என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஆன்மிக தலமான மதுரையில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் அருகில், இரட்டை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.
    திருமண தாமதம், குழந்தைப்பேறு இன்மை, கடன் பிரச்சினை, தொழில் விருத்தியின்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானது. பக்தர்கள் தங்களது பிரச்சினைகளை இரட்டை விநாயகரிடம் முன்வைத்து பிரார்த்தனை செய்கிறார் கள். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் பலரும், இத்தலம் வந்து விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்திச் செல்கின்றனர்.

    இதில் விசேஷம் என்னவென்றால், இந்துக்கள் மட்டுமல்லாது, வேற்று மதத்தினரும் இரட்டை விநாயகரை வணங்கியும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் மகிழ்வது தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    150 ஆண்டுகளுக்கு முன் பழனியப்ப முதலியார் என்பவரால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இங்குள்ள ஆலமரமும், வேப்பமரமும் நூற்றாண்டை தாண்டி நிற்கின்றன. எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபடுகிறோம். ஆனால் அந்த விநாயகரே ஒரு காரியத்தை செய்வதற்கு முன், விநாயகரை உருவாக்கி அவரை வழிபடுவதாக ஐதீகம்.

    அந்தவகையில் தல்லாகுளம் இரட்டைவிநாயகர், தனித்துவம் பெற்றவர். பக்தர்களின் பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றித்தருகிறார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை பலதரப்பட்ட மக்களும் இங்கு வந்து இரட்டை விநாயகரை தரிசித்து செல் கிறார்கள்.



    குறிப்பாக, குழந்தைப் பேறு இல்லாதவர்களின் வேண்டுதல் இந்த ஆலயம் வந்தால் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. குழந்தைப் பேறு கேட்டு பிரார்த்தனை செய்த பலருக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன என்றும், அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி சென்றுள்ளனர் என்றும் கோவில் அர்ச்சகர் தெரிவிக்கிறார்.

    திருமணத் தடையை போக்குவதில் இரட்டை விநாயகர் சிறப்பு வாய்ந்தவர். திருமணத்தடை உள்ளவர் களுக்கு சிறப்பு பரிகாரங்கள் செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒருவரின் திருமணத் தடை நீங்க திங்கட்கிழமைதோறும் 16 வாரங்கள் எண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும். குறிப்பிட்ட நாளுக்குள் நல்ல சேதி வந்து சேரும்.

    இங்கு தமிழ் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடக்கிறது. திருமணத் தடை நீங்க விரலிமஞ்சள் மாலை சாத்தி வேண்டிக்கொண்டால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திருமணத்துக்கான உத்தரவாதம் கிடைக்கிறதாம்.

    சங்கடஹர சதூர்த்தி பூஜை, கடன் பிரச்சினைக்கு தேங்காய் மாலை, கல்விக்கு வெற்றிலை மாலை என இரட்டை விநாயகருக்கு சாத்தி வழிபாடு செய்தால், வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். விநாயகர் கவச பாடல்கள் பாடுவதன் மூலம் சகல கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.
    செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம்.
    செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இப்பூஜைகளின் மூலம் செவ்வாய் திருமண தடையை நீக்குவது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருகின்றார். செவ்வாய் தசை நடப்பில் இருந்து சோதனைக்கு ஆளாகி இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம்.

    இந்த பூஜையை செய்ய வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுப்பது நல்லது. சஷ்டியோடு செவ்வாய் வருவது மிக உத்தமம். செவ்வாய் அன்று நாகதோஷ வேளையில் (ராகு காலத்தில்) அல்லது செவ்வாய் ஹோரையில் பரிகார பூஜையை தொடங்குவது நல்லது.

    அன்று காலை குளித்து விட்டு வடக்குத் திசை பார்த்து அமரவும். உங்கள் முன்பு ஒரு மனை வைத்து மனைமேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும், தீபத்திற்கு முன்பு வாழை இலை போட்டு (வாழை இலை நுனி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்) இலையில் 27- அரச இலைகளை வைக்கவும்.
    இலை மீது முழு துவரம்பருப்பு கொட்டைகளையும், தோல் நீக்காத முழு உளுந்து கொட்டைகளையும் வைத்து அதன்மேல் ஒரு சிறிய அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும்.

    இலை மீது வாழை பூ வைக்கவும் மற்றும் பழம், வெற்றிலை பாக்கு பூஜை பொருட்கள் வைத்து, நிவேதனமாக துவரம்பருப்பில் செய்த வடை, அல்லது துவரம் பருப்பு பொங்கல் வைக்கவும். தீபத்திற்கு தீப ஆராதனை முடித்துவிட்டு வாழை பூவை கையில் எடுத்துக் கொண்டு தீபத்தை வலமிருந்து இடமாக 9 முறையும் இடமிருந்து வலமாக 9 முறையும் பிறகு வலமிருந்து இடமாக 9 முறையும் ஆக 27 முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.

    குறிப்பு:

    1. இலை மீது உள்ள தீபத்திற்கு உங்கள் ஆடையிலிருந்து எடுக்கப்பட்ட நூலை திரியாக போடவும்.

    2. வாழை பூவை கையில் எடுத்து கொண்டு தீபத்தை வலம் வரும்போது செவ்வாய் காயத்ரியை உச்சரித்துக் கொண்டே வலம் வரவும்.

    3. பூஜை முடித்த பிறகு வாழை பூவை பசுமாட்டிற்கு கொடுக்கவும். தானியத்தையும் ஊறவைத்து கொடுக்கவும்.
    குழந்தைகள் நோயுற்று இருக்கும்போது, அவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டால், குழந்தையின் உடல் நலம் தேறிவிடுவதை பலமுறை நீங்கள் பார்த்திருக்கலாம்.
    கேள்வி: திருஷ்டி கழிப்பது என்றால் என்ன? அதன் பின்னர் இருக்கும் விஞ்ஞானம் என்ன? லிங்கபைரவி கோவிலில் நடைபெறும் அந்த செயல்முறையில் வேப்பிலை ஏன் பயன்படுத்தப்படுகிறது?

    சத்குரு: ஒருவருடைய ஆராவை (Aura - உடலை சுற்றி இருக்கும் ஒளி உடல்) பார்த்தே அவருடைய உடல்நலம், மனநலம் மற்றும் கர்மா கட்டமைப்பு ஆகியவை, இறந்த காலத்தில் எப்படி இருந்தது, நிகழ்காலத்தில் எப்படி இருக்கிறது என்று கூறமுடியும். ஆகவே, ஒளிஉடல் என்பது ஒருவருடைய தன்மையின் சூட்சுமமான வெளிப்பாடு.

    அத்தகைய ஒளி உடலை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் நல்லது. ஒளி உடலை எப்படி சுத்தப்படுத்துவது? உங்கள் உடல் மற்றும் மனத்தின் வெளிப்பாடுதான் ஒளி உடல். எனவே, உங்கள் உடல் மற்றும் மனத்தை சுத்தப்படுத்தினால் ஒளி உடலும் சுத்தமாகிறது. உடலையும், மனதையும் சுத்தப்படுத்துவதற்கு யோகப் பயிற்சிகள் தவிர, உணவு முறைகள் என்று பல முறைகள் இருக்கின்றன.

    யோகப் பயிற்சிகள் தொடர்ந்து செய்து வரும்போது எப்போதோ, நேற்றோ அல்லது பத்து வருடங்களுக்கு முன்போ உங்களுக்குள் சேர்ந்த கறைகளும்கூட நீங்கி ஒளி உடல் மேலும் தூய்மையாகும்.

    சுத்தப்படுத்திக் கொள்ள வேறுமுறைகள் என்று பார்க்கும்போது நீங்கள் சாதாரணமாக தலைமேல் நீர்விட்டுக் குளிக்கும்போதே கூட, உங்கள் மேல் உடல் மட்டும் சுத்தமாவதில்லை. கூடவே உங்கள் ஒளி உடலும் சுத்தமாகிறது. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் கடுங்கோபத்தில் இருக்கும்போது, பலவிதமான எதிர்வினைகளும் உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, போய் தலைக்குக் குளித்துவிட்டு வந்தால், உங்களுக்குள் இருந்த அத்தனை குப்பைகளும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக உணர்வீர்கள்.

    நீர்க் குளியலில் மட்டும் இப்படி நடப்பதில்லை. இந்த உடல் நீர், மண், வாயு, நெருப்பு போன்ற பஞ்சபூதங்களால் ஆனது. எனவே அந்த பஞ்சபூதங்களான ஒவ்வொன்றுக்கும் நம்மை உட்படுத்திக் கொள்ளும்போது ஒவ்வொரு முறையும் நம் ஒளி உடல் சுத்தமாகிறது.



    தென்றல் காற்று வீசிக் கொண்டிருக்கும்போது, மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு காற்று வாங்கினால், கொஞ்ச நேரம் கழித்து ஓய்வாகவும், மிகவும் சுத்தமாகவும் லேசாகவும் உணர்வீர்கள். அதுதான் காற்றுக் குளியல். அதேபோல் மண் குளியலும் செய்துகொள்ள முடியும். ஈஷா புத்துணர்வு மையத்துக்குச் சென்றால் அங்கு உங்களுக்கு களிமண் குளியல் கொடுப்பார்கள். அதேபோல உங்களுக்கு நெருப்புக் குளியலும் கொடுக்கமுடியும்.

    லிங்கபைரவி தேவி இருக்கும் இடத்தில் கொடுக்கப்படுவது நெருப்புக் குளியல். தீக்குளியல் என்றால் தீயை உங்கள் உடல் முழுவதும் ஊற்ற முடியாது. எனவே, அங்கு நெருப்பின் மூலம் உங்கள் ஒளியுடலைத் தொடுகிறார்கள். உங்கள் ஒளியுடலில் குறிப்பிட்ட சில உருவ அமைப்புகள் இருக்கின்றன. அந்த அமைப்புகளின் தடத்திலேயே இந்தத் தீயைக் கொண்டு செல்கிறார்கள். அப்படிச் செய்ததும் திடீரென்று உங்களுக்கு ஒரு தெளிவும் புத்துணர்வும் கிடைப்பதை உணர்வீர்கள்.

    இந்தியக் கலாச்சாரத்தில், வீடுகளில் இருக்கும் பாட்டிமார்கள், உங்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள். அதைச் சரியாக செய்தால், அது மிக அற்புதமாக வேலை செய்யும். வெறுமனே செய்தாலும் அது ஓரளவுக்கு வேலை செய்யும். குழந்தைகள் நோயுற்று இருக்கும்போது, அவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டால், குழந்தையின் உடல் நலம் தேறிவிடுவதை பலமுறை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால், திருஷ்டி கழிப்பது என்பது ஒரு தீக்குளியல். அது உங்கள் அமைப்புகளில் பல நன்மைகளை நிகழ்த்துகிறது.

    லிங்கபைரவி தேவி இருக்கும் இடத்தில் செய்யப்படும் இந்தச் செயல்முறையின்போது வேப்பிலையும் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், வேப்பிலைக்கு சுத்தப்படுத்தும் தன்மை அதிகமாக இருக்கிறது. காலையில் வேப்பிலை அரைத்து சிறிய உருண்டை செய்து தொடர்ந்து சாப்பிட்டால், உங்கள் வயிறு சுத்தமாக இருக்கும். சில வகையான தொற்று நோய்கள் ஏற்படும்போது, வேப்பிலையில் படுக்கைசெய்து அதில் படுக்க வைப்பார்கள். ஏனென்றால், அது மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், நல்ல சக்தியூட்டியாகவும் இருக்கிறது. வேப்பிலைக்கு மிகச் சிறந்த மருத்துவ குணங்களும், மேன்மையான பிராண அதிர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையும் உண்டு.

    க்லேஷ நாஷன க்ரியா என்ற பெயரில் செய்யப்படும் இந்தச் செயல்முறையில் உங்கள் ஒளி உடலில் இருக்கும் அசுத்தங்கள் நீங்கி விடுவதால், உடல்நலம், மனதில் சமநிலை, நல்வாழ்வு போன்ற பலன்கள் ஏற்படுகின்றன.
    கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து செய்ய நினைப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்சனை தீர்ந்து நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகம்.
    சில கணவன் - மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன் - மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.
    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல், குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும். இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    மேல் மலையனூர் தலத்தில் உள்ள பெரியா அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு, மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்திக் கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    3 வகை பிரசாதம்

    மேல் மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும். அதன் பின்னணியில் வரலாறு உள்ளது. அதன் விவரம் வருமாறு: -
    தட்சனின் யாகத்தை அழிக்க புறப்பட்ட தாட்சாயினி, அகோரமாக பெரிய உருவம் எடுத்து தீயில் விழுந்து யாகத்தை அழித்தாள். அவளது உருவமற்ற அவதாரமே ‘அங்காளி’ என்று அழைக்கப்படுகிறது. அதுதான் மருவி ‘அங்காள பரமேஸ்வரி’ என்றானது.



    அங்காளம்மன் யாகக் குண்டத்தில் விழுந்து சாம்பலான இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் இங்கு பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

    தாட்சாயினி தன்னை அழித்துக் கொண்ட தகவல் அறிந்ததும் சிவன், அவளை தூக்கி ஆவேசமாக ஆடினார். அப்போது தாட்சாயினியின் கை துண்டாகி இத்தலத்தில் விழுந்தது. எனவே இத்தலம் ‘தண்ட காருண்யம்’ என்ற சக்தி பீடமாக மாறியது. இதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் கொடுக்கிறார்கள்.

    அன்னை பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூரில் அவதாரம் எடுத்தார். இதனால் அந்த புற்று மகத்துவம் மிகுந்ததாக மாறியது. அந்த புற்று மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதங்களை செய்வதால் மேல்மலையனூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் மற்ற பிரசாதங்களை விட புற்றுமண் பிரசாதத்தை மிகவும் விரும்பி வேண்டி கேட்டு, வாங்கிச் செல்வதை காணலாம்.
    7 லட்சம் பேர் திரள்வார்கள்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் எத்தனையோ விழாக்கள் நடந்தாலும், மாதம்தோறும் வரும் அமாவாசை தின வழிபாடுதான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அமாவாசை தினத்தன்று அங்காள பரமேஸ்வரியின் ஊஞ்சல் உற்சவத்தை நேரில் கண்டு வழிபட்டால் மன துயரங்கள் எல்லாம் மாயமாகி விடும் என்பது நம்பிக்கையாகும்.

    பக்தர்களிடையே இந்த நம்பிக்கை அதிகரித்து பரவி வருவதால் அமாவாசை நாட்களில் மேல் மலையனூருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அமாவாசைக்கு அமாவாசை அதிகரித்தப்படி உள்ளது. சாதாரண அமாவாசை நாட்களில் சராசரியாக 5 லட்சம் பேர் மேல்மலையனூர் வருவதாக கணித்துள்ளனர். ஆடி அமாவாசை தின வழிபாடு, கூடுதல் பலன்கள் தர வல்லது என்பதால் அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் 7 லட்சம் பக்தர்கள் மேல் மலையனூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    வியாழ திசை, வியாழ புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு தோஷத்தால் திருமணம், புத்திரப்பேறு தடைபடுபவர்கள் வியாழக்கிழமைகளில் வாமனமூர்த்தியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம்.
    குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் எந்த கிரகத்தைப் பார்த்தாலும், அந்த கிரகம் சுப பலன்களைத் தந்து விடும். நவக்கிரகங்களில் பூரண சுபகிரகமாக குரு திகழ்கிறார்.

    அந்த குருவின் அம்சமாகத் திகழ்பவர் வாமனர். வியாழ திசை, வியாழ புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு தோஷத்தால் திருமணம், புத்திரப்பேறு தடைபடுபவர்கள் வியாழக்கிழமைகளில் வாமனமூர்த்தியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம்.

    வாமனமூர்த்திக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. வாமனரை மனதில் எண்ணி பெருமாள் கோவில்களிலும், திருவிளக்கின் முன்னும் கூட தீபம் ஏற்றி வழிபடலாம். அதன் மூலம் அனைத்து சிறப்புகளும் வந்து சேரும்.

    எந்த ஜென்மத்தில் என்ன துன்பம் பிறருக்குச் செய்தோமோ தெரியாது என்பதால் இப்பிறவியில் விசேஷ தினங்களில் வன்னி இலைகளால் விநாயகரை வழிபட்டு துன்பங்கள் நீங்கி, இன்பகரமான வாழ்க்கையைப் பெறுவோம்.
    முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டை ஆண்டு வந்த சாம்பன் எனும் அரசனின் கொடுங்கோலான ஆட்சியால் மக்கள் துயரமடைந்தனர். ‘துர்புத்தி’ என்ற அமைச்சன் மன்னனின் அடாவடித்தனத்துக்குத் துணை நின்றான். அதனால், மறு பிறவியில் காகமும் ஆந்தையுமாக இருவரும் பிறந்தனர். அடுத்து பாம்பும் தேளுமாகவும், நான்காம் பிறவியில் நாயும் பூனையுமாகவும், ஐந்தாம் பிறவியில் குதிரையும் கழுதையாகவும், ஆறாம் பிறவியில் மீனும் முதலையுமாகவும், ஏழாம் பிறவியில் புலியும் மானுமாகவும் பிறந்தனர். அதற்கடுத்த பிறவியில் வேடனும் ராட்சதனுமாகப் பிறந்து ஒவ்வொரு பிறவியிலும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டே போகும் வாழ்க்கை அமைப்பு அமைந்தது.

    அப்படி, வேடனை ராட்சதன் துரத்திய நிலையில், பயத்தில் வேடன் வன்னி மரத்தில் ஏறி பதுங்கும்போது ஏற்பட்ட சலனத்தால் வன்னி மர இலைகள் உதிர்ந்தன. உதிர்ந்த வன்னி இலைகள் மரத்தின்கீழ் இருந்த விநாயகர்மீது விழுந்தன. அப்போது ராட்சதனும் அம்மரத்தில் ஏறி வேடனைப் பிடிக்க முயலுகையில், வன்னி இலைகள் மீண்டும் உதிர்ந்து விநாயகருக்கு அர்ச்சனையாக விழுந்தன. அந்த நேரம் அந்தி சாய்ந்த நேரம். சதுர்த்தி திதியுடன் உள்ள அந்தி நேரத்தில் வன்னி இலைகளால் இருவரும் அர்ச்சனை செய்த காரணத்தால் ஒருவரை ஒருவர் வீழ்த்தி கைலாயம் சென்றபோது, சொர்க்கம் அவர்களுக்குக் கிடைத்தது என்று புராணங்கள் கூறுகின்றன.

    ஏழு பிறவியில் அவர்கள் அடைந்த துன்பங்கள் சங்கடஹர சதுர்த்தி வேளையில், வன்னி இலைகளால் அர்ச்சித்ததால் இறைவன் முக்தி கொடுத்தார். எனவே, எந்த ஜென்மத்தில் என்ன துன்பம் பிறருக்குச் செய்தோமோ தெரியாது என்பதால் இப்பிறவியில் விசேஷ தினங்களில் வன்னி இலைகளால் விநாயகரை வழிபட்டு துன்பங்கள் நீங்கி, இன்பகரமான வாழ்க்கையைப் பெறுவோம்.

    விநாயகர் வழிபாட்டிற்கு எளிய தெய்வமாக ஒவ்வொரு தெருமுனைகளிலும் மக்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் நீக்கி வேண்டும் வரம் தந்து அருள்புரிகிறார்.
    விநாயகர் வழிபாட்டிற்கு எளிய தெய்வமாக ஒவ்வொரு தெருமுனைகளிலும் மக்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் நீக்கி வேண்டும் வரம் தந்து அருள்புரிகிறார். அதுபோல ஒவ்வொருவரும் தமக்கு உகந்தவாறு விநாயகருக்கு பல பெயர்களை வைத்து அழைத்து கொள்கின்றனர். எங்கு வைத்து என்னை வணங்கினாலும், எந்த பெயரில் அழைத்தாலும் நான் அனைவருக்கும் வினை தீர்க்கும் விநாயகனாய் இருப்பேன் என்றே அவர் எண்ணம்.

    நாம் வணங்கும் விநாயகர்கள் பெரும்பாலும் ஒற்றை தலையுடன் தான் பார்த்து இருப்போம். ஆனால் சில ஆலயங்களில் ஐந்து முகத்துடன் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். ஒரு முகத்துடன் உள்ளபோதே எல்லா வினைகளையும் களைபவர் ஐந்து முகத்துடன் இருக்கும்போது பல மடங்கு அருள்மழை பொழிவார்.

    ஹேரம்ப கணபதி எனும் பஞ்சமுக விநாயகர்:-

    ஹேரம்ப கணபதி என்பது விநாயகரின் 32 வடிவங்களில் 11 வது திருவுருவம் ஆகும். ஐந்து முகங்களை கொண்ட விநாயகர் திருவுருவம் நமது நாட்டை விட அண்டை நாடான நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. தாந்திரிய வழிபாட்டுக்கு ஏற்ற திருவுருவமாக ஹேரம்ப கணபதி விளங்குகிறார்.

    ஹேரம்ப என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அர்த்தம் “உதவியற்றவர்களை பாதுகாப்பவர்” என்று பொருள். முத்தல புராணம், பிரம்ம வை வர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் மற்றும் கணேச புராணத்தில் ஹேரம்ப கணபதி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. பசுமை கலந்த கருமை நிறத்துடன் ஐந்து முகத்துடன் காணப்படுவார். அபயம், விரதம், பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் என பத்து கரங்களில் தாங்கி சிம்ம வாகனத்தில் அமர்ந்து இருப்பதே இவர் திருவுருவம். ஆயினும் இவ்வுருவ அமைப்பு ஆலயங்கள் தோறும் சற்று மாறுபடுகின்றன.



    கஷ்டங்களை நீக்கும் ஹேரம்ப கணபதி:-

    பொருளாதார நிலையில் ஏற்படும் மந்தநிலை, கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் ஏற்படும் துயரம் போன்ற கஷ்டங்களை நீக்க பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.

    மேலும் ஏகாதசி திதியில் விவசாயம், வேளாண்மை, காவல்துறை, விஞ்ஞானம், பொறியியல், வரி துறைகளில் வேலைபுரிவோர் வணங்கிட சகல நன்மையும் பெறுவர். ஹேரம்ப விநாயகர் எனும் பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது. அவற்றில் சிலவற்றை காண்போம்.

    பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள்:-

    சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் பஞ்ச முகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ள பஞ்சமுக விநாயகரை குறிப்பிடலாம். ஒரே வரிசையில் ஐந்து தலையுடன் உள்ளார்.

    நாகை காயா ரோகனேஸ்வரர் திருக்கோவிலில் பஞ்சமுக விநாயகரை வழிபடலாம். மேலும் இவ்வாலயத்தில் நாகங்களை ஆபரணமாக அணிந்துள்ள நாகாபரண விநாயகரை வழிபாடு செய்யலாம். நான்கு திசையில் தலையும், அதற்கு மேல் ஒரு தலையுமாக காட்சி தருகிறார்.

    விருதுநகர் புளிச்சகுளம் பகுதியில் ஐந்து முகங்களுடன் பத்து கரங்களுடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். சேலம் கந்தாஸ்ரமத்தில் 16 அடி உயரத்தில் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் அருள்புரிகிறார். திருவானைகாவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சுவாமியின் பின்புறத்தின் ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர் அருள்புரிகிறார். கோவிந்தவாடி கயிலநாதர் கோவில் தூணில் 10 கரத்துடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது.
    வியாழக்கிழமை மஞ்சள் வண்ணமலரால் அலங்கரித்து குருபகவானுக்கு ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி சேரும் யோகம் உண்டு.
    வியாழக்கிழமை மஞ்சள் வண்ணமலரால் அலங்கரித்து குருபகவானுக்கு தீபம் ஏற்றினால் நெஞ்சம் மகிழும் வாழ்க்கை நமக்கு அமையும். தம்பதியர் ஜோடி தீபம் ஏற்றுவது நல்லது.

    நெய் தீபத்தை, குருவை பார்த்தபடி வைக்க வேண்டும். வயதுக்கு ஏற்ற விளக்கும் ஏற்றலாம். குரு பிரசாதத்தை நாமே உபயோகிப்பது நல்லது. ஜோடி தீபம் ஏற்றும்போது நெருக்கமாக ஏற்றினால் ஒற்றுமை பலப்படும்.

    கல்யாணமாகாதவர்களுக்கு கல்யாணம் முடிவாகும். ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி சேரும் யோகம் உண்டு.
    அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர்.
    விநாயகரின் பரம பக்தரான பரத்துவாச முனிவர் ஸ்தலயாத்திரை’ சென்றபோது நர்மதை நதியில் நீராடினார். அங்கே ஒரு கந்தர்வ மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார்.

    இவ்விருவருக்கும் செந்தழல் போல் சிவந்த நிறத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. செந்நிறம் கொண்டி ருந்ததால் ‘அங்காகரன்’ என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட் டது. அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் ‘பூமி குமாரன்’ என்ற பெயரும் உண்டு.

    அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர். அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்கா ரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் பெற்றார். அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

    இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.
    நாக தோஷத்தால் (சர்ப்ப தோஷம்) திருமண தடை, மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும். சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.

    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5--ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸ்தானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.

    இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.
    புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம்.
    எந்தவொரு மனிதனுக்கும் கண்திருஷ்டி ஏற்படுவது இயற்கை. சிலரது பார்வையால் ஏற்படும் கதிர்வீச்சுகள் பாதிப்புகளை உருவாக்குகின்றன. ஓகோ என்றுதொழில் செய்து பொருள் ஈட்டியவர்கள், நிலைதடுமாறும் சூழ்நிலையைச் சந்திப்பதும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிக்கு தொடர்ந்து செல்ல இயலாத நிலை, குடும்பங்களுக்குள் ஒற்றுமைக் குறைவு, எந்தச் செயலைச் செய்தாலும் தாமதம், தடை இதுபோன்ற நிலைமை ஏற்பட கண்ணேறு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம்.

    அதனால்தான் ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று சொல்வார்கள். சிலருடைய பார்வைக்கு அவ்வளவு வலிமை உண்டு. எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும். எனவே நாம் நல்ல எண்ணத்தோடு மற்றவர்களைப் பார்த்தால் நம் பார்வையால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பெருந்தன்மை இல்லாதவர்களின் பார்வையே, ‘திருஷ்டி’யாக மாறுகிறது. இதுபோன்ற வலிமையான பார்வைகளில் இருந்து தப்பிப்பது நம் கையில் இல்லை. அதற்குரிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்திருஷ்டியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள இயலும்.

    இதனை முற்காலத்தில் உணர்ந்த நம் பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு பொட்டு வைக்கும் பொழுது திருஷ்டி பொட்டு என்று ஒன்றைக் கன்னத்தில் வைப்பார்கள். அதே போல் நன்கு ஓடி ஆடி விளையாடும் குழந்தைக்கு இரவு திருஷ்டி சுற்றித்தீபம் ஏற்றி வைப்பார்கள்.

    ஒவ்வொருவருடைய இல்லங்களிலும் வாயிற்படியின் நிலையில் மாவிலை தோரணம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக கட்ட வேண்டும். மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். இதனால் எதிர்மறைச் சக்திகள் மாறி, நேர்மறை சக்திகள் வீட்டில் வியாபிக்கத் தொடங்குகின்றது. வழிகாட்டும் காலடி மண், மிளகாய், உப்பு போன்றவற்றை சுற்றி நெருப்பிலிட்டு அதிலிருந்து வரும் நெடியைப் பொறுத்து நமது கண் திருஷ்டியை அறிந்து கொள்ளலாம். எலுமிச்சை, படிகாரம், குங்குமம், கற்றாழை, பூசணிக்காய் போன்றவை எல்லாம் திருஷ்டியைப் போக்கும் பொருட்களாகும்.

    வீட்டில் எப்பொழுதும் உயரமான விளக்கு மாடம் அமைப்பது கண்திருஷ்டியைப் போக்கும். அதே போல இல்லத்தில் நுழைந்தவுடன் பெரிய நிலைக்கண்ணாடி இருப்பது போல் வைப்பதும் நல்லது. வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டாலும் எதிரிகளின் தொல்லை குறையும். சிலர் வீட்டில் படிகாரத்தைக் கட்டித் தொங்கவிடுவர். அந்த படிகார உப்பு கரைவது போல, நமது துன்பங்களும் கரையும் என்பது நம்பிக்கை.

    கிராமங்களில் உள்ள பெரியவர்கள் கல் உப்பை திருஷ்டி சுற்றி தண்ணீரில் கரைய வைப்பர். இல்லத்தில் கண்திருஷ்டி விநாயகர் படத்தை வாசல்படியில் நுழையும் இடத்தில், வடக்கு திசை பார்த்து வைக்க வேண்டும். திருஷ்டி பொம்மை படத்தையும் வைக்கலாம். வீட்டின் நுழைவு வாசலில் நந்தி வீதியைப் பார்க்கும் படி வைக்கலாம். அதனால் நமது தடைகள் அகலும். தனவரவு கூடும். வீடுகட்டும் பொழுது திருஷ்டி பொம்மை அல்லது பூசணிக்காய் பொம்மையைக் கட்டுவது வழக்கம். அதில் மற்றவர்களின் கண்பார்வை பதியும் போது திருஷ்டி மாறும் என்பது நம்பிக்கை.



    வீட்டில் தும்பை, துளசி, மணிபிளாண்ட், வெற்றிலை, அருகம்புல் போன்ற செடிகளை வளர்க்கலாம். இவை இல்லத்தை மட்டுமல்ல நமது உள்ளத்தையும் புனிதமாக்கும் மூலிகைகளாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். எவ்வளவு கண் திருஷ்டி இருந்தாலும் தீபத்திற்கு அதை மாற்றும் ஆற்றல் உண்டு. வீடு எப்பொழுதும் லட்சுமிகரமாக இருந்தாலே நம்மை எந்த எதிர்ப்பு சக்தியும் அணுகாது.

    பூஜை அறைக்குள் தேவையில்லாத நபர்களை அனுமதிக்கக் கூடாது. சிலர் படங்களை மாற்றி அமைக்க யோசனை சொல்வார்கள். யாருக்காகவும், எதற்காகவும் அதையெல்லாம் மாற்றியமைக்கக் கூடாது. நம் வீட்டு பாரம்பரியப்படி தான் படங்களை வைத்து வழிபட வேண்டும்.

    பெரிய இல்லங்கள் கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் எல்லாம், பாதிவேலை முடிந்த உடனேயே பால் காய்ச்சி விடுகின்றனர். பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடுவர். கிரகப் பிரவேசத்திற்கு வருபவர்களின் எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். எனவே நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். ஹோமங்கள் வைப்பதெல்லாம் நேர்மறை சக்தி, நம் வீட்டில் நிலைத் திருப்பதற்காகத்தான் செய்கின்றோம்.

    மணமக்களுக்கு மஞ்சு நீராடல் என்ற ஒரு சடங்கு இருக்கிறது. இது மணமகன், மணமகளுக்கு இருக்கும் திருஷ்டியைப்போக்குவதற்காக வைத்ததாகும். மஞ்சளுக்கு திருஷ்டி தோஷம் போக்கக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அழகான தம்பதியர் திருஷ்டி தோஷத்தால் உடல்நலம் பாதிக்காமல் இருக்க இந்த சம்பிரதாயம் நடத்துவர்.

    வீட்டில் எல்லா அறைகளையும் திறந்து வைக்கக்கூடாது. சரியான முறையைப் பின்பற்றி நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் எப்படிப்பட்டவர்கள் பார்வை நம்மீது பட்டாலும் அது நம்மை பாதிக்காது. முருகப்பெருமானைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வழிபடுவது, எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றும். மேலும் கணபதி ஹோமத்திலிருந்து கிடைக்கும் சாம்பலை வீட்டு பூஜையறையில் வைக்கலாம்.

    எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் ஏழைகளுக்கு உதவுதல், முதியோர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தல், வறுமையில் வாடுபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தாலே, அவை நமக்கு நல்ல வழிகாட்டும். அதனால் தான் ‘தர்மம் தலைகாக்கும்’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். திருஷ்டி தோஷம் போக்கும் வல்லமை, முதியோர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசிகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் உண்டு.
    தஞ்சாவூரில் அமைந்துள்ள கயிலாசநாதர் ஆலயத்தில் உள்ள புஷ்கரணி தீர்த்தக் குளத்தில் நீராடினால் தொழுநோய், சித்தபிரமை போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்குரிய கோவில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு பெரியநாயகி சமேத கயிலாசநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் வரும் திங்கட்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபடுவதோடு, சந்திர பகவானையும் வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்கள் திங்கட்கிழமைகளில் வரும் நாட்களிலும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    கடக ராசிக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது. இந்த ஆலயத்தில் உள்ள புஷ்கரணி தீர்த்தக் குளத்தில் நீராடினால் தொழுநோய், சித்தபிரமை போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    ×