என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய இங்கிலாந்து 315 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் வெற்றி பெற்றது.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடியாக ஆடி 315 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 95 ரன்னிலும், வில் ஜாக்ஸ் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக் 39 ரன்னும், ஜேமி சுமித் 23 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 35 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய சார்பில் மார்னஸ் லாபுசாக்னே, ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 10 ரன்னிலும், ஸ்மித், கேமரூன் கிரீன் தலா 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக் ஆடிய டிராவிஸ் ஹெட் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு லபுசாக்னே ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 148 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், ஆஸ்திரேலியா 44 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 129 பந்தில் 5 சிக்சர், 20 பவுண்டரி உள்பட 154 ரன்னும், லபுசாக்னே 61 பந்தில் 77 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோரை எதிர்கொண்டார்.
இதில் பன்சோத் 21-17, 19-21, 21-16 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் பன்சோத், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதுகிறார்.
- சதம் அடித்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
- இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களுடன் தடுமாறியது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சரிவில் இருந்த இந்திய அணியை ஜடேஜாவுடன் சேர்ந்து மீட்டதோடு, சதம் அடித்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
இந்த இன்னிங்ஸில் 112 பந்துகளில் 102 ரன்களை எடுத்துள்ள அஷ்வின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். போட்டி துவங்கியதில் இருந்து இரண்டு இடைவெளியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களுடன் தடுமாறியது.

அப்போது களமிறங்கிய அஷ்வின் இன்றைய ஆட்டநேரம் முடியும் வரை தனது விக்கெட்டை கொடுக்காமல், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகர கேப்டனான எம்எஸ் டோனி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்களை மட்டும் அடித்துள்ளார். அந்த வகையில், இன்றைய போட்டியில் சதனம் அடித்ததன் மூலம் அஷ்வின் எம்எஸ் டோனி போன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்களை நிறைவு செய்துள்ளார். சதம் அடித்த அஷ்வினுக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- மாரியப்பனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
- இதைத் தொர்ந்து அவர் மக்கள் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார்.
பாரீஸில் நடைபெற்ற 2024 பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
இது பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் வென்ற மூன்றாது பதக்கம் ஆகும். பாராலிம்பிக்ஸில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்பசாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சொந்த ஊரில் மாரியப்பனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இதைத் தொர்ந்து அவர் மக்கள் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார்.
இந்த முறை வெண்கலம் வென்றிருந்த நிலையில், அடுத்த பாராலிம்பிக்ஸில் நிச்சயம் தங்கம் வெல்வது உறுதி என மாரியப்பன் தங்கவேலு தெரிவித்தார். உடல்நிலை மற்றும் தட்ப வெப்பநிலை காரணமாக இந்த முறை தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்ததாக அவர் தெரிவித்தார்.
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஷ்வின் சதமடித்து அசத்தினார்.
- இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அஷ்வின் சதமடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
தனது சொந்த மண்ணில் சதமடித்து அசத்திய அஷ்வினை முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "நம் மண்ணின் சிறந்த ஆல்ரவுண்டர் அஷ்வினின் டெஸ்ட் சதத்திற்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர். மிகச்சிறப்பான ஆட்டம் அஷ்வின். உங்களின் ஹோம் மைதானத்தில் மீண்டும் சதம் விளாசியது மிகுந்த மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா இந்தி அமைப்பினர் கோஷம்
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
போட்டியை தடை செய்ய கோரிய கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
- முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- அஷ்வின், ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இவரது பந்து வீச்சில் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (0), விராட் கோலி (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், ரிஷப் பண்ட் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரவிச்சந்திரன் அஷ்வின் சதமடித்து அசத்தினார். 108 பந்துகளில் சதம் கடந்த அஷ்வின் பத்து பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரங்களுடனும், ஜடேஜா 86 ரங்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் சார்பில் ஹாசன் முகமது 4 விக்கெட்டுகளையும் நஹித் ராணா மற்றும் மெஹிடி ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
- ஜெய்ஸ்வால்- ரிஷப் பண்ட் ஜோடி 54 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.
இவரது பந்து வீச்சில் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (0), விராட் கோலி (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சுமார் இரண்டு வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய ரிஷப் பண்ட் முதலில் திணறினார். அதன்பின் சுதாரித்து விளையாட ஆரம்பித்தார்.
மறுமுனையில் ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்த ஜோடி விக்கெட் இழக்காமல பார்த்துக் கொண்டது. இவர்களின் நிதானமான மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் வங்கதேச அணியால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது.
இதனால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 37 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தலா 6 ரன்னில் அவுட். கில் டக்அவுட்.
- ராணா முகமது 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. வானம் மேகமூட்டமாக இருந்ததால் வங்கதேச அணி கேப்டன் ஷன்டோ பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் 3 ஓவரில் இந்தியா 4 ரன்கள் எடுத்தது.
4-வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் 6-வது ஓவரில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 6-வது ஓவரை ஹசன் முகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 14 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது.
அடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். 8-வது ஓவரின் 3-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் 8 பந்துகளை சந்தித்த நிலையில் டக்அவுட் ஆகி வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
விராட் கோலியாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஹசன் முகமது வீசிய போட்டியின் 10-வது ஓவரில் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 6 பந்தில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது திணறி வருகிறது.
10.30 மணி நிலவரப்படி இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 3 விக்கெட்டுகளையும் ஹசன் முகமது வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் வானம் மேகமூட்டமாக உள்ளதாக வங்கதேசம் பந்து வீச்சு தேர்வு.
- டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருப்போம் என்றார் ரோகித் சர்மா.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கான டாஸ் சரியாக 9 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் வங்கதேச அணி கேப்டன் ஷன்டோ டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
பொதுவாக இந்திய மைதானங்களில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். ஆனால் சென்னையில் இன்று காலை லேசான மழை பெய்தது. மெலும், தற்போது மேகமூட்டமாக உள்ளதால், சூழ்நிலை பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருப்போம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
வங்கதேச ஆடும் லெவன் அணி:-
1. ஷத்மான் இஸ்லாம், 2. ஜகிர் ஹசன், 3. நஜ்முல் ஹொசைன் ஷன்டோ (கேப்டன்), 4. மொமினுல் ஹக், 5. முஷ்பிகுர் ரஹிம், 6. ஷாஹிப் அல் ஹசன், 7. லிட்டோன் தாஸ், 8. மெஹிதி ஹசன் மிராஸ், 9. தஸ்கின் அகமது, 10. ஹசன் முகமது, 11. நஹித் ராணா.
இந்தியா ஆடும் லெவன் அணி:-
1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. கே.எல். ராகுல், 6. ரிஷப் பண்ட், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. பும்ரா, 10. ஆகாஷ் தீப், 11. முகமது சிராஜ்.
- வளைகுடா நகரமான தோஹா அல்லது அபுதாபியில் நடத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.
- சவுதி அரேபியாவும் ஏலத்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் 18-க்கான ஏலம் நவம்பரில் 3-வது அல்லது 4-வது வாரத்தில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏலம் துபாயில் நடந்ததை போலவே, இந்த முறையும் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வளைகுடா நகரமான தோஹா அல்லது அபுதாபியில் நடத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் சமீப காலமாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் அதிக முதலீடுகளை செய்து வரும் சவுதி அரேபியாவும் ஏலத்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இடம் குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை.
தக்கவைப்பு விதிகள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படலாம். அதாவது ஏலத்திற்கான திட்டத்தைச் செய்ய அணிகளுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும். அணிகள் தங்கள் தக்கவைப்பை அறிவிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 15-க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கமிந்து மென்டிஸ் சதம் விளாசினார்.
- இதன் மூலம் பாகிஸ்தானின் சவுத் ஷகீலின் உலக சாதனையை மென்டீஸ் சம் செய்துள்ளார்.
காலே:
இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 106 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களம் புகுந்த கமிந்து மென்டிஸ் நிலைத்து நின்று ஆடி அணியை சிக்கலில் இருந்து மீட்டார். அவருக்கு குசல் மென்டிஸ் (50 ரன்) நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இதனால் தனது 4-வது சதத்தை நிறைவு செய்த கமிந்து மென்டிஸ் 114 ரன்களில் (173 பந்து, 11 பவுண்டரி) கேட்ச் ஆனார். ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் சேர்த்துள்ளது.
கமிந்து மெண்டிஸ் சதம் விளாசியதன் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 50-க்கு அதிகமான ரன்களை குவித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் சவுத் ஷகீல் தனது முதல் ஏழு டெஸ்டிலும் 50-க்கும் அதிகமான ஸ்கோரை அடித்த முதல் டெஸ்ட் வீரர் ஆனார்.
இதற்கு முன், இந்தியாவின் சுனில் கவாஸ்கர் , பாகிஸ்தானின் சயீத் அகமது , மேற்கிந்தியத் தீவுகளின் பசில் புட்சர் மற்றும் நியூசிலாந்தின் பெர்ட் சட்க்ளிஃப் ஆகியோர் தங்களின் முதல் ஆறு டெஸ்டிலும் தலா அரை சதம் அடித்தனர்.






