என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது டி20 போட்டியானது ராய்ப்பூர் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    இந்த போட்டியில் நாங்கள் டாசில் மட்டுமே தோல்வியை சந்தித்தோம். அதை தவிர்த்து வேறு எந்த இடத்திலும் சரிவை சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். எங்களது அணியின் வீரர்கள் இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்

    இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொருவருமே பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே அனைவரிடமும் பேசினேன். அந்த வகையில் நமது அணியின் வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

    குறிப்பாக அக்சர் பட்டேல் கடினமான இந்த சூழ்நிலையிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

    தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் கூறியதாவது:-

    இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் இலக்கினை நோக்கி முன்னேற முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம். இந்த தோல்வியின் மூலம் பல்வேறு பாடங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
    • லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டும்.

    ஆமதாபாத்:

    ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 10-வது புரோ கபடி லீக் போட்டி ஆமதாபாத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 7-ந் தேதி வரை ஆமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் அடுத்து பெங்களூரு (வருகிற 8-13), புனே (15-20), சென்னை (22-27), நொய்டா (டிச.29-ஜன.3) மும்பை (ஜன.5-10), ஜெய்ப்பூர் (ஜன.12-17), ஐதராபாத் (ஜன.19-24), பாட்னா (ஜன.26-31), டெல்லி (பிப்.2-7), கொல்கத்தா (பிப்.9-14), பஞ்ச்குலா (பிப்.16-21) ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் பிளே-ஆப் சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

    கடந்த அக்டோபர் மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டு விட்டு, தேவையான வீரர்களை விலைக்கு வாங்கியதுடன் அணியை வலுவாக தயார்படுத்தி களம் இறங்குகிறது.

    இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டும். லீக்கில் டாப்-2 இடங்களை கைப்பற்றும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    கடந்த ஆண்டு 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்து வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் தோற்று அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் அணி சாகர் தலைமையில் களம் காண்கிறது. எல்லா அணிகளின் சொந்த ஊரிலும் போட்டி அரங்கேறுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் பசெல் அட்ராசலி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ், பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்சுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் சுரிந்தர் சிங் தலைமையிலான யு மும்பா-பர்தீப் நர்வால் தலைமையிலான உ.பி.யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது.
    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பெல்ஜியத்தை சந்திக்கிறது.

    சான்டியாகோ:

    10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, முன்னாள் சாம்பியன்கள் தென்கொரியா, ஜெர்மனி மற்றும் இந்தியா உள்பட 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஜெர்மனியுடன் மோதியது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனைகள் அன்னு 11-வது நிமிடத்திலும், ரோப்னி குமாரி 14-வது நிமிடத்திலும் அடித்த கோலால் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஜெர்மனி வீராங்கனைகள் சோபியா 17-வது நிமிடத்திலும், லாரா புத் 21-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பி சமநிலையை உருவாக்கினர். 24-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மும்தாஜ் கான் அடித்த கோலால் மீண்டும் இந்தியா முன்னிலையை தனதாக்கியது. அதன் பிறகு ஆக்ரோஷமாக ஆடிய ஜெர்மனி அணி அடுத்தடுத்து 2 கோல் அடித்தது. அந்த அணியின் லாரா புத் (36-வது நிமிடம்), கரோலின் (38-வது நிமிடம்) ஆகியோர் இந்த கோலை அடித்தனர்.

    அதன் பின்னர் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி ஜெர்மனியிடம் வீழ்ந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய ஜெர்மனி அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் (0-6) தோற்று இருந்தது. முதலாவது ஆட்டத்தில் கனடாவை எளிதில் (12-0) தோற்கடித்து இருந்த இந்திய அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் நெதர்லாந்து 6-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும், இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் தோற்கடித்தன.

    இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பெல்ஜியத்தை சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி பெற்றுள்ளார்.
    • தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.


    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளைப் பதிவுசெய்ததன் மூலம் 2,500 புள்ளிகளை வைஷாலி கடந்தார். இவர் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3-வது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    இவர் பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    • சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்தது.

    ராய்ப்பூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் அதிரடியாக ஆடிய இந்தியா 20 ஓவரில் 174 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றி இந்திய அணியின் 136 டி20 வெற்றி ஆகும். 213 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணி அதில் 136 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

    முன்னதாக, பாகிஸ்தான் அணி 226 டி20 போட்டிகளில் ஆடி 135 வெற்றிகளைப் பெற்றிருந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    மேலும், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் நடந்த 14 டி20 தொடர்களில் இந்தியா தொடர் வெற்றி பெற்றுள்ளது என்ற சாதனையையும் படைத்துள்ளது.

    • இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்ய முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஹெட் - ஜோஷ் பிலிப் களமிறங்கினர். 3 ஓவரில் 40 ரன்கள் குவித்த இந்த ஜோடியை பிஸ்னோய் பிரித்தார். பிலிப் 8 ரன்களில் போல்ட் ஆனார். இவர் அவர் ஆன அடுத்த ஓவரிலேயே அதிரடியாக விளையாடிய ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஆரோன் ஹார்டி 8 ரன்களில் வெளியேறினார்.

    இதனையடுத்து டிம் டேவிட்- பென் மெக்டெர்மாட் ஜோடி நிதானமாக விளையாடினர். 22 பந்துகள் சந்தித்த பென் மெக்டெர்மாட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 20 பந்தில் 19 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதி வரை போராடிய வேட் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    • அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 46 ரன்னில் அவுட் ஆனார்.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஆஸ்திரேலிய அணி பேட்டிங் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - ருதுராஜ் களமிறங்கினர். வழக்கம் போல ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்த இந்த ஜோடியை ஆரோன் ஹார்டி பிரித்தார். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 8, சூர்யகுமார் யாதவ் 1 என அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனையடுத்து ருதுராஜ் - ரிங்கு சிங் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 32 ரன்களுக்கு வெளியேறினார்.

    இந்நிலையில் ரிங்கு சிங்குடன் -ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். ஜிதேஷ் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த அக்சர் படேல் 0 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 46 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது.
    • இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய லெவன்:

    யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஜிதேஷ் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ஷ்ரேயாஸ் ஐய்யர், ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், முகேஷ் குமார்.

    இந்திய லெவன்:

    யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஜிதேஷ் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ஷ்ரேயாஸ் ஐய்யர், ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், முகேஷ் குமார்.

    ஆஸ்திரேலிய லெவன்:

    ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட் (கேப்டன்), கிறிஸ் கிரீன், பென் துவார்ஷஸ், ஜாசன் பெரென்டோர்ப், தன்வீர் சங்கா.

    • 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
    • வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    சில்ஹெட்:

    நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து வில்லியம்சனின் சதம் மூலம் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 338 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷாண்டோ 105 ரன், ரஹீம் 67 ரன் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டாம் லாதம் 0 ரன், கான்வே 22 ரன் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.


    இதையடுத்து களம் இறங்கிய வில்லியம்சன் 11, நிக்கோல்ஸ் 2, டாம் ப்ளண்டெல் 6, பிளிப்ஸ் 12, ஜெமிசன் 9 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. மிட்செல் 44 ரன்களிலும் சோதி 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    • ரோகித் சிறப்பான கேப்டன் என கங்குலி கூறினார்.
    • உலகக் கோப்பைகள் இருதரப்புத் தொடரை விட வேறுபட்டவை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய தொடர்களில் விளையாட உள்ளது. இந்த 3 வடிவங்களுக்கான கேப்டன்களை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

    டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிக்கு கேஎல் ராகுல், டெஸ்ட் போட்டிக்கு ரோகித் என நியமிக்கப்பட்டனர்.

    2022 டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்குப் பிறகு ரோகித் மற்றும் கோலி இருவரும் டி20-யில் விளையாடவில்லை, மேலும் ஆறு மாதங்களில் டி 20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் திட்டத்தில் இருவரும் இருக்க வேண்டுமா என்று பிசிசிஐ தெளிவாகத் தெரியவில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் யார் என்பது குறித்து பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் உலகக் கோப்பைக்கு ரோகித் கேப்டனாக செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான கங்குலி பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பைகள் இருதரப்புத் தொடரை விட வேறுபட்டவை. ஏனெனில் அழுத்தங்கள் வேறுபட்டவை. அவை இந்த உலகக் கோப்பையில் விதிவிலக்காக இருந்தன. 

    நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டதால் அவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த கேப்டன். எனவே டி20 உலகக் கோப்பை வரை அவர் கேப்டனாக நீடிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2015-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
    • இதுவரை மொத்தம் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (3ஆம் தேதி) நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஷேன் டவ்ரிச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

    32 வயதான ஷேன் டவ்ரிச் 2015-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை மொத்தம் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2020ல் டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். இதுவரை 1 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். நாளை மறுதினம் தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றிருந்த நிலையில் திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித், விராட் கோலி இடம் பெறவில்லை.
    • இனி இவர்கள் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும், டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித், விராட் கோலி இடம் பெறவில்லை. இனி இவர்கள் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இளம் வீரர்கள் அதிகமாக உள்ளதால் விராட் கோலி இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம்தான் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    அப்படி ரோகித் கேப்டனாக செயல்பட்டால், கில் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×