என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப் போகலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
    இப்போது எல்லாம் சின்ன கோவில்களில் கூட, நவக்கிரகங்கள் கொண்ட சன்னிதி பிரதிஷ்டை செய்து விட்டனர். முன்பு கிராமங்களில் அம்மன் கோவில் என்றால் அம்மன் சிலை தான் இருக்கும். இப்போது அங்கும் பரிவார தெய்வங்கள், நவக்கிரக சன்னிதி என்று வைத்து விட்டனர்.

    கோவிலுக்கு செல்பவர்கள் அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், அந்த நவநாயகர்களின் அருள் கிடைக்கும் என்று அதீத நம்பிக்கை வைத்து உள்ளனர். சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப் போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். அது பற்றி பார்ப்போம்:-

    சூரிய தோஷம் :

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நவக்கிரகங்கள் அமைந்து இருக்கும் திருத்தலத்துக்கு சென்று, அங்குள்ள சூரிய பகவானை மனம் உருகி வழிபட வேண்டும். அப்போது சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் (ஆடை) அணிவித்து, சூரிய மந்திரம் சொல்லி அபிஷேகம் செய்யலாம். வெள்ளருக்கு சுள்ளியால் யாகத் தீ வளர்த்து கோதுமை, சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து தீபாராதனை செய்து வழிபட்டால் சூரிய தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

    சந்திர தோஷம் :

    திங்கட்கிழமை தோறும் சந்திரனை வழிபட வேண்டும். வெள்ளை வஸ்திரமும், முத்துமாலை அணிவித்து வழி படலாம். இல்லையெனில் வெள்ளை அரளி, வெள்ளை அல்லிப்பூ ஆகியவற்றை அணிவித்து சந்திர மந்திரங்களை கூறி வழிபட வேண்டும். முருங்கை மரக்குச்சிகளை கொண்டு யாகத்தீ வளர்க்க வேண்டும். அதில் பச்சரிசி, பால் சோறு, தயிர்சாதம் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சந்திரதோஷம் நீங்கும்.

    செவ்வாய் தோஷம் :

    ஒருவருக்கு ஜாதக ரீதியில் செவ்வாய்தோஷம் இருக் கிறது என்றால் அவரது திருமண காரியங்கள் தள்ளி போகும். அந்த செவ்வாய்தோஷம் நீங்க பரிகாரம் செய்தால் அந்த அங்காரக பகவானின் அருள் கிடைத்து நாம் மேற்கொண்ட நற்காரியம் கைகூட வழி உண்டு. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் தவறாமல் கோவில்களுக்கு சென்று செவ்வாய் கிரகமான அங்காரக பகவானை வழிபட வேண்டும். சிவப்பு வஸ்திரம், பவள மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் செவ்வரளி மாலை அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும். கருங்காலி குச்சிகளால் யாகத்தீ வளர்த்து துவரம் பருப்புப்பொடி சாதத்தை ஆகுதி செய்து கற்பூரம் காட்டி வழிபட்டால் கிரக தோஷ பரிகாரம் நீங்கும்.



    புதன் தோஷம் :

    புதன்கிழமைகளில் புதன்பகவானுக்கு பச்சை வஸ்திரம், மரகத மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் வெண்தாமரை மலர் மாலை அணிவித்து புதன் மந்திரங்களை சொல்லி வழிபடலாம். நாயுருவி குச்சிகளால் யாகத்தீ வளர்த்து, பாசிப்பருப்பு பொடி சாதத்தை ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி புதன் மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால் தோஷம் விலகும்.

    குரு தோஷம் :

    ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சிவன்கோவில் களுக்கு செல்லலாம். அங்கு மூலவர் சன்னிதிக்கு வலதுபுறம் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். இல்லையெனில் அருகே உள்ள நவக்கிரகங்கள் கொண்ட திருத்தலத்துக்கு சென்று அங்குள்ள குருபகவானை தரிசிக்கலாம்.

    அன்றைய தினம் மஞ்சள்நிற வஸ்திரம், புஷ்பராக மணிமாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் வெண்முல்லை மலர் மாலை அணிவித்து, குரு மந்திரங்களை சொல்லி வழிபடலாம். அரச மரக்குச்சிகளால் யாகம் வளர்த்து அதில் கடலைப்பொடி சாதம், எலுமிச்சை சாதத்தை ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டால் குருதோஷம் விலகும்.

    சுக்ர தோஷம் :

    வெள்ளிக்கிழமைகளில் சுக்ரனுக்கு வெள்ளை வஸ்திரம், வைர மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் வெண்தாமரை மலர் அலங்காரம் செய்து வழிபட வேண்டும். அத்தி மரக்குச்சிகளால் யாகம் வளர்த்து, மொச்சைப்பொடி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சுக்ரதோஷம் நீங்கும்.

    சனி தோஷம் :

    ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலக்கல் மாலை அணிவித்து வழி படலாம். இல்லையெனில் டிசம்பர் மாத பூமாலை அணிவித்து வழி படலாம். வன்னிமரக் குச்சிகளால் யாகத்தீ வளர்த்து எள்ளுப்பொடி சாதம், எள் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சனி தோஷம் நீங்கும்.

    ராகு தோஷம் :

    ஏதாவது ஒரு நாளில் ராகுபகவானுக்கு நீல வஸ்திரம், கோமேதக மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் இலுப்பைப்பூ மாலை அணிவித்து அருகம்புல்லால் யாகத்தீ வளர்த்து, அதில் உளுந்து, உளுந்துப்பொடி சாதம் ஆகியவற்றால் ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும்.

    கேது தோஷம் :

    இந்த தோஷத்தையும் எந்த ஒரு நாளிலும் பரிகாரம் செய்து விடுபட்டு கொள்ளலாம். கேது பகவானுக்கு பல வண்ண ஆடை, வைடூரிய மாலை அணிவித்து வழிபட வேண்டும். இது முடியாதவர்கள் செவ்வரளி பூ அலங்காரம் செய்து தரிசிக்க வேண்டும். தர்ப்பைப் புல்லால் யாகத்தீ வளர்த்து கொள்ளு, கொள்ளுப்பொடி சாதம் ஆகியவற்றால் ஆகுதி செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
    நவ பைரவ மூர்த்திகளை வழிபடுவதால் சூரியன் முதலான நவக்கோள்களின் கிரக தோஷங்கள், தடைகள் நீங்கும், ஸ்ரீ நவ பைரவருக்கு செய்யும் யாக பூஜை ஸ்ரீ நவக்கிரகங்களுக்கு சென்றடையும்.
    பைரவர் சிவபெருமானின் அம்சம் ஆவார். சிவபெருமானின் 64 மூர்த்திகளிலிருந்து 64 பைரவ மூர்த்திகள் உள்ளன. 64 பைரவர்களின் அஷ்டபைரவர்கள் அஷ்டதிக்கும் எழுந்தருளி அஷ்ட ஐஸ்வர்யங்களை தருகின்றார்கள்.

    இம் மூர்த்திகளுக்கு அப்பாற்பட்டு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மறைசக்தியாக செயல்பட்டு அருள் பாலிக்கின்றார். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து இறையருள் தொழில்களை தமது சிவாய நம என்ற பஞ்சாட்சர தாரக மந்திரத்தின் மூலம் நவக்கோள்களையும் காலச்சக்கரத்தின் நியதிபடி நடத்தி வருபவரே சிவபெருமானின் அம்சமான கால பைரவர் ஆவார்.

    இந்த பைரவ மூர்த்தியை நவக்கிரக நாதர்கள் பூஜித்து உரிய பலன்களைப் பெற்றதாக புராணங்கள் கூறுகிறது.

    திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் ஒரு தடவை போட்டி ஏற்பட்டதால், திருமால், சிவபெருமானின் திருவடியை தேடியும் பிரம்மா சிவபெருமானின் தலைமுடியைத் தேடியும் சென்றார்கள். ஆனால் இருவராலும் அடிமுடியைக் காண இயலவில்லை.

    அப்போது சிவபெருமான் அருட்பெருஞ்ஜோதியாக (அக்னியாக) கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் தினத்தன்று திருஅண்ணாமலையார் அடிமுடி காண ஆகாச பைரவராக காட்சியளித்தார். அவரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும். அதற்கு நவபைரவர் மகாயாகம் செய்து கொள்வது நல்லது.
    அதற்குரிய நவ பைரவர்கள் பற்றியும் அவர்கள் தரும் பலன்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த நவ பைரவர்கள் விபரம் வருமாறு:-

    1. ஸ்ரீ கபாலபைரவர் (ஞாயிறு): சூரிய தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சூரியன் நீச்சம், வக்ரம் அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தந்தையுடன் பிரச்சினை உள்ளவர்கள், அரசு சம்மந்தப்பட்ட பணியில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த கபால பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

    2. ஸ்ரீ உருபைரவர் (திங்கள்) சந்திர தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சந்திரன் நீச்சம், வக்ரம், அஸ்தமனதோஷமுள்ளவர்கள், தாயின் உடல்நிலைப் பாதிப்பு, மன அமைதியின்மை போன்றவையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்ரீ உரு பைரவரை வணங்க பிரச்சினைகள் தீரும்.

    3. ஸ்ரீ சண்ட பைரவர் (செவ்வாய்): செவ்வாய் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், செவ்வாய் நீச்சம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், சகோதரர்களிடம் பிரச்சினை உள்ளவர்கள், நிலம், வீடு சொத்து பிரச்சினை உள்ளவர்கள் இந்த சண்ட பைரவரை வழிப்பட்டால் பிரச்சினைகள் தீரும்.

    4. ஸ்ரீ அசிதாங்க பைரவர் (புதன்): புதன் தசை, புதன் புத்தி நடப்பில் உள்ளவர்கள், புதன் நீச்சம், வக்ரம் அஸ்தமன தோஷம் உள்ளவர்கள் தாய் மாமன் வகையில் பிரச்சினை உள்ளவர்கள், கல்வியில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த அசிதாங்க பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.



    5. ஸ்ரீ உன் மத்த பைரவர் (வியாழன்): குரு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு நீச்சம், வக்ரம் ஆஸ்தமன தோஷமுள்ளவர்கள், புத்திர வகையில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த உன் மத்த பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

    6. ஸ்ரீ குரோதன பைரவர் (சுக்கிரன்) : சுக்கிரன் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சுக்கிரன், நீச்சம், வக்ரம், அஸ்தமன தோஷம் உள்ளவர்கள், திருமண தடை உள்ளவர்கள், வண்டி வாகனங் களில் பிரச்சினை உள்ளவர்கள், கணவன், மனைவியிடையே கோளாறு உள்ளவர்கள் இந்த ஸ்ரீ குரோதன பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

    7. ஸ்ரீ சம்ஹார பைரவர் (சனி): சனி தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சனி, நீச்சம் வக்ரம் அஸ்தமன தோஷம் உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம், அடிக்கடி ஆயுளுக்கு உரிய கண்டங்களை அனுபவிப்பவர்கள், கை, கால், பாதிப்பு உள்ளவர்கள், உடலில் அங்கஹீனம் உள்ளவர்கள், வண்டி வாகனங்களில் விபத்தை சந்திப்பவர்கள், எதிரிகளால் தொல்லை அனுபவிப்பவர்கள் இந்த சம்ஹார பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

    8. ஸ்ரீ பீஷண பைரவர் (ராகு): ராகு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், ராகு நீச்சம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்கள், ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றில் பாதிப்பு உள்ளவர்கள், விஷத்தால் பாதித்தவர்கள் இந்த பீஷண பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

    9. ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் (கேது): கேது தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், 12-ல் கேது அமையப் பெற்றவர்கள், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், கேது நீச்சம் ஆனவர்கள், எதிரிகளால் தொல்லையை அனுபவிப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்கள், ஏவல், பில்லி, சூனியம் இவற்றால் பாதிப்பு அனுபவிப்பவர்கள், இந்த ஸ்ரீ சொர்ணாகர்ஷனை பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும். ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு ஸ்ரீ கேது பகவானின் ஆதிக்கத்தில் மறைபொருளாக உள்ளன.

    மேற்கண்ட ஸ்ரீ நவ பைரவ மூர்த்திகளை வழிபடுவதால் சூரியன் முதலான நவக்கோள்களின் கிரக தோஷங்கள், தடைகள் நீங்கும், ஸ்ரீ நவ பைரவருக்கு செய்யும் யாக பூஜை ஸ்ரீ நவக்கிரகங்களுக்கு சென்றடையும்.

    மேலும் அஷ்டலட்சுமிகள் தங்களிடத்தில் பொருள் வேண்டி பிரார்த்திக்கும் அன்பர்களுக்கு பொருள் தருவதற்காக அஷ்டலட்சுமிகள் அனைவரும் ஸ்ரீ பைரவ மூர்த்தியிடம் பொருள் வேண்டி பிரார்த்திக்கின்றார்கள். எனவே, நவக்கிரக தோஷங்கள் நீங்குவது மட்டுமல்லாமல் அஷ்டலட்சுமி கடாட்சமும் கிடைக்கும்.
    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். மேலும் அனுமனை வழிபாட்டால் தீரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.
    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். துளசி மாலை சூட்டி வேண்டிக்கொண்டால், ஆரோக்கியம் சீராகும். வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும்.

    குறிப்பாக குழந்தை பாக்கியம் கிட்டும். ராமஜெயம் எழுதிய மாலை அணிவித்தால் சகல யோகமும் வந்து சேரும். மேலும் ஆஞ்சநேயரை இரட்டைப் படை எண்ணிக்கையில் வலம் வந்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும். அடிப்பிரதட்சணம் செய்தால் திருமணத் தடை அகலும். ஆஞ்சநேயர் கவசம் பாடினால் கனவுகள் நனவாகும்.
    இயற்கை சக்திகளால் இடர்பாடுகள் ஏற்படாமல் காக்க ஏற்ற ஸ்தலங்களைக் கண்டு வழிபட்டால் நமது வாழ்வில் வளர்ச்சி கூடும். இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    நாம் வாழ்கின்ற யுகம், கலியுகம். எதிர்ப்புகளுக்கும், பிரச்சினைகளுக்கும் மத்தியில் பலருக்கும் வாழ்க்கை அமைகின்றது. ‘நிம்மதி’ என்பது இல்லாமலேயே வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடுகிறது. செயற்கையாக மனிதன் உருவாக்கிக் கொண்ட சில காரியங்களே அவனுக்குச் சிக்கல்களைக் கொடுக்கின்றன.

    இதற்கிடையில் அவ்வப்போது உண்டாகும் இயற்கை சீற்றங்களும், திடீர், திடீரென பூமியைத் தாக்குகின்றன. அதாவது பூமியில் வாழ்வோரை அமைதி இழக்க வைக்கின்றன.

    இயற்கை சீற்றத்தால் புயல் உருவாகி வீடுகளைச் சேதப்படுத்துவதும், நெருப்பால் நினைக்க இயலாத அளவு வளர்ச்சியடைந்த தொழிற்சாலைகள் அழிவதும், நிலநடுக்கத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதும் இப்பொழுதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. இதிலிருந்து அகல என்ன வழி என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

    இதற்காகவே பஞ்ச பூத ஸ்தலங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பது பஞ்சபூதங்களாகும். ‘கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது’ என்பது பழமொழி. கிணற்றில் இருந்து பூதம் வருவதாக நினைக்கக் கூடாது. பஞ்ச பூதத்தில் நிலம் என்ற பூதத்தை வெட்டி எடுக்கும் பொழுது நீர் என்ற பூதம் வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட இயற்கை சக்திகளால் இடர்பாடுகள் ஏற்படாமல் காக்க ஏற்ற ஸ்தலங்களைக் கண்டு வழிபட்டால் நமது வாழ்வில் வளர்ச்சி கூடும். கவனத்தை நாம் சிவன் மீது செலுத்தினால், புவனத்தில் வாழ போதிய பாதுகாப்பு நமக்குக் கிடைக்கும். பஞ்ச பூத ஸ்தலங்கள் எவை, எவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    பூமிக்குரியது - காஞ்சீபுரம், அன்னை பராசக்தி காஞ்சீபுரத்தில் மண்ணால் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டாள். சிவபூஜை புரிந்த காமாட்சிக்கு, பரமேஸ்வரன் மண் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி தந்து அருள் கொடுத்தார். ஆகவே நாமும் அங்கு சென்று வழிபட்டால் வீடு, மனை வாங்கும் அமைப்பு உண்டாகும்.

    நீருக்குரிய ஸ்தலம் திருவானைக்காவலில் உள்ளது. இங்கு நீராக பரமேஸ்வரன் எழுந்தருளிக் காட்சி தந்ததாக ஐதீகம். இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் வழிபட்டு முக்தி பெற்றதாகச் சொல்வார்கள். அதுபோல வாழ்க்கையில் சிக்கல்களில் சிக்கிக் கொண்டவர்கள் இந்தத் தலத்திற்கு வந்து, யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டால் அமைதியும், ஆனந்தமும் பெருகும்.



    நெருப்பிற்கு முக்கியத்துவம் தரும் தலம் திருவண்ணாமலை. ஆதியும், அந்தமும் இல்லாத ஜோதி லிங்கத்தின் அடிமுடி காண பிரம்மாவும், விஷ்ணுவும் விரைந்து சென்றனர். இருவரும் காண இயலாமல் போகவே பக்திச் சிரத்தையுடன் வழிபட்டனர். அப்போது பரமேஸ்வரன் ஜோதி லிங்கமாக வெளிப்பட்டதாக ஐதீகம். எடுத்த காரியத்தை முடிக்க இயலாமல் திண்டாடுபவர்கள் சென்று வழிபட வேண்டிய பஞ்சபூத ஸ்தலம் திருவண்ணாமலை ஆகும்.

    அடுத்ததாக பஞ்சபூத ஸ்தலத்தில் காற்றுக்கு முக்கியத்துவம் தரும் தலம் திருக்காளஹஸ்தி. இங்குதான் கண்ணப்பர் அருள் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. கண்ணுக்கு கண்கொடுத்த கண்ணப்ப நாயனார், தின்னப்பர் என்ற பெயரோடு திகழ்ந்தவர். இறைவனுக்கு முகத்தில் கண்ணை அப்பியதால் கண்ணப்பரானார். சிலந்தியும், பாம்பும், யானையும் வழிபட்ட இந்த தலத்திற்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டால் சர்ப்பக் கிரகங்களின் அருள் கிடைக்கும்.

    பஞ்ச பூதத்தில் ஆகாயத்திற்கு உரிய ஸ்தலம் சிதம்பரம். இங்கு கூத்தபிரான் அருள் கொடுக்கிறார். எனவே வானளாவிய புகழ் கிடைக்கவும், வரலாற்றில் இடம்பிடிக்கவும் இத்திருக்கோவிலுக்குச் சென்று நாம் வழிபட வேண்டியது அவசியமாகும்.

    இயற்கை சக்தியால் நமக்கு நன்மை கிடைக்கவும், இவ்வுலகம் சீரோடும் சிறப்போடும் இயங்கவும், இயற்கை சீற்றங்களிலிருந்து விடுபடவும், பிறர் போற்றும் வாழ்க்கை அமையவும் மேற்கண்ட திருத்தலங்களுக்கு வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வந்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம்.

    குறிப்பாக வருடம் ஒருமுறை, மாதம் ஒரு முறை அல்லது குறிப்பிட்ட விழாக் காலங்களில், அவரவர்கள் வசிக்கின்ற ஊர்களில் ஆலய மண்டபம் அல்லது ஒரு மண்டபம் ஏற்பாடு செய்து, அதில் பஞ்சபூத ஸ்தலங்களில் காட்சி தரும்தெய்வப் படங்களை வைத்து பூஜித்துக் கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தலாம். இந்தக் கூட்டுப் பிரார்த்தனையின் விளைவாக நன்மைகள் பலவும் நமக்கு வந்து சேரும். பலர் ஒன்று கூடி ஒருமுகமாக நேர்மறைச் சிந்தனையோடு செயல்பட்டால், இயற்கை சக்திகள் நமக்கு இயல்பாக நன்மை தரும். இதுபோன்ற கூட்டுப்பிரார்த்தனைகள் பலன் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. நாமும் பிரார்த்தனையில் கலந்து கொண்டு நலமுடன் வாழ்வோம்.
    பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவித நாக பந்தம் துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் அனைத்து விதமான நாக தோஷங்களும் நீங்கும்.
    நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.

    இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதற்கு பொருள் செலவு அதிகமாகும். ஏழை-எளியவர்களால் அந்த பரிகாரத்தை செய்ய இயலாது. அத்தகையவர்கள், செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.

    முதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவித நாக பந்தம் துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.

    முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும். அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.



    பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று. அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.

    நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

    ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.

    தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

    சனி பகவானின் பிள்ளையான குளிகன் என்ற உபகிரகமே ஒரு மனிதனின் ஆயுள் காலகட்டத்தை நிர்ணயம் செய்கிறார். இந்த குளிகன் தோஷத்தை முற்றிலுமாக விளக்கிவிட கூடியவர் சித்திரகுப்தன்.
    சித்திரா பவுர்ணமி, கணக்கு போடும் எமதர்மனின் கணக்காளரின் பிறந்தநாள் என்று மட்டுமே எல்லாரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு ஒரு சிறப்பான பொருளும் உண்டு.

    ஒரு மனிதனின் ஜணன ஜாதகத்தில், அதாவது ஆயுள் காரகன் என்று சொல்லக்கூடிய சனி பகவானின் பிள்ளைகளான மாந்தி, குளிகன் ஆகிய இருவரில் குளிகன் என்ற உபகிரகமே ஒரு மனிதனின் ஆயுள் காலகட்டத்தை நிர்ணயம் செய்கிறார்.

    இந்த குளிகனை வைத்து அஷ்டவர்க்கம் என்று கணக்குப் போட்டு ஜோதிட உலகம் ஆயுள் காலத்தை துள்ளியமாக சொல்லி விடுகிறது. இந்த குளிகன் தோஷத்தை முற்றிலுமாக விளக்கிவிட கூடியவர் சித்திரகுப்தன். சித்திரகுப்தனை சித்திரா பவுர்ணமி அன்று மட்டும் வழிபடுவதோடு விட்டுவிடாமல் சனிக்கிழமை, அமாவாசை, வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை, ராகு கால நேரங்களில் வணங்குவது சிறப்பு உடையது.



    இதனால் கடும் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் கூட சுகம் அடைய முடியும். இந்த சிறப்பு செய்தியை அனைவருமே அறிய வேண்டிய ஒன்றாகும். சித்திரகுப்தனின் வழிபாட்டிற்கான ஆலயங்கள் காஞ்சீபுரத்திலும், சிதம்பரத்திலும், தேனி மாவட்டம் கோடங்கி பட்டியிலும், திருவண்ணாமலையிலும் தனிச் சன்னதியும் உள்ளது.

    உலகிலுள்ள பாவ, புண்ணியங்களை குறைத்து வைக்கும் பணியை சிறப்பாக செய்து வரும் சித்திரகுப்தனுக்கு கரும பூமியான பாரத நாட்டில் 14 திருத்தலங்கள் இருப்பதாக புரணாங்கள் சொல்கின்றன. சித்திரகுப்தன் கதை மூலமாக ஒரு தனி மனிதனுக்கு புத்திமதியானது யாதெனில் தெரிந்து செய்யும் தவறுகளும், தெரியாமல் செய்யும் தவறுகளும் கூட இறைவனால் கணக்கெடுத்துக் கொள்ளப்படும் என்பதாகும்.

    எனவே, உலகியல் வாழ்வில் தான, தர்மங்கள் செய்வதும், பிறருக்கு தம்மால் இயன்ற உதவிகள் செய்வதும், மற்றவர்களுக்கு நல்லவற்றை சொல்வதும் ஆகிய புண்ணிய செயல்களை செய்தால் நடக்கும் இப்பிறப்பிலும், மறுப்பிறப்பிலும் இறை அருளால் சொர்க்க வாழ்வே கிடைக்கும் என்று உணர்த்தப்பட்டுள்ளது.

    ராகு-கேது தோஷம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு பல விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ராகு-கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    ஒருவருக்கு ராகு - கேது பரிகாரம் எப்பொழுதெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆராய்ந்தால்

    1) சூரிய திசையில், எந்த புத்தி நடந்து கொண்டிருந்தாலும் அதில் ராகு அல்லது கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

    2) சந்திரதிசையில் ராகு புத்தி, ராகு அந்தரம் கேது புத்தி, கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

    3) செவ்வாய் திசையில் ராகு புத்தி, கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

    4) ராகு திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும் பொழுதும் (இதில் சந்திர புத்தியும், கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நியதி)

    5) குரு திசையில், கேது புத்தி ராகு புத்தி நடக்கும் பொழுதும்.

    6) சனி திசையில் ராகு, கேது புத்தி-சூரிய புத்தியில் ராகு, கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

    7) புதன் திசையில் சந்திர-புத்தி, ராகு-கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

    8)கேது திசையில் சந்திர புத்தி சூரிய புத்தி, புதன் புத்தியில் ராகு-கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

    9) சுக்கிர திசையில் குருபத்தி-கேது ராகு அந்தரம் நடக்கும் பொழுதும் - மேற்படி பரிகாரங்கள் செய்வது மிகப்பெரிய நன்மையை அடையலாம்...



    ராகு காலம் :

    ராகு ஒவ்வொரு நாளிலும் வலிமைபெறும் காலம் 1.30 மணி ஆகும்.

    ஞாயிறு    4.30    முதல்    6.00    வரை

    திங்கள்     7.30    முதல்    9.00    வரை

    செவ்வாய்    3.00    முதல்    4.30    வரை

    புதன்    12.00    முதல்    1.30    வரை

    வியாழன்    1.30    முதல்    3.00    வரை

    வெள்ளி    10.30    முதல்    12.00    வரை

    சனி    9.00    முதல்    10.30    வரை

    இக்காலம் சுபகாரியம் செய்ய சிறப்பாகாது.

    ராகு ஆங்கில எண்.4-க்கு அதிபதியாவார் 4,13,22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராகு ஆதிக்கம் உடையவர்கள்.
    நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெறலாம்.
    நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெறலாம். மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.

    சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

    சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்த்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

    செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

    புதன் :
    மஞ்சள் கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

    வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
    நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும்.
    நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும்.

    அதே போல் பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்.

    அவருக்கு செய்பவைகளில் சில ,

    - வடைமாலை சாத்துதல்
    - செந்தூரக்காப்பு அணிவித்தல்
    - வெண்ணெய் காப்பு சாத்துதல்
    - ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
    இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.
    பிளாஞ்சேரி ஸ்தல இறைவன், இறைவியை வழிபட்டால் பித்ரு தோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும். பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி வந்து சேரும்.
    கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் பிளாஞ்சேரி என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள கயிலாசநாதர் ஆலயத்தில், கயிலாசநாதரும், காமாட்சி அம்மனும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். மேலும் இந்தக் கோவிலில் அஷ்ட பைரவர்களுடன், சரபசூலினி அம்மனும் வீற்றிருக்கிறார்.

    ஊழி காலத்தில் பிரளயம் ஏற்பட்டு, உலக உயிரினங்கள் அரியும் நிலை உருவானது. இதை உணர்ந்த பிரம்மதேவர், சப்த ரிஷிகளை அழைத்து, உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, சிவபெருமானை நோக்கி தவம் இருக்கும்படி கூறினார். அவர்களும் பிரம்ம தேவரின் ஆணையை ஏற்று தவம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் ஆத்ரேய மகரிஷி என்பவரின் மகனான பிராச மகரிஷி, பிரம்மதேவரிடம் ‘நானும் சப்த ரிஷிகளோடு இணைந்து தவத்தில் ஈடுபடட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு பிரம்மதேவர், ‘உன்னுடைய கர்மவினைகள் இன்னும் தீரவில்லை. ஆகையால் தவம் இருக்கும் முயற்சியை நீ செய்ய வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார்.

    இதையடுத்து பிராச மகரிஷி, இந்தத் தலம் வந்து கயிலாச நாதரையும், காமாட்சி அம்மனையும் வழிபட்டு தவம் மேற்கெண்டார். அவரது தவத்தால் மகிழ்ந்த கயிலாசநாதர் அசரீரியாக தோன்றி, ‘உனது கர்மவினைகள் அகல, நீ சரபசூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். தொடர்ந்து 1,008 பவுர்ணமி நாட்களில் ஜெயமங்களா மகா யாகத்தை நடத்தி, சரபசூலினியை வேண்டினால், அவளது அருளால் உன்னுடைய கர்மவினை அகலும். மேலும் உன்னுடைய தவப் பயனால், உலகம் அழிவில் இருந்து காப்பாற்றப்படும்’ என்றார். பிராச மகரிஷியும் அவ்வாறே செய்து பலன் பெற்றார்.

    பிராச மகரிஷி வழிபட்டதால், இந்தத் தலம் பிராசவனஞ்சேரி என்று அழைக்கப்பட்டது. இத்தல இறைவன், இறைவியை வழிபட்டால் பித்ரு தோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும். பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி வந்து சேரும்.

    இந்த ஆலயத்தில் மட்டுமே பிராச மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 18 திருக்கரங்களோடு சிம்ம வாகனத்தில் அருள்புரியும் சரபசூலினி அம்மன் இருக்கிறார். இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மாலை 5 மணிக்கு ஜெயமங்களா யாகம் நடைபெறுகிறது.
    ஆஞ்சநேயரை நினைத்தாலே போதும் சனீஸ்வரரின் உபாதைகள் உங்களை விட்டு அகன்று ஓடிவிடும். எல்லா இடர்களும் நீங்கிவிடும் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம்.
    ஸ்ரீ ராமர் சேது அணையைக் கட்டும்போது அனுமர் பெரிய பெரிய கற்களைத் தலைமேல் சுமந்து சென்று ஸ்ரீ ராம கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அப்போது சனீஸ்வரர் அனுமரைப் பிடிக்க அங்கு வந்தார். அனுமர் என்னைத் தொந்தரவு செய்யாதே, நான் இப்போது ஸ்ரீராம காரியத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறினார். சனீஸ்வரர் விடுவதாக இல்லை. உன்னை இப்போது பிடித்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னார்.

    அனுமர் உடனே ஒப்புக்கொண்டு சனீஸ்வரரைத் தன் தலையில் அமரச் செய்தார். பின்பு கற்களை வழக்கம் போல் தூக்கித் தலைமேல் வைத்துக் கொள்ள சனிபகவான் கற்களுக்கு அடியில் நசுங்க ஆரம்பித்தார். தன்னை விடுவிக்குமாறு அனுமரை வேண்டினார்.

    அனுமரும் மனமிரங்கி சனிபகவானை விடுவித்து, இனி ஸ்ரீ ராம பக்தர்களைத் தொந்தரவு செய்யாதே என்று கூறினார். சனி பகவானும் அனுமரை வணங்கி அவ்வாறே உறுதிமொழியும் அளித்தார்.

    ஆஞ்சநேயரை நினைத்தாலே போதும் சனீஸ்வரரின் உபாதைகள் உங்களை விட்டு அகன்று ஓடிவிடும். எல்லா இடர்களும் நீங்கிவிடும் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம்.

    ஆஞ்சநேயர் வழிபாடு செய்றிங்களா.. அவரை வணக்கிட்டு ஒரு நிமிடமாவது கோவிலில் அமர்ந்து அப்பறம்தான் வீட்டுக்கு கிளம்பனும்.
    தஞ்சாவூர் மேலவீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் வடமேற்கு மூலையில் உள்ள பிரதாப வீர அனுமன் கோவில் வாஸ்து தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது.
    தஞ்சாவூர் மேலவீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் வடமேற்கு மூலையில், பிரதாப வீர அனுமன் கோவில் இருக்கிறது. வாயு மூலையில் அமைந்த ஆலயம் என்பதால், இங்கு வீற்றிருக்கும் ஆஞ்ச நேயரை ‘மூலை அனுமன்’ என்று அழைக்கிறார்கள். தஞ்சாவூர் பெரியக் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் மூலை அனுமன் கோவில் இருக்கிறது.

    இந்த ஆலயம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வாயு மூலையில் அமைந்த ஆலயம் என்பதால், வாஸ்து தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது. அமாவாசை நாட்களில் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
    ×