search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar viratham"

    எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் கணபதியை வேண்டி வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது வெற்றியை தரும். கணபதியின் அருளை பெறுவதற்காக விரதங்களை பார்க்கலாம்.
    1. வைகாசி வளர்பிறை:
     
    முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.
     
    2. செவ்வாய் விரதம்:
     
    ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.
     
    3. சதுர்த்தி விரதம்:

     
    பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.
     
    4. குமாரசஷ்டி விரதம்:
     
    கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.
     
    5. தூர்வா கணபதி விரதம்:
     
    கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.
     
    6. சித்தி விநாயக விரதம்:
     
    புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.
     
    7. தூர்வாஷ்டமி விரதம்:
     
    புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.
     
    8. விநாயக நவராத்திரி:
     
    ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.
     
    9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்:
     
    ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.
     
    10. செவ்வாய் பிள்ளையார் விரதம்:
     
    ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர்.
     
    11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை:
     
    பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.
    செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை நீங்கும்.
    திருமணத்துக்கு ஜாதகப்பொருத்தம் பார்ப்பவர்களை பெரும்பாலும் கலங்கடிப்பது செவ்வாய் தோஷமாகும். இந்த தோஷத்தால் நிறைய பேரின் திருமணம் தாமதம் ஆகி விடுவதுண்டு. செவ்வாய் தோஷத்தை விரட்டும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    விநாயகரின் பரமபக்தரான பரத்துவாச முனிவர் தலயாத்திரை’ சென்றபோது நர்மதை நதியில் நீராடினார். அங்கே ஒரு கந்தர்வ மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார். இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. செந்நிறம் கொண்டிருந்ததால் ‘அங்காகரன்’ என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் ‘பூமி குமாரன்’ என்ற பெயரும் உண்டு.

    அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர். அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் பெற்றார். அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர்.

    செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும். திருமணத்துக்கு ஜாதக பொருத்தங்களைப் பார்க்கத் தொடங்கும் போது முதலில் ஆயுள் பலத்தைக் கண்டறிய வேண்டும். பிறகு பெண், பிள்ளை இருவருடைய தசாபுத்தி அந்தர காலங்களைப் பார்க்க வேண்டும்.

    இருவருக்கும் திருமண பாக்கியம் வந்திருக்கிறதா? களத்திர தோஷம் உண்டா? மாங்கல்ய தீர்க்கும் இருக்கிறதா? என்பன போன்ற முக்கியமான அம்சங்களைப் பார்க்க வேண்டும். பிறகு பொருத்தங்கள் பார்க்கும்போது பெண் அல்லது பிள்ளை ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். குறிப்பாகச் செவ்வாய் தோஷத்தை அறிவது அவசியமாகும். பெண் அல்லது பிள்ளையின் ஜாதகத்தில் லக்கனத்திறகு 2, 4, 7, 8, 12 ஆகிய இல்லங்களில் செவ்வாய் தங்கினால் தோஷமாகக் கருதப்படுகிறது.

    அடுத்து சந்திரன் தங்கிய ராசிக்கு 2, 4, 7, 8, 12 இல்லங்களில் செவ்வாய் நின்றாலும் தோஷமாகும்.

    மூன்றாவதாக சுக்கிரன் நின்ற ராசிக்கு 2, 4, 7, 8, 12 ராசிகளில் செவ்வாய் தங்கினாலும் தோஷமடைகிறார்.

    ஆனால் 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் செவ்வாய் தங்கினால் மாத்திரம் தோஷமடைந்து விட்டதாகக் கூற இயலாது.

    ஜாதகத்தில் மேஷம், விருச்சிகம் போன்ற ஆட்சி வீடுகளில் செவ்வாய் தங்கினால் அதுதோஷமாகாது. அதேபோல மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றாலும் தோஷம் இல்லை.

    கடக ராசியில் செவ்வாய் தங்கி நீச்சமடைந்தாலும் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை. செவ்வாய் தோஷ அமைப்பில் இடம் பெற்றுள்ள போது அந்த கிரகத்தை குரு, சனி, ராகு, கேது பார்த்தாலும் அல்லது அந்த கிரகங்களும் சேர்ந்து தங்கினாலும் செவ்வாய் தோஷம் பரிகாரமடைந்து விடுகிறது.

    அங்காரக தோஷம் உண்டாகும் வண்ணம் ஜாதகத்தில் அமைந்து அது கடகம் அல்லது சிம்ம ராசியானாலோ, லக்கனமானாலோ அதை செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத முடியாது. கடகம், சிம்மம் லக்கனமாக அல்லது சந்திரா லக்கனமாக உள்ள ஜாதகரைச் செவ்வாய் தோஷமுடையவராகக் கூறுவதற்கில்லை.
    செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்கு பரிகாரமாகவும் சாந்தி செய்வது போன்றும் சிலவற்றை செய்வதன் மூலம் திருமணம் கைகூடும். சுபம் நடைபெறும்.

    செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரத நாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி, சிவந்த வஸ்திரம் உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு வஸ்திரம், செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.
    முழு முதற்கடவுளான விநாயகருக்கு உகந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த விரதம் தோன்றியதன் பின்னணி வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    விநாயகர், முழு முதற்கடவுள். அவருக்கு உகந்த விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த விரதம் தோன்றியதன் பின்னணி வரலாறு வருமாறு:-

    ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்த போது, அங்கு விநாயகர் விளையாடிக் கொண்டு இருந்ததை பார்த்தான். விநாயகர் குதித்துத் குதித்து விளையாடுவதற்கு ஏற்ப, அவருடைய தொந்தியும் குலுங்கி கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், சந்திரனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. விநாயகரை பார்த்து கேலியாகச் சிரித்தான். அந்த சிரிப்பு விநாயகருக்கு கோபத்தை வரவழைத்துவிட்டது. உடனே ‘நீ தேய்ந்து மறையக்கபடவாய் என்று சந்திரனைச் சபித்து விட்டார்.

    சந்திரன் மறைந்ததால், உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் விநாயகரை சரண் புகுந்தார்கள். தன் தவறுக்கு வருந்திய சந்திரனும் தன்னை மன்னிக்குமாறு வேண்டித் தவம் புரிந்தான். மனம் இரங்கிய விநாயகர், சந்திரனைத் தன் தலையில் சூடிக் கொண்டார்.

    ‘பாலசந்திரன்’ என்ற பெயருடன் அருள்பாலித்து, சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அதாவது, 15 நாட்கள் மெல்லத் தேய்ந்து (தேய் பிறை), பின்பு 15 நாட்கள் மெல்ல வளரும்படியான (வளர்பிறை) வரத்தை அருளினார். அப்படி, சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி.

    ‘சங்கடஹர’ என்றால், ‘சங்கடத்தை (துன்பத்தை) நீக்குதல் என்று பொருள். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பலனாக வரும் எல்லாவித இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைத் தருவதால் அன்றைய தினம் இருக்கும் விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

    சங்கடஹர சதுர்த்தி மாதம் தோறும் வரும் என்றாலும், விநாயகர் அவதரித்த ஆவணி மாதத்தில் பவுர்ணமிக்கு பிறகு வரும் (தேய்பிறை) சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி என்று கூடுதல் சிறப்பு பெறுகிறது. அன்றைய தினத்தில் விநாயகரை வணங்கி, வழிபடுவோருக்கு, சகலவிதமான சங்கடங்களும் விலகும், சந்தோஷம் பெருகும்.
    ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளில் மேதாவிவிலாசம் பெறுவதற்கு வேண்டுபவர்கள் உச்சிஷ்ட கணபதியை விரதம் இருந்து உபாசனை செய்ய வேண்டும்.
    ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி துரிதமாக பலன்களை தருவார் என்று மாண்டுக்ய உபநிசத் கூறுகிறது. ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளில் மேதாவிவிலாசம் பெறுவதற்கு வேண்டுபவர்கள் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்ய வேண்டும். இவருடைய பெருமையை அதர்வண வேதமும் உட்டாமரேச தந்திரமும், பேத்கார தந்திரமும் பல ரிக்குகளில் விவரிக்கின்றன.

    மனிதர்களோ, தெய்வங்களோ எந்த காரியத்தை தொடங்க ஆரம்பிப்பதற்கு முன், முதலில் விநாயகரை வணங்கித்தான் தங்கள் செயல்களை செய்யவேண்டும். அப்படி செய்யாவிட்டால்  காரியங்களில் தடை உண்டாகும் என்பது நம்பிக்கை.

    விநாயகர் பூஜை செய்வதினால் தூய்மையான உள்ளம், தர்மம் மற்றும் நேர்வழி சிந்தனை, லட்சுமி கடாட்சம், தெளிந்த நல் அறிவு, சமயோஜித புத்தி, வாக்குசாதுரியம், நுண்ணறிவு, பெருந்தன்மை, தைரியம், நற்புகழ் முகப்பொலிவு கிடைக்கும்.

    விநாயகரை விரதம் இருந்து உள்ளன்போடு பூஜிப்பவர்களுக்கு இவரே குருவாக விளங்குகிறார். அவர்கள் மந்திர உபதேசம் பெறுவதற்காக எவரையும் தேடி செல்ல வேண்டியதில்லை. விநாயகர் சந்நிதியில் அமர்ந்து கொண்டு எந்த மந்திரத்தை சொன்னாலும் பலிதமாகும். மாத்ருகா அட்சரங்கள் 51. ஒரு அட்சரத்துக்கு கனபதிகள் உண்டு. சுப காரியங்கள் ஆரம்பிக்கும் போது பதினாறு கணபதியின் பெயர்களை சொல்ல வேண்டும்.

    என்ன! அன்பர்களே பிள்ளையாரின் மகிமையைப் படித்தீர்கள் அல்லவா! இனி நீங்களும் உங்கள் மனைவி குழந்தைகளும் தினமும் வீட்டில் விநாயகரை விரதம் இருந்து பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

    அப்புறம் பாருங்க....

    கல்யாணத் தடையா, குழந்தை இல்லையா? வேலை கிடைக்க வில்லையா?, வீடுகட்ட முடியவில்லையா, கடனை தீர்க்க முடியவில்லையா, எல்லாபிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
    முதன் முதலாக எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்த பின்னர் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
    வெள்ளிக்கிழமை விரதம்

    செவ்வாய்க்கிழமை விரதம்

    சதுர்த்தி விரதம்

    குமார சஷ்டி விரதம்

    தூர்வா கணபதி விரதம்

    சித்தி விநாயகர் விரதம்

    துர்வாஷ்டமி விரதம்

    நவராத்திரி விரதம்

    வெள்ளிப் பிள்ளையார் விரதம்

    செவ்வாய்ப் பிள்ளையார் விரதம் 
    எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும்.
    எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார்சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. எனவே தான் விநாயகரை ‘ஆதி மூல கணபதி’ என்று வர்ணிக்கின்றோம். கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் ‘கணபதி’ என்கின்றோம்.

    ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும், 3 விதமான கணங்களாகப் பிரித்து திருமண சமயத்தில் பொருத்தம் பார்க்கும் பொழுது கணப்பொருத்தம் பார்ப்பார்கள். மூன்று வகையான அந்த கணப் பிரிவு தேவ கணம், மனித கணம், ராட்சச கணம் என்பதாகும். கணப்பொருத்தம் இருந்தால்தான் தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவர் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி.. அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம் ஆனைமுகப்பெருமான்.

    விநாயகருக்கு உகந்த நாட்கள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். ஞாலம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும். அதற்கு உகந்த மாதமாக இந்த (ஆவணி) மாதம் விளங்குகிறது. மற்ற மாதங்களிலும் கூட சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாதம் வரும் சதுர்த்தியை மட்டும்தான் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கிறோம். அன்றைய தினம் ஆலயத்திற்குச் சென்று, அருகம்புல் மாலையிட்டு கணபதியை வழிபட்டால், அவர் பெருகும் பொன்னை அள்ளி பெருமையுடன் நமக்களிப்பார்.

    இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா 13.9.2018 (வியாழக்கிழமை) ஆவணி மாதம் 28-ந் தேதி வருகின்றது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எப்போது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கு சென்றும் வழிபடலாம்.

    தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.

    விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்குப் பிடித்த மலர் தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ ஆகியவையாகும்.

    விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொள்வது வழக்கம். ‘தோர்பிகர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் ‘கைகளில்’ என்று பொருள். ‘கர்ணம்’ என்றால் ‘காது’ என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது இதன் முழுப்பொருளாகும்.

    கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு அஞ்சிய தேவர்கள், அவனுக்கு முன் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டனர். அந்தப் பழக்கமே இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதாக சொல்கிறார்கள்.

    ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகிய வற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி அவரைப் பிடிக்கும் பொழுது, ‘இன்று போய் நாளை வா” என்று எழுதி வைக்கச் சொல்லி தந்திரத்தைக் கையாண்டவர் விநாயகப் பெருமான். சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி, புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள் உருண்டை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பில் இருந்து விடுபட இயலும்.

    கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தியாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் வீற்றிருக்கின்றார். அவரை சதுர்த்தியன்று பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால், நம் தேவைகள் நிறைவேறும். தவிர அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்றும் ஆனைமுகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். இதனால் அகிலம் போற்றும் வாழ்க்கையும், சந்தோஷம் நிறைந்த வாழ்வும் அமையும்.

    ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்க திசை, புத்தி நடக்கும்போது விநாயகரை வழிபட்டால் காரிய தடைகள் நீங்கும். தக்க விதத்தில் வாழ்க்கையமையும். தடுமாற்றங்கள் அகலும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றன. விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஸ்வரன்’ என்று பெயர் பெற்றவர் விநாயகர். முருகப்பெருமான், வள்ளியை மணம் முடிக்க விநாயகர் யானை வடிவில் வந்து உதவி செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. எனவே யானைக்கு கரும்பு, வாழைப்பழம் போன்ற உணவுப் பொருட்களை வழங்கி அதன் ஆசியைப் பெறுவதும் நல்லது. விநாயகர் சதுர்த்தியன்று இதுபோன்ற வழிபாடுகளை செய்து தும்பிக்கையானைத் துதித்தால் உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும்.

    -“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) விரதமிருந்து விநாயகர் பூஜை மற்றும் வீட்டில் விநாயகர் ஹோமம் செய்வதற்கு உகந்த நாட்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் விரதமிருந்து விநாயகர் பூஜை மற்றும் வீட்டில் விநாயகர் ஹோமம் செய்வதற்கு உகந்த நாட்கள் விவரம் வருமாறு:-

    மே 25 - வெள்ளி
    ஜூன் 3 - ஞாயிறு
    ஜூன் 4 - திங்கள்
    ஜூன் 6 - புதன்
    ஜூன் 10 - ஞாயிறு
    ஜூன் 17 - ஞாயிறு
    ஜூன் 25 - திங்கள்
    ஜூன் 28 - வியாழன்
    ஜூலை 1 - ஞாயிறு
    ஜூலை 2 - திங்கள்
    ஜூலை 27 - வெள்ளி
    ஆக. 1 - புதன்
    ஆக. 3 - வெள்ளி
    ஆக. 14 - செவ்வாய்
    ஆக. 16 - வியாழன்
    ஆக. 17 - வெள்ளி
    ஆக. 29 - புதன்
    ஆக. 30 - வியாழன்
    ஆக. 31 - வெள்ளி
    செப். 12 - புதன்
    செப். 13 -வியாழன்
    செப். 20 - வியாழன்
    செப். 23 - ஞாயிறு
    அக். 11 - வியாழன்
    அக். 19 - வெள்ளி
    அக். 28 - ஞாயிறு
    அக். 29 - திங்கள்
    அக். 31 - புதன்
    நவ. 4 - ஞாயிறு
    நவ. 9 - வெள்ளி
    நவ. 11 - ஞாயிறு
    நவ. 14 - புதன்
    நவ. 18 - ஞாயிறு
    நவ. 23 - வெள்ளி
    நவ. 25 - ஞாயிறு
    நவ. 26 - திங்கள்
    டிச. 2 - ஞாயிறு
    டிச. 12 - புதன்
    டிச. 13 - வியாழன்
    டிச. 14 - வெள்ளி
    டிச. 27 - வியாழன்
    டிச. 31 - திங்கள்
    ஜன. 11 - வெள்ளி
    ஜன. 13 - ஞாயிறு
    ஜன. 21 - திங்கள்
    ஜன. 23 - புதன்
    ஜன. 24 - வியாழன்
    ஜன. 27 - ஞாயிறு
    பிப். 1 - வெள்ளி
    பிப். 8 - வெள்ளி
    பிப். 9 - சனி
    பிப். 10 - ஞாயிறு
    பிப். 11 - திங்கள்
    பிப். 15 - வெள்ளி
    பிப். 17 - ஞாயிறு
    பிப். 18 - திங்கள்
    பிப். 22 - வெள்ளி
    பிப். 24 - ஞாயிறு
    மார்ச் 3 - ஞாயிறு
    மார்ச் 10 - ஞாயிறு
    மார்ச் 13 - புதன்
    மார்ச் 17 - ஞாயிறு
    மார்ச் 18 - திங்கள்
    மார்ச் 22 - வெள்ளி
    மார்ச் 31 - ஞாயிறு
    ஏப். 10 - புதன்
    ×