search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chevvai dosham"

    • செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன்.
    • செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன் கோவிலும், பழநியும் கருதப்படுகின்றன.

    செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன் கோவிலும், பழநியும் கருதப்படுகின்றன.

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழநி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

    இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை.

    செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.

    இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை) விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளிலும், அன்றாடம், செவ்வாய் ஹோரையிலும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.
    நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளிலும். அன்றாடம், செவ்வாய் ஹோரையிலும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

    தினமும் பகலில் செவ்வாய் ஹோரை நேரம்

    செவ்வாய் 6 மணி முதல் 7 மணி வரை, 1 மணி முதல் 2 மணி வரை
    புதன் 10 மணி முதல் 11 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரை
    வியாழன் 7 மணி முதல் 8 மணி வரை, 2 மணி முதல் 3 மணி வரை
    வெள்ளி 11 மணி முதல் 12 மணி வரை
    சனி 8 மணி முதல் 9 மணி வரை, 3 மணி முதல் 4 மணி வரை
    ஞாயிறு 1 மணி முதல் 2 மணி வரை
    திங்கள் 9 மணி முதல் 10 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை.
    நவகிரக தோஷம் நீங்க பல்வேறு பரிகாரங்கள் இருந்தாலும் சில எளிய பரிகாரங்கள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    * காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு, 15 நாட்கள் கொடுத்தல். வெள்ளி டம்ளர்களை நீர் அருந்த பயன்படுத்துதல் சுக்ரனை பலப்படுத்தும்.

    * நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல், சனி மற்றும் புதன் பாதிப்பில் இருந்து விலக்கும்.

    * தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிவதால் குருவருள் கிடைக்கும்.

    * கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போட்டால், சந்திரனின் பலனைப் பெறலாம்.

    * வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும், தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்க செய்யும்.

    * தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தை கூட்டும்.

    * 16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது பிரீதிக்கு உகந்தது.

    * அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

    * இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப்பயிறை நீரில் இட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோஷம் நீங்கும்.

    * வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்ரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.

    நாடி ஜோதிடர் பாஸ்கர், வடவள்ளி.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஜோதிடரிம் ஜாதகத்தைக் காண்பித்து, உரிய பரிகாரங்களைச் செய்து பார்த்த பிறகும் பலன் கிடைக்காமல் போகலாம். சிலர் " நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன" என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள்.

    இதற்கு பரிகாரத்தை தவறாக செய்வது கூட காரணமாக இருக்கலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு.

    சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

    செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

    ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் முதல் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

    இதை பின்பற்றினால் பரிகாரம் நல்ல பலனளிக்கும்.

    கடுமையாக செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய் தோறும் நெய் தீபம் ஒன்பது வாரம் ஏற்றி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள் நீங்கும்.
    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றாலோ, கெட்டு இருந்தாலோ லக்னம், சந்திரன், சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலோ, அவர் நிற்கின்ற இடத்தைப் பொறுத்து திருமணத்தடை, புத்திர பாக்கியத்தடை, தொழிலில் சிக்கல்கள், வீண் விரயங்கள் போன்றவை ஏற்படும்.

    இவர்கள் கீழ்க்கண்ட நரசிம்மர் மந்திரத்தை ஒன்பது முறை தினசரி சொல்லி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள், இடர்கள், தீங்குகள் நீங்கி நன்மைகள் நிச்சயம் அடைவார்கள்.

    செவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளவர்கள் இந்த மந்திரத்தை 28 முறை ஜபித்தால் மிக உத்தமம். இந்த மந்திரம் ஆச்சாரியார் ஸ்ரீவேதாந்த தேசிகர் அவர்களால் இயற்றப்பட்டதாகும்.

    ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம:
    க்ஷணம் பாணிஜை:
    அவ்யாத் த்ரீணி ஜகநீத்யகுண்ட மஹிமா
    வைகுண்ட கண்டீரவ:
    யத்ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா
    யாத்ருச்சிகாத் வேதஸாம்
    யா காசித் ஸஹஸா மஹாஸிர க்ருஹ
    ஸ்த்தூணா பிதாமஹ்யபூத்!!

    கடுமையாக செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய் தோறும் நெய் தீபம் ஒன்பது வாரம் ஏற்றி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள் நீங்கும்.

    தவிர, பிரதோஷ காலத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு வெல்லம், ஏலக்காய் கலந்த பானகம் நைவேத்யம் செய்து மேற்கண்ட மந்திரத்தைச் சொல்லி வந்தாலும் தடைகள் நீங்கும்.

    பெருமானின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி அன்றும் மேற்கண்ட பானக நைவேத்யம் நற்பலன்களைத் தரும்.
    செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை நீங்கும்.
    திருமணத்துக்கு ஜாதகப்பொருத்தம் பார்ப்பவர்களை பெரும்பாலும் கலங்கடிப்பது செவ்வாய் தோஷமாகும். இந்த தோஷத்தால் நிறைய பேரின் திருமணம் தாமதம் ஆகி விடுவதுண்டு. செவ்வாய் தோஷத்தை விரட்டும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    விநாயகரின் பரமபக்தரான பரத்துவாச முனிவர் தலயாத்திரை’ சென்றபோது நர்மதை நதியில் நீராடினார். அங்கே ஒரு கந்தர்வ மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார். இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. செந்நிறம் கொண்டிருந்ததால் ‘அங்காகரன்’ என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் ‘பூமி குமாரன்’ என்ற பெயரும் உண்டு.

    அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர். அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் பெற்றார். அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர்.

    செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும். திருமணத்துக்கு ஜாதக பொருத்தங்களைப் பார்க்கத் தொடங்கும் போது முதலில் ஆயுள் பலத்தைக் கண்டறிய வேண்டும். பிறகு பெண், பிள்ளை இருவருடைய தசாபுத்தி அந்தர காலங்களைப் பார்க்க வேண்டும்.

    இருவருக்கும் திருமண பாக்கியம் வந்திருக்கிறதா? களத்திர தோஷம் உண்டா? மாங்கல்ய தீர்க்கும் இருக்கிறதா? என்பன போன்ற முக்கியமான அம்சங்களைப் பார்க்க வேண்டும். பிறகு பொருத்தங்கள் பார்க்கும்போது பெண் அல்லது பிள்ளை ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். குறிப்பாகச் செவ்வாய் தோஷத்தை அறிவது அவசியமாகும். பெண் அல்லது பிள்ளையின் ஜாதகத்தில் லக்கனத்திறகு 2, 4, 7, 8, 12 ஆகிய இல்லங்களில் செவ்வாய் தங்கினால் தோஷமாகக் கருதப்படுகிறது.

    அடுத்து சந்திரன் தங்கிய ராசிக்கு 2, 4, 7, 8, 12 இல்லங்களில் செவ்வாய் நின்றாலும் தோஷமாகும்.

    மூன்றாவதாக சுக்கிரன் நின்ற ராசிக்கு 2, 4, 7, 8, 12 ராசிகளில் செவ்வாய் தங்கினாலும் தோஷமடைகிறார்.

    ஆனால் 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் தங்கினால் மாத்திரம் தோஷமடைந்து விட்டதாகக் கூற இயலாது.

    ஜாதகத்தில் மேஷம், விருச்சிகம் போன்ற ஆட்சி வீடுகளில் செவ்வாய் தங்கினால் அதுதோஷமாகாது. அதேபோல மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றாலும் தோஷம் இல்லை.

    கடக ராசியில் செவ்வாய் தங்கி நீச்சமடைந்தாலும் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை. செவ்வாய் தோஷ அமைப்பில் இடம் பெற்றுள்ள போது அந்த கிரகத்தை குரு, சனி, ராகு, கேது பார்த்தாலும் அல்லது அந்த கிரகங்களும் சேர்ந்து தங்கினாலும் செவ்வாய் தோஷம் பரிகாரமடைந்து விடுகிறது.

    அங்காரக தோஷம் உண்டாகும் வண்ணம் ஜாதகத்தில் அமைந்து அது கடகம் அல்லது சிம்ம ராசியானாலோ, லக்கனமானாலோ அதை செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத முடியாது. கடகம், சிம்மம் லக்கனமாக அல்லது சந்திரா லக்கனமாக உள்ள ஜாதகரைச் செவ்வாய் தோஷமுடையவராகக் கூறுவதற்கில்லை.
    செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்கு பரிகாரமாகவும் சாந்தி செய்வது போன்றும் சிலவற்றை செய்வதன் மூலம் திருமணம் கைகூடும். சுபம் நடைபெறும்.

    செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரத நாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி, சிவந்த வஸ்திரம் உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு வஸ்திரம், செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும், செய்யக்கூடாதவைகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பரிகார காலம்:

    சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

    பரிகாரம் செய்யகூடாத நேரம்:

    ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

    ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் ஆடிக்கிருத்திகை அன்று முருகனை வழிபாடு செய்தால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் செவ்வாய் தோஷ தடைகள் நீங்கும்.
    ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம்,

    மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள்,

    பிரச்சினைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம்.

    செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இப்பூஜைகளின் மூலம் செவ்வாய் திருமண தடையை நீக்குவது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருகின்றார். செவ்வாய் தசை நடப்பில் இருந்து சோதனைக்கு ஆளாகி இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம்.

    இந்த பூஜையை செய்ய வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுப்பது நல்லது. சஷ்டியோடு செவ்வாய் வருவது மிக உத்தமம். செவ்வாய் அன்று நாகதோஷ வேளையில் (ராகு காலத்தில்) அல்லது செவ்வாய் ஹோரையில் பரிகார பூஜையை தொடங்குவது நல்லது.

    அன்று காலை குளித்து விட்டு வடக்குத் திசை பார்த்து அமரவும். உங்கள் முன்பு ஒரு மனை வைத்து மனைமேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும், தீபத்திற்கு முன்பு வாழை இலை போட்டு (வாழை இலை நுனி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்) இலையில் 27- அரச இலைகளை வைக்கவும்.

    இலை மீது முழு துவரம்பருப்பு கொட்டைகளையும், தோல் நீக்காத முழு உளுந்து கொட்டைகளையும் வைத்து அதன்மேல் ஒரு சிறிய அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும்.

    இலை மீது வாழை பூ வைக்கவும் மற்றும் பழம், வெற்றிலை பாக்கு பூஜை பொருட்கள் வைத்து, நிவேதனமாக துவரம்பருப்பில் செய்த வடை, அல்லது துவரம் பருப்பு பொங்கல் வைக்கவும். தீபத்திற்கு தீப ஆராதனை முடித்துவிட்டு வாழை பூவை கையில் எடுத்துக் கொண்டு தீபத்தை வலமிருந்து இடமாக 9 முறையும் இடமிருந்து வலமாக 9 முறையும் பிறகு வலமிருந்து இடமாக 9 முறையும் ஆக 27 முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.
    ×