என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    திருமண தடை உள்ளவர்கள் பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால், இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வழிபாட்டு தலங்கள் பல நம் நாட்டில் உள்ளன.
    வாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றதே.. வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே என்ற கவலை இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்சினையாக இருக்கிறது. எப்படிப்பட்ட கவலையாக இருந்தாலும் பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால், இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வழிபாட்டு தலங்கள் பல நம் நாட்டில் உள்ளன.

    திருமணஞ்சேரி வழிபாடு தித்திக்கும் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். சுக்ர ஷேத்திரமான ஸ்ரீரங்கம் வழிபாடும், அக்னீஸ்வரர் வீற்றிருந்து அருள்வழங்கும் கஞ்சனூர், கல்யாண ஜகன்நாதர் அருள்வழங்கும் திருப்புல்லாணி, சிறுவாபுரியில் உள்ள வள்ளிமணவாளப் பெருமான், தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டாலும் இல்லறம் நல்லறமாக முடியும்.

    குருபலம் கூடி வந்தால் தான் திருமணம் முடியும். எனவே குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். ‘வானவர்களுக்கு அரசனான வளம் தரும் குருவே’ என்ற குரு கவசத்தை, குருவின் சன்னிதியில் பாடி வழிபட்டால், தேடிவரும் வரன்கள் சிறப்பானதாக அமையும். ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம் போன்ற இடங்களில் குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்கள் உள்ளன. மேலும் வியாழக்கிழமை சுண்டல் தானம் கொடுத்து தென்முகக் கடவுளை வழிபடுவதும் நல்லது.
    ராகு-கேதுக்களால் நன்மை பெற, உங்கள் சுய ஜாதகத்தில் ராகு இருக்கும் இடம், சாரபலம் பார்த்து, அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம்.
    நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் பாம்புக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கிரகங்கள் வான்வெளியின் சஞ்சாரத்தில் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், நாம் வாழ்வில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம்.

    'கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை, கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை' என்பது பழமொழி. எதைக்கேட்டாலும் அள்ளி அள்ளிக் கொடுப்பதில் தனக்கு நிகரில்லை என்று நிரூபித்துக் காட்டியவன் கர்ணன். அப்படிப்பட்ட கர்ணனைப்போல் நவக்கிரகங்களில் அள்ளிக் கொடுக்கும் கிரகம் ராகுவாகும். எனவே தான் 'ராகுவைப்போல கொடுப்பானுமில்லை' என்று அனுபவ வாக்காக முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அதே நேரத்தில் ராகு- கேதுக்களுக்குள் சகல கிரகங்களும் அடைபட்டுப்போய் ஒருவரது ஜாதகம் அமைந்தால், அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த காலசர்ப்ப தோஷம் என்பதை, காலசர்ப்ப யோகமாக மாற்றக்கூடிய ஆற்றல் சர்ப்ப சாந்தி பரிகாரங்களை முறையாகச் செய்பவர்களுக்கு உண்டு. பொதுவாக சர்ப்ப தோஷம் அமைந்தவர்களுக்கு ஏராளமான தடைகள் வந்து கொண்டேயிருக்கும்.

    ஒருவரது லக்னத்தில் ராகு - கேதுக்கள் பலம் பெற்றால், தனித்து வாழும் அமைப்பு உண்டாகிறது. குடும்ப ஸ்தானத்தில் ராகு-கேதுக்கள் பலம் பெற்றிருந்தால் குடும்பம் அமைவதில் தாமதத்தைக் கொடுக்கிறது. அப்படியே அமைந்தாலும் குடும்பத்துடன் இணைந்து வாழமுடியாத அமைப்பு ஏற்படுகிறது. கொடுக்கல்- வாங்கல்களில் சிக்கல்களும், ஏமாற்றங்களும் உருவாகிறது. குடும்ப உறுப்பினர்களோடு அடிக்கடி சண்டை- சச்சரவுகளை சந்திப்பவர்களுக்குரிய ஜாதகத்திலும், குடும்ப ஸ்தானத்தில் தான் ராகு-கேதுக்கள் பலம்பெற்றிருக்கும்.

    சகாய ஸ்தானத்தில் ராகு- கேதுக்கள் பலம் பெற்றிருந்தால், எந்தக் காரியத்தையும் விரைந்து முடிக்க இயலாது. சிரமப்பட்டே முடிக்க முடியும். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவது அரிது.

    தாய் ஸ்தானத்தில் ராகு-கேதுக்கள் பலம்பெற்றிருந்தால், தாயின் ஆதரவு குறையலாம். வீடு, இடம் போன்றவற்றை வாங்குவதில் பிரச்சினைகள் ஏற்படலாம். நினைத்த படிப்பை படித்து முடிக்க விடாமல் நிம்மதி இழக்கச்செய்யலாம்.

    புத்திர ஸ்தானத்தில் பாம்பு கிரகங்கள் பலம் பெற்றிருந்தால், பிள்ளைகள் பிறப்பதில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை விற்றுவிடும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் இளம் வயது காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் மனக்கலக்கத்தை உருவாக்கும்.

    வியாதிகள் ஸ்தானத்தில் பாம்பு கிரகங்கள் பலம் பெற்றிருந்தால் தோல் வியாதிகள் உருவாகலாம். உடல் நலத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். விஷ சந்துக்களை அடிக்கடி சந்திக்க நேரிடும். கடன் சுமையும் அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்க வேண்டியதிருக்கும். சங்கிலித் தொடர்போல் கடன்சுமை கூடும்.

    களத்திர ஸ்தானத்தில் ராகு- கேதுக்கள் இருந்தால், வாழ்க்கைத் துணை அமைவதில் தாமதம் ஏற்படும். அப் படியே அமைந்தாலும் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். சர்ப்ப சாந்திகளை, யோகபலம் பெற்ற நாளில் முறைப்படி செய்தால் இல்லறம் நல்லறமாக அமையும். பொதுவாக பொருத்தம் பார்க்கும் பொழுதே முக்கியப் பொருத்தங்கள் நன்றாக இருக்கின்றதா? என்று பார்த்துச் செய்வதுநல்லது.

    அஷ்டமத்தில் பாம்பு கிரகங்கள் சஞ்சரித்தால், தொழிலில் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட வழிபாடுகளை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். எடுக்கும் முடிவுகளை யோசித்துச் செய்தால் தான் வெற்றி கிடைக்கும். நிலையற்ற வேலையும், அடிக்கடி ஊர் மாற்றமும், இடமாற்றமும், நிரந்தரமில்லாத தன்மையும் உருவாகும்.

    தகப்பனார் ஸ்தானத்தில் பாம்பு கிரகங்கள் பலம் பெற்றிருந்தால், தந்தை வழிச் சொத்துக்களைப் பெறுவதில் பிரச்சினை உருவாகும். சகோதரர்களுக்கு பெற்றோர்கள் அனுகூலம் செய்யலாம்.

    தொழில் ஸ்தானத்தில் பாம்பு கிரகங்கள் அமைந்திருந்தால், அது எந்தக் கிரகத்துடன் இணைந்திருக்கிறதோ, எந்தக் கிரகத்தால் பார்க்கப்படுகிறதோ, எந்தக் கிரகத்தின் சாரத்தில் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து, தொழில் செய்தால் லாபம் கிடைக்கும்.

    லாப ஸ்தானம் எனப்படும் பதினோராமிடத்தில் பாம்பு கிரகங்கள் பலம் பெற்றிருந்தால், வருமானம் இருமடங்காக வந்து சேரும். தெரியாத தொழிலில் ஈடுபட்டால் கூட உரிய விதத்தில் லாபம் கிடைக்கும்.

    விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்தால், எதிர்பாராத விரயங்களை ஏராளமாகச் சந்திக்க நேரிடும். வரவிற்கு மீறிய செலவு ஏற்படும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தடுமாற்றம் உருவாகும்.

    இப்படியெல்லாம் ராகுவைப் பற்றியும், கேதுவைப் பற்றியும் முன்னோர்கள் சொல்லி வைத்திருந்தாலும், 'ஞான காரகன்' என்று போற்றப்படும் கேது, ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் சிறந்த அறிவாளியாகவும், மேதையாகவும், உலகப்புகழ் பெற்றவராகவும் விளங்குவார். கேது கல்வியை வழங்குவார். ராகு செல்வத்தை வழங்குவார். கற்ற கல்வியின் மூலம் உற்றார், உறவினர்களும், மற்றவர்களும் பாராட்டும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பார்.

    இந்த ராகு-கேதுக்களால் நன்மை பெற, உங்கள் சுய ஜாதகத்தில் ராகு இருக்கும் இடம், சாரபலம் பார்த்து, அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம். நவக்கிரகத்தில் உள்ள ராகு- கேதுவையும் வழிபடலாம்.
    நாகப்பட்டினம் வேதாரண்யேசுவரர் கோவிலுக்குள் உள்ள மணி கர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் பிரம்மஹத்தி போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
    நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்தில் வேதாரண்யம் உள்ளது. இங்கு வேதாரண்யேசுவரர் கோவில் உள்ளது. சிவபெருமான் அகத்திய முனிவருக்கு திருமணக்காட்சி காட்டிய திருத்தலம்.

    தேவார பாடல் பெற்ற இக்கோவிலுக்குள் உள்ள மணி கர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள் தங்கள் பாவங்களை கழுவி கொள்வதுடன், மூதாதையர்கள் செய்த பாவங்களுக்கும் நிவர்த்தி பெற்று வரலாம். பிரம்மஹத்தி தோஷம், ஒரு உயிரைக்கொன்றால் ஏற்படும்.

    இங்கு நீராடினால் பிரம்மஹத்தி போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலுக்கு எதிரே உள்ள கடல், ‘ஆதி சேது’ என அழைக்கப்படுகிறது. இங்கு நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடுவதை விட சிறந்ததாகும். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசைகளில் இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் நீராடுவர்.
    தகுந்த பரிகாரங்கள் செய்தால் தான் மனதிற்கு ஏற்ற வரன் கிடைக்கும். தோஷ நிவர்த்திப் பரிகாரங்களை அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும்.
    பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசத் தொடங்கும் பொழுது, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். வந்த வரன்கள் எல்லாம் வாசலோடு திரும்பிச் சென்று விடுகிறதே என்று சிலர் அங்கலாய்ப்பார்கள்.

    எவர் எப்படி நினைத்தாலும் ஜாதகம் சாதகமாகச் செயல்படும் பொழுதுதான் திருமணம் நடைபெறும். இல்லையென்றால் தள்ளிக் கொண்டேதான் போகும். ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன்கொடுத்த வரம்’ என்றும், ‘கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்’ என்றும் நினைக்க வேண்டும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி 6,8 ஆகிய இடங்களில் இருந்தால் திருமணத்தில் தடைகள் ஏற்படும்.

    குடும்ப ஸ்தானத்தில் கேது நின்றாலும் செவ்வாய், சனி களத்திர ஸ்தானத்தில் சேர்க்கை பெற்று பலம் பெற்றாலும், அந்தப் பெண்ணிற்கு திருமணம் எளிதில் நடைபெறாது. தகுந்த பரிகாரங்கள் செய்தால் தான் மனதிற்கு ஏற்ற வரன் கிடைக்கும். தோஷ நிவர்த்திப் பரிகாரங்களை அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும்.
    ராகுகாலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
    சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலேயே, ராகுகாலத்தில் சுப காரியங்களை செய்வது தவிர்க்கப்படுகிறது. அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.

    ராகுகாலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும், அம்பிகையை ‘மங்கள சண்டிகையாக’ வணங்குவதே காரணம்.

    செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற் பலன் தரும். துர்க்கையை பார்த்தபடி தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.



    வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகுகாலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.

    அதன்படி செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

    வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

    அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு வந்து மகுடேஸ்வரரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட்டால் பலன் கிடைக்கும்.
    கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. ஈரோட்டில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கொடுமுடி திருத்தலம்.

    அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு வந்து மகுடேஸ்வரரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட்டு செல்கின்றனர். பிரம்மாவுக்கு அவிட்டம் நட்சத்திரத்தன்று ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தலமானது.

    அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று இந்த கோவிலுக்கு வந்து காவிரியில் நீராடி, மகுடேஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அம்பாளை வணங்கி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். கரூரில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
    தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் அருகில் உள்ள இரட்டை விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்தால் திருமணத் தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீரும்.
    ஆன்மிக தலமான மதுரையில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் அருகில், இரட்டை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

    திருமண தாமதம், குழந்தைப்பேறு இன்மை, கடன் பிரச்சினை, தொழில் விருத்தியின்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானது. பக்தர்கள் தங்களது பிரச்சினைகளை இரட்டை விநாயகரிடம் முன்வைத்து பிரார்த்தனை செய்கிறார் கள். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் பலரும், இத்தலம் வந்து விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்திச் செல்கின்றனர்.

    இதில் விசேஷம் என்னவென்றால், இந்துக்கள் மட்டுமல்லாது, வேற்று மதத்தினரும் இரட்டை விநாயகரை வணங்கியும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் மகிழ்வது தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    150 ஆண்டுகளுக்கு முன் பழனியப்ப முதலியார் என்பவரால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இங்குள்ள ஆலமரமும், வேப்பமரமும் நூற்றாண்டை தாண்டி நிற்கின்றன. எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபடுகிறோம். ஆனால் அந்த விநாயகரே ஒரு காரியத்தை செய்வதற்கு முன், விநாயகரை உருவாக்கி அவரை வழிபடுவதாக ஐதீகம்.



    அந்தவகையில் தல்லாகுளம் இரட்டைவிநாயகர், தனித்துவம் பெற்றவர். பக்தர்களின் பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றித்தருகிறார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை பலதரப்பட்ட மக்களும் இங்கு வந்து இரட்டை விநாயகரை தரிசித்து செல்கிறார்கள்.

    குறிப்பாக, குழந்தைப் பேறு இல்லாதவர்களின் வேண்டுதல் இந்த ஆலயம் வந்தால் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. குழந்தைப் பேறு கேட்டு பிரார்த்தனை செய்த பலருக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன என்றும், அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி சென்றுள்ளனர் என்றும் கோவில் அர்ச்சகர் தெரிவிக்கிறார்.

    திருமணத் தடையை போக்குவதில் இரட்டை விநாயகர் சிறப்பு வாய்ந்தவர். திருமணத்தடை உள்ளவர் களுக்கு சிறப்பு பரிகாரங்கள் செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒருவரின் திருமணத் தடை நீங்க திங்கட்கிழமைதோறும் 16 வாரங்கள் எண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும். குறிப்பிட்ட நாளுக்குள் நல்ல சேதி வந்து சேரும்.

    இங்கு தமிழ் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடக்கிறது. திருமணத் தடை நீங்க விரலிமஞ்சள் மாலை சாத்தி வேண்டிக்கொண்டால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திருமணத்துக்கான உத்தரவாதம் கிடைக்கிறதாம்.

    சங்கடஹர சதூர்த்தி பூஜை, கடன் பிரச்சினைக்கு தேங்காய் மாலை, கல்விக்கு வெற்றிலை மாலை என இரட்டை விநாயகருக்கு சாத்தி வழிபாடு செய்தால், வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். விநாயகர் கவச பாடல்கள் பாடுவதன் மூலம் சகல கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.
    தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    * வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம்.

    * கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.

    * வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.

    * கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.



    * மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு உயர்வையோ அல்லது தாழ்வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள், யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஒருவரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது.

    * ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது 'கோமதி சுற்று' எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.



    * கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன.

    * கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.

    * கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.
    சர்ப்ப தோஷம், நாகதோஷத்திற்கு நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில், ஸ்ரீராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமியான ஸ்ரீபெரும்புதூர் ஒன்றாகும்.
    சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும். ஆனால் காள-சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.

    இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில், சென்னையை அடுத்துள்ளதும் வைணவத்தின் அவதார மகாபுருஷரான ஸ்ரீராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமியுமான ஸ்ரீபெரும்புதூர் ஒன்றாகும்.

    சர்ப்பங்களில் முதன்மை ஆனவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆசனமானவரும், ஐந்து தலைகளினால் பிரகாசிப்பவருமான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துவாபர யுகத்தில் பலராமராகவும் கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.



    ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் காள சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாகசர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    ஸ்ரீபெரும்புதூர் கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஸ்ரீமந் நாராயணனின் ஆக்ஞையினால், ஆதிசேஷன் உருவாக்கியதால் அனந்தசரஸ் எனப் பெயரும் புகழும் பெற்றதாகும்.

    இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, காள-சர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.
    திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.
    நரசிம்மரின் பெயரால் சென்னை அருகே செங்கல்பட்டு செல்லும் வழியில் “சிங்க பெருமாள் கோவில்” அமைந்துள்ளது.

    இக்கோவில் ஒரு குடவரைக் கோவிலாகும் பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றி வலம் வர வேண்டும். பெருமாள் சங்கு சக்கரம் தாங்கி நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் நெற்றிக்கண்ணுடன் பிரம்மாண்டமாக சேவை சாதிக்கின்றார். ஆரத்தி காட்டும் போது திருமண்ணை விலக்கி, நெற்றிக்கண்ணை சேவை செய்து வைக்கும் போது அந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.

    இத்தலம் பாடலாத்ரி என்றும் அழைக்கப்படுகின்றது. பாடலம் என்றால் சிவப்பு அத்ரி என்றால் மலை எனவே இந்தக் குன்று பாடலாத்ரி என்றும் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் பாடலாத்ரி நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

    ஜாபாலி என்னும் முனிவர் பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக சேவிக்க வேண்டும் என்று இம்மலையில் தவம் செய்தார். அவரது தவத்திற்கிணங்கி பெருமாள் பிரதோஷ வேளையில் உக்ர நரசிம்மராக சிவந்த கண்களோடு பாடலாத்ரி மீது தரிசனம் தந்தார். முனிவர் வேண்ட பின் அதே கோலத்தில் நாம் எல்லோரும் வழிபடுவதற்காக இத்தலத்தில் கோவில் கொண்டார்.

    பிரணவகோடி விமானத்தின் கீழ் நரசிம்மர் சங்கு சக்கரம் ஏந்தி வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கரத்தை தொடை மீது வைத்தும் பிரம்மாண்ட திருவுருவில் அருள்கிறார். வலது காலை தொங்கவிட்டு இடக்காலை மடித்த நிலையில் நெற்றிக்கண் ஒளிரும் அபூர்வ திருமேனி கொண்டவர் இவர். இவருக்கு பிரதோஷ தினத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகின்றது.



    ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், ஆழ்வார்கள், இராமானுஜர் ஆகியோர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கிரிவலம் வரும் போது அரிய வகை அழிஞ்சல் மரத்தை பார்க்க முடியும். அதையும் தவறாமல் வழிபட வேண்டும். அம்மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி வழிபட திருமண வரம், மழலை வரம் இருக்கிறது. பலர் இம்மரத்தில் தொட்டில் கட்டியிருப்பதைக் காணலாம்.

    பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரது பாதங்களிலும், ரத சப்தமி தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படருகிறது.

    கடன் தொல்லை, வழக்குகளிலிருந்து விடுதலை, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக, இந்த நரசிம்மர் அருள்கிறார். திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.

    நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜ ஜயந்தி, சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி நட்சத்திர தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆடிப்பூரம், ஆவணி பவித்ரோற்சவம், கிருஷ்ணஜயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனிகள் உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தை மாதசங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மார்கழியில் 5 நாட்கள் தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதும் விழாக்கோலம் காண்கின்றது இத்திருத்தலம் .

    இவரிடம் தன் கோரிக்கை நிறைவேறினால் பானகம் கரைத்து ஆலய வலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டால், கட்டாயம் அந்த கோரிக்கை நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
    நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர் 12000” நூலில் கூறியிருக்கிறார்.
    நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர் 12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாக சதுர்த்தி திதி”

    நாக சதுர்த்தி திதி அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.

    பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.



    நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.

    நாகதோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி திதியன்று, போகர் கூறியபடி நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டால் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழலாம்.

    உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள்.
    உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள். தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை, புத்தி நடைபெறும் சமயங்களிலும் இதைச் செய்யலாம்.

    1. சூரியபகவான் - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும். இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

    2. சந்திரபகவான் - வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும். சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

    3. செவ்வாய்பகவான் - தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

    4. புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.



    5. குருபகவான் - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

    6. சுக்ரபகவான் - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

    7. சனிபகவான் -
    ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

    8. கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

    9. ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும். இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி) அன்று செய்யவும்.
    ×