என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
- அகமதாபாத் விமான விபத்து காரணமாக முதல் டெஸ்டிலும் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
பர்மிங்காம்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் வெய்ன் லார்கின்ஸை நினைவுகூரும் விதமாக இரு அணிகளும் கருப்பு கைப்பட்டைகளை அணிந்துள்ளனர்.

அகமதாபாத் விமான விபத்து காரணமாக முதல் டெஸ்டிலும் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் தொடர்களில் பட்டம் வென்ற அணிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட தொடராக நடத்தப்படவுள்ளது.
- 2009 - 2014 வரை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் 2 கோப்பைகளை வென்றது.
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் மறு உருவமாக 'உலக கிளப் சாம்பியன்ஷிப் தொடர்' 2026-ல் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் தொடர், பாகிஸ்தானின் பிஎஸ்எல், ஆஸ்திரேலியாவின் BBL, தென்னாப்பிரிக்காவின் SA20, இங்கிலாந்தின் THE HUNDRED போன்ற உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் தொடர்களில் பட்டம் வென்ற அணிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட தொடராக நடத்தப்படவுள்ளது.
அத்தொடரை உலக கிளப் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் மீண்டும் துவங்குவதற்கு முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை மற்றும் ஸ்பான்சர்ஷிப் பிரச்சனைகள் காரணமாக 2015-ம் ஆண்டு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
2009 - 2014 வரை நடைபெற்ற அந்தத் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 2 கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பர்மிங்காம் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை.
- இந்திய அணி 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.
பர்மிங்காம்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பர்மிங்காம் மைதானத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சும், போக போக பேட்டிங்குக்கும் அனுகூலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. அதனால் இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி இந்தியா சரித்திரம் படைக்குமா அல்லது மறுபடியும் பணிந்து போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
- இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
- லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
பர்மிங்காம்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ் டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
இதற்கிடையே, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் இல்லை. முதல் டெஸ்டில் ஆடிய வீரர்களே களமிறங்குகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்டில் முகமது சிராஜை நீக்கவேண்டும் என முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:
முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் சிராஜை இரண்டாவது டெஸ்டில் நீக்குவதுதான் சரியாக இருக்கும்.
முதல் டெஸ்டில் அவரைவிட பிரசித் கிருஷ்ணா நேர்த்தியாக பந்து வீசினார். இதனால் பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்யலாம்.
இது கடினமான முடிவாக இருக்கும். தற்போதைய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு வேகப்பந்து வீரருக்கு பதிலாக குல்தீப் யாதவையும், ஷர்துல் தாக்குருக்கு பதிலாக நிதிஷ்குமார் ரெட்டியையும் சேர்க்கலாம் என தெரிவித்தார்.
- இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
- அவரிடம் சச்சின், ஜாக் காலிஸ் ஆகியோரில் யார் சிறந்த கிரிக்கெட்டர் என கேள்வி கேட்கப்பட்டது.
லண்டன்:
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம், இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் ஆகிய இருவரில் யார் சிறந்த கிரிக்கெட்டர் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பட்லர், நான் காலிஸ் என சொல்லப் போகிறேன். காலிஸ் சிறந்த கிரிக்கெட் வீரர் என ரிக்கி பாண்டிங் நேரடியாக சொல்லியிருக்கிறார். அவரது சாதனைகளை ஒன்றாகச் சேர்த்தால் பேட்டிங்கில் சச்சினும், பந்துவீச்சில் ஜாகீர் கானும் விளையாடியதற்கு சமம். நீங்கள் ஒரு அணியைத் தேர்வு செய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால் அதில் அவரை தாண்டி பார்ப்பது மிகவும் கடினம் என தெரிவித்தார்.
- இரு அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடந்தது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பிரிஸ்டோல்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார்.
அமன்ஜோத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ரிச்சா கோஷ் 32 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 2 விக்கெட்டும், லாரன் பைலர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர்.
அந்த அணியின் டாமி பியூமாண்ட் 35 பந்தில் 54 ரன்கள் குவித்தார். சோபி எக்ளஸ்டோன் 35 ரன்னும், எமி ஜோன்ஸ் 32 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது அமன்ஜோத் கவுருக்கு அளிக்கப்பட்டது.
இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 2 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சேப்பாக் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
குவாலிபையர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்சும் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்று திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் வெல்லும் அணி, 4-ந்தேதி நடக்கும் குவாலிபையர் 2 போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும். அப்போட்டியில் வெற்றி பெற்று அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முகமது சமி மீது அவரது முன்னாள் மனைவி பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.
- முகமது சமியின் முன்னாள் மனைவி ஜீவனாம்சமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.
இந்த புகார்கள் அனைத்திற்கும் சமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முகமது சமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
இதையடுத்து, கொல்கத்தா நீதிமன்றம் ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்று ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. அதில், ஜஹானின் தனிப்பட்ட செலவிற்கு என்று ரூ.50 ஆயிரமும், மீதமுள்ள ரூ.80 ஆயிரம் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஹசின் ஜஹான் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முகமது சமி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில், ஜஹானின் தனிப்பட்ட பராமரிப்புக்காக மாதம் ரூ.1.5 லட்சமும், அவர்களின் மகளின் பராமரிப்பு மற்றும் செலவுகளுக்கு ரூ.2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று சமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.
- 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.
திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.
பவர்பிளே முடிவில் திருப்பூர் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. துஷார் ரஹேஜா 28 ரன்னில் ரன் அவுட்டானார். அமித் சாத்விக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாய் கிஷோர் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் சசிதேவ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 26 பந்தில் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.
சேப்பாக் அணி சார்பில் லோகேஷ் ராஜ் 2 விக்கெட்டும், விஜய் சங்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.
சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக ஆஷிக்- மோகித் ஹரிஹரன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆஷிக் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பாபா அப்ராஜித் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
அவர் 13 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து மோகித் 25 ரன்னிலும் விஜய் சங்கர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் சேப்பாக் அணி 16.1 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே 79 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி பெற்றது.
திருப்பூர் அணி தரப்பில் இசக்கிமுத்து, மதிவாணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
- டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 202 ரன்கள் எடுத்துள்ளது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.
திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.
பவர்பிளே முடிவில் திருப்பூர் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. துஷார் ரஹேஜா 28 ரன்னில் ரன் அவுட்டானார். அமித் சாத்விக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாய் கிஷோர் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் சசிதேவ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 26 பந்தில் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.
சேப்பாக் அணி சார்பில் லோகேஷ் ராஜ் 2 விக்கெட்டும், விஜய் சங்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.
- பெங்களூரு கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கத்தை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
- ஆர்சிபி அணி காவல்துறையிடம் உரிய அனுமதியை அல்லது ஒப்புதலைப் பெறவில்லை.
பெங்களூர்:
ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அது குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. அதன் முடிவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சமர்ப்பித்த இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் முழு முதல் பொறுப்பை ஏற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரு கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கத்தை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்தும் செய்துள்ளது. அவர் வகித்த பொறுப்பை மீண்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அளித்துள்ள அறிக்கையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் மூன்று முதல் ஐந்து லட்சம் பேர் அந்த இடத்தில் கூடுவதற்கு முதல் பொறுப்பு என்று தெரிகிறது. ஆர்சிபி அணி காவல்துறையிடம் உரிய அனுமதியை அல்லது ஒப்புதலைப் பெறவில்லை. அவர்கள் திடீரென்று சமூக ஊடகங்களில் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டனர். அதன் காரணமாக பொதுமக்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தில் ஒன்று கூடினர். காவல்துறை ஊழியர்களும் மனிதர்கள் தான். அவர்கள் கடவுள் அல்ல, மந்திரவாதியும் அல்ல என அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிக்கலில் உள்ளது. ஐபிஎல் நிர்வாகம் அந்த அணியைத் தடை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன.
- குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் சமீபத்தில் முடிவடைந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
லீக் சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, திருப்பூர் அணி களமிறங்குகிறது.






