என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- பண்ட் பயணித்த கார் ஒரு தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்தது.
- இதனால் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் பண்ட் பலத்த காயமடைந்தார்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். சில வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்துக்கு பின்பு மீண்டு வந்துள்ள பண்டின் ஆட்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிசம்பர் 30, 2022 அன்று டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, பண்ட் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். கார் ஒரு தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்தது, இதனால் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார்.
கார் விபத்தில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ரிஷப் பண்ட் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பண்டிற்கு மருத்துவர் தின்ஷா பர்திவாலா அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார்.
இந்நிலையில், பண்ட் குறித்து பேசிய மருத்துவர் தின்ஷா பர்திவாலா, "கொடூரமான சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனை வந்ததும் ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வியே என்னால் மீண்டும் விளையாட முடியுமா? என்பதுதான்" என்று தெரிவித்தார்.
- விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி
- இப்படம் ஜூலை 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழனஸ் அணிகள் முதல் பிளே ஆப் சுற்றிலும் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் ௨ ஆவது பிளே ஆப் சுற்றிலும் மோதவுள்ளன.
இந்நிலையில், 'திண்டுக்கல் டிராகன்ஸ்' அணியின் கேப்டன் அஷ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தியை நடிகர் விஷ்ணு விஷால் சந்தித்துள்ளார்.
விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள ஓஹோ எந்தன் பேபி படத்தின் ப்ரோமஷனுக்காக இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
புலவாயோ:
ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், கிரேக் எர்வினின் விக்கெட்டை தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
கேசவ் மகராஜ் 59 டெஸ்டில் (99 இன்னிங்ஸ்) 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 11 முறை 5 விக்கெட்டும், ஒருமுறை 10 விக்கெட்டும் (ஒரே டெஸ்டில்) வீழ்த்தியுள்ளார்.
- டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.
- சேப்பாக், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
லீக் சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
திண்டுக்கல் டிராகன் அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கின்றது.
திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்துள்ள சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதுகின்றன.
நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் 3வது மற்றும் 4வது இடம்பிடித்த திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோத உள்ளன.
குவாலிபையர் 1 சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். இதில் தோல்வி அடைந்த அணி குவாலிபையர் 2 சுற்றில், எலிமினேட்டரில் வென்ற அணியுடன் மோதும்.
குவாலிபையர் 2 சுற்றில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி ஜூன் 6ம்தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய திருச்சி அணி 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
திண்டுக்கல்:
9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
விமல் குமார் 55 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஷிவம் சிங் 37, ஹனி சைனி 21 ரன்கள் எடுத்தனர்.
திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன், சரவணகுமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
5வது விக்கெட்டுக்கு கவுசிக், சஞ்சய் யாதவ் ஜோடி 98 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு துணை நின்றது. கவுசிக் 42 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சஞ்சய் யாதவ் அரை சதம் கடந்தார்.
இறுதியில், திருச்சி அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வென்றதுடன் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 418 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
- அறிமுக போட்டியில் சிறப்பாக ஆடிய பிரிட்டோரியஸ் சதமடித்து 153 ரன்னில் அவுட்டானார்.
புலவாயோ:
ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 90 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுகப் போட்டியில் பொறுப்பாக ஆடிய லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ் சதமடித்து அசத்தினார். அவர் 153 ரன்னில் அவுட்டானார்.
கார்பின் போஸ்ச் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சவாங்கா 4 விக்கெட்டும், முசபராபானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 137 ரன்னில் வெளியேறினார். கேப்டன் கிரெய்க் எர்வின் 36 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து ஆடவில்லை.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
167 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சை ஆடியது.
இரண்டாம் நாள் இறுதியில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 216 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- ஹர்ஜித் சிங் என்ற பேட்ஸ்மேன், சிக்ஸர் அடித்தார்.
- சக வீரர்கள் CPR அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹர்ஜித் சிங் என்ற பேட்ஸ்மேன், சிக்ஸர் அடித்தசில நொடிகளிலேயே மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சக வீரர்கள் CPR அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை.
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உடற்பயிற்சியின் போது இளைஞர்களிடையே திடீர் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
- திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விமல் குமார் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
நடப்பு டி.என்.பி.எல். தொடரில் கடந்த ஆட்டத்தின் வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
இதில், அதிகபட்சமாக விமல் குமார் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். தொடர்ந்து, ஷிவம் சிங் 37, ஹனி சைனி 21 ரன்கள், மான் பாஃப்னா 14 ரன்கள் எடுத்தனர்.
இதன்மூலம், 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் களமிறங்கியுள்ளது.
- சாத்விக் 41 ரன்களும், துஷார் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
- தொடக்க வீரர் சந்தோஷ் குமார் டக் அவுட்டானார்.
9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக சாத்விக், துஷார் ரேஹஜா களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாத்விக் 41 ரன்களும், துஷார் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சாய் கிஷோர் அதிரடியாக விளையாடி அரைசதமடித்தார்.
இதனால் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 183 ரன்கள் இலக்கை நோக்கி நெல்லை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர் சந்தோஷ் குமார் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் அஜித்தேஷ் 28 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த அதிஷ், ரித்திக் ஈஸ்வரன் முறையே 17 ரன்களிலும், 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த வீரர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 19.4 ஓவர்களில் நெல்லை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி பெற்றது.
- 27-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
- நடப்பு டி.என்.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு திருப்பூர் அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.
9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்பு டி.என்.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு திருப்பூர் அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
- சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.
இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது. இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்டார். சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.
முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் அவர் அடுத்த சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணி சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் முறையில் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அதிரடி ஆல் ரவுண்டர் ஷிவம் துபே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 210 ரன்கள் குவித்தது.
- 2-வது அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்தது.
நாட்டிங்காம்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் 2-வது அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்தது. 216 வெற்றிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.






