என் மலர்
ஆன்மிகம்
- சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்
- அனைத்து விதமான சுகங்களும் கிடைக்கும்
சுக்ரவார விரதம்:
நாள் :
சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்
தெய்வம் :
பார்வதி தேவி
விரதமுறை :
பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
பலன் :
மாங்கல்ய பாக்கியம்
நவராத்திரி விரதம்
நாள் :
புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
தெய்வம் :
பார்வதிதேவி
விரதமுறை :
முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம்.
பலன் :
அனைத்து விதமான சுகங்களும் கிடைக்கும்
- பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
- விளையாட்டில் திறமை அதிகரிக்கும்
சூல விரதம்
நாள் :
தை அமாவாசை
தெய்வம் :
சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
விரதமுறை :
இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
பலன் :
விளையாட்டில் திறமை அதிகரிக்கும்
இடப விரதம்
நாள் :
வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
தெய்வம் :
ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
விரதமுறை :
பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
பலன் :
குடும்பத்திற்கு பாதுகாப்பு
- குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
- நல்ல வாழ்க்கை துணை அமையும்.
உமா மகேஸ்வர விரதம்:
நாள் :
கார்த்திகை மாத பவுர்ணமி
தெய்வம் :
பார்வதி, பரமசிவன்
விரதமுறை :
காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் :
குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
கல்யாணசுந்தர விரதம்:
நாள் :
பங்குனி உத்திரம்
தெய்வம் :
கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
விரதமுறை :
இரவில் சாப்பிடலாம்
பலன் :
நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்
- துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
- குழந்தைப்பேறு கிடைக்கும்.
கந்தசஷ்டி விரதம்:
நாள் :
ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்
தெய்வம் :
சுப்பிரமணியர்
விரதமுறை :
முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
பலன் :
குழந்தைப்பேறு
முருகன் சுக்ரவார விரதம்:
நாள் :
ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் :
சுப்ரமணியர்
விரதமுறை :
பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன் :
துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
கிருத்திகை விரதம்:
நாள் :
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் :
சுப்பிரமணியர்
விரதமுறை :
பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
பலன் : 16 செல்வமும் கிடைத்தல்
- தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
- பலன்-பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்
சித்ரா பவுர்ணமி விரதம்:
நாள் :
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம் :
சித்திரகுப்தர்
விரதமுறை :
இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.
மங்களவார விரதம்:
நாள் :
தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
தெய்வம் :
பைரவர், வீரபத்திரர்
விரதமுறை :
பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
பலன் :
பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்
- பகலில் சாப்பிடக்கூடாது.
- மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பிரதோஷம்:
நாள் :
தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் :
சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை :
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்.
பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.
- திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
- இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
சோமவார விரதம்:
நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
தை அமாவாசை விரதம்:
நாள் :
தை அமாவாசை
தெய்வம் :
சிவபெருமான்
விரதமுறை :
காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
பலன் :
முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
சிறப்பு தகவல் :
பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
- சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.
- பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
விநாயக சுக்ரவார விரதம்:
நாள் :
வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்
தெய்வம் :
விநாயகர்
விரதமுறை :
பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
பலன் :
கல்வி அபிவிருத்தி
விநாயகர் சஷ்டி விரதம்:
நாள் :
கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்
தெய்வம் :
விநாயகர்
விரதமுறை :
ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.
முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.
பலன் :
சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.
- கருவறையில் கருடன் அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.
- கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வெள்ளமசேரி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையான கருடன் ஆலயம் உள்ளது. இதை 'கருடன் காவு' என்கின்றனர்.
பாம்புக் கடிக்கு இந்த ஆலயத்தில் ஒரு மண்டலத்திற்கு வழிபாடு செய்தால் பூரணமான குணம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
இங்கு கருவறையில் கருடன் தன் இரு கரங்களில் தன்வந்திரி பகவான் போன்றே அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.
இதே போன்று கருட பகவானுக்குரிய இன்னொரு அரிய ஆலயம், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கோலாதேவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார். ராமாயண காலத்தோடு தொடர்பு கொண்டதாகக் கருதப்படும் கோலாதேவி கருட சுவாமி ஆலயத்தை, ராமானுஜர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர்.
சீதா தேவியை ஸ்ரீ ராம-லட்சுமணர் தேடிச் சென்றபோது ராவணனால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்த ஜடாயுவைக் கண்டனர். இறந்த ஜடாயுவுக்கு ராமர் நீத்தார் கடன் நிறைவேற்றிய இடமே இந்த கோலா தேவி என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
- 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலம்.
- திருமாலிருஞ்சோலை. மதுரைக்கு அருகே உள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருமாலிருஞ்சோலை. மதுரைக்கு அருகே உள்ளது.
தென்திருப்பதி என்று போற்றப்படும் இக்கோயில் அழகர்கோவில் என்று வழங்கப்படுகிறது. இங்கு வற்றாத புனித தீர்த்தம் நூபுரகங்கை (சிலம்பாறு) எனப்படும். இங்கு ஆண்டு முழுவதும், மாதந்தோறும் ஒவ்வொரு விதமான திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதில் முக்கிய அம்சமாக கருதப்படும் திருவிழாக்களில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் முப்பழ உற்சவ விழா.
முப்பழ உற்சவ விழாவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, அலங்காரம் செய்யப்படும். தொடர்ந்து மா, பலா, வாழை ஆகிய முப்பழங்களும் ஒருசேர ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து நெய்வேத்தியம் செய்யப்படும்.
இதேபோல இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் முப்பழ உற்சவ விழா நடக்கும்.
- ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
- திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும்.
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும்.
ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து பட்டர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வருவர் காவிரி ஆற்றில் 1 தங்கக் குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்படும் அங்கிருந்து காலை
7 மணிக்கு தங்கக் குடத்தில் உள்ள புனித நீர் யானை மீது வைத்தும் 28 வெள்ளிக் குடங்களைத் தோளில் சுமந்தும் அம்மா மண்டபம் சாலை, ராஜகோபுரம் வழியாக கோயிலுக்கு எடுத்து வரப்படும்.
ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாள் காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சமர்ப்பிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்படும். பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
- சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானது.
- நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர்.
திருநெல்வேலியில் மிகவும் பிரசித்திபெற்ற பழைமையான சைவத் திருத்தலமாக நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் விளங்குகிறது. இந்த திருத்தலம் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானது.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவத் தொண்டாற்றிய திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சைவத் தலம். இந்தக் கோயிலில் உள்ள மூலவர், `நெல்லையப்பர்', `சுவாமி வேணு நாதர்', `நெல்வேலி நாதர்' என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இந்த கோயிலில் ஆனித் திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கியமான வைபவங்களாக நடை பெற்று வருகின்றன. ஆனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடப்பது திருத்தேரோட்டம். விழாவின் 9-ம் நாளில் நடக்கும் இந்த தேரோட்டம் மிகச் சிறப்பானது.
இக்கோயில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன. இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். சுமார் 70 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்த தேர் காணப்படும். மிகச் சிறப்பான தேர் விழா இன்று.






