருமாள் -காஞ்சீபுரம் (காஞ்சீபுரம்), பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்-அமிர்தபுரி (காஞ்சீபுரம்), ஆதிகேசவப்பெருமாள் -ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சீபுரம்), நஞ்சுண்டேஸ்வரர்- காரமடை(கோவை), திருவேட்டீஸ்வரர்-திருவல்லிக்கேணி (சென்னை),தேனுபுரீஸ்வரர் -மாடம்பாக்கம் (சென்னை), ரவீஸ்வரர் -வியாசர்பாடி (சென்னை).
அருணஜடேசுவரர்-திருப்பனந்தாள் (தஞ்சாவூர்), சுப்பிரமணிய சுவாமி -குமாரவயலூர் (திருச்சி),தொண்டர்கள் நயினார்சுவாமி -திருநெல்வேலி (திருநெல்வேலி), பக்தவச்சலப்பெருமாள்-திருநின்றவூர் (திருவள்ளூர்), சாமாண்டியம்மன்-சாமாண்டிபுரம், கம்பம் (தேனி), விருப்பாச்சி ஆறுமுகநயினார்-தீர்த்ததொட்டி (தேனி).
சிவலோகநாதர்-திருப்புன்கூர் (நாகப்பட்டினம்), நாகநாத சுவாமி -நாகநாதர் சன்னதி (நாகப்பட்டி னம்),அர்த்தநாரீஸ்வரர் -திருச்செங்கோடு (நாமக்கல்), அரங்குளநாதர் -திருவரங் குளம்(புதுக்கோட்டை), கல்யாணராமர்-மீமிசல் (புதுக்கோட்டை).
காசிவிஸ்வநாதர்-இரும்பாடி சோழவந்தான் (மதுரை), அய்யனார் சுவாமி -கோச்சடை (மதுரை), செல்லத் தம்மன்,கண்ணகி -சிம்மக்கல்(மதுரை), அங்காள ஈசுவரி-மாந்தோப்பு (விருதுநகர்), நாகேஸ்வரசுவாமி -பூவரசன்குப்பம் (விழுப்புரம்).

பிளாஞ்சேரி கைலாசநாதர் தலத்தில் உள்ள இறைவன் மற்றும் இறைவியை வழிபட்டால் பித்ருதோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும், பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி கிட்டும்.
கும்பகோணத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இறைவனாக கைலாசநாதரும், இறைவியாக காமாட்சி அம்மனும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த தலத்தில் தனி சன்னதியில் அஷ்ட பைரவர்களுடன் சரபசூலினி வீற்றிருக்கிறார்.
ஊழிக்காலத்தில் பிரளயம் ஏற்பட்டு ஜீவராசிகள் அழிந்து விடும் என்று உணர்ந்த பிரம்மதேவர் சப்தரிஷிகளையும் அழைத்து ஜீவராசிகளை காக்கும் பொருட்டு, சிவபெரு மானை நோக்கி தவம் மேற்கொள்ளும் படி கூறினார். பிரம்மதேவரின் ஆணையை ஏற்று சப்தரிஷிகளும் தவம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
ஆத்ரேய மகரிஷியின் மகனான பிராச மகரிஷியும, ஜீவராசிகளை காக்கும் பொருட்டு சப்த ரிஷிகளோடு இணைந்து தவம் மேற்கொள்ள பிரம்மதேவரிடம் அனுமதி வேண்டினார். பிரம்மதேவரோ, நீ சப்த ரிஷிகளோடு இணைந்து தவம் மேற்கொள்ள இயலாது. உனது கர்மவினைகள் இன்னும் தீரவில்லை. ஆகையால் நீ முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இதனால் சினம் கொண்ட பிராச மகிரிஷி, இந்த ஆலயத்தில் உள்ள காமாட்சி அம்மன், கைலாசநாதரை வழிபட்டு தவம் மேற்கொண்டார்.
பிராச மகரிஷியின் தவத்தால் மகிழ்ந்த கைலாசநாதர் அசரீரியாக, உனது கர்மவினைகள் அகல நீ சூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து, 1,008 பவுர்ணமி நன்னாளில் ஜெயமங்களா மகா யாகத்தை நடத்தினால் சூலினியின் அருளால் உனது கர்ம வினைகள்நீங்கி உன் தவப்பயனால் உலகம் அழிவில் இருந்து காக்கப்படும் என்றார். இந்த தலம் நீ வழிபாடு செய்ததால் இன்று முதல் பிராசவனஞ்சேரி என்றும் அழைக்கப்படும் என கூறினார்.

ஆதலால் இந்த தலத்தில் உள்ள இறைவன் மற்றும் இறைவியை வழிபட்டால் பித்ருதோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும், பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி கிட்டும். இந்த கோவிலில் மட்டுமே பிராச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு 18 திருக்கரங்களோடு சிம்ம வாகனத்தில் அஷ்ட பைரவர்ளையும் காவலாக கொண்டு தனிப்பெரும் சக்தியாக சரபசூலினி அருளாசி புரிகிறார்.
இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மாலை 5 மணிக்கு ஸ்ரீஜெயமங்களா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொண்டால் பில்லி,சூனியம், ஏவல், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். இழந்த பதவிகள் கிட்டும். உயர் பதவிகள் பெறலாம். அரசியலில் வெற்றி பெறலாம் என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த கோவிலில் தனி சன்னதியில் மங்கள சனீஸ்வரன் வீற்றிருப்பது இக்கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. அதேபோல் இந்த கோவிலில் அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் வீற்றிருக்கின்றனர். 9 வெள்ளிக்கிழமைகள் அஷ்ட பைரவர்கள் மற்றும் சரப சூலினிக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். 8 தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர்களை வழிபட்டால் சகல ஐஸ்வரியங்களும் கிட்டும்.

குரு முழு சுப கிரகமாக இருப்பதால் ஜோதிட விதிப்படி அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் ஏற்படுகிறது. இதற்கான சிறந்த பரிகாரத்தை பார்க்கலாம்.
குரு முழு சுப கிரகமாக இருப்பதால் ஜோதிட விதிப்படி அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பானது அல்ல.
இதை குறிப்பிடும் வகையில்தான் ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற பழமொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு
பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம்,
செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும். ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.

மதபோதகர், மத பிரசாரகர், சொற்பொழிவாளர், கதா கலாட்சேபம் போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். கோயில் கட்டுதல், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தல், அறங்காவலர் பதவி, தர்மஸ்தாபனம்அமைத்தல் போன்ற பாக்கியத்தை அருள்வார். தலைசிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பவர்கள் குருவின் பரிபூரண அருள் பெற்றவர்களே. கல்வித்துறை, நிதி, நீதித்துறைகள், வங்கி போன்றவற்றில் பணி செய்யக்கூடிய பாக்கியத்தை அருள்பவரும் குரு பகவானே.
பரிகாரம்: குரு பகவானின் பரிபூரண அருள் வேண்டுபவர்கள் அனைத்து முருகன் ஸ்தலங்களுக்கும் சென்று வணங்கலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக் கடலை சுண்டல் வழங்கலாம். கும்பகோணம் அருகில் ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் உள்ள குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்கினால் அவரது அருள் கடாட்சம் நிச்சயம் கிடைக்கும்.

கடன் தொல்லை, தீராத பிரச்னைகள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை போன்ற பிரச்சனைகளுக்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு சிறந்த பரிகாரம் ஆகும்.
கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. இந்த துதி சமஸ்கிருதத்தில் இருப்பதால், படிக்க இயலாதவர்களுக்கு எளிமையான பரிகாரம் இருக்கிறது.
லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை பாராயணம் செய்யவேண்டும். அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு, தண்ணீர், வெல்லம் சேர்ந்த கலவை) பிரசாதமாக வைக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பூஜையைச் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி உண்டாகும். தீராத பிரச்னைகள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்படுதல் நீங்கவும் இது சிறந்த பரிகாரம்.

பஞ்சபூத தலங்களில் நிலத்திற்குரிய தலமாக திருவாரூர் தியாகராஜர் ஆலயம் திகழ்கிறது. இந்த தலத்தில் உள்ள தியாகராஜரின் பாதத்தை தரிசிப்பதால் தோஷம் நீங்கி சலக சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
பிறக்க முக்தி தரும் தலம் ‘திருவாரூர்’. இங்கு இறைவன் எந்த காலத்தில் எழுந்தருளினார் என்பது யாரும் அறியாத ரகசியம். அதனால் தான் திருவாரூரை ‘அந்தரகேசபுரம்’ என்கிறார்கள். பஞ்சபூத தலங்களில் நிலத்திற்குரிய தலமாக திருவாரூர் தியாகராஜர் ஆலயம் திகழ்கிறது.
ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கு இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. அப்போது தனக்கு உதவி செய்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு, தேவர்களின் தலைவன் இந்திரன், வீதி விடங்கரை பரிசாக வழங்கினான். இந்திரனிடம் இருந்து பெற்ற வீதி விடங்கர் சிலை திருவாரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவரே தியாகராஜர் என்று அழைக்கப்படுகிறார்.

அந்தரகேசபுரத்து அரசரும் அவர் தான். ரத்தின சிம்மாசனத்தில், வாள்படை வீரர்கள் முன் நிற்க வீற்றிருக்கும் தியாகராஜ பெருமானைப் பார்த்தாலே, அவரை அரசர் என்று போற்றுவதன் பொருள் விளங்கும். கொண்டி அம்மன், முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த கோலத்தில் அருள்புரியும் தியாகராஜரின் பாதங்களை, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தரிசிக்க முடியும்.
ஒன்று பங்குனி உத்திரம், மற்றொன்று மார்கழி திருவாதிரை. மற்ற நாட்களில் தலை பாகத்தைத் தவிர உடல் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மார்கழி திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் வணங்கலாம். தியாகராஜரின் பாதத்தை தரிசிப்பதால் அனைத்து விதமான தோஷங்களும் விலகி சலக சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

எண் பார்வையில் கோளாறு, செவ்வாய் தோஷம், கண்நோய் போன்ற பிரச்சனைகளை நிவர்த்திக்கும் தலமாக விளங்குகிறது எண்கண் திருக்கோயில்.

முருகப்பெருமானின் இந்த எண்கண் திருத்தலம் திருவாரூர், கொடவாசல் வட்டத்தில் உள்ள முகுந்தனூருக்கு அருகில் உள்ளது. செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமான் இத்தலத்தில் தெற்கு முகமாக அமர்ந்து காட்சியளிப்பது தனிச்சிறப்பு.

செவ்வாய்தோஷ நிவர்த்தித் தலமாக எண்கண் கருதப்படுகிறது. கடன் பிரச்னை, சத்ருக்களின் தொல்லை, திருமணத்தடை போன்றவை இத்தலத்து முருகனை வழிபட நிவர்த்தியாகிறது.
கண்பார்வை குறைந்தவர்கள், கண்நோய் உள்ளவர்கள், பிரதிமாதம் விசாக நட்சத்திரத்தன்று எண்கண் திருத்தலத்தில் சண்முகார்ச்சனை செய்து வழிபட கண்பார்வை முழுகுணம் பெறுவது இத்தலத்தின் குறிப்பிடத்தக்க அற்புதமாகும். ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கரிவரதராஜ பெருமாள் திருத்தலத்தில் ஜாதக ரீதியாக தோஷம் கொண்டவர்களின் தோஷம் நீங்குவதற்காக தத்து பரிகாரம் என்ற பூஜையை பக்தர்கள் செய்து வருகின்றனர்.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இந்த திருத்தலத்தில் ஜாதக ரீதியாக தோஷம் கொண்டவர்களின் தோஷம் நீங்குவதற்காக தத்து பரிகாரம் என்ற பூஜையை பக்தர்கள் செய்து வருகின்றனர். அவரவர் வசதிக்கேற்ப பச்சை பயறும், உருண்டை வெல்லமும் கொண்டு வந்து பெருமாளுக்கு படைத்து, பின்னர் அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி தங்கள் தோஷங்களில் இருந்து விடுபடுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8 முதல் 9 மணியளவில் சுக்ர ஓரையில் சந்தான பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கும், மாங்கல்ய பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அப்போது சாமிக்கு நெய்தீபம் ஏற்றி, தாமரை பூக்களால் அர்ச்சனை நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபாடு நடக்கிறது.

இந்த திருத்தலத்தில் புதிதாக மேற்கொள்ளும் காரிய சித்திக்கு பூ வைத்து பெருமாளின் அனுக்கிரகம் கிடைக்கிறதா? என்று பக்தர்கள் பார்க்கின்றனர். இதற்காக பக்தர்கள் தாங்கள் விரும்பும் நற்காரியத்தை மனதில் நினைத்து கொண்டு வெள்ளை அரளி பூவையும், சிவப்பு அரளி பூவையும் ஒரு தாளில் மடித்து கட்டி அதை மூலவர் வீற்றிருக்கும் கருவறையில் வைத்து பூஜை செய்கின்றனர்.
அதன்பிறகு சிறிது நேரம் கழித்து கருவறையில் வைத்த தாளில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து பிரித்து பார்க்கும் போது அதில் வெள்ளை அரளி பூ இருந்தால் நாம் மேற்கொள்ளும் காரியம் கை கூடும் என்பதும், சிவப்பு அரளி பூ வந்தால் தற்சமயத்துக்கு அந்த காரியம் மேற்கொள்ள வேண்டாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
வையில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் இந்த திருத்தலம் அமைந்து உள்ளது. பெரிய நாயக்கன்பாளையத்தில் இருந்து நடந்தே கோவிலுக்கு செல்லலாம். கோவையில் இருந்து பெரியநாயக்கன் பாளையத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

திருப்பாம்புரம் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு, நாகதோஷ பரிகாரத் தலங்கள் அனைத்திற்கும் சென்று வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிவபெருமான் கொடுத்த சாபத்தால் தங்கள் சக்திகள் அனைத்தையும் இழந்த நாக இனத்தினர், தங்கள் சக்திகளைத் திரும்பப் பெற்ற இடம் திருப்பாம்புரம் பாம்புபுரேஸ்வரர் கோவில் ஆகும்.
சிவபெருமான் கொடுத்த சாபத்தால் தங்கள் சக்திகள் அனைத்தையும் இழந்த நாக இனத்தினர், தங்கள் சக்திகளைத் திரும்பப் பெற்ற இடம் திருப்பாம்புரம் பாம்புபுரேஸ்வரர் கோவில் ஆகும். இந்த ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் பேரளம் என்ற ஊரில் இருந்து மேற்கே 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இத்தலத்தில் உள்ள இறைவனுக்கு பாம்புபுரேஸ்வரர் எனும் பெயர் தவிர, ‘பாம்புரநாதர், சேஷபுரீஸ்வரர்’ எனும் வேறு பெயர்களும் உண்டு. இங்கு இருக்கும் அம்மன் வண்டமர் பூங்குழலியம்மை என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றவர்கள் சிறப்பு வழிபாடுகளைச் செய்து வழிபட்டிருக்கின்றனர். இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார். கங்கையின் பாவத்தையும், சந்திரனின் பழியையும் நீக்கிய பெருமை இத்தலத்திற்கு இருக்கிறது.
இங்கு ராகுவும், கேதுவும் ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் இத்தலம் ராகு, கேது பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு, கும்பகோணம், திருநாகேஸ்வரம், நாகூர், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் போன்ற நாகதோஷ பரிகாரத் தலங்கள் அனைத்திற்கும் சென்று வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவாஞ்சியத்தில் சனி பகவானின் அதிதேவதையான எமதர்மராஜாவே இங்கு ஷேத்திர பாலகராக உள்ளதால், அனைத்து விதமான தோஷங்களும், எமதர்மனை வழிபட்டால் அகலும் என்பது ஐதீகம்.
எமதர்மனுக்கு ஏற்பட்ட ஆணவத்தின் காரணமாக, அவனது பணியைப் பறித்தார் சிவபெருமான். இதையடுத்து எமதர்மன், திருவாரூர் தியாகராஜ பெருமானை தரிசித்து, திருவாஞ்சியம் வந்து தவமிருந்தான். மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஈசன், எமதர்மனுக்கு காட்சி கொடுத்து, அவனது பணியை திரும்ப வழங்கினார்.
மேலும் ‘திருவாஞ்சியம் தலத்திற்கு வரும் பக்தர்கள், தல தீர்த்தமான குப்த கங்கையில் நீராடிவிட்டு, உன்னை வணங்கிய பிறகுதான், விநாயகரை வழிபட்டு, என்னை வணங்குவார்கள்’ என்று எமனுக்கு வரமும் அளித்தார். திருவாஞ்சியம் ஆலயத்தில் அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் எமதர்மன் அருள்பாலிக்கிறார். அருகில் சித்திரகுப்தரும் வீற்றிருக்கிறார்.
இங்கு விழாக் காலங்களில் நந்தி வாகனத்திற்கு பதிலாக, இறைவன் எம வாகனத்திலேயே திருவீதி உலா வருகிறார். சனி பகவானின் அதிதேவதையான எமதர்மராஜாவே இங்கு ஷேத்திர பாலகராக உள்ளதால், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி முதலிய தோஷங்களும், எமதர்மனை வழிபட்டால் அகலும் என்பது ஐதீகம்.

கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.
இன்பத்தை கண்டால் மகிழ்ச்சியடையும் மனம், துன்பத்தைக் கண்டால் வாடி விடுகிறது. மனிதனுக்கு ஏன் துன்பம் உண்டாகிறது என்பது குறித்து, பாரததேசத்தை ஆண்ட போஜ மகாராஜன் தனது நீதி நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதில்,""ஒருவன் தவறாமல் முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் அவனை துன்பம் விரட்டும். இது தவிர, தெய்வ நிந்தனை செய்வது, ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியைப் பிரிப்பது, கோள் சொல்லி குடும்ப ஒற்றுமையைக் குலைப்பது, வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களை எந்தப் பிறவியில் செய்திருந்தாலும், அது விரட்டி வந்து துன்பத்தைத் தரும்,'' என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், பாவம் செய்யாத மனிதர் யார் இருக்கிறார்கள்? ஏதோ, ஒரு பாவத்தை செய்து தொலைத்ததால் தான், இப்போது கஷ்டம் நம்மை வாட்டுகிறது. இவ்வாறு, அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களால், கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். "பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை' என்ற முழுமையான நம்பிக்கையுடன், நரசிம்மரின் திருவடிகளில் சரணாகதி அடைவது, தண்டனையில் இருந்து விடுதலை தரும்.
தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் அவர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.

தினமும் நீராடிய பின், "நரசிம்ம பிரபத்தி' ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள்.
அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது.
48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.
பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.