என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முப்பழ உற்சவம்"

    • 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலம்.
    • திருமாலிருஞ்சோலை. மதுரைக்கு அருகே உள்ளது.

    108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருமாலிருஞ்சோலை. மதுரைக்கு அருகே உள்ளது.

    தென்திருப்பதி என்று போற்றப்படும் இக்கோயில் அழகர்கோவில் என்று வழங்கப்படுகிறது. இங்கு வற்றாத புனித தீர்த்தம் நூபுரகங்கை (சிலம்பாறு) எனப்படும். இங்கு ஆண்டு முழுவதும், மாதந்தோறும் ஒவ்வொரு விதமான திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதில் முக்கிய அம்சமாக கருதப்படும் திருவிழாக்களில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் முப்பழ உற்சவ விழா.

    முப்பழ உற்சவ விழாவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, அலங்காரம் செய்யப்படும். தொடர்ந்து மா, பலா, வாழை ஆகிய முப்பழங்களும் ஒருசேர ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து நெய்வேத்தியம் செய்யப்படும்.

    இதேபோல இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் முப்பழ உற்சவ விழா நடக்கும்.

    ×