என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை 162 ரன்களை எடுத்தது.

    பல்லகெலே:

    இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் மெண்டிஸ், நிசாங்க இறங்கினர். நிசாங்க 10 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 26 ரன்னும் எடுத்தனர்.

    ஓரளவு சிறப்பாக ஆடிய குசால் பெராரா அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 282 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 75.4 ஓவர்களில் 376 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 94 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் 94 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் அடித்தது. அலிக் அத்தானஸ் 5 ரன்களுடனும், மைக்கேல் லூயிஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலிக் அத்தானஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து லூயிஸ் -கவேம் ஹாட்ஜ் ஜோடி நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர். லூயிஸ் 57 ரன்னிலும் ஹாட்ஜ் 55 ரன்னில் அவுட் ஆகினர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 175 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு 81 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டோக்ஸ் - டக்கட் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஸ்டோக்ஸ் 24 பந்தில் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 7.2 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

    • அயர்லாந்து பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்டில் விளையாடியது.
    • இதில் அயர்லாந்து சிறப்பாக செயல்பட்டு டெஸ்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    பெல்பாஸ்ட்:

    அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 210 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பிரின்ஸ் மஸ்வாரே 74 ரன்கள் எடுத்தார்.

    ஜாய்லார்டு கும்பி 49 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 35 ரன்னும் எடுத்தனர்.

    அயர்லாந்து சார்பில் பாரி மெக்கார்த்தி, ஆண்டி மெக்பிரைன் தலா 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தொடர்ந்து ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 250 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் மூர் 79 ரன் சேர்த்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் முசராபானி, தனகா சிவாங்கா தலா 3 விக்கெட்டும், சடாரா, சீன் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 40 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 197 ரன்களில் ஆல் அவுட்டானது.

    டியான் மீயர்ஸ் அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார். சீன் வில்லியம்ஸ் 40 ரன்கள் சேர்த்தார்.

    அயர்லாந்து சார்பில் ஆண்டி மெக்பிரைன் 4 விக்கெட்டும், மார்க் அடைர், கிரெய்க் யங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. 3-வது நாள் முடிவில் அயர்லாந்து 33 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

    இந்நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரின் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர்.

    6வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த நிலையில் டக்கர் 56 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், அயர்லாந்து அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆண்டி மெக்பிரின் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன்மூலம் அயர்லாந்து அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருது ஆண்டி மெக்பிரினுக்கு வழங்கப்பட்டது.

    • முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் கில்லுக்கு பதிலாக சாம்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

    பல்லகெலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வீரர் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் அரை சதம் விளாசினார்.
    • மதுரை தரப்பில் கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி முதலில் விளையாடிய மதுரை அணியில் லோகேஸ்வர் அரைசதம் விளாசினார். அவரை தொடர்ந்து நிஷாந்த 37, சரவணன் 25, கவுசிங் 43 என ரன்கள் எடுத்தனர். இதனால் மதுரை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.

    சேப்பாக் தரப்பில் அபிஷேக், பாபா அப்ரஜித், சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

    இதனையடுத்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் - சந்தோஷ் குமார் களமிறங்கினர். இதில் 6 ரன்னில் ஜெகதீசன் அவுட் ஆனார். அடுத்து வந்த அப்ராஜித் அதிரடியாக விளையாடி 2 சிக்சர் 1 பவுண்டரி விளாசி 17 ரன்னில் வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து சந்தோஷ் - பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சந்தோஷ் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் (52) அரை சதம் விளாசி அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்.

    இதனால் சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதனால் மதுரை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மதுரை தரப்பில் கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • முதல் செட்டை இழந்த சுமித் நாகல், 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
    • பரபரப்பாக சென்ற 3-வது செட்டை மௌடெட் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் இன்று ஆண்களுக்கான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல்- பிரெஞ்சு வீரரான கொரெண்டின் மௌடெட் உடன் மோதினார்.

    முதல் செட்டை இழந்த சுமித் நாகல், 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். யாரு வெற்றி பெறுவார் என்ற நிலையில் 3-வது சுற்று நடைபெற்றது. பரபரப்பாக சென்ற 3-வது செட்டை மௌடெட் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    இதனால் 6-2, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை மௌடெட் வீழ்த்தினார். இந்த ஆட்டம் இரண்டு மணி நேரம் 28 நிமிடங்களில் நடைபெற்றது. 

    • முதலில் ஆடிய இந்தியா 165 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 167 ரன்கள் எடுத்து வென்றது.

    தம்புல்லா:

    9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 60 ரன்கள் குவித்து அவுட்டானார். ரிச்சா கோஷ் 30 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார்.

    ஹர்ஷிகா சமரவிக்ரமா பொறுப்புடன் ஆடி 69 ரன்கள் அடித்தார்.

    இறுதியில் இலங்கை அணி 18.4 ஓவரில் 2விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

    5 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் அர்ஜூன் பாபுதா வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் வென்றார்.

    துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மானு பாகெர் வெண்கலம் வென்று அசத்தினார்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதினார். இதில் பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டி நடந்தது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் அர்ஜூன் பாபுதா வென்றார்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா பங்கேற்றார்.

    இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.

    இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான சந்தீப் சிங் 12-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.

    நாளை மதியம் 3.30 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
    • குத்துச்சண்டையின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரின் வென்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்

    பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பதக்கம் வென்றது குறித்து மானு பாகெர் கூறியதாவது:

    டோக்கியோவிற்குப் பிறகு நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அதைக் கடக்க எனக்கு மிக நீண்ட காலம் பிடித்தது. வெளிப்படையாகச் சொன்னால், இன்று நான் எவ்வளவு நன்றாக உணர்கிறேன் என்பதை என்னால் விளக்க முடியாது.

    என்னிடமுள்ள முழு ஆற்றலுடன் நான் போராடினேன். நான் வெண்கலத்தை வென்றதற்கு உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

    நான் பகவத் கீதையைப் படித்தேன், நான் செய்ய வேண்டியதை எப்போதும் செய்ய முயற்சித்தேன். எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். நாம் விதியை எதிர்த்துப் போராட முடியாது என தெரிவித்தார்.

    • அதிரடியாக விளையாடிய லோகேஸ்வர் 55 ரன்கள் விளாசினார்.
    • சேப்பாக் தரப்பில் அபிஷேக், பாபா அப்ரஜித், சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

    8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி மதுரை அணியின் தொடக்க வீரர்களாக லோகேஸ்வர்- நிஷாந்த் களமிறங்கினர். இதில் லோகேஸ்வர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இதனால் பவர் பிளேயில் 51 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய லோகேஸ்வர் அரைசதம் விளாசினார். அவர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்த சிறிது நேரத்தில் நிஷாந்த 37 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சரவணன் அதிரடியாக விளையாடிய 13 பந்தில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து சசிதேவ் 2 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து கவுசிங்- சதுர்வேத் அதிரடியாக விளையாடினர். இதனால் மதுரை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.

    சேப்பாக் தரப்பில் அபிஷேக், பாபா அப்ரஜித், சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

    • துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் வெண்கலம் வென்றார்.
    • இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் நிகாத் ஜரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மன் வீராங்கனையை எதிர்கொண்டார்.

    இதில் நிகாத் ஜரின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 28 வயதான அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்துக்கு முன்னேறினார்.

    ×