என் மலர்
தோஷ பரிகாரங்கள்
கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.
கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.
சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். மயிலாடுதுறை அருகே உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத் தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப் பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.
இந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது.
இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது. கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.
கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம்.
கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும்.

செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
பரத்துவாச முனிவர் யாத்திரை’ சென்றபோது நர்மதை நதியில் நீராடினார். அங்கே ஒரு மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார். இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை பிறந்தது. `அங்காகரன்’ என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.
அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் வழங்கினார். அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.

செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்யலாம்.

1. கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி.
2. வைத்த மாநிதி பெருமாள் (நவதிருப்பதி-3), திருக்கோவில், திருக்கோளூர், தூத்துக்குடி.
3. தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல்.
4. சதுர்முக முருகன் திருக்கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல்.
5. நரசிங்கப்பெருமாள் திருக்கோவில், மன்னாடி மங்கலம், மதுரை.
6. பிரளயநாதர் திருக்கோவில், சோழவந்தான், மதுரை.
7. ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி.
8. நாகம்மாள் திருக்கோவில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை.
9. திருவாப்புடையார் திருக்கோவில், செல்லூர், மதுரை.
10. விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்புனவாசல், புதுக்கோட்டை.
11. வீரபத்திரர் திருக்கோவில், அனுமந்தபுரம், காஞ்சீபுரம்.
12. சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காங்கேயநல்லூர், வேலூர்.
13. சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், குருசாமி பாளையம், நாமக்கல்.
14. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி, ஈரோடு.
15. முத்துகுமார சுவாமி திருக்கோவில், பவளமலை, ஈரோடு.
16. சுப்ரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை, ஈரோடு.
17. பாலதண்டாயுதபாணி திருக்கோவில், கோட்டுப்புள்ளாம் பாளையம், கோயம்புத்தூர்.
18. மலையாள தேவி துர்காபகவதி திருக்கோவில், நவகரை, கோயம்புத்தூர்.
19. தேனுபுரீஸ்வரர் திருக்கோவில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர்.
20. அருணஜடேசுவரர் திருக்கோவில், திருப்பணந்தாள், தஞ்சாவூர்.
21. அகோர வீரபத்திரர் திருக்கோவில், வீராவாடி, திருவாரூர்.
22. வைத்தியநாதர் திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில், நாகப்பட்டினம்.
23. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர், கடலூர்.
24. நல்லிணக்கீஸ்வரர் திருக்கோவில், எழுச்சூர், சென்னை.
25. கல்யாண கந்தசுவாமி திருக்கோவில், மடிப்பாக்கம், சென்னை.
26. அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை.

விழுப்புரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக தோஷங்களை போக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள்.
சிவபெருமானை பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்கியவர் அங்காளபரமேஸ்வரி அம்மன். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூரில் உள்ளது. பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக தோஷங்களை போக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள்.
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் கோவிலில் திருவிழா நாட்கள் ஆகும். இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.

காவிரி ஆற்றில் நீராடுவதால் பிதுர்தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நதி தோஷம் ஆகியன நீங்கி, வறுமை, பஞ்சம் அகன்று, செழுமை அடைந்து உலகம் சுபிட்சம் பெறும்.
“ஆயிரம் ஆனாலும், மாயூரம் ஆகாது” என்பது பழமொழி. ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.
காவிரி மகாத்மியம் என்ற நூலில், நதிகளில் உயர்ந்தது காவிரியே என்று கூறப்பட்டுள்ளது. முன்பு ஒரு காலத்தல் கன்ம மகரிஷி என்ற மாமுனிவரை ஒரு நாள் கருத்த நிறத்தில் உள்ள 3 பெண்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் நீங்கள் யார்? என்று முனிவர் கேட்டார்.
அதற்கு அவர்கள் நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள். மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்களை எங்களிடம் கொட்டித்தீர்த்ததால் நாங்கள் கருமை நிறம் அடைந்துவிட்டோம். எங்களது பாவத்தை போக்க வழிவகை செய்யவேண்டும் என்று முனிவரிடம் கேட்டனர். அதற்கு முனிவர் அவர்களிடம், தென்னிந்திய பகுதியான மயிலாடுதுறையில் உள்ள துலாகட்டத்தில் காவிரி ஆற்றில் துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் புனித நீராடி மயூரநாதரையும், பரிமள ரெங்கநாதரையும் தரிசனம் செய்தால் உங்கள் பாவங்கள் போகும் என்று கூறினார். அதன்படி 3 பேரும் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி பாவங்களை போக்கி கொண்டனர்.
ஒரு சமயம் நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான், பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது பிரம்மா, குருபகவான் முன்பு தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு குருபகவான், உங்களிடம் உள்ள 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியாகிய புஷ்கரத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பிரம்மாவும் ஒப்புக்கொண்டார்.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் புஷ்கர விழா நடைபெறும் துலாகட்ட பகுதியை படத்தில் காணலாம்.
அப்போது புஷ்கரம் பிரம்மாவிடம், நான் உங்களிடமே இருப்பேன். என்னை உங்களிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள் என்று வேண்டிக்கொண்டது. இதனால் தர்மசங்கடம் அடைந்த பிரம்மா கொடுத்த வாக்கை பின்வாங்காமல் குருபகவானுக்கும், புஷ்கரத்திற்கும் இடையே ஒரு சமாதான நடவடிக்கையை மேற்கொண்டார். அதன்படி இருவரும் செயல்பட உறுதி அளித்தனர். அதாவது புஷ்கரம், குருபகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசி வரை உள்ள 12 ராசிகளிலும், அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மைகளை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி துலாம் ராசிக்கு அதிபதியான காவிரியில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன், அதே காலக்கட்டத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோரும் ஒருசேர இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் செய்வார்கள். எனவே, மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் இந்த புனித நதியில் நீராடினால் அனைத்து வகை பாவங்களும் நீங்கி வளமையும், செழிப்பும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது தான் புஷ்கரத்தின் மகிமையாகும்.
காவிரி புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறும் குருபெயர்ச்சி காலமாகும். வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி இந்த குருபெயர்ச்சி நடைபெற உள்ளது. குறிப்பாக துலாம் ராசிக்கு உரிய காவிரியில் மயிலாடுதுறையில் உள்ள துலா கட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் 12 நாட்கள் காவிரி புஷ்கரம் புண்ணிய காலம் ஆகும். இதனை ஆதிபுஷ்கரம் என்றும் அழைப்பார்கள்.
இந்த புஷ்கர விழா கடந்த 12.9.1840-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 177 ஆண்டுகளுக்குப்பிறகு புஷ்கர விழா நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு குருபெயர்ச்சி முன்பு உள்ள 12 நாட்கள் அந்தி புஷ்கரம் என்று அழைப்பார்கள். மேற்படி நாட்களில் காவிரி ஆற்றில் நீராடுவதால் பிதுர்தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நதி தோஷம் ஆகியன நீங்கி, வறுமை, பஞ்சம் அகன்று, செழுமை அடைந்து உலகம் சுபிட்சம் பெறும்.

அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலை அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆஞ்சநேயரை வேண்டி வணங்கினால் துன்பம் பறந்தோடும்.
அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் ஐந்து கி.மீ. தொலைவில் அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது.
இரண்டு அடிபீடத்தில், ஒன்பது அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இவர். அவருக்கு அருகில் செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அசோக வனத்தில் வேதனையில் தவித்த சீதாப்பிராட்டியின் முன் தோன்றிய ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து ஆறுதல் கூறினார்.
அதே விஸ்வரூபத்தில் இங்கே எழுந்தருளி இருப்பது இப்பகுதி மக்கள் செய்த தவப்பயன். ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு, வெண்ணெய், மலர், பழங்கள், செந்தூரம் மற்றும் பலவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவதை பக்தர்கள் பார்த்து ஆனந்தம் அடைகின்றனர்.
ஆலயத்தின் அருகில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அதன் முன்பாக 23 அடி உயர கதாயுதம் நிறுவப்பட்டிருக்கிறது. மூலஸ்தானத்திற்கு முன்னால் செல்வவிநாயகர் தனி மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார்.
அவரை வணங்கியபின் ஆஞ்சநேயரின் முன் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் அனுமனின் வெற்றிக் கொடிமரத்தைச் சுற்றி விட்டு மூலஸ்தானத்திற்குச் சென்று ஆஞ்சநேயரின் அருள் பெற வேண்டும். ஆஞ்சநேயரின் பேராற்றல் மிக்க கதாயுதத்தை வணங்கிய பின் அதை வலம் வரவேண்டும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை ஏற்படும். எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் பலன் அடையலாம்.
1. செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.
2. கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.
3. செவ்வாய்க்கிழமைகளில் உண்ணாவிரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.
4. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
5. செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.
6. செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம்.
7. இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யலாம்.

ராகு - கேது தோஷத்தால் திருமணம் தடை படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரிய பரிகாரத்தை செய்து வந்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
ராகு-கேதுக்களுக்கு நடுவில் கிரகங்கள் சிக்கியிருந்தால் கால சர்ப்ப தோஷமாகும். சர்ப்ப தோஷத்தின் பிடியில் சிக்கியிருந்தால் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி திருமணத் தடைகள் அதிகம் ஏற்படும்.
அவர்கள் ராகு காலத்தில் துர்க்கை வழிபாட்டையும், அதோடு இணைந்து கேதுவிற்கு விநாயகர் வழிபாட்டையும் முறைப்படி மேற்கொண்டு வரவேண்டும். ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி சேரும் வாய்ப்பு கண்டிப்பாக உருவாகும்.
சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்தால் தடைகள் விலகும்.

சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும்.

ஆனால் காள-சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.
இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில், சென்னையை அடுத்துள்ளதும் வைணவத்தின் அவதார மகாபுருஷரான ஸ்ரீராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமியுமான ஸ்ரீபெரும்புதூர் பரிகார தலங்களில் ஒன்றாகும்.
சர்ப்பங்களில் முதன்மை ஆனவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆசனமானவரும், ஐந்து தலைகளினால் பிரகாசிப்பவருமான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும் கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.
கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஸ்ரீமந் நாராயணனின் ஆக்ஞையினால், ஆதிசேஷன் உருவாக்கியதால் அனந்தசரஸ் எனப் பெயரும் புகழும் பெற்றதாகும்.
இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, காள-சர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.

பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை.
ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.
இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதே போல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒரு வேளை முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி, அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.
அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.
திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதர் திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.
மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.
மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிரார்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

கால சர்ப்பதோஷம், ராகுதிசை, ராகுபுத்தி, நாக தோஷம் உள்ளவர்கள் திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகு பகவானைத் வழிபட்டால் அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
ராகுபகவானிற்கு உரிய சிறப்பு ஸ்தலம் திருநாகேஸ்வரம். இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் (கும்பகோணம்- காரைக்கால் சாலையில்) உள்ளது.
கால சர்ப்பதோஷம், ராகுதிசை, ராகுபுத்தி, நாக தோஷம் போன்றவற்றிற்கு உட்பட்டவர்கள் இங்குள்ள ராகு பகவானைத் துதித்து வழிபட்டால் அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். ஐந்து தலை அரவமாகிய (நாக ராஜாவாக) ராகுபகவான் சன்னிதி, கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ளது. உதட்டோர புன்னகை, மடித்த காலில் இடது கரத்தை ஊன்றி வலக்கரத்தால் அருள் பாலிக்கிறார்.
இங்கு வீற்றிருக்கும் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும் பால், அவருடைய திரு மேனியில் பட்டு வழியும் போது நீலநிறமாக மாறிவிடும் அதிசயம் இன்றுவரை நடந்து வருகிறது.
1980-ம் ஆண்டு ராகு பகவானின் மீது கிடந்த நாகப் பாம்பின் சட்டை, கோவிலில் கண்ணாடி பேழை ஒன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் நாகேஸ்வரமுடையார் கோவிலுக்கு வந்து முறையாக பரிகாரம் செய்தால் தோஷத்தின் வீரியம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ராகுவும் கேதுவும் தவமிருந்து, இறைவனை வழிபட்டு கிரகப் பதவியை அடைந்தனர். அந்த இறைவன் பெயர் நாகேஸ்வரமுடையார், இறைவி புன்னாக வல்லி. இவர்கள் அருள்பாலிக்கும் ஆலயம் சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவில்.
இந்த ஆலயத்தில் தினமும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இங்கு ஞாயிறு அன்று நடைபெறும் பரிகார பூஜை சிறப்பு வாய்ந்தது. ராகு, கேது சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.
ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி அன்று நாகேஸ்வரமுடையாருக்கு, 150 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அபிஷேகம் அன்னத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.
பிரதி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இங்கு சுவாமி, அம்மன் மற்றும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள் ராகு, கேது சன்னிதிகளை இடதுபுறம் 9 முறையும், வலதுபுறம் 3 முறையும் அடி பிரதட்சணம் செய்கின்றனர். இப்படி 11 வாரம் செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுகிறது என்று நம்புகின்றனர்.
ராகு தோஷம் உள்ளவர்கள் உளுந்து தானியம் மீதும், கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, தோஷத்தின் வீரியம் குறையும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.
நாகை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ தொலைவில் கடை வீதியில் உள்ளது இந்த ஆலயம்.
இந்த கோவில் பற்றிய தகவல் அறிய இந்த எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்: 9443785862