என் மலர்
விளையாட்டு
- அதிரடியாக விளையாடிய மந்தனா 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.
தம்புல்லா:
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தமாக விளையாடிய ஷபாலி வர்மா 19 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமா செத்ரி 9, கவூர் 11 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்தினார். அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 60 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரிச்சா கோஷ் மற்றும் பூஜா அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ரூட் 83 ரன்கள் குவித்தார்.
- இதன் மூலம் பிரைன் லாரா சாதனையை ரூட் முறியடித்துள்ளார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 282 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 54 ரன்களுடன் இங்கிலாந்து தள்ளாடியது. அதனை தொடர்ந்து ஜோ ரூட் (87 ரன்), கேப்டன் ஸ்டோக்ஸ் (54 ரன்), ஜாமி சுமித் (95 ரன்), கிறிஸ் வோக்ஸ் (62 ரன்) ஆகியோரது அரைசதத்தால் இங்கிலாந்து அணி 75.4 ஓவர்களில் இங்கிலாந்து 376 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இந்த போட்டியில் அடித்த 87 ரன்கள் குவித்ததன் மூலம் ஜோ ரூட் தனது டெஸ்ட் கெரியரில் 143 போட்டிகளில் 12027* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்துள்ளர். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 7-வது வீரராக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் பிரையன் லாரா 11953 ரன்களுடன் 7-வது இடத்தில் இருந்தார். தற்போது அவரின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள ஜோ ரூட் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
- பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
- இன்று டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்
பங்கேற்றார்.
8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.
ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார்.
- பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் வென்றார்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுளா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் அகுளா 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- 7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது.
- டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தம்புல்லா:
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியாவும், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது. அதே சமயம் ஏற்கனவே இறுதி சுற்றில் 5 முறை இந்தியாவிடம் உதை வாங்கியுள்ள இலங்கை அணி அதற்கு பழிதீர்த்து முதல்முறையாக பட்டம் வெல்வதற்கு தீவிரம் காட்டுகிறது.
எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
- குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று நடந்தது.
- இதில் இத்தாலி வீரர் முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஜாக்ரெப்:
குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று நேற்று நடந்தது.
இதில் இத்தாலில் வீரர் முசெட்டி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்தித்தார்.
இந்தப் போட்டியின் முடிவில் பிரான்சிஸ்கோ 2-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- சேப்பாக் அணி 6 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
- மதுரை அணி ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டது.
8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றனர்.
இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சேப்பாக் அணி 6 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி 2-வது இடத்துக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. மதுரை அணி ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டது.
- இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.
- பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
பாரீஸ்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான இளவேனில் மற்றும் ரமிதா ஜிண்டால் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.
இதில் ரமிதா ஜிண்டால் சிறப்பாக செயல்பட்டு 5-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான இளவேனில் 10-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.
- தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.
- இன்று நடந்த போட்டியில் தொடக்கத்தில் பன்வார் பன்வார் முன்னிலையில் இருந்தார்
ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளது. கொண்டாட்டங்களுக்கு களைகட்டிய நிலையில் தற்போது போட்டிகளில் வீரர்களும் ரசிகர்களும் மும்முரமாகியுள்ளனர்.
மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் முதலாவது நாளான இன்று நடைபெற்ற துடுப்புப்படகு போட்டியான ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4 ஆவது இடம் பிடித்தார்.
4 வது இடம் பிடித்ததால் தகுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இழந்துள்ள நிலையில் தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.
இந்த போட்டியில், 7:12.41 நிமிடங்களில் இலக்கை கடந்து 2 வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார் பல்ராஜ் பன்வார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பன்வார் முன்னிலையில் இருந்தபோதிலும் இறுதிக்கட்டத்தில் மொனாக்கோ வீரர் குவென்டின் அடோஃனெல்லி [Quentin Antognelli] அவரை முந்தியதால் இரண்டாம் இடத்திற்கு பன்வார் சென்றார். இதனைத்தொடர்ந்தே மொனாக்கோ மற்றும் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
- பி.வி.சிந்து ஏற்கனவே 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நண்பகல் 12.50 மணிக்கு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா உடன் மோதினார்.
இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.
ஜூலை 31 ஆம் தேதி பி.வி.சிந்து தனது இரண்டாவது ஆட்டத்தில் எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொள்கிறார்.
பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
- கோலி 125 போட்டிகளில் விளையாடி மைல்கல்லை கடந்தார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ். முழு நேர கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தனது பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 43 ரன்களில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்களை விளாசி இருக்கிறார். போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, போட்டியின் ஆட்ட நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வென்றதன் மூலம் சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். மறுபக்கம் விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை கடந்தார்.
விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டி 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டி முடிந்ததும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள்:
சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் 16 முறை (இந்தியா)
விராட் கோலி 126 போட்டிகளில் 16 முறை (இந்தியா)
சிக்கந்தர் ராசா 91 போட்டிகளில் 15 முறை (ஜிம்பாப்வே)
முகமது நபி 129 போட்டிகளில் 14 முறை (ஆப்கானிஸ்தான்)
ரோகித் சர்மா 159 போட்டிகளில் 14 முறை (இந்தியா)
- இந்திய வீராங்கனை பிரீத்தி பன்வர் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார்.
- இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
பாரீஸ், ஜூலை. 28-
பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் இந்தியா சார்பில் 2 வீரர்களும், 5 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 7 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்திய வீராங்கனை பிரத்தி பன்வர் இந்திய நேரடிப்படி நள்ளிரவு 12 மணிக்கு நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார். இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
20 வயதான அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவை சேர்ந்த யெனி அரியாசை சந்திக்கிறார். இந்த ஆட்டம் 31-ந்தேதி நடக்கிறது.






