என் மலர்
நெதர்லாந்து
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியா பெலுசி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி வீரர் 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேலும் நம்பர் 2 வீரரான மெத்வதேவை தொடரில் இருந்து வெளியேற்றினார்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், நெதர்லாந்து வீரர் போடிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலகாரஸ் 7-6 (7-3), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, இத்தாலியின் லாரன்சோ சொனேகா உடன் மோதினார்.
இதில் ரூனே 7-6 (7-4), 6-4 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் ஹரோல்ட் மேயாட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நம்பர் 2 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சுவிட்சர்லாந்தின் ஸ்டன் வாவ்ரிங்கா உடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-7 (8-10) என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- வைஷாலிக்கு நோடிர்பேக் கைகுலுக்க தவிர்த்தது கடும் சர்ச்சையாக மாறியது.
விஜ்க் ஆன் ஜீ:
நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரின் நான்காவது சுற்று போட்டியில் தமிழகத்தின் வைஷாலி, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் உடன் விளையாடினார்.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் வைஷாலி, உஸ்பெகிஸ்தான் வீரருடன் கைகுலுக்க முயன்றார். ஆனால் அவர் கைகுலுக்க மறுத்து விளையாட ஆரம்பித்தார்.
வழக்கத்தை மீறி வைஷாலிக்கு நோடிர்பேக் கைகுலுக்க தவிர்த்தது கடும் சர்ச்சையாக மாறியது. மதரீதியிலான காரணங்களுக்காக கை குலுக்கவில்லை என நோடிர்பேக் கூறினாலும், முந்தைய தொடர்களில் வீராங்கனைகளுக்கு கைகுலுக்கியதைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைஷாலிக்கு பூங்கொத்து மற்றும் சாக்லேட்களை வழங்கி உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் மன்னிப்பு கேட்டார்.
- டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது.
- 10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
விஜ்க் ஆன் ஜீ:
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரின் 10-வது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் உலக சாம்பியனான சென்னை கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் உள்ளூரைச் சேர்ந்த மேக்ஸ் வார்மெர்டமை எதிர்கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 34-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார்.
மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சுலோவெனியாவைச் சேர்ந்த விளாடிமிர் பெடோசிவை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகேசி, மென் டோன்கா ஆகியோர் தாங்கள் மோதிய ஆட்டங்களில் டிரா செய்தனர்.
உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ் செர்பிய வீரர் அலெக்சி ஷாரனாவை வீழ்த்தினார்.
10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவர் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 5 சுற்றுகளில் டிரா செய்தார். இன்னும் 3 ரவுண்டு எஞ்சியுள்ளது.
நோடிர்பெக் அப்து சாட்டோரோவ் 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். ஹரிகிருஷ்ணா 4.5 புள்ளியும், எரிகேசி , மெண்டோன்கா தலா 3 புள்ளியும் பெற்றுள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரக்ஞானந்தா சகோதரி ஆர்.வைஷாலி 10-வது சுற்றில் செக் குடியரசுவைச் சேர்ந்த வான் நூயனிடம் தோற்றார். அவர் 5 புள்ளியுடன் 10-வது இடத்தில் உள்ளார்.
- தோல்வி அடைந்த இஸ்ரேல் ரசிகர்கள்மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
- கலவரத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ளூர் கால்பந்து அணியான அஜாக்சுக்கும், இஸ்ரேல் கால்பந்து அணிக்கும் இடையிலான போட்டி நடந்தது. இதில் இஸ்ரேல் அணி தோல்வி அடைந்தது. அதனால் இஸ்ரேல் ரசிகர்கள் கோஷமெழுப்பினர்.
போட்டி முடிந்து ஆம்ஸ்டர்டாம் நகரின் தெருக்களில் சென்ற இஸ்ரேல் ரசிகர்கள் மீது மர்ம நபர்கள் தாக்கினர். அவர்களில் சிலர் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியபடி கோஷமெழுப்பினர்.
கலவரத்தில் ஈடுபட்ட நெதர்லாந்தை சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, நெதர்லாந்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், நெதர்லாந்தில் இருக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்கள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
- ரெய்னா, டோனி ஆகியோரை ‘தல’ என்றும், ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
- இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்துள்ளார்.
ஆம்ஸ்டர்டாம்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் 'தல' என்றும், 'சின்ன தல' என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர்.
இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வை அறிவித்ததும், அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
சி.எஸ்.கே .அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் எம்.எஸ்.டோனி கையெழுத்திட்ட 7-ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
- பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்தது.
- வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
14 ஆண்டுகளாக நெதர்லாந்து பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்ததும், புதிய பிரதமர் டிக் ஸ்கூஃப் இடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சைக்கிளில் புறப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து கிரண்பேடி தனது எக்ஸ் தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின், நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ரூட்டே தனது வாரிசான டிக் ஸ்கூஃப்க்கு அதிகாரபூர்வமாக அதிகாரம் வழங்கும் விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார் என்று கூறி மார்க் ரூட் பதிவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சைக்கிலில் மகிழ்ச்சியுடன் வெளியேறிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
- 180 அடி நீளமுள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
- உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 வருடங்களில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே நீளமான சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். 180 அடி நீளமுள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்னி ரியான் என்பவர் தயாரித்த 155 அடி நீளமுள்ள சைக்கிள் தான் உலகிலேயே நீளமான சைக்கிள் என்ற சாதனையை படைத்திருந்தது.
டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த இவான் ஷால்க் என்ற 39 வயது பொறியாளர் தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார். அந்த கனவை இப்போது அவர் நனவாக்கியுள்ளார்.
உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 வருடங்களில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. முதல்முதலாக 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 26 அடி நீளத்தில் உலகின் முதல் நீளமான சைக்கிள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
- ரஷியா அதிபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.
தி ஹேக்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.
போர் விதிகளை மீறி ரஷியா பல்வேறு கொடூரச் செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் பொதுமக்கள் வசித்து வரும் இலக்குகளைத் தாக்கியதற்காக ரஷியாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி மற்றும் அதன் ராணுவ தளபதி ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
அதன்படி, முன்னாள் பாதுகாப்பு மந்திரி செர்கே ஷோய்கு மற்றும் தலைமை தளபதி ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
உக்ரைன் நாட்டு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக எழுந்த புகாரின் பேரில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் இது நடந்திருந்ததால் அதிகமானவர்களின் ஆதரவை பெற்றிருக்கும் என்று கூறினார்.
- காதலை ஊக்கப்படுத்தியதற்காக பலரும் ஒனிசிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.
நெதர்லாந்து நாட்டில் ஒரு டிராம் வண்டி, அதிக பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. திடீரென ஒரு வாலிபர், முழங்காலிட்டபடி தனக்கு அருகில் நின்ற பெண்ணிடம் காதலை சொல்ல தயாரானார். இதை கவனித்த ஒரு வாலிபர் அதை செல்போனில் படம்பிடித்தார்.
மற்ற பயணிகள் செல்போனிலும், சிந்தனையிலும் மூழ்கியவர்களாக பயணித்துக் கொண்டிருக்க அந்த வாலிபர், இளம்பெண்ணிடம் காதலை பகிர்ந்தார். போனில் படம் பிடித்த வாலிபர் மட்டும் கைதட்டி ஆமோதித்தபடி "உங்களுக்கு காதல் பிடிக்கவில்லையா" என்று கேள்வியெழுப்ப, வேறு சில பயணிகளும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். இளம்பெண்ணும் புன்னகையுடன் காதலை ஏற்றார்.
இளம்ஜோடியின் காதலை படம்பிடித்த வாலிபர் டிராம்வண்டியில் இருந்து இறங்கியபடி, சுற்றி நடப்பதை கண்டுகொள்ளாமல் பயணித்த மக்களின் மனநிலை பற்றி வருத்தத்துடன் வலைத்தள பதிவு வெளியிட்டார். "அவர் அழகிய அமைப்பில் காதலை முன்மொழிந்தார் என்று நான் நம்புகிறேன். நிஜத்தில் முக்கியமானது நாம் பகிர்ந்து கொள்ளும் உண்மையான அன்பே. மற்றவர்கள் இதை வாழ்த்தவில்லை. முக்கியமற்றதாக கருதி அமைதியாக இருந்தார்கள். அமெரிக்காவில் இது நடந்திருந்ததால் அதிகமானவர்களின் ஆதரவை பெற்றிருக்கும்" என்று கூறினார்.
ஒனிஸி இன்ஸ்டாகிராம் என்ற பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டனர். காதலை ஊக்கப்படுத்தியதற்காக பலரும் ஒனிசிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.
- இஸ்ரேல் மீது கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் மனித குலத்திற்கு எதிரானது.
- காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபோது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரணம் உள்ளது- வழக்கறிஞர்.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டுகள் வீசி போர்க்குற்றம் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்திருந்தது. தென்ஆப்பிரிக்கா குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்து வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞரான கரிம் கான் கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாக எங்களுடைய அலுவலகத்தில் இருந்து தீவிர விசாரணை மேற்கொண்டோம். அப்போது ஹமாஸ் அமைப்பு மனிதகுலத்திற்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளோம்.
அதேபோல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபோது மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. தன்னுடைய அலுவலத்தில் இருந்து நேரில் சென்று விசாரணை நடத்தினோம். அப்போது அதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளார்.
இதனால் ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி, யாஹ்யா சின்வர் ஆகியோருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும்.
அதேபோல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கரிம் கான் கோரிக்கையை ஏற்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்குமா? என்பது விசாரணைக்குப் பின் தெரியவரும்.






