என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது டெஸ்டிலும் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா- இங்கிலாந்து வீரர்கள்: காரணம் என்ன?
    X

    2-வது டெஸ்டிலும் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா- இங்கிலாந்து வீரர்கள்: காரணம் என்ன?

    • இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
    • அகமதாபாத் விமான விபத்து காரணமாக முதல் டெஸ்டிலும் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் வெய்ன் லார்கின்ஸை நினைவுகூரும் விதமாக இரு அணிகளும் கருப்பு கைப்பட்டைகளை அணிந்துள்ளனர்.

    அகமதாபாத் விமான விபத்து காரணமாக முதல் டெஸ்டிலும் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×