என் மலர்
விளையாட்டு
- இந்திய அணியில் மாற்றங்கள் இல்லை
- இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சிவன் துபே ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்தியா பேட்டிங் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சிவன் துபே ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. தீபக் சாஹருக்கு பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பிடித்துள்ளார்.
- சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும்.
- அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவாகும்.
பெங்களூரு:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
தொடரை கைப்பற்றி விட்டதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவாகும். எனவே இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூரில் பகலில் மேக மூட்டம் 90 சதவிதம் இருக்கும். மழை பெய்ய 40% வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இரவில் மழைக்கான வாய்ப்பு 25% ஆக குறைவாகவும் மேக மூட்டம் 100% இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
- நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன்.
- ஐ.பி.எல். போட்டியில் 6 ஆண்டுகளாக ஆடி வருகிறேன்.
பெங்களூரு:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 4-வது ஆட்டத்தில் 20 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டியிலும் இந்தியாவின் வெற்றி நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த 2 ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது;-
நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். ஐ.பி.எல். போட்டியில் 6 ஆண்டுகளாக ஆடி வருகிறேன். ஐ.பி.எல். எனக்கு நம்பிக்கை அளித்தது. நெருக்கடியான நிலையில் அமைதியாக இருக்க இந்த போட்டி கற்றுக் கொடுத்தது.
உடற்பயிற்சி கூடத்துக்கு தினசரி சென்று பளுதூக்குதல் உள்ளிட்ட உடற் பயிற்சிகளை மேற்கொள்வேன். இந்த உடற்பயிற்சியால் அதிக தூரத்துக்கு சிக்சர் அடிப்பதற்கான ஆற்றலை அளிக்கிறது.
இவ்வாறு ரிங்குசிங் கூறி உள்ளார்.
- தமிழ் தலைவாஸ் அணியில் அஜய்ங்கா பவார், சாஹர் உள்ளிட்ட முன்னிணி வீரர்கள் உள்ளனர்.
- இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயடன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
அகமதாபாத்:
10-வது புரோ கபடி லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன.
நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் 38-32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
யுமும்பா-உ.பி. யோதா அணிகள் மோதிய ஆட்டத்திலும் பரபரப்பு இருந்தது. இதில் மும்பை 34-31 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.
இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னையை தலைமை இடமாக கொண்ட தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தலைவாஸ் அணியில் அஜய்ங்கா பவார், சாஹர் உள்ளிட்ட முன்னிணி வீரர்கள் உள்ளனர்.
இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயடன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூ அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. பெங்களூர் அணி எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 5-வது டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது.
- தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும்.
பெங்களூரு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே தொடரை இழந்து விட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
அதேவேளையில் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில் 2 வீரர்களுக்கு முதல் 4 டி20-யில் வாய்ப்பு வழங்காததால் நாளைய போட்டியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, ஆகியோர் மட்டும் இந்த தொடரில் விளையாடாமல் உள்ளனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒரு போட்டியிலாவது விளையாடி உள்ளனர். எனவே இருவரும் அடுத்த போட்டியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- லாரா டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 400 ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- மொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10,405 ரன்களும் அடித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தனது மகனுக்கு முன்மாதிரியாக பயன்படுத்துவேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் ஏதேனும் விளையாட்டில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டால், விராட் கோலி மாதிரி விளையாட வேண்டும் என்று கூறுவேன். மேலும் கோலியின் அர்ப்பணிப்பையும் வலிமை மட்டும் இல்லாமல், நம்பர் ஒன் விளையாட்டு வீரராக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பிரைன் லாரா டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 400 ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் மொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10,405 ரன்களும் அடித்துள்ளார். பிரைன் லாரா ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் உத்திகளை வடிவமைக்கும் பயிற்சியாளர் என்ற பொறுப்பில் இருக்கிறார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
- இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் ஏமாற்றமான தோல்விகளை சந்தித்து நாடு திரும்பியது. தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பாபர் அசாம் தம்முடைய பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் ஜாம்பவான் இன்சமாம்-உல்-ஹக் தம்முடைய தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஷான் மசூட் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பாகிஸ்தான் அணியினருக்கு விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய வாரியம் சார்பில் பெரியளவு வரவேற்பு கொடுக்கவில்லை. விமான நிலையத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியினர் அங்கிருந்து ஹோட்டல் அறைக்கு செல்லும் போது அவர்களின் உடைமைகளை எடுத்து வைக்க ஆஸ்திரேலியா வாரியம் அல்லது பாகிஸ்தான் வாரியம் சார்பில் எந்த ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. அதன் காரணமாக பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்களுடைய உடைமைகளை கன்டெய்னர் லாரியிலிருந்து தாங்களே ஊழியர்களைப் போல எடுத்துக் கொண்டு சென்றனர்.
2023 உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டவர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை என்பதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு வரவேற்பு கிடைக்காததில் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம்.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
- மும்பையில் விராட் கோலி ஒன் 8 என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.
- மதுரையை சேர்ந்த ராப் பாடகர் ராம் என்பர், ராவண ராம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமானவர்.
இந்திய கிரிக்கெட்டின் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவருக்கு சொந்தமான உணவகத்தில் வேட்டி கட்டி சென்ற தமிழருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை சேர்ந்த ராப் பாடகர் ராம் என்பர், ராவண ராம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமானவர். இவர் விராட் கோலிக்கு சொந்தமான மும்பையில் உள்ள ஒன் 8 என்ற உணவகத்துக்கு சாப்பிடுவதற்காக வேட்டி சட்டையில் சென்றுள்ளார்.
அந்த உணவகத்தில் வேட்டி சட்டை போட்டு செல்ல அனுமதி இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் அந்த உணவகம் முன் நின்று தனக்கு நடந்த சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் மற்றும் அதிருப்தியை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- கடந்த 2008-ல் ஒளிபரப்பு உரிம மதிப்பு ரூ. 6 ஆயிரம் கோடியாக இருந்தது.
- 2022ஆண்டு முதல் 5 ஆண்டு காலத்தில் ஒளிபரப்பு மதிப்பு ரூ.48,000 கோடியாக உயர்ந்தது.
பெங்களூரு:
இந்தியன் பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடுவதால் இந்த போட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் வர்த்தக ரீதியில் ஐ.பி.எல். போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை 16 சீசன்கள் நடைபெற்றுள்ளன.
ஐ.பி.எல். போட்டியை ஏராளமான ரசிகர்கள் பார்ப்பதால் ஒளிபரப்பு உரிம மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.
விளம்பர வருவாய் கோடிக்கணக்கில் கிடைப்பதால் ஒளிபரப்பு உரிமத்தை பெற கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 2008-ல் ஒளிபரப்பு உரிம மதிப்பு ரூ. 6 ஆயிரம் கோடியாக இருந்தது. 2022ஆண்டு முதல் 5 ஆண்டு காலத்தில் ஒளிபரப்பு மதிப்பு ரூ.48,000 கோடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.4.16 லட்சம் கோடியை எட்டும் என்று ஐ.பி.எல். தலைவர் அருண்துமல் தெரிவித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
கடந்த 15 ஆண்டுகளில் ஐ.பி.எல். போட்டி கடந்த வந்த பாதையையும், தற்போது ரசிகர்களிடம் இருக்கும் மதிப்பையும் பார்க்கும் போது 2043-ல் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்புக்கான உரிம மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
ரசிகர்கள் ஈடுபட்டை அதிகரிக்கும் வகையில் கிரிக்கெட்டை புதிதாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும்.
இதேபோல் அதன் தரத்தையும் அதிகரிக்க வேண்டும். இதனால் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. மகளிர் பிரமீயிர் 'லீக்' போட்டி தொடங்கி இருப்பது வருவாய் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அருண் துமல் தெரிவித்தார்.
- மார்ஷின் செயலால் "காயமடைந்ததாக" முகமது ஷமி, ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
- மார்ஷிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் சில நாட்கள் கடந்தன.
இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.
இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி, ஒரு பேட்டியில் மார்ஷின் செயலால் "காயமடைந்ததாக" தெரிவித்தார். மார்ஷிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் சில நாட்கள் கடந்தன.
இந்நிலையில் கோப்பை மீது கால் வைத்ததில் எந்த அவமரியாதையும் இல்லை என்று கூறிய அவர், கோப்பையை அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று வலியுறுத்தினார்.
- இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
- இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
மும்பை:
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.
இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கேதர் ஜாதவ் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை ரூ. 2 கோடியாக நிர்ணயம் செய்துள்ளனர். கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடி 1208 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரை சதம் அடங்கும். இதேபோல ஹர்சல் படேல் 92 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
- வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஆட்டநாயகானக தைஜுல் இஸ்லாம் தேர்வு செய்யப்பட்டார்.
சில்ஹெட்:
நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து வில்லியம்சனின் சதம் மூலம் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 338 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷாண்டோ 105 ரன், ரஹீம் 67 ரன் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டாம் லாதம் 0 ரன், கான்வே 22 ரன் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய வில்லியம்சன் 11, நிக்கோல்ஸ் 2, டாம் ப்ளண்டெல் 6, பிளிப்ஸ் 12, ஜெமிசன் 9 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. மிட்செல் 44 ரன்களிலும் சோதி 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் அரை சதம் விளாசினார். இவர் 58 ரன்கள் எடுத்திருந்த போது நயீம் ஹசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சவுதி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர் 24 பந்துகள் சந்தித்து 34 ரன்கள் எடுத்தார். பொறுமையாக விளையாடி சோதி 91 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து கடைசியாக அவுட் ஆனார்.
இதன் மூலம் வங்காளதேசம் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரே ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந் தேதி தொடங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக தங்கள் சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்காளதேசம் வரலாற்று சாதனை படைத்தது.






