என் மலர்
விளையாட்டு
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை வென்றார்.
- இதன்மூலம் இகா ஸ்வியாடெக் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்லோவாகியா வீராங்கனை அன்னா கரோலினாவுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வென்றார்.
- கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகருடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
- பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
- இந்தப் போட்டியில் இந்தியா 3 கோல்கள் அடித்தது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.
இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. அபிஷேக் மற்றும் ஹர்மன்பிரித் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இரண்டாவது பாதியில் ஹர்மன்பிரித் மேலும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன்மூலம் 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடம்பிடித்தது.
ஏற்கனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
- ஷிவம் டுபே ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷிவம் டுபே ஆகியோர் இடம் பிடித்தனர்.
இலங்கை அணியின் பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அவிஷ்கா பெர்னாண்டோ 1 ரன் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறினார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்னில் வெளியேறினார்.

நிசாங்கா ஆட்டமிழக்கும்போது இலங்கை அணி 26.3 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது வீரராக களம் இறங்கிய துனித் வெலாலகே அரைசதம் அடிக்க இலங்கை அணி 200 ரன்களை தாண்டியது. இறுதியாக 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. வெலாலகே 65 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முகமது சிராஜ், ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
- துப்பாக்கி சுடுதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மனு பாக்கர்.
பாரீஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இதற்கிடையே, இன்று மதியம் நடந்த வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா-தீரஜ் ஜோடி 5-1 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில், இன்று இரவு நடந்த வில்வித்தை காலிறுதி போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா-தீரஜ் ஜோடி 5-3 என்ற கணக்கில் ஸ்பெயின் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
- இந்திய வீராங்கனை மனு பாக்கர் 590 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.
- இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச்சுற்று பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். மொத்தம் 8 பேர் பங்கேற்றனர்.
இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 590-24x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
ஹங்கேரி வீராங்கனை 592 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 18-வது இடம்பிடித்தார்.
ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் பதக்கம் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியா வீரர் ஜோகோவிச் வென்றார்.
- ஸ்பெயின் வீரர் அல்காரஸ் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-3) என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியுடன் மோதுகிறார்.
- ரெய்னா, டோனி ஆகியோரை ‘தல’ என்றும், ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
- இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்துள்ளார்.
ஆம்ஸ்டர்டாம்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் 'தல' என்றும், 'சின்ன தல' என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர்.
இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வை அறிவித்ததும், அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
சி.எஸ்.கே .அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் எம்.எஸ்.டோனி கையெழுத்திட்ட 7-ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
- இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.
- ரிஷப் பண்ட் விளையாடவில்லை. ஷிவம் டுபே விளையாடுகிறார்.
இந்திய அணி தலா மூன்று டி20, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றியது.
இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இதில் இலங்கை அணி கேப்டன் அசலங்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் களம் இறங்குவார்? என்பதில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் கே.எல். ராகுல் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணி விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மல் கில், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), 6. வாஷிங்டன் சுந்தர், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. அர்ஷ்தீப் சிங், 10. முகமது கிராஜ், 11. ஷிவம் டுபே.
இலங்கை அணி விவரம்:-
1. பதும் நிசாங்கா, 2. அவிஷ்கா பெர்னாண்டோ, 3. குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), 4. சதீரா சமரவிக்ரமா, 5. சரித் அசலங்கா (கேப்டன்), 6. ஜனித் லியானகே, 7. வனிந்து ஹசரங்கா, 8. துனித் வெலாலகே, 9. அகிலா தனஞ்ஜெயா, 10, அசிதா பெர்னாண்டோ, 11. முகமது சிராஸ்.
- கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
- பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
பாரீஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா-தீரஜ் ஜோடி
5-1 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.
- ஆலோசனை கூட்டம் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.
- விதிகளில் மாற்றம் கொண்டுவர சென்னை அணி கோரிக்கை.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கடந்த புதன் கிழமை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக கடந்த இரு நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி தக்கவைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக ஐபிஎல் விதிகளில் மாற்றம் கொண்டுவர சென்னை அணி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி ஐபிஎல் முதல் சீசன் தொடங்கிய 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவர சிஎஸ்கே அணி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவரும் போது சென்னை அணியில் எம்எஸ் டோனி தக்கவைக்கப்படலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி வந்தால், அவரை அன்கேப்டு வீரர் (அதாவது தேசிய அணிக்காக விளையாடாத வீரர்) ஆக கருத்தில் கொள்ளப்படுவார் என்ற விதிமுறை ஐபிஎல் தொடரின் முதலாவது சீசன் துவங்கியதில் இருந்தே அமலில் இருந்து வந்தது. இதனை மீண்டும் அமலுக்கு கொண்டுவரவே சிஎஸ்கே ஆர்வம் காட்டுகிறது. எனினும், இதற்கு பல அணிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 15, 2020 ஆம் ஆண்டு எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது ரவீந்திரா ஜடேஜாவுக்கு அடுத்தப்படியாக சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரராக டோனி இருந்தார். அன்கேப்டு வீரருக்காக ஒரு அணி ரூ. 4 கோடி வரை செலவிடும்.
இதேபோன்ற விதிமுறை 2025 ஏலத்திற்கு முன் அமலுக்கு வரும் பட்சத்தில், இதை கொண்டே சிஎஸ்கே அணியில் டோனி தக்கவைக்கப்படுவார் என்று தெரிகிறது. எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்டகாலம் விளையாடி வரும் வீரர்களுக்கு அன்கேப்டு அந்தஸ்தை வழங்குவதற்கு மற்ற ஐபிஎல் அணிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
- பலர் விளையாட்டு நட்சத்திரங்களை பார்க்கவே செல்கின்றனர்.
- மன உறுதியுடன் இருக்க வேண்டும்.
இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். இந்த போட்டிக்கு பிறகு தேசிய அணிக்காக விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகன் போபண்ணா அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்தது.
ஓய்வு பெற்றுள்ள ரோகன் போபண்ணா இந்திய டென்னிஸ் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசும் போது, "உண்மையை கூற வேண்டுமெனில் இந்தியா விளையாட்டை மையப்படுத்திய நாடு இல்லை. பலர் விளையாட்டு நட்சத்திரங்களை பார்க்கவே செல்கின்றனர்."
"நான் பல நிறுவனங்களை அணுகி எனக்கு ஸ்பான்சர் செய்யுங்கள் என கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் இந்த விளையாட்டு நாட்டில் காண்பிக்கப்படுவதில்லை என கூறி ஸ்பான்சர் செய்ய மறுத்துவிட்டனர்."
"கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் தொடரின் போது, எனது அணியினர் ஊடகத்தாரை சந்திக்கும் போது எனது போட்டியை ஒளிபரப்பக் கோரினர். ஆனால் அவர்கள் இதில் ஒற்றை இந்தியர் மட்டுமே இருப்பதால் காண்பிக்க முடியாது என்று கூறினர்."
"நாங்கள் தினந்தோரும் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகின்றோம். சமூக வலைதளங்கள் சிறப்பான ஒன்று தான், ஆனால் அதில் கேலி கிண்டல்களும் இருக்கத் தான் செய்கின்றன. அனைவரும் அதில் அங்கம் என நினைத்துக் கொள்கின்றனர். இதனால் தினமும் விழித்துக் கொள்ளும் போது, மன உறுதியுடன் இருக்க வேண்டும்."
"டென்னிஸ் குறித்து என் மனைவி எனக்கு எந்த அறிவுரையும் கூறமாட்டார். மாறாக சக டென்னிஸ் வீரர்களுடன் எனது தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தியுள்ளார்," என்று தெரிவித்தார்.






