என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • வங்காளதேசத்தில் தீயணைப்பு படையில் முதல் முறையாக பெண்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என உள்துறை மந்திரி கூறினார்.

    டாக்கா:

    உலக அளவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அண்டை நாடான வங்காளதேசத்திலும் தீயணைப்புத் துறையில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    தலைநகர் டாக்கா அருகே உள்ள புர்பாச்சலில் 15 பெண்கள் தீயணைப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கு முன்னரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பெண்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    இதுதொடர்பாக அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் கூறுகையில், இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என தெரிவித்தார்.

    • நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • கிளென் பிலிப்ஸ், சாண்ட்னர் ஜோடி 70 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தது.

    டாக்கா:

    வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 35 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் சான்ட்னெர், கிளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டும், அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 87 ரன்கள் எடுத்தார்.

    8 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் ஜகிர் ஹசன் பொறுப்புடன் ஆடி 59 ரன்கள் எடுத்தார்.

    இதனால் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டும், சான்ட்னெர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நியூசிலாந்து தத்தளித்தது.

    7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில் நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    • வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    சில்ஹெட்:

    நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ம் தேதி தொடங்கியது.

    டாஸ் வென்ற வங்களாதேசம் முதலில் களமிறங்கியது. அந்த அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் ஹசன் ஜாய் 86 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டும், அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வில்லியம்சன் சதம் அடித்தார்.

    இதனால் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

    வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டும், மோமினுல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ சதமடித்து அசத்தினார்.


    இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாண்டோ 105 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 67 ரன்னும், மெஹிதி ஹசன் 50 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டும், இஷ் சோதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    • இலங்கைக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனான தேர்வு செய்யப்பட்டார்.
    • வங்காளதேசம் தனது கடைசி லீக் போட்டியில் நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதுகிறது.

    சிட்டகாங்:

    டெல்லியில் நேற்று நடந்த உலக கோப்பை லீக் தொடரில் வங்காளதேசம், இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை 279 ரன்களில் ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வங்காளதேசம் 41.1 ஓவரில் 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின்போது ஷகிப் அல் ஹசனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் 3 முதல் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, உலக கோப்பை 2023 தொடரில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.

    நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
    • இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டன.

    வங்காளதேசத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    வங்காளதேசத்தின் டாக்கா மாகாணத்தின் கிஷோர்கஞ்ச் மாவடத்தில் இருந்து டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றப்பட்டு இருந்தது. எக்ஸ்பிரஸ் ரெயில் மெல்ல தண்டவாளம் மாறிக் கொண்டிருந்த போது, திடீரென வேகமாக வந்த சரக்கு ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மோதியது.

    இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தவர்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    ரெயில் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணையும் துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெங்கு வைரஸ், ஏடிஸ் (Aedes) எனும் கொசு வகை மூலம் பரவுகிறது
    • குணமடைந்தவர்களுக்கு மீண்டும் இந்நோய் வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும்

    பருவநிலை மாற்றங்களினால் பல நாடுகளில் அதிக வெப்பம் மற்றும் சீரற்ற மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இது கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழ்நிலை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அதிக வெப்பம் மற்றும் அதிக மழைப்பொழிவு தோன்றும் நாடுகளில், கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.

    டெங்கு வைரஸ், ஏடிஸ் (Aedes) எனும் கொசு வகை மூலம் பரவுகிறது.

    1960களிலிருந்தே இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம், ஒவ்வொரு வருடமும் டெங்கு காய்ச்சலில் மக்களை இழந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதம் வரை இந்த காய்ச்சலில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அந்நாட்டில் அதிகமாக இருக்கும். 2000 தொடக்கத்திலிருந்து டெங்கு பரவலும் உயிரிழப்புக்களும் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. சமீப சில வருடங்களாக குளிர் காலங்களிலும் அந்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    அந்நாட்டு பொது சுகாதார இயக்குனரகம், இவ்வருடம் ஒரு லட்சம் பேருக்கும் மேல் அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 1006 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 112 பேர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என்பதும் பிறந்த குழந்தைகளும்  அதில் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்து சிகிச்சை பெற்று குணமானவர்களுக்கு மீண்டும் இக்காய்ச்சல் வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என வங்காள தேச இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    வங்காள தேசத்தில், சென்ற வருடம், ஆண்டு முழுவதிற்குமான எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 281 பேர் பலியாகியிருந்தனர். இவ்வருடம் முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே உயிர் பலி ஆயிரத்தை தாண்டி விட்டது.

    அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகிறது. வார்டுகளில் கொசு வலைகளுக்கு அடியில் காய்ச்சலுடன் இருக்கும் நோயாளிகளும், அவர்களுக்கு அருகே கவலையுடன் நிற்கும் உறவினர்களையும் காண்பது நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வங்காள தேச அரசாங்கம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக போராடி வருகிறது.

    • வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடையவில்லை
    • அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

    இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. வங்காளதேசம் முதல் போட்டியில் நாளை இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்த நிலையில் வங்காளதேச அணியின் முன்னணி வீரரான லிட்டன் தாஸ் ஆசிய கோப்பைக்கான தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

    வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள லிட்டன் தாஸ், இன்னும் அதில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. மேலும், இலங்கைக்கு எதிராக நாளை மோத இருக்கும் போட்டிக்காக இலங்கை செல்லவில்லை. அவருக்குப் பதிலாக அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என வங்காளதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    அனாமுல் ஹக் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1254 ரன்கள் அடித்துள்ளார். இதில் மூன்று சதங்கள் அடங்கும். கடந்த 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடியது அவரது கடைசி ஒருநாள் போட்டியாகும்.

    • உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது.

    ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஜி20 மாநாட்டில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொள்வார் என்று வங்கதேச துணை உயர் ஆணையர் அந்தலிப் எலியாஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து எலியாஸ் மேலும் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா இடையே இருதரப்பு சந்திப்பும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

    • விபத்தில், மூன்று குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • 52 பேர் பயணிக்க கூடிய பேருந்தில் 60 பேர் பயணித்ததால் விபத்து.

    வங்காளதேசத்தில் சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாஷர் ஸ்மிருதி பரிபாஹன் என்ற பேருந்து நேற்று காலை 9 மணியளவில் பிரோஜ்பூரின் பண்டாரியாவில் இருந்து புறப்பட்டது. அப்போது 10 மணியளவில் பரிஷால்- குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டாவில் உள்ள சாலையோர குளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில், மூன்று குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 பேர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 52 பேர் பயணிக்க கூடிய பேருந்தில் 60 பேர் பயணித்ததே விபத்துக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    மேலும், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என உயிர் பிழைத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பேருந்தில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    17 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பரிஷால் பிரதேச ஆணையர் எம்.டி ஷவ்கத் அலி உறுதிப்படுத்தியுள்ளார்.

    பலியானவர்களில் பெரும்பாலானோர் பிரோஜ்பூரின் பண்டாரியா உபாசிலா மற்றும் ஜல்கதியின் ராஜாபூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
    • இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழக்கும்

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20  கிரிக்கெட தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினர்.

    தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்தியா- வங்காளதேசம் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் வங்காளதேசத்திற்கு இந்திய அணி தகுந்த பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேசம் 2-0 என கைப்பற்றியது.
    • ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.

    சில்லெட்:

    ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 546 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது.

    அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. அஸ்மதுல்ல 25 ரன்னும், இப்ராகிம் ஜட்ரன் 22 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லித்தன் தாஸ் 35 ரன்னும், அபிப் ஹொசைன் 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேசம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.

    • ஸ்மிரிதி மந்தனா 11 ரன்களும், பிரியா புனியா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    • 35.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தனர்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனால், முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் களமிறங்கினர், ஆனால், ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, பர்கானா ஹக் 27 ரன்களும், நிகர் சுல்தானா 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஃபஹிமா கதூன் 12 ரன்களும், சுல்தானா கதூன் 16 ரன்களும், மருஃபா அக்தர் 6 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதைதொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.

    இதில் முதலில் களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 11 ரன்களும், பிரியா புனியா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 15 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ஜெம்மியா ரோட்ரிகியுஸ் 10 ரன்கள், அமன்ஜோத் கவுர் 15 ரன்கள், தீப்தி சர்மா 20 ரன்கள், பூஜா வஸ்த்ரகர் 7 ரன்கள், பாரெட்டி அனுஷா 2 ரன்களும் எடுத்தனர்.

    ஸ்னேஹ் ரானா ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 35.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தனர்.

    இதன்மூலம், 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகளிர் அணியை வீழ்த்தி வங்காளதேச மகளிர் அணி வெற்றிப்பெற்றது.

    ×