என் மலர்
விளையாட்டு
- நேற்றைய முதல் ஆட்ட முடிவில் 179 ரன்கள் எடுத்திருந்தார்.
- ஒரே ஓவரில் சிக்ஸ், பவுண்டரி என அடுத்தடுத்து விளாசி இரட்டை சதம் அடித்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று 179 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஸ்வால் தொடரந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பஷீர் வீசிய ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி விளாசி இரட்டை சதம் விளாசினார். இதனால் இளம் வயதிலேயே இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்திய மண்ணில் அவருக்கு இது முதல் சதமாகும். முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றி அசத்தியுள்ளார்.
ஜெய்ஸ்வாலுக்கு தற்போது 22 வயது முடிந்து 37 நாட்கள் ஆகிறது. இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
வினோத் காம்ப்ளி 21 வயது 35 நாட்கள், 21 வயது 55 நாட்கள் என இளம் வயதில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்துள்ளார். கவாஸ்கர் 21 வயது 283 நாட்களில் இரட்டை சதம் அடித்துள்ளார்.
- 100-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது.
- இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 100-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது.
டெல்லி அணி 16 ஆட்டத்தில் 10 வெற்றி, 4 தோல்வி, 2 டிராவுடன் 59 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை டெல்லி நெருங்கும். பெங்கால் அணி 16 ஆட்டத்தில் 6 வெற்றி, 8 தோல்வி, 2 டிராவுடன் 39 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- ஆரம்ப காலங்களில் டோனியுடன் தம்மை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்ததால் பலமுறை அறைக்குள் சென்று அழுததாக ரிசப் பண்ட் கூறினார்.
- இளம் வீரர் மீது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்? ஒப்பிட வேண்டும் என பண்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் டெல்லியை சேர்ந்தவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இவர் டோனிக்கு அடுத்தப்படியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டோனியை மிஞ்சும் அளவுக்கு அசத்திய ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார். அதே போல 2021 காபா போன்ற சில மறக்க முடியாத வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார். டோனி ஓய்வு அறிவித்த பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பண்ட் செயல்பட்டார்.
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் டோனியுடன் தம்மை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்ததால் பலமுறை அறைக்குள் சென்று அழுததாக ரிசப் பண்ட் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதலில் ஏன் கேள்விகள் எழுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அணிக்குள் நுழைந்ததும் என்னை டோனியின் மாற்றாக இருப்பார் என்று அனைவரும் பேசினார்கள்.
ஆனால் இளம் வீரர் மீது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்? ஒப்பிட வேண்டும்? 500 போட்டிகளில் விளையாடிய ஒருவருடன் 5 போட்டியில் விளையாடிய ஒருவரை ஒப்பிடக்கூடாது. அந்த வகையில் என்னுடைய பெரிய பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருந்தது. அதில் மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டது மோசமான உணர்வை கொடுத்தது.
அதனால் 20 - 21 வயதிலேயே மனதளவில் மூச்சு விட முடியாத அளவுக்கு அழுத்தத்தை சந்தித்தேன். அறைக்குள் சென்று அழுவேன். மொஹாலியில் ஸ்டம்ப்பிங்கை நான் தவற விட்ட போது ரசிகர்கள் டோனி டோனி என்று முழங்கினர். இருப்பினும் டோனியுடனான என்னுடைய உறவை விவரிப்பது கடினமாகும். அவருடன் நான் எப்போதும் சுதந்திரமாக பேசி மற்றவர்களுடன் விவாதிக்காததை கூட விவாதிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரிஷப் பண்ட் சொல்வது போல 500 போட்டிகள் விளையாடியவருடன் எப்படி ஒப்பிட முடியும். டோனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய முதல் சில போட்டிகளில் நிறைய கேட்ச் மிஸ், ஸ்டெம்பிங் மிஸ் செய்துள்ளார். ஒரு கேட்ச் மிஸ் செய்யும் போது நெஹ்ரா கூட டோனியை திட்டியுள்ளார். அந்த வீடியோ கூட சமூக வலைதளங்களில் வைரலானது.
இதேபோல கேஎல் ராகுல் கீப்பிங் செய்யும் போது கூட கேட்ச் மிஸ் செய்தால் உடனே ரசிகர்கள் டோனி டோனி என கூச்சளிடுவது நடந்திருக்கிறது. புதிதாக அணிக்கு வரும் ஒவ்வொருவரும் பதட்டத்துடன் தான் விளையாடுவார்கள். இதுபோன்ற பிரச்சனை இருப்பது வழக்கம்தான். ஆனால் இதை வைத்து கொண்டு மற்றவருடன் ஒப்பிடுவது சரியாகாது.
- இதை இரட்டை சதமாக மாற்றி கடைசி வரை அணிக்காக விளையாட விரும்புகிறேன்.
- தற்போதைய நிலைமையிலிருந்து நாளை இன்னும் இந்திய அணியை சிறப்பாக மீட்க விரும்புகிறேன்.
இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 179 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த இன்னிங்சை கடைசி வரை நின்று பெரியதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ராகுல் சார் மற்றும் ரோகித் பாய் எனக்கு கொடுத்துள்ளனர் என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் ஒவ்வொரு செஷனாக விளையாட விரும்பினேன். அவர்கள் நன்றாகப் பந்துவீசும்போது, நான் அந்த ஸ்பெல்லைக் கடக்க விரும்பினேன். ஆரம்பத்தில், விக்கெட் ஈரமாக இருந்தது மற்றும் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இருந்தது. சிறிது சீம் இருந்தது. அதில் நான் சுமாரான பந்துகளை அடித்து கடைசி வரை விளையாட முயற்சித்தேன். இதை இரட்டை சதமாக மாற்றி கடைசி வரை அணிக்காக விளையாட விரும்புகிறேன்.
குறிப்பாக தற்போதைய நிலைமையிலிருந்து நாளை இன்னும் இந்திய அணியை சிறப்பாக மீட்க விரும்புகிறேன். காலையில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்த பிட்ச் பின்னர் செட்டிலானது. இந்த இன்னிங்சை கடைசி வரை நின்று பெரியதாக மாற்றச் சொன்னார்கள். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருங்கள் என ராகுல் சார் மற்றும் ரோகித் பாய் எனக்கு நம்பிக்கை அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை குவித்துள்ளது.
- ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஷ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஷ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 257 பந்துகளை சந்தித்து 17 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 179 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக இரண்டாவது இடத்தில் இருக்கும் சுனில் கவாஸ்கரின் (179) சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். முதல் இடத்தில் கருண் நாயர் உள்ளார். அவர் 2016-ம் ஆண்டு ஒரே நாளில் 232 ரன்கள் குவித்திருந்தார். 3-வது இடத்தில் முகமது அசாருதீன் (175) உள்ளார்.
இந்திய மண்ணில் ஜெய்ஸ்வால் முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய மண்ணில் இளம் வயதில் சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் (22 ஆண்டுகள் 36 நாட்கள்) படைத்துள்ளார். இவருக்கு முன்னர் சச்சின் (19 ஆண்டுகள் 293 நாட்கள்) மற்றும் வினோத் காம்ளி (21 ஆண்டுகள் 32 நாட்கள்) உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக 150+ ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் 4-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 3 இடங்கள் முறையே கம்பீர் (179 ரன்கள் மொகாலி 2008), கேஎல் ராகுல் (199 ரன்கள் சென்னை), ரோகித் சர்மா (161 ரன்கள் சென்னை).
- ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 198 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கொழும்பு:
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இலங்கை பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரஹ்மத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 62.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் அதிகபட்சமாக விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்துள்ளது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணாரத்னே 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
- முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் அதிரடியால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் சேர்த்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் உணவு இடைவேளை விடப்பட்டது. இதனையடுத்து இரு அணி வீரர்களும் உணவு சாப்பிட சென்றனர். மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர் - ரசிகைகளும் உணவு மற்றும் குளிர்பானம் அருந்துவதற்கு சென்றனர்.
ஆனால் இங்கிலாந்து ரசிகர் - ரசிகைகள் ஸ்டேடியத்துக்கு வெளியே சென்று அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குள் புகுந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
- இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான், பஷிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்களிலும், அடுத்து வந்த சுப்மன் கில் களம் 34 ரன்களிலும் ஷ்ரேயஸ் அய்யர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் தனது 2-வது சதத்தை விளாசினார்.
ஜெய்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய ராஜத் பட்டிதார் 32 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அக்ஷர் படேல் (27) மற்றும் பரத் (17) கட் ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷிர், ரெஹான், 2 விக்கெட்டும் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பர்றினர். ஜெய்ஸ்வால் 170 ரன்களுடனும் அஸ்வின் 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி வீரர்கள் தேவையில்லாமல் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- ஸ்டீவ் ஸ்மித்- க்ரீன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தனர்.
- இறுதியில் ஆஸ்திரேலிய அணி 38.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று காலை மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் பர்ட்லெட் பந்து வீச்சில் வெஸ்ட்இண்டீஸ் திணறியது. அவரது பந்தில் அத்தானாஸ் (5 ரன்), கிரீவ்ஸ் (1), கேப்டன் ஷாய்ஹோப் (12) ஹாட்ஜ் (11), ஆகியோர் அவுட் ஆனார்கள். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 59 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.
இதனையடுத்து ரோஸ்டன் சேஸ்- கீசி கார்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். இருவரும் அரை சதம் விளாசினார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது. ரோஸ்டன் சேஸ் 59 ரன்னிலும் கீசி கார்டி 88 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் 4 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய இங்கிலிஸ் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஸ்டீவ் ஸ்மித்- க்ரீன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 38.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 4-ந் தேதி நடக்கிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சமர் ஜோசப்பின் சிறப்பான பந்து வீச்சால் சமநிலையில் முடிந்தது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிளான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் சமர் ஜோசப்பின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்த சமர் ஜோசப்பின் உரிமை ஒப்பந்தத்தை தற்போது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சர்வதேச ரிட்டைனர் ஒப்பந்தமாக மேம்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளம் சமர் ஜோசப்புக்கும் கிடைக்கும்.
அத்துடன் இந்த ஒப்பந்தத்தால் வரும் காலங்களில் வெஸ்ட் இண்டீஸ்க்காக நிறைய போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும். அதே போல 2024 டி20 உலகக் கோப்பையில் அவருடன் சேர்ந்து வேலை செய்ய உள்ளதாக பயிற்சியாளர் டேரன் சமி அறிவித்துள்ளார்.
- ரோகித் சர்மா 14 ரன்னும், சுப்மன் கில் 34 ரன்னும் ஆட்டமிழந்தனர்.
- பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்களிலும், சுப்மன் கில் களம் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 27 ரன்களிலும் அவுட்டானார்.
இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் தனது 2வது சதத்தை அடித்து அசத்தினார். தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 63 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது.
- ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்மிழந்து ஏமாற்றம் அளித்தார்.
- ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் சுப்மன் கில் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்டில் விளையாடிய ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது சிராஜ் ஆகியோர் இந்த டெஸ்டில் இடம் பெறவில்லை.
ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜேக் லீச், மார்க் வுட் இடம் பெறவில்லை. சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பிடித்தனர்.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் 15 ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 18-வது ஓவரில் ரோகித் சர்மா 41 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பஷீர் அறிமுக போட்டியிலேயே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது இந்தியா 40 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். இவர் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் சுப்மன் கில் 46 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 89 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 30-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரிகள் விளாசி அரைசதம் கடந்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 31 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.






