search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chevvai dosham pariharam"

    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஜோதிடரிம் ஜாதகத்தைக் காண்பித்து, உரிய பரிகாரங்களைச் செய்து பார்த்த பிறகும் பலன் கிடைக்காமல் போகலாம். சிலர் " நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன" என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள்.

    இதற்கு பரிகாரத்தை தவறாக செய்வது கூட காரணமாக இருக்கலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு.

    சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

    செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

    ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் முதல் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

    இதை பின்பற்றினால் பரிகாரம் நல்ல பலனளிக்கும்.
    திருமணம் தடைபடி முக்கிய காரணமாக இருப்பது செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும்.
    திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது.

    இவை காரணமாக திருமணம் தாமதமானால் அதற்கான பரிகாங்களை செய்தால் மட்டுமே திருமணம் எந்த தடையும் இன்றி நடைபெறும். திருமணம் தடைபடி முக்கிய காரணமாக இருப்பது செவ்வாய் தோஷம். ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும்.

    அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

    அழகிய முருகன் கோவிலில் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.
    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது.
    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப்பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.
    செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இப்பூஜைகளின் மூலம் செவ்வாய் திருமண தடையை நீக்குவது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருகின்றார். செவ்வாய் தசை நடப்பில் இருந்து சோதனைக்கு ஆளாகி இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம்.

    இந்த பூஜையை செய்ய வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுப்பது நல்லது. சஷ்டியோடு செவ்வாய் வருவது மிக உத்தமம். செவ்வாய் அன்று நாகதோஷ வேளையில் (ராகு காலத்தில்) அல்லது செவ்வாய் ஹோரையில் பரிகார பூஜையை தொடங்குவது நல்லது.

    அன்று காலை குளித்து விட்டு வடக்குத் திசை பார்த்து அமரவும். உங்கள் முன்பு ஒரு மனை வைத்து மனைமேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும், தீபத்திற்கு முன்பு வாழை இலை போட்டு (வாழை இலை நுனி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்) இலையில் 27- அரச இலைகளை வைக்கவும்.

    இலை மீது முழு துவரம்பருப்பு கொட்டைகளையும், தோல் நீக்காத முழு உளுந்து கொட்டைகளையும் வைத்து அதன்மேல் ஒரு சிறிய அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும்.

    இலை மீது வாழை பூ வைக்கவும் மற்றும் பழம், வெற்றிலை பாக்கு பூஜை பொருட்கள் வைத்து, நிவேதனமாக துவரம்பருப்பில் செய்த வடை, அல்லது துவரம் பருப்பு பொங்கல் வைக்கவும். தீபத்திற்கு தீப ஆராதனை முடித்துவிட்டு வாழை பூவை கையில் எடுத்துக் கொண்டு தீபத்தை வலமிருந்து இடமாக 9 முறையும் இடமிருந்து வலமாக 9 முறையும் பிறகு வலமிருந்து இடமாக 9 முறையும் ஆக 27 முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.
    ×