என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய நிர்வாக தீர்ப்பாயம்"
- பெங்களூரு கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கத்தை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
- ஆர்சிபி அணி காவல்துறையிடம் உரிய அனுமதியை அல்லது ஒப்புதலைப் பெறவில்லை.
பெங்களூர்:
ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அது குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. அதன் முடிவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சமர்ப்பித்த இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் முழு முதல் பொறுப்பை ஏற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரு கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கத்தை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்தும் செய்துள்ளது. அவர் வகித்த பொறுப்பை மீண்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அளித்துள்ள அறிக்கையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் மூன்று முதல் ஐந்து லட்சம் பேர் அந்த இடத்தில் கூடுவதற்கு முதல் பொறுப்பு என்று தெரிகிறது. ஆர்சிபி அணி காவல்துறையிடம் உரிய அனுமதியை அல்லது ஒப்புதலைப் பெறவில்லை. அவர்கள் திடீரென்று சமூக ஊடகங்களில் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டனர். அதன் காரணமாக பொதுமக்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தில் ஒன்று கூடினர். காவல்துறை ஊழியர்களும் மனிதர்கள் தான். அவர்கள் கடவுள் அல்ல, மந்திரவாதியும் அல்ல என அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிக்கலில் உள்ளது. ஐபிஎல் நிர்வாகம் அந்த அணியைத் தடை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.






