என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 லட்சம் ரன்கள் குவித்த ஒரே அணி- இங்கிலாந்து உலக சாதனை
    X

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 லட்சம் ரன்கள் குவித்த ஒரே அணி- இங்கிலாந்து உலக சாதனை

    • 1,082-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 5 லட்சம் ரன்களை குவித்துள்ளது.
    • 3-வது இடத்தில் இந்தியா 2 லட்சத்து 78,751 ரன்கள் எடுத்துள்ளது.

    வெலிங்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 125 ரன்களில் சுருண்டது.

    இதனையடுத்து 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் டக்கெட் 92 ரன்களிலும், ஜேக்கப் பெத்தேல் 96 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட் 73 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் 1,082-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 5 லட்சம் ரன்களை குவித்த ஒரே அணி என்ற உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 4 லட்சத்து 29 ரன்களை எடுத்துள்ளது. 3-வது இடத்தில் இந்தியா 2 லட்சத்து 78,751 ரன்கள் எடுத்துள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணிகள்:-

    5,00,126 - இங்கிலாந்து (1082 போட்டிகள், 18,954 இன்னிங்ஸ்)

    4,29,000 - ஆஸ்திரேலியா (868 போட்டிகள், 15,183 இன்னிங்ஸ்)

    2,78,751 - இந்தியா (586 போட்டிகள், 10,119 இன்னிங்ஸ்)

    Next Story
    ×