என் மலர்
விளையாட்டு
- பிவி சிந்து சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார்.
- ஜியாவோ அடுத்த போட்டியில் சென் யுபெய்-யை எதிர்கொள்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டு விளையாடினார்.
இந்த போட்டியில், 21-19, 21-14 என்ற செட் கணக்கில், சிந்துவை வீழ்த்தி ஜியாவோ வெற்றி பெற்றார். இதற்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் வென்ற பிவி சிந்து இந்த முறை பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழக்கும் வகையில் வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற சீன வீராங்கனை ஜியாவோ அடுத்த போட்டியில் மற்றொரு சீன வீராங்கனையான சென் யுபெய்-யை எதிர்கொண்டு விளையாட இருக்கிறார். இந்த போட்டி நாளை (ஆகஸ்ட் 3) நடைபெற இருக்கிறது.
1992 ஆம் ஆண்டு பாரிசிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதல்முறையாக பேட்மிண்டன் சேர்க்கப்பட்டது. அப்போது முதல் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை பேட்மிண்டனில் வென்றுள்ளது. இதில் பிவி சிந்து (ரியோ 2016-இல் வெள்ளி, டோக்கியோ 2020-இல் வெண்கலம்) மற்றும் சாய்னா நேவால் (லண்டன் 2012-இல் வெண்கலம்) வென்றுள்ளனர்.
- கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
- ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது- இத்தாலி வீராங்கனை.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி- அல்ஜீரியாவின் செலிஃப் ஆகியோர் மோதினார்கள்.
கெலிஃப் பெண்கள் பிரிவில் விளையாடினாலும் ஆண்கள் போன்ற பலம் கொண்டவர். போட்டி தொடங்கியதும் கெலிஃப் அதிரடி தாக்குதலில் இறங்கினார். இத்தாலி வீராங்கனை கரினி எதிர்பார்க்காத வகையில் முகத்தை நோக்கி வேகமாக ஒரு பஞ்ச் விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை நிலைகுலைந்தார். அத்துடன் இனிமேல் எதிர்த்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனால் 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது.
இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதை இத்தாலி வீராங்கனை கரினியால் ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார். மற்றும் கெலிஃப் கைக்கொடுக்க மறுத்துவிட்டார்.
கடந்த வருடம் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியின்போது கெலிஃப் ஆணா? பெண்ணா? என்ன சந்தேகம் எழும்பியது. அப்போது அறிவிக்கப்படாத பாலின தகுதி பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த பரிசோதனையில் அவர் தோல்வியடைந்தார். இதனால் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் இடம் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது. என்னடைய கண்ணில் ரத்தத்துடன் கடைசி வரைக்கும் சண்டையிட்டேன். என்ன விலை கொடுத்தாவது வெற்றி பெற விரும்பினேன். ஏனென்றால் எனது தந்தைக்கா..." என்றார் இத்தாலி வீராங்கனை கரினி.
கெலிஃப் உயிரியல் ரீதியாக XY குரோமோசோம்களைக் கொண்ட ஒரு ஆண் குத்துச்சண்டை வீரர் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வென்றார்.
- ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-3, 7-6 (9-7) என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியிடம் 5-7, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.
- இதில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
மும்பை:
பிரான்சின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவின் இறுதிப்போட்டி இன்று மதியம் நடந்தது.
இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.
இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகள் பெற்றார்.
சீன வீரர் யுகுன் லியு 463.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 461.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த பதக்கத்துடன் இந்தியா 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்த மூன்று பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் போட்டி மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
குசாலேவுடன் குடும்பத்திரை போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
- மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது.
இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், டெல்லி கேபிடல் அணி உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படலே ஆகியோர் கலந்து கொண்டனர்.
மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரான ஷாருக்கானுக்கும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை ரீ-டெய்ன் செய்யலாம் என்ற விவாதத்தில் மிக குறைவான வீரர்களையே ரீ-டெய்ன் செய்யவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்த கருத்தால் ஷாருக்கானுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அப்பது ஒரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று வாடியா தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே எனக்கு ஷாருக்கை தெரியும்.
அவருடைய குடும்பத்தை நான் அறிவேன். அவர் மீதும் குடும்பத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
நாங்கள் வெகுதூரம் பின்னோக்கிச் செல்கிறோம், இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.
கூட்டத்தில் பேசியது குறித்து நான் அதைச் சொல்லப் போவதில்லை. எல்லோரும் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். நான் சொன்னது போல், நீங்கள் அனைத்து பங்குதாரர்களையும் பார்க்க வேண்டும். இது ஒரு நல்ல அமர்வு.
ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஊடகங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அதுவே எங்கள் நோக்கம். அதனால்தான் நாங்கள் இங்கே இருந்தோம்.
இம்பாக்ட் பிளேயர், கேப்டு, அன் கேப்ட் பிளேயர் குறித்து எல்லாம் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 150 கோடி மக்கள் தொகை கொண்ட நம்மால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பது உண்மையல்ல.
- 150 கோடி மக்களின் திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்க முடியவில்லை.
ஒலிம்பிக் என்று வந்தாலே இந்தியா பதக்கம் வெல்லுமா?... என்ற கேள்வி இந்திய மக்களிடம் ஓடுவதில் சந்தேகம் ஏதும் இல்லை. கடந்த முறை ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்கள் வென்றது. இதுதான் ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை ஆகும்.
தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
150 கேடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒலிம்பிக்கில் மட்டும் பதக்கம் வெல்ல சிரமப்படுகிறது என பெரும்பாலானோர் கேட்பது உண்டு. அதற்கு காரணம் அடிமட்ட அளவில் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதில் தோல்வியடைந்துள்ளோம். இதுதான் முக்கிய காரணம் இந்தியாவின் முன்னணி கால்பந்து வீரராக திகழ்ந்த சுனில் சேத்ரி வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சுனில் சேத்ரி கூறியதாவது:-
150 கோடி மக்கள் தொகை கொண்ட நம்மால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பது உண்மையல்ல. 150 கோடி மக்களின் திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்க முடியவில்லை. சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுகின்றன. அவர்கள் நம்மை விட வெகு தூரத்தில் உள்ளனர்.
நம்முடைய நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை என மக்கள் சொல்கிறார்கள. இது 100 சதவீதம் உண்மை. உதாரணத்திற்கு அந்தமானை சேர்ந்த ஐந்து வயது சிறுவனுக்கு கால்பந்து அல்லது ஈட்டி எறிதல் அல்லது கிரிக்கெட்டில் திறமை இருக்கும். அது அவனுக்குக் கூட தெரியாது. ஓரிருமுறை முயற்சி செய்தபின், சரியான வழிக்காடுதல் இன்றி அதை விட்டுவிட்டு. கால் சென்டரில் வேலை பார்க்க சென்றுவிடுவான்.
அடிமட்ட அளவில் திறமையை அடையாளம் கண்டு, திறமையை சரியான நேரத்தில் மற்றும் சரியான நடைமுறையுடன் வளர்ப்பதில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். இதை சொல்வதற்காக மக்கள் என்னை கொலை செய்ய விரும்பினாலும் நான் கவலைப்பட போவதில்லை. இதான் யதார்த்தம்.
இவ்வாறு சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
- இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாயுடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-12 என கைப்பற்றினார். 2வது செட்டிலும் லக்ஷயா சென் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.
இறுதியில், லக்ஷயா சென் 21-12, 21-6 என வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.
- தேவைப்படும் போதெல்லாம் ரசிகர்கள் என்னைப் பாராட்டுவார்கள்.
- எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார் டோனி.
புதுடெல்லி:
இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது கேப்டனாக செயல்பட்டவர் எம்.எஸ்.டோனி. ஐ.பி.எல். தொடரிலும் சி.எஸ்.கே. அணியை திறம்பட வழிநடத்தி வந்தவர் டோனி. எனவே ரசிகர்கள் இவரை செல்லமாக தல டோனி என அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சி.எஸ்.கே. அணியின் கேப்டனுமான எம்.எஸ்.டோனியிடம், ரசிகர்கள் தல என அன்பாக அழைப்பதற்கான காரணம் குறித்து தனியார் நிறுவனம் கேள்வி எழுப்பியது. அப்போது அவர் கூறியதாவது:
சமூக வலைதளங்களில் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால் எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
என் ரசிகர்களை நான் பாதுகாக்க வேண்டிய போதெல்லாம் அதை செய்கிறேன். தேவைப்படும் போதெல்லாம் ரசிகர்கள் என்னைப் பாராட்டுவார்கள். எனவே நான் யூகிக்கும் எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே இதுவும் இதன் ஒரு பகுதியாகும்.
எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் மிகவும் சுறுசுறுப்பான சமூக ஊடக பயனராக இல்லாவிட்டாலும், நான் இடுகையிடுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள், அவர்கள் அதை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Dhoni talking about - Thala for a Reason ?❤️ pic.twitter.com/7EWisDtXH2
— MAHIYANK™ (@Mahiyank_78) August 1, 2024
- இன்று நடந்த துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றார்.
- ஹாக்கி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா பெறும் 3வது பதக்கம் இதுவாகும்.
இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-வூ யிக் சோ ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-13 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக மலேசிய ஜோடி 21-14 என இரண்டாவது செட்டை கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை மலேசிய ஜோடி 21-16 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம்
இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறியது.
- இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது.
- பதிரனாவின் வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.
இலங்கை சென்று இருக்கும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்றுள்ளது.
இதைதொடர்ந்து, இலங்கையில் உள்ள ஆர்பிஎஸ்சி மைதானத்தில் நாளை இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷா பதிரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் விலகியுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியின்போது மதுஷங்காவின் இடது காலில் காயம் ஏற்பட்டது.
3வது டி20 போட்டியில் கேட்ச் பிடிக்க டைவிங் செய்யும்போது பதிரனாவின் வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.
இதனால், செவ்வாயன்று பல்லேகலேயில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் பதிரனா பந்துவீசவில்லை.
மேலும், காயம் அடைந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், குசல் ஜனித், பிரமோத் மதுஷன் மற்றும் ஜெப்ரி வான்டர்சே ஆகியோர் அணியில் காத்திருப்பு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர்கொண்டது.
- இந்தப் போட்டியில் இந்தியா ஒரு கோல் மட்டுமே அடித்தது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.
இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான பெல்ஜியத்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை அபிஷேக் அடித்தார்.
இரண்டாவது பாதியில் பெல்ஜியம் வீரர்கள் சிறப்பாக விளையாடி 2 கோல்கள் அடித்தனர். இதனால் பெல்ஜியம் அணி இந்தியாவை 2-1 என வீழ்த்தியது.
இதன்மூலம் 4 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றார்.
- இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் நிகாத் ஜரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனையை எதிர்கொண்டார்.
இதில் சீன வீராங்கனை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் நிகாத் ஜரின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.






