search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2-வது டெஸ்ட்: மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 103/2- ரோகித், கில் ஏமாற்றம்
    X

    2-வது டெஸ்ட்: மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 103/2- ரோகித், கில் ஏமாற்றம்

    • ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்மிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    • ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் சுப்மன் கில் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்டில் விளையாடிய ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது சிராஜ் ஆகியோர் இந்த டெஸ்டில் இடம் பெறவில்லை.

    ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜேக் லீச், மார்க் வுட் இடம் பெறவில்லை. சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பிடித்தனர்.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் 15 ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 18-வது ஓவரில் ரோகித் சர்மா 41 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பஷீர் அறிமுக போட்டியிலேயே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது இந்தியா 40 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். இவர் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் சுப்மன் கில் 46 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 89 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 30-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரிகள் விளாசி அரைசதம் கடந்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 31 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.

    ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    Next Story
    ×