என் மலர்
ஆன்மிகம்
- வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும்.
- 1-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 7-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டமும், 9-ம் நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. 11-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ஆகஸ்டு 4-ந்தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும் நாள். செல்வ நிலை உயரும். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவோடு எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
ரிஷபம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானாகத் தேடிவரும்.
மிதுனம்
கனவுகள் நனவாகும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளும் சூழ்நிலை உண்டு. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கடகம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். செல்வாக்கு உயரும். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
சிம்மம்
வெற்றிச்செய்திகள் வீடு தேடி வரும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப்பணிகள் மீதியும் தொடரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.
துலாம்
முன்னேற்றம் கூடும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு. வங்கிச் சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும். திடீர் செலவுகளை சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை உருவாகலாம்.
தனுசு
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
மகரம்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
கும்பம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.
மீனம்
நினைத்தது நிறைவேறும் நாள். முக்கிய புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக் கொடுப்பர். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழிலில் வளர்ச்சி உண்டு.
- இன்று மாத சிவராத்திரி.
- கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-7 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி பின்னிரவு 3.05 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : திருவாதிரை இரவு 6.51 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மாத சிவராத்திரி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்
இன்று மாத சிவராத்திரி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் பவனி. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி அம்மன் வேணுகான கிருஷ்ணமூர்த்தி அலங்காரம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்தவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் உலா. கூற்றுவ நாயனார் குரு பூஜை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அனுகூலம்
ரிஷபம்-நலம்
மிதுனம்-முயற்சி
கடகம்-துணிவு
சிம்மம்-நற்சொல்
கன்னி-மேன்மை
துலாம்- பக்தி
விருச்சிகம்-உற்சாகம்
தனுசு- ஆசை
மகரம்-ஆதரவு
கும்பம்-லாபம்
மீனம்-உயர்வு
- மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
- சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவியில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (22-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை 5.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப் பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பக்தர்கள் ஆர்வமுடன் மலையேறினர்.
இன்று மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை சிவராத்திரி, நாளை மறுநாள் 24-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 25-ந் தேதி மதியம் 1.15 வரை அமாவாசை திதி இருப்பதால் 24-ந் தேதி ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
இந்நிலையில், சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதுரை சரக டி.ஐ.ஜி. அபினோ குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் செல்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையையும், வனத்துறை கேட்டில் இருந்து பக்தர்கள் செல்லக்கூடிய பாதையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி. எஸ்.பி. ராஜா, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் மாலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா, ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
- தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பாடல் முழவும் விழவும் ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெருங்கொடி விண்தடவு
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேஇடமாக ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
எல்லாக் காலங்களிலும் முழவின் ஒலியுடன் கூடிய இசைப்பாடலும், திருவிழாக்களும் நடைபெற, வேதங்கள் கற்ற அந்தணர்கள் போற்ற, வானத்தை எட்டும் அளவு உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே!
வளைந்த நெருக்கமான இலைகளை உடைய பெருமைமிக்க மலர்ச் சோலை சூழ்ந்த செங்காட்டங்குடியில் இடுகாட்டினை இடமாக கொண்டு நடனம் ஆடுவதற்கு கணபதி ஈச்சரத்தினை விரும்பியதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்தில் பவனி.
- திருச்செந்தூர் சுப்பிரமணியர் தீர்த்தாபிஷேகம்.
இந்த வார விசேஷங்கள்
22-ந் தேதி (செவ்வாய்)
* பிரதோஷம்.
* நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி.
* நயினார்கோவில் அன்னை சவுந்திர நாயகி அம்மானை ஆடி வரும் காட்சி.
*சமநோக்கு நாள்.
23-ந் தேதி (புதன்)
* திருவாடானை சிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் பவனி.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி வேணுகான கிருஷ்ண மூர்த்தி அலங்காரம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
24-ந் தேதி (வியாழன்)
* ஆடி அமாவாசை.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஐந்து பெரிய திருவடி சேவை.
* காரையார் சொரி முத்தையனார் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் தீர்த்தாபிஷேகம்.
* மதுரை கள்ளழகர் கருட சேவை.
* சமநோக்கு நாள்.
25-ந் தேதி (வெள்ளி)
* திருவாடனை சிநேகவல்லியம்மன் வெண்ணெய் தாழி சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
26-ந் தேதி (சனி)
* நயினார்கோவில் சவுந்திரநாயகி சிவலிங்க பூஜை காட்சி.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் இரவு மகிசாசூரசம்காரம்.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
27-ந் தேதி (ஞாயிறு)
* மதுரை மீனாட்சி முளைக்கொட்டு விழா தொடக்கம்
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்க மன்னார் குதிரை வாகனத்திலும் புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
28-ந் தேதி (திங்கள்)
* ஆடிப்பூரம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் முளைக்கொட்டு ஊஞ்சல்.
* மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
- அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது.
- அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.
அமாவாசை நல்ல நாளா?, கெட்ட நாளா? என்பதிலே பலருக்கும் மாற்றுக் கருத்து உண்டு. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இந்த நாளில், சுப காரியங்கள் செய்வதோ, ஒரு காரியத்தை தொடங்குவதோ கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம். இறைவனால் உண்டான இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு தினமும் நல்ல தினம்தான். அந்த வகையில் அமாவாசை தினமும் நல்ல நாளே.
சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம், அமாவாசை. இந்த நாளில் இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கணிவோடு பார்ப்பார்கள். அந்த காரியம் வெற்றிபெற ஆசிர்வதிப்பார்கள். எனவே இந்த நாளும் நல்ல நாள்தான்.
எனவே பித்ருக்கள் என்று அழைக்கப்படும் நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு மரியாதை செய்யும் அமாவாசை தினத்தில், புதிய காரியங்களைத் தொடங்கினால், அது நிச்சயம் நல்லவிதமாகவே நடைபெறும். அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது. அதில் ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை வரப்போகிறது.
அந்த நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும். ஆடி அமாவாசை என்று இல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை போன்ற ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்க வேண்டும்.
அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் வீட்டில் வைத்து செய்யலாம். வீட்டில் செய்ய நினைப்பவர்கள், சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து குளித்து உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அன்று அரை நாள் விரதம் இருந்து புரோகிதரை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். அதுவும் முடியாதவர்கள் எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபடலாம். அதன் பிறகு சூரிய பகவானை பார்த்து வணங்க வேண்டும். அன்னதானம் செய்ய முடியாதவர்கள், ஒரு பசு மாட்டிற்கு 9 வாழைப்பழத்தை வழங்கலாம்.
முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியை பெறுவதுடன், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்தும், பலவிதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் உள்ள கடல் அல்லது நதியில் நீராடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அது முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைத்து விடும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிரிகள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் ரீதியான பயணங்கள் உண்டு. மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.
ரிஷபம்
யோகமான நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. மங்கலச் செய்தியொன்று வந்து சேரலாம். தொழில் வளர்ச்சிக்கு தொகை கிடைக்கும்.
மிதுனம்
முன்னேற்றம் கூட முக்கிய முடிவெடுக்கும் நாள். உத்தியோகத்தில் பணிச்சுமை காரணமாக பழைய உத்தியோகத்தில் சேரலாமா என்ற சிந்தனை உருவாகும். வரன்கள் வாயில் தேடி வரும்.
கடகம்
போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
சிம்மம்
குடும்பச்சுமை கூடும் நாள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடும். மக்கள் செல்வாக்கு பெற்றவர் ஒருவர் உங்கள் காரிய வெற்றிக்கு கைகொடுத்து உதவுவார்.
கன்னி
பிரச்சனைகள் தீரும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமை தரும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
துலாம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். பணிச்சுமை காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாம் என்று சிந்திப்பீர்கள்.
விருச்சிகம்
பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உணர்ச்சி வசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகிப் போகலாம்.
தனுசு
பாசமிக்க உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம். தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும்.
மகரம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளத் திட்டமிடுவீர்கள். மாலை நேரம் மகிழ்ச்சியான தகவல் உண்டு.
கும்பம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரியும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்
எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும் நாள். சுபச் செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும். தொழில் நலன் கருதி முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
- நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-6 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி காலை 6.45 மணி வரை பிறகு திரயோதசி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : மிருகசீரிஷம் இரவு 7.52 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் முருகனுக்கு அபிஷேகம்
இன்று பிரதோஷம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் பெரிய கிளி வாகனத்திலும், மாலை வேணுகோபால அலங்கா ரத்திலும் காட்சி. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகி அம்மன் ஆடி வரும் திருக்கோலமாய்க் காட்சி. திரு மயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் ஸ்ரீ சுவாமி அம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் பவனி. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-ஆக்கம்
கடகம்-தேர்ச்சி
சிம்மம்-நன்மை
கன்னி-நலம்
துலாம்- பொறுமை
விருச்சிகம்-போட்டி
தனுசு- நற்செய்தி
மகரம்-இன்சொல்
கும்பம்-லாபம்
மீனம்-பாராட்டு
- இன்று சர்வ ஏகாதசி.
- நயினார்கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகியம்மன் ராஜாங்க அலங்கார காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-5 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி காலை 8.56 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : ரோகிணி இரவு 9.06 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்று சர்வ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகியம்மன் ராஜாங்க அலங்கார காட்சி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி,
திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. நத்தம் வர குணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-நன்மை
கடகம்-உற்சாகம்
சிம்மம்-நிறைவு
கன்னி-முயற்சி
துலாம்- தனம்
விருச்சிகம்-உயர்வு
தனுசு- புகழ்
மகரம்-சுகம்
கும்பம்-அமைதி
மீனம்-பொறுமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு உண்டு.
ரிஷபம்
தொடரும் வெற்றிகளால் துணிவு ஏற்படும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மிதுனம்
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடல் நலம் சீராகும். அரசு வழியில் கேட்ட உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனை பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கும்.
கடகம்
யோகமான நாள். உடல் நலம் சீராகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் துணையாக விளங்குவர்.
சிம்மம்
போட்டிகளைச் சமாளித்து வெற்றி காணும் நாள். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். உற்றார், உறவினர்களின் பகை மாறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
கன்னி
சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். எடுத்த காரியங்களை முடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.
துலாம்
காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். கவலைக்குரிய தகவல் வந்து சேரலாம். பேச்சில் நிதானம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
விருச்சிகம்
யோகமான நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். உங்களை பொல்லாதவர்கள் விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும்.
மகரம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்தைப் பெறுவீர்கள்.
கும்பம்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். தடம் மாறிச் சென்ற நண்பர்கள் திரும்பி வருவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
மீனம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும்.
- விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.
- ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.
மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இ
ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி. வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன.
அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.
தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள்.
ஏகாதசி விரதம் இருக்கும் முறை :
* ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து, விரதத்தை துவக்க வேண்டும்.
* விளக்கேற்றி, பழங்கள், பூக்கள், பஞ்சாமிர்தத்தை கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும். அதோடு தேங்காய், வெற்றிலை பாக்கு, நெல்லிக்காய், கிராம்பு போன்றவற்றையும் படைக்க வேண்டும்.
* ஏகாதசி விரதம் இருப்பவர் அன்றைய தினத்தில் அரிசி உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.
* ஏகாதசி திதி முடியும் வரை விரதத்தை தொடர வேண்டும். ஏகாதசி திதி முடிவதற்கு முன் விரதத்தை முடிக்கக் கூடாது.
* ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தரையில், புதிய விரிப்புக்கள் விரித்து தான் படுக்க வேண்டும்.
* மாமிசம், மதுபானங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஏகாதசி அன்று எந்த மரத்தில் இருந்து பூக்களையோ, இலைகளையோ பறிக்கக் கூடாது. இது அமங்களமான செயலாக கருதப்படுகிறது.
* ஏகாதசி நாளன்று இரவில் உறங்கக் கூடாது. அதிகாலையில் எழுந்தது முதல் திருமாலின் நாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
* முழு நாளும் உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உப்பை தவிர்க்க வேண்டும்.
* மறுநாள் துவாதசி திதியில் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.






