என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இத்தாலி வீரர் முசெட்டி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் முசெட்டி முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கேமரூன் நூரி அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலியின் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் ஜூலை 21 முதல் 27 வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடக்கிறது.
    • இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் பெய்டன் மெக்கென்சி மோதினார்.

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் ஜூலை 21 முதல் 27 வரை அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வில்லியம் எச்.ஜி. ஃபிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மையத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான வில்லியம்ஸ் (அமெரிக்கா) மற்றும் சக நாட்டவரான பெய்டன் மெக்கென்சி ஸ்டெர்ன்ஸ் (அமெரிக்கா) உடன் மோதினார்.

    இதில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். 45 வயதில் வெற்றி பெற்றதன் மூலம் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு WTA ஒற்றையர் போட்டியில் வென்ற மிக வயதான வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
    • இந்தத் தொடரில் இருந்து நம்பர் 2 வீரரான அல்காரஸ் விலகி உள்ளார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.

    இந்நிலையில், நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    ஏற்கனவே காயம் காரணமாக நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
    • காயம் காரணமாக முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.

    இந்நிலையில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    காயம் காரணமாக கனடா ஓபன் தொடரில் விளையாடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2023ம் ஆண்டில் கனடா ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

    இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேனுவல் செருண்டலோ உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-4 என பப்ளிக் வென்றார். 2வது செட்டை 6-4 என அர்ஜெண்டினா வீரர் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என வென்ற பப்ளிக் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.

    இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், பிரான்ஸ் வீரர் ஆர்தர் கசாக்ஸ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பப்ளிக் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பப்ளிக், அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேனுவல் செருண்டலோவை சந்திக்கிறார்.

    • சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றுப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுவான் மேனுவல் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜுவான் 6-2, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நார்வேயின் காஸ்பர் ரூட் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ கோம்சேனா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • கடந்த 2 ஆண்டாக நான் காயங்களை எதிர்த்துப் போராடுகிறேன்.
    • என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

    துனீசிய வீராங்கனையான ஒன்ஸ் ஜபேர், சமீப காலமாக காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இந்த ஆண்டு நடந்த மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் ஜபேர் மூன்றாவது சுற்றைத் தாண்டவில்லை.

    இந்நிலையில், 3 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாளரான ஓன்ஸ் ஜபேர், மன நலனில் கவனம் செலுத்துவதற்காக டென்னிசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஒன்ஸ் ஜபேர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    கடந்த 2 ஆண்டாக நான் என்னை மிகவும் கடினமாக உந்தித் தள்ளி வருகிறேன். காயங்களை எதிர்த்துப் போராடுகிறேன். பல சவால்களை எதிர்கொள்கிறேன். சிறிது காலமாக மைதானத்தில் நான் மகிழ்ச்சியாக உணரவில்லை. டென்னிஸ் மிகவும் அழகான விளையாட்டு. என்னைப் புரிந்துகொண்டதற்கு என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவையும் அன்பையும் என்னுடன் சுமந்து செல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பப்ளிக் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ கோம்சேனாவை சந்திக்க உள்ளார்.

    • சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    சுவிஸ்:

    சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றுப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், சுவிட்சர்லாந்தின் டொமினிக் ஸ்டீபன் ஸ்ட்ரிக்கர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய காஸ்பர் ரூட் 7-5, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3வது இடம் பிடித்தார்.
    • அனிசிமோவா 5 இடங்கள் முன்னேறி முதல் முறையாக டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதனையடுத்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா முதலிடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

    விம்பிள்டன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்நிலையில், விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அமெரிக்காவின் அமென்டா அனிசிமோவா 5 இடம் முன்னேறி சிறந்த தரநிலையாக 7-வது இடம் பிடித்துள்ளார்.

    ×