என் மலர்
விளையாட்டு
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் யுபி யோதாஸ் அணி 9வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் யுபி யோதாஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய யுபி யோதாஸ் புள்ளிகளைக் குவித்தது.
இறுதியில், யுபி யோதாஸ் அணி 36-33 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தி 9வது வெற்றியைப் பதிவு செய்தது.
மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 34-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
- முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது.
- சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை.
சென்னை:
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் சென்னையின் எப்.சி., ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஸ்ட் பெங்கால் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தியது.
சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணி அசத்தல் வெற்றி பெற்றது.
- 1,082-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 5 லட்சம் ரன்களை குவித்துள்ளது.
- 3-வது இடத்தில் இந்தியா 2 லட்சத்து 78,751 ரன்கள் எடுத்துள்ளது.
வெலிங்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 125 ரன்களில் சுருண்டது.
இதனையடுத்து 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் டக்கெட் 92 ரன்களிலும், ஜேக்கப் பெத்தேல் 96 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட் 73 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் 1,082-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 5 லட்சம் ரன்களை குவித்த ஒரே அணி என்ற உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 4 லட்சத்து 29 ரன்களை எடுத்துள்ளது. 3-வது இடத்தில் இந்தியா 2 லட்சத்து 78,751 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணிகள்:-
5,00,126 - இங்கிலாந்து (1082 போட்டிகள், 18,954 இன்னிங்ஸ்)
4,29,000 - ஆஸ்திரேலியா (868 போட்டிகள், 15,183 இன்னிங்ஸ்)
2,78,751 - இந்தியா (586 போட்டிகள், 10,119 இன்னிங்ஸ்)
- 32 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.
- 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் வெர்ரைன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 242 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை தரப்பில் மேத்யூஸ் 40 ரன்னுடனும், காமிந்து மெண்டிஸ் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
116 ரன்கள் பின்னிலையுடன் இலங்கை இன்று பேட்டிங்கை தொடங்கியது. இதில் மேத்யூஸ் 44 ரன்னிலும், காமிந்து மெண்டிஸ் 48 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய தனஞ்செயா டி சில்வா 14 ரன், குசல் மெண்டிஸ் 16 ரன், பிரபாத் ஜெயசூர்யா 24 ரன், விஷ்வா பெர்ணாண்டோ 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் இலங்கை தனது முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 89 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 32 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக டோனி டி ஜோர்ஜி - மார்க்ரம் களமிறங்கினர். டோனி டி ஜோர்ஜி 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் ரிக்கல்டன் 24 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதனால் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் பிரதாப் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 10 சுற்று ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர்.
- இன்னும் 4 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.
சிங்கப்பூர்:
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 9 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று 10-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. இந்நிலையில், 10 சுற்று ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர். முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
லிரென் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மேற்கொண்டு 2.5 புள்ளிகள் தேவையாக உள்ளது. அதேவேளையில் முதன்முறையாக பட்டம் வெல்வதற்கு குகேஷுக்கும் மேற்கொண்டு 2.5 புள்ளிகள் தேவைப்படுகிறது. இன்னும் 4 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.
- சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார்.
- அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார்.
அடிலெய்டு:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் சதம் (140 ரன்கள்) மற்றும் லபுஸ்சேனின் அரைசதத்தின் (64 ரன்கள்) உதவியுடன் 337 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 157 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை எடுத்துள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். மேலும் டிராவிஸ் ஹெட்டை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து டிராவிஸ் ஹெட் கூறியதாவது, நான் நன்றாக பந்து வீசினாய் என்றுதான் கூறினேன். ஆனால் சிராஜ் என்னை தவறாக புரிந்துகொண்டார்.
- ரிஷப் பண்ட் 28 ரன்களுடனும் நிதிஷ் 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
- ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய 157 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். கேஎல் ராகுல் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 24, விராட் கோலி 11, சுப்மன் கில் 28, ரோகித் சர்மா 6 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரிஷப் பண்ட் 28 ரன்களுடனும் நிதிஷ் 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 140 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அபாரமாக விளையாடி 111 பந்துகளில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் 140 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களிலுமே டிராவிஸ் ஹெட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பட்டியல்:-
1. டிராவிஸ் ஹெட் - 111 பந்துகள்
2. டிராவிஸ் ஹெட் - 112 பந்துகள்
3. டிராவிஸ் ஹெட் - 125 பந்துகள்
4. ஜோ ரூட் - 139 பந்துகள்
5. ஆசாத் ஷபீக் - 140 பந்துகள்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை 50+ ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார்.
- இந்த பட்டியலின் 5-வது இடத்தில் ராகுல் டிராவிட் (99 முறை) உள்ளார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 280 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 125 ரன்னில் சுருண்டது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. அந்த அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் குவித்திருந்தது. ரூட் 73 ரன்னிலும் பென் ஸ்டோக்ஸ் 35 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியில் அரை சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை 50+ ரன்களை குவித்த 4-வது வீரர் என்ற சாதனையை ரூட் படைத்துள்ளார்.
இதில் முதல் வீரராக இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் உள்ளார். அவர் 119 முறை 50+ ரன்களை அடித்துள்ளார். 2-வது 3-வது இடங்கள் முறையே தென் ஆப்பிரிக்கா வீரர் கல்லீஸ் (103 முறை), ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் (103 முறை) ஆகியோரை தொடர்ந்து ரூட் 4-வது இடத்தில் உள்ளார். 5-வது இடத்தில் ராகுல் டிராவிட் (99 முறை) உள்ளார்.
- டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்மித் 2 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து டிராவிஸ் ஹெட், லபுசேன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசினர். லபுசேன் 64 ரன்னில் நிதிஷ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 9, அலெக்ஸ் ஹேரி 15, பேட் கம்மின்ஸ் 12 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 140 ரன்களில் சிராஜ் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- தெண்டுல்கர் நண்பர் வினோத் காம்ப்ளியின் உடல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
- காம்ப்ளியின் சொந்த வாழ்க்கையில் ஏற்கனவே கட்டுக்கோப்பின்மை, ஆல்கஹால் பாதிப்பு இருந்தது.
தெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, பிரவீண் ஆம்ரே ஆகியோரது கிரிக்கெட் குருநாதர் ராமகண்ட் அச்ரேக்கரின் நினைவு தின நிகழ்ச்சிக்கு முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி வந்து இருந்தார். அங்கு அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பால்ய நண்பர் தெண்டுல்கரை அணைத்து கண்ணீர் விட்ட வீடியோ வைரலானது.
காம்ப்ளியின் சொந்த வாழ்க்கையில் ஏற்கனவே கட்டுக்கோப்பின்மை, ஆல்கஹால் பாதிப்பு இருந்தது. இவரது இந்தப் பழக்கம் நண்பர்களிடமிருந்து அந்நியப்பட வைத்தது.
இந்நிலையில் 1983 உலக கோப்பையை வென்ற முன்னாள் வீரர்கள் வினோத் காம்ப்ளிக்கு நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளனர். ஒரு நிபந்தனையுடன் உதவ முன்வந்துள்ளதாக முன்னாள் வீரர் பல்வீந்தர் சிங் சாந்து தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக கூறும்போது "கபில்தேவ் என்னிடம் தெளிவாக ஒன்றைச் சொன்னார். மறுவாழ்வு சிகிச்சைக்கு வினோத் காம்ப்ளி தயார் என்றால் நிதிரீதியாக நாம் உதவுவோம். அவர் முதலில் மறுவாழ்வு சிகிச்சைக்கு தன்னை ஒப்படைக்க வேண்டும். என்ன செலவாகிறதோ அதைக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், சிகிச்சை எத்தனை நாட்களுக்கு நீடித்தாலும் கவலையில்லை" என்றார்.
இப்போதைக்கு காம்ப்ளி பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) அளிக்கும் ரூ.30,000 ஓய்வூதியத்தை மட்டும்தான் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்.
1983 உலகக்கோப்பை வெற்றி நாயகர்கள் ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு மறைந்த கெய்க்வாட்டிற்கு உதவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- லபுசேன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- டிராவிஸ் ஹெட் 53 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்திருந்தது. லபுசேன் 20 ரன்னுடனும், மெக்ஸ்வீனி 38 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெக்ஸ்வீனி 39 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்மித்தை 2 ரன்னில் வெளியேற்றினார் பும்ரா. இதனால் 103 ரன்னுக்குள் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. லபுசேன் 114 பந்தில் அரைசதம் அடித்தார். டிராவிஸ் ஹெட் 63 பந்தில் அரைசதம் விளாசினார்.
ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 168 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. லபுசேன் 64 ரன் எடுத்த நிலையில் நிதிஷ் ரெட்டி பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியா 2-வது நாள் டின்னர் இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிட் ஹெட் 53 ரன்னுடனும், மார்ஷ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை ஆஸ்திரேலியா 11 ரன்னில் முன்னிலை பெற்றுள்ளது. 100 ரன்கள் வரை முன்னிலை பெற்றால் அது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகும். இதனால் போட்டி மெதுமெதுவாக இந்தியாவிடம் இருந்து கை நழுவிச் செல்கிறது.






