என் மலர்
தோஷ பரிகாரங்கள்
அர்த்தநாரீஸ்வரர் வழிபாட்டால் கணவன் - மனைவிக்குள் வரும் பிரச்சனை தீர்ந்து குடும்ப ஒற்றுமை பலப்படும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றும், ‘கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்’ என்றும் தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஜாதகத்திலும் களத்திர ஸ்தானாதிபதி பகை வீட்டில் இருந்தாலோ, நீச்சம் பெற்றுச் சூரியனோடு கூடியிருந்தாலோ, பாவ கிரகங்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலோ குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும்.
ஜாதகத்தில் இரண்டாம் இடமும், ஏழாம் இடமும் பலமிழந்து இருந்தாலும், அஷ்டம ஸ்தானத்தில் சப்தமாதிபதி பாவ கிரகங்களோடு இணைந்திருந்தாலும், இல்லத்தில் ஒற்றுமை குறையும். எப்போதும் சண்டை சச்சரவு உருவாகிக் கொண்டே இருக்கும். வழிபாட்டின் மூலம் அமைதி காணலாம். குடும்ப உறவை சீராக்கிக் கொள்ளலாம். பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் வழிபாட்டால் கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

விநாயகருக்கு தொடர்ச்சியாக அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் பிரச்சனைகள், துன்பங்கள் தீரும். இப்போது எந்த அர்ச்சனை என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள், லக்னத்தில் கேது இருப்பவர்கள், 2,4,6,8,12 ஆகிய இடங்களில் சுய ஜாதகத்தில் கேது இருப்பவர்கள், வாழ்க்கையில் நிறையத் தடைகளைச் சந்திக்க நேரிடும். அவர்கள் விநாயகருக்கு தொடர்ச்சியாக அர்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது.
விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி அர்ச்சனை செய்தால், அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். வில்வ இலை அர்ச்சனை செய்தால் துன்பங்கள் தூளாகும். மருத இலையால் அர்ச்சனை செய்தால் நல்ல மக்கட்பேறு உண்டாகும்.
தேவதாரு இலையால் அர்ச்சனை செய்தால் மன வலிமை கிடைக்கும். வன்னி இலையால் அர்ச்சனை செய்தால் வளர்ச்சி கூடும். மரிக்கொழுந்து இலையாலும், பச்சை இலையாலும் அர்ச்சனை செய்தால் ஞானமும், கல்வியும் விருத்திக்கும்.

கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்பதோஷ நிவர்த்தி ஆகிய அனைத்து நலன்களும் கிட்டும்.
பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடை பெறும்.
கருடனின் அவதார நாளை நட்சத்திர அடிப்படையில் ஆடி சுவாதியன்று கொண்டாடுவார்கள். பாஞ்சராத்ர ஆகமப்படி திதியின் அடிப்படையில் கருட பஞ்சமியாகக் கொண்டாடுவார்கள். கருட பகவானுக்கு ருத்ரா, கீர்த்தி என்று இரண்டு தேவிகள், இவர்களே அரங்கநாயகிக்கு இரு கண்களாகத் திகழ்கிறார்களாம். கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.
கஜேந்திர மோட்ச வைபவத்தில், கஜேந்திரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கவ்வி இழுக்க, கஜேந்திரன் திருமாலை ‘ஆதிமூலமே’ என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயு வேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்த்தார்.

ராமாயண காலத்தில் போர்க் களத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப் போட, அவர்கள் மயங்கி விழுந்த போது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார். கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார்.
கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தான்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி அளிக்கிறார். கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்பதோஷ நிவர்த்தி ஆகிய அனைத்து நலன்களும் கிட்டும்.

பெண்கள் இந்த ஆடி மாதத்தில் எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து காமாட்சி அம்மனுக்கு அணிவித்து வேண்டுதல் செய்தால் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பொதுவாகவே ஆண்களை விட பெண்கள்தான் அம்மனை அதிகம் வழிபடுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கு இயற்கையாகவே அம்மன் மீது இருக்கும் ஈர்ப்பும், ஈடுபாடும்தான் காரணமாகும்.
பெண்கள் இந்த ஆடி மாதத்தில் எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து காமாட்சி அம்மனுக்கு அணிவித்து வேண்டுதல் செய்தால் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. துன்பங்கள் நீங்க காமாட்சியை வழிபடுவது நல்லது.
எல்லாத் தீமைகளையும் அழித்து எல்லாத் தடைகளையும் போக்கி நல்வாழ்க்கையைத் தருபவள் காமாட்சியே ஆவாள். வெற்றியை விரும்புவோர் காமாட்சியை விரும்பி வழிபடுவார்கள்.
சிவன், விஷ்ணு, பிரம்மன், யமன், இந்திரன், முதலான தேவர்களின் மகாசக்திகளின் ஒட்டு மொத்த வடிவமாக காமாட்சி விளங்குவதால் அவள் பல ரூபங்களை கொண்டவள். அவளை நினைத்தாலும் அவளுடைய மகாமந்திரங்களை ஜபித்தாலும் நமக்கு ஏற்படக்கூடிய மரண பயம், இகலோக பயம், பரலோக பயம், அரவு பயம், சுருதி பயம், வேதனா பயங்கள்உள்ளிட்ட அனைத்து பயங்களும் ஓடி ஒளிகின்றன.
ஆடி மாதம் முழுவதும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் காமாட்சியை வழிபடுவது சாலச்சிறந்தது.
ஒருவருடைய ஜாதகத்தில் கிரக தோஷத்தால் திருமணத் தடைகள் ஏற்பட்டிருக்கலாம். இதிலிருந்து நிவர்த்தி பெற காமாட்சிக்கு புடவை சார்த்தி எலுமிச்சம்பழ மாலை, செவ்வரளி மாலை அணிவித்து பசு நெய் அல்லது நல்லெண்ணையால் தன் வயது எண்ணிக்கையுள்ள தீபம் ஏற்றி குங்குமத்தால் அருச்சனை செய்தால் திருமணத் தடைகள் நீங்கும். மகப்பேறு, தொழில், அபிவிருத்தி, கல்வியில் தேர்ச்சி மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.
அம்பாளுக்கு எலுமிச்சை பழம் மாலை சார்த்தும் போது 18, 27, 54, 108, 1008 எண்ணிக்கை உள்ள எலுமிச்சம் பழ மாலையைச் சாற்றுவதால் நமக்கு உண்டாகும் உக்கிரமமான நோய்கள், வயிற்று உபாதைகள் தணிகின்றன. தீராத துன்பங்கள் நீங்குகின்றன.
காமாட்சி மற்றும் துர்க்கை அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும் சிறப்புடையது எலுமிச்சம்பழம், இதனை குறுக்குவாட்டில் இரண்டாக நறுக்கி சாற்றை பிழிந்துவிட்டு மூடியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வந்தால் அம்மனின் அருள் எளிதில் கிடைக்கும். கன்னிப்பெண்கள் இவ்வாறு விளக்கேற்றி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து காமாட்சி அம்மனுக்கு அணியும் வழக்கமும் உள்ளது. இவ்வாறு செய்வதால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்.
எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிக் கனியுமாகும். அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாக காவல் தெய்வம், எல்லைத் தெய்வம் சம்கார தெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து, அந்த தெய்வங்கள் முன்பாக நின்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களது படைகளை வழி நடத்திச் செல்வார்கள். போரில் வாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டும் எலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.
பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூடி வணங்கி வழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன், பட்டீஸ்வரம் துர்கையம்மன் உள்ளிட்ட பல முக்கிய ஆலய வழிபாடுகளில் பிராதானமாக அமைந்துள்ளதைக் காணலாம்.
பொதுவாக பத்ரகாளி, துர்க்கை, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள். இந்த மாலையை தயாரிக்கும் போது ஒரே அளவுள்ள மஞ்சள் நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்ப்பது நல்லது. பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பழங்கள் காயாக இருக்கக்கூடாது.
எலுமிச்சை மாலை சாத்தும் போது அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும். கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

திருமணத்தடையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.
உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி,பழமுதிச்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் வாய்ந்தது.
கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.
நாளை ஆடிக்கிருத்திகை தினமாகும். கிருத்திகை தினம் எப்படி முருக வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றது என்பதைப் பார்க்கலாம்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி,பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.
உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள்தங்கள் பிரார்த்தனைக்களையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த இன்று கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது.
காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி, மச்சக்காவடி, செடில் காவடி, சேவல்காவடி, தீர்த்தக்காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.
கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அரைவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டிகவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகள் பக்தி சிரத்தையுடன் பாடிவிரதத்தை முடிகின்றனர்.
இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள். உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவு கூறும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.
முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற திங்கட்கிழமை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இன்று கிருஷ்ணர் பற்றி மிகவும் அரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணர் வாழ்ந்த ஆதாரம் :
குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது மகாபாரத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது. மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பணமில்லாமல் பசுதானம் :
‘கோவிந்தா’ என்று சொன்னால் ‘போனது வராது’ என்று பொருள்படும் இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், ‘பணம்’ கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது. கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். அப்போது ‘கோ’ என்றால் ‘பசு’ ‘இந்தா’ என்றால் ‘வாங்கிக்கொள்’ என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
துளசி மாலை அணிவது ஏன்? :
கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.
கோவிந்தா :
வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்று பொருளாகும்.
எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

விஷ்ணுகிராந்தி :
வயல்வெளிகள், ஆற்றங்கரைகளில் குப்பையோடு குப்பையாக வளரும் ஒரு வகைச்செடி ‘விஷ்ணுகிராந்தி’ இதன் பூக்கள் பெருமாளின் கையிலுள்ள சக்கரம் போல இருக்கும். இதில் பெருமாள் இருப்பதாக நம்பிக்கை, இந்த பூவை தாயத்தில் சேர்த்து கட்டிக்கொண்டால் உடல்பலம் மற்றும் தைரியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
பஜகோவிந்தம் :
கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாட வேண்டும். ஆதி சங்கரர் சென்ற இடங்களில் எல்லாம் ‘பஜகோவிந்தம்’ பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
கண்ணனின் ஆபரணங்கள் :
பெருமாள் சிலையை ‘திவ்ய மங்கள விக்ரகம்’ என்பர். அவரது திருமுடியில் அணியும் ஆபரணத்தின் பெயர் ‘திருவபிடேகம்’ எனப்படும். திருப்பாதத்தில் அணியும் ஆபரணத்திற்கு, ‘நூபுரம்’ என்று பெயர்.பெருமாளை முதலில் திருவடியை தரிசித்தபின்«ப, திருமுகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
திரிபங்கி தோற்றம் :
கண்ணனின் நிற்கும் தோற்றத்தில் மூன்று வளைவுகளைத் தரிசிக்கலாம். இதற்கு ‘திரிபங்கி’ என்று பெயர். ஒரு திருவடியை நேரே வைத்து, மறு திருவடியை மாற்றி வைத்திருப்பது ஓர் வளைவு! இடுப்பை வளைத்து நிற்பது மற்றொன்று! கழுத்தைச் சாய்த்து கோவிந்தன் குழல் கொண்டு ஊதுவது மூன்றாவது வளைவு! இப்படி நிற்பதனால் கிருஷ்ணனை ‘திரிபங்கி லலிதாகாரன்’ என்று வடமொழித் தோத்திரங்கள் போற்றுகின்றன.
இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தைக் குறிக்கின்றன.
16 ஆயிரம் மனைவிகள் :
ருக்மணிதான் கிருஷ்ணனின் பட்டத்து ராணி. மற்ற ஏழு முக்கிய ராணிகள் சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, சத்டயா, பத்ரா மற்றும் லட்சுமணா. இந்த 8 ராணிகளும் 8 பகுதிகளை கொண்ட ப்ரக்ருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகம் ஆகியவையே ப்ரக்ருதியின் 8 பகுதிகள். இதன் உள்ளர்த்தம், 8 பகுதிகளும் கிருஷ்ணனுக்கு அடங்கியவை என்பது. கிருஷ்ணன், நரகாசூரனை வென்று 16,000 இளவரசிகளை மீட்டு அவர்களுக்கு சமுதாய அந்தஸ்து கொடுக்க அவர்களை திருமணம் செய்து கொண்டான். அந்த 16,000 இளவரசிகள் நம் உடலில் உள்ள 16,000 நாடி நரம்புகளைக் குறிக்கின்றனர்.
கோபியர் சேலைகளைக் கவர்தல் :
ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் வழக்கப்படி சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர். கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, அவ்வாடைகளைத் திருப்பித் தந்தான்.

மயில் இறகு :
கிருஷ்ணனின் படங்களில் அவர் தலையில் மயில் இறகு சூடப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதில் ஒரு தத்துவம் உள்ளது.
“கண்ணனின் தலையில் உள்ள மயில் இறகு, சக்தி தத்துவத்தைக் குறிக்கின்றது’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். கண்ணனின் சக்தியே ‘ராதை’ ஆவாள். அவளைத் தலை மீது வைத்துத் தான் கொண்டாடுவதையே மயில் இறகு மூலமாக அறிவிக்கின்றான் மாதவன்.
முகுந்தா... முகுந்தா :
“மு” என்றால் முக்தியை அருள்வது என்று பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம்.
சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மை :
கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
முதல் உறியடி திருவிழா :
கிருஷ்ண பக்தரான நாராயண தீர்த்தர் ஒரு முறை கடுமையான வயிற்று வலியோடு தல யாத்திரை மேற்கொண்டிருந்தார். அவர், வரகூரை அடைந்து, அங்கிருந்த வெங்கடேச பெருமாளை வழிபட்டதுமே அவருடைய வயிற்று வலி மாயமானதாம். இறைவனின் கருணையைப் போற்றி அவர் இயற்றிய இசைக் காவியம்தான் கிருஷ்ண லீலா தரங்கிணி. இந்தக் காவியத்துக்கு கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் தாளம்போட்டதாகவும், திரைக்குப் பின்னால் பெருமாள் நடனம் ஆடியதாகவும் சொல்லப்படுகிறது. இங்குதான் முதன் முதலாக உறியடி உற்சவத்தை நாராயண தீர்த்தர் தொடங்கி வைத்ததாகவும் சொல்வார்கள்.
சீடை, முறுக்கு ஏன்? :
பல்கூட முளைக்காத பாலகிருஷ்ணனுக்கு கடிக்கக் கடினமாக உள்ள சீடை, முறுக்குகளை நிவேதனம் செய்வதில் ஆழ்ந்த உட்பொருள் உண்டு. குழந்தையாக இருந்தபோதே பூதனை, சகடாசுரன், தேனுகாசுரன் போன்ற பல அசுரர்களைக் கொன்று உய்வித்தவன் கிருஷ்ணன். அப்படிப்பட்ட விசேஷ ஆற்றல் உடைய குழந்தை என்பதாலேயே, அவன் பிறந்த நாளில் சீடை, முறுக்கு போன்றவற்றை நிவேதனம் செய்கின்றோம்.
வசீகரிப்பவர் :
கிருஷ்ணா என்ற பெயரில் ‘கிருஷ்’ என்ப தற்கு அனை வரையும் வசீகரிப்பவன் என்று பொருள். (‘ணா’ என்பதற்கு பக்தி பரவசத்தை அளிப்பவன் என்று பொருள் அனை வரையும் வசீகரித்து பக்தி பரவசத்தை ஏற்படுத்துபவரே கிருஷ்ணர்.

எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எழுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது.
எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எழுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இதனை நோய்வாய்பட்ட மக்களின் அருகில் தொங்கவிடும் போது, இது தீய ஆவிகளை விரட்டி அவர்களை நோய்களிலிருந்து குணமடைய செய்யும் என்று நம்பப்படுகிறது. கெட்ட ஆவிகளை விரட்ட துர்கை அம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது.
துர்கா பூஜையின் போது எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை தோல் மெல்லியதாக இருக்க வேண்டும். (ஒற்றை எண்களில், அதிகபட்சம் 9) அதனை நெகிழ்வாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதனை செங்குத்தாக சரிபாதியாக வெட்டி கொள்ள வேண்டும், சாற்றினைப் பிழிந்து வெளியேற்ற வேண்டும்.
பின் அந்த பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி, ஒரு கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை எண்ணெய் அல்லது நெய் கொண்டு நிரப்பி திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.
நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும், 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் சந்தோஷமாகவும் வாழலாம்.

விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகங்களிலும் ஒவ்வொரு கிரகங்கள் அமர்ந்திருப்பதாக ஐதீகம். எனவே விநாயகரை வழிபட்டால் நவக்கிரகங்களால் நமக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் விலகும்.

நெற்றியில் - சூரியன்
நாபியில் - சந்திரன்
வலது தொடையில் - செவ்வாய்
இடது தொடையில் - கேது
வலது கையின் மேல் - சனி
வலது கையின் கீழ் - புதன்
இடது கையின் மேல் - ராகு
இடது கையின் கீழ் - சுக்ரன்
தலையில் - வியாழன்
ஒரு ஆணின் ஜாதகத்தில் 2,4,5,7,8,12-வது இடங்களால் ராகு அல்லது கேது சுபபார்வையுடன் இருந்தால், பெண் ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.
* ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் நாகதோஷம் இருந்தால் திருமணப் பொருத்தம் செய்யலாம். ஆண் அல்லது பெண், இருவர் ஜாதகத்தில், ஒருவருக்கு தோஷம் இருந்து, மற்றவருக்கு தோஷம் இல்லாவிட்டால், அந்த ஜாதகத்தைப் பொருத்தம் செய்யக்கூடாது.
* அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்ம நட்சத்திரம் தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
* அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்ம நட்சத்திரம் வரும். ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
* ஜாதக பலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்.
* ஒரு ஆணின் ஜாதகத்தில் 2,4,5,7,8,12-வது இடங்களால் ராகு அல்லது கேது சுபபார்வையுடன் இருந்தால், பெண் ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.
சில பரிகாரங்கள் :
1. வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் நாக உருவத்தை வைத்து கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும்.
2. செம்பு அல்லது வெள்ளி யினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்தல் வேண்டும்.
3. நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். மகளிர் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகிவிடும்.
ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு உணவருந்தலாம்.
4. எந்த விதமான சர்ப்பதோஷமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
பரிகார பஞ்ச ஸ்தலங்கள் :
1. திருகாளகத்தி. சிமந்திரா (ஆந்திரா) மாநிலத்தில் உள்ளது..
2. குடந்தை கிழ் கோட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது
3. திருபாம்புரம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது
4. கிழ் பெரும்பள்ளம் மாயவரம் அருகில் உள்ளது
5. திருநாகைக் காரோணம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்தியில் உள்ளது.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும்.
முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய் தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன் றவையும் இருக்கும்.

வரலாற்று சிறப்பு மற்றும் கலை நயம் வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் பல்வேறு தோஷங்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மற்றும் கலை நயம் வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசர்களான அச்சுததேவராயர், ராமதேவராயர் ஆகியோரால் திருக்கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டது. மேலும் மழைநீர் சேகரிப்புக்கு முன் உதாரணமாகவும் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கி நின்ற நிலையில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்திர வள்ளித்தாயார் மற்றும் ஆண்டாள் சமேதமாக எழுந்தருளும் மூலசன்னிதானம், சிற்ப வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. சவுந்திர வள்ளித் தாயாருக்கு தனி சன்னதியும், ஆண்டாளுக்கென தனி சன்னதியும் அமைய பெற்றுள்ளது. பரிவார மூர்த்திகளாக விஷ்வக்சேனர், நம்மாழ்வார், இரட்டை விநாயகர், கல்விக்கடவுளான சரஸ்வதி, ஞானம் அளித்த ஹயக்ரீவர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர்.
தீராத நோய்களை தீர்க்கும் வாய்மை பெற்ற தன்வந்திரி பெருமாளும், மன திடத்தையும், வெற்றியையும் அருளும் லட்சுமி நரசிம்மரும், குழந்தை இல்லாதோருக்கு தானே குழந்தையாக வரும் வேணுகோபாலன், மன தைரியத்தை வழங்கும் வீரபக்த ஆஞ்சநேயர், வராக் கடன்களையும், பொருளாதார பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல சொர்ண ஆகர்ஷண பைரவரும் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.
மேலும் வியாபாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்த சக்கரத்தாழ்வார் பிரகாரத்திற்கு வெளியே தென்பகுதியில் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் பல்வேறு வைபவங்கள் நடைபெற்று வந்தாலும், ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடித்திருவிழா தோராட்டம் பிரசித்தி பெற்றதாகும். இதுபோன்று மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் நடைபெறும் சொர்ண ஆகர்ஷண பைரவர் சிறப்பு பூஜையும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் பரிகாரம் செய்ய தகுந்த காலம் எது? செய்யக்கூடாத காலம் எது? என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பரிகார காலம்:
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும் பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக் கிறதோ அந்த கிழமையில்பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.