என் மலர்
தாய்லாந்து
- தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
- இந்திய வீரர் பிரியான்ஷு ரஜாவத் முதல் சுற்றில் இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்தார்.
பாங்காக்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், அயர்லாந்தின் நாட் நூயென் உடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 19-21, 21-9, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது.
மற்றொரு போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷு ரஜாவத், இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்தார்.
- வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் அளவுக்கேற்ற கம்பிகள் வழியாக செல்ல முடிகிறது.
- வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.
பிரபல உணவகங்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி அறிவிப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் தாய்லாந்தில் உள்ள ஒரு உணவகம் ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்குவது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு சியாங் மாயி பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், வாடிக்கையாளர்களின் உடல் அளவை அடிப்படையாக கொண்டு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதாவது ஓட்டலில் ஒரு பகுதியில் 5 வகையான உலோக கம்பிகள் உள்ளன. ஒவ்வொரு கம்பிகளுக்கு இடையேயும் குறிப்பிட்ட இடைவெளிகள் உள்ளன.
வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் அளவுக்கேற்ற கம்பிகள் வழியாக செல்ல முடிகிறது. அதில், ஒவ்வொரு உடல் அளவுக்கு ஏற்ற வகையில் 5 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடிகள் உள்ளன. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.
ஒரு பயனர், இது மிகவும் அபத்தமானது, அவமரியாதைக்குரியது என பதிவிட்டார். மற்றொரு பயனர், ஆசியாவின் உணவு முறை மற்றும் உடல் கலாச்சாரம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என பதிவிட்டார்.
- தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்த நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார்.
- பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று நடக்கிறது.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து, பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தாய்லாந்து புறப்பட்டார்.
அங்கு அவருக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பிறகு தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்த நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார். அங்கு அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று மாலையில் கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட தாய்லாந்து, வங்காள விரிகுடா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இருதரப்பு சந்திப்புக்கு பிறகு தாய்லாந்து பிரதமர் ஷின வத்ரா - பிரதமர் மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
- கூட்டணி கட்சி ஆதரவு இருப்பதால் இந்த தீர்மானம் தோல்வியை சந்திக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாங்காக்:
தாய்லாந்தில் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா (வயது 38) தலைமையிலான பியூ தாய் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இதற்கிடையே நாட்டில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
இதற்கு பேடோங்டார்னின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தக்சின் ஷினவத்ரா அரசு நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்துவதே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் நத்தபோங் ருயெங்பன்யாட் குற்றம்சாட்டி வந்தார். இந்தநிலையில் பேடோங்டார்ன் மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.
இதன்மீதான வாக்கெடுப்பு இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அதேசமயம் கூட்டணி கட்சி ஆதரவு இருப்பதால் இந்த தீர்மானம் தோல்வியை சந்திக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- அப்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
பாங்காக்:
தாய்லாந்து தலைநகர் பாங்காக் நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பான சாலை ஆகும். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அங்கு புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மேம்பாலம் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் என்ஜினீயர் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 24 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை
க்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தால் நெடுஞ்சாலை மூடப்பட்டு சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
- படம் பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டார்.
- பதிவு 9 ஆயிரத்து 100 பேரால் பகிரப்பட்டு வைரலானது.
தாய்லாந்து நாட்டில் ஒருவர் தள்ளுவண்டி கடைக்காரரிடம் குச்சி ஐஸ் ஒன்றை வாங்கி, கவரை பிரித்துள்ளார். அப்போது அதில் வித்தியாசமாக ஏதோ ஒட்டியிருப்பதைக் கவனித்து உற்றுப் பார்த்தவர் அதிர்ந்து போனார். ஒரு சிறிய பாம்பு ஐஸ் கட்டியில் உறைந்து போய் இருந்தது.
இதைப் பார்த்தவர் பதறிப் போனார். நல்ல வேளை வாயில் வைத்து சுவைக்கவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் அதை படம் பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவு 9 ஆயிரத்து 100 பேரால் பகிரப்பட்டு வைரலானது.
பல ஆயிரம் பேர் கருத்து பகுதியில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். கலவையான கருத்துகளை பதிவிட்டனர். ஐஸ்கிரீம் பிரியர்கள்தான் ஐசுக்குள் பாம்பும் இருக்குமா? என்று உறைந்து போயிருக்கிறார்கள்.
- 58 மணிநேரம் 35 நிமிடங்கள், 58 வினாடிகள் முத்தம் கொடுத்து இந்த சாதனையை படைத்திருந்தனர்.
- நாங்கள் பிரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும், மரியாதையும் ஒரு போதும் குறையாது என பதிவிட்டுள்ளனர்.
தாய்லாந்தை சேர்ந்த எக்கச்சாய்- டிரமாராட் தம்பதியினர் கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மிக நீண்ட முத்தத்திற்கான கின்னஸ் சாதனையை படைத்திருந்தனர்.
இந்த தம்பதி மொத்தம் 58 மணிநேரம் 35 நிமிடங்கள், 58 வினாடிகள் முத்தம் கொடுத்து இந்த சாதனையை படைத்திருந்தனர். இந்த சாதனை மூலம் பிரபலமான இந்த தம்பதியினர் தற்போது விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காதலுக்கும், அர்ப்பணிப்புக்கும் நாங்கள் எடுத்துக்காட்டாக விளங்கினாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிரிகிறோம். நாங்கள் பிரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும், மரியாதையும் ஒரு போதும் குறையாது என பதிவிட்டுள்ளனர்.
- பிறக்கும்போதே மிகவும் உயராக இருந்துள்ளது.
- எருமைக்கு உரிமையாளர் கிங் காங் எனப் பெயரிட்டுள்ளார்.
தாய்லாந்தில் 3 வயதில் 6 அடி, 8 அங்குலம் உயரம் கொண்ட நீர் எருமை, உலகிலேயே மிகவும் உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.
நஹோன் ராட்சசிமா என்ற இடத்தில் உள்ள நின்லானீ பண்ணையில் இந்த நீர் யானையை வளர்ந்து வருகிறது. வழக்கமாக 3 வயதில் ஒரு நீர் எருமையின் உயரத்தை வட 20 அங்குலம் உயரமகா இந்த எருமை உள்ளது.
கொரில்லா குரங்கு படத்தின் ஈர்ப்பு காரணமாக எருமைக்கு உரிமையாளர் கிங் காங் எனப் பெயரிட்டுள்ளார்.
இயற்கையில் ராட்சத விலங்குகள் மிகவும் ஆக்ரோசமாக இருக்கும். ஆனால். இந்த எருமை மிகவும் சாதுவாக, வளர்ப்பவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பண்ணையில் வேலை பார்க்கும் செர்பாட் வுட்டி கிங் காங் குறித்து கூறுகையில் "கிங் காங் பிறக்கும்போது மற்ற கன்றுகளை விட மிகவும் உயரமாக இருந்ததை உணர்ந்தோம். இதனால் இதன் உயரம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது முன்னதாக தெரிந்தது. தற்போது அதற்கு 3 வயதுதான் ஆகிறர்து. இளம் வயதாக இருந்தாலும், மிகப்பெரிய ராட்சத எருமையாக திகழ்கிறது" என்றார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ், தாய்லாந்து வீராங்கனை தாமோவான் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து வீராங்கனை 19-21, 21-14, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரர் வாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சீன வீரர் 21-17, 21-16 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ் காலிறுதிக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ், தைவான் வீராங்கனையான டங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரக்ஷிதா 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஹாங்காங் வீரர் ஜேசன் குணவான் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.






