என் மலர்
விளையாட்டு
கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சர்பராஸ் அகமது உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடினால் பாகிஸ்தான் அணிக்கு திரும்பலாம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் சர்பராஸ் அகமது. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டனில் பதவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. உள்நாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடினால் அணியில் மீண்டும் அவருக்கு இடம் உண்டு என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் புரவலராக இருக்கும் இம்ரான் கான் இதுகுறித்து கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதை வைத்து வீரரின் ஆட்டம் மற்றும் ஃபார்ம்-ஐ நிர்ணயிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் சரியானது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் சர்பராஸ் அகமதுவால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப முடியும்’’ என்றார்.

மழையால் போட்டி 9 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில், நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி உள்ளூர் நேரப்படி புரோவிடென்ஸ்சில் நேற்றிரவு நடைபெற்றது. மழைக்காரணமாக போட்டி 9 ஓவராக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்தது. 9 ஓவர்கள் என்பதால் இந்தியா வீராங்கனைகள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முயன்றனர். இதனால் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பூஜா மட்டும் 10 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 9 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் அடித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டும், ப்ளெட்சர் மற்றும் கிரிம்மோண்ட் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
பின்னர் 11 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் மூன்று விராங்கனைகள் இரட்டை இலக்க ரன்களை தாண்டினாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களே எடுக்க முடிந்தது.
இதனால் இந்திய பெண்கள் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைசிறந்த அணிகளுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என வங்காளதேச அணி கேப்டன் தெரிவித்துள்ளார்.
- கடைசி ஏழு மாதங்களில் இரண்டு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளோம்
- எங்களால் உடனடியாக வெற்றி பெற முடியாமல் இருக்கலாம்
- ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் வெற்றிகளை பெறுவோம்
இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்காளதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்களில் படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியை அந்த அணி கேப்டன் மொமினுல் ஹக்கால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
என்றாலும், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வெற்றிகளை குவிப்போம் என்று மொமினுல் ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மொமினுல் ஹக் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடன் பயிற்சியாளருடன் இணைந்து டெஸ்ட் அணியை பற்றி விவாதிக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.
அணியின் கட்டமைப்பு பற்றி விவாதிக்க முடியும். தற்போது எங்களால் உடனடியாக வெற்றிகளை பெற முடியாமல் இருக்கலாம், ஆனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் எங்களால் வெற்றியை ஈட்ட முடியும்.
மனதளவில் தயாராகிவிட்டால், நேர்மறையாக சிந்திக்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட் கட்டமைப்பு பற்றி யோசித்தால் மனநிலை அதிலேயே இருக்க வேண்டும். அதன்பின் தானாகவே டெஸ்ட் போட்டியை பற்றி சிந்திக்க தோன்றும்.
நாங்கள் ஏராளமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளோம். கடைசி ஏழு மாதங்களில் பார்த்தீர்கள் என்றால், இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளோம். மற்ற அணிகளைப் போன்று நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இது மிக முக்கியமான வேறுபாடு’’ என்றார்.
வங்காளதேசம் இதுவரை 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87-ல் வெற்றி பெற்றுள்ளது. 13 முறை வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலான வெற்றி அந்த அணியை விட குறைவான ரேங்கில் உள்ள அணிகளுக்கு எதிராக கிடைத்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோவில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.
3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு அணிகளும் களம் இறங்கின.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஹஸ்ரதுல்லா சஜாய், ரஹ்மதுல்லா குர்பாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஜாய் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ஆனால் குர்பாஸ் 52 பந்தில் 79 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொதப்ப இறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. ஷாய் ஹோப்பை (46 பந்தில் 52 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொதப்ப வெஸ்ட் இண்டீஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

கரிம் ஜனத் தொடர் நாயகன் விருதையும், குர்பாஸ் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர். இதற்கு முன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியிருந்தது. அதற்கு தற்போது ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன்-உல்-ஹக் 3 விக்கெட் வீழ்த்தினார்.

கரிம் ஜனத் தொடர் நாயகன் விருதையும், குர்பாஸ் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர். இதற்கு முன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியிருந்தது. அதற்கு தற்போது ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய பெண்கள் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கயானா:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
இதையடுத்து 4வது டி20 போட்டி கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஏற்கனவே 3 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 4வது போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய பெண்கள் அணி ஆதிக்கம் செலுத்தி உள்ளது. 5வது டி20 போட்டி வரும் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய பெண்கள் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி நடக்கவுள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முதன் முறையாக பகல்- இரவாக இந்த டெஸ்ட் நடக்கிறது.
இதற்காக இந்திய வீரர்கள் நேற்று இந்தூரில் மின்னொளியில் பயிற்சி பெற்றனர். முதல் டெஸ்ட் போட்டி 3 நாளிலேயே முடிந்து விட்டதால் வீரர்கள் அங்கு பயிற்சி பெற்றனர்.
கேப்டன் விராட் கோலி, ரோகித்சர்மா மற்றும் வேகப்பந்து வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை.

டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடும் மயங்க் அகர்வாலுக்கு ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் மயங்க அகர்வால் மிகவும் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 243 ரன்கள் குவித்த அவரது ஸ்கோரில் 28 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.
டெஸ்ட் போட்டியில் அகர்வாலின் 2-வது இரட்டை சதம் ஆகும். 8 இன்னிங்சில் அவர் 2 இரட்டை சதம் அடித்து சாதித்தார். இதன் மூலம் அவர் பிராட்மேனை முந்தி சாதனை படைத்தார்.
மேலும் அகர்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 8 சிக்கர்கள் அடித்ததன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த சித்துவின் சாதனையை சமன் செய்தார்.

தொடக்க வீரர் வரிசையில் விளையாடும் தவானின் ஆட்டம் சமீப காலமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வாலை ஒருநாள் போட்டிக்கு கொண்டு வரலாம் என்று ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்திய அணி தற்போது வங்காளதேசத்துடன் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு வெஸ்ட் இண்டீசுடன் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
20 ஓவர் போட்டிகள் டிசம்பர் 6, 8, மற்றும் 11 ஆகிய தேதிகளிலும், ஒரு நாள் போட்டிகள் டிசம்பர் 15, 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தவானை நீக்கி வீட்டு அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒருவேளை இந்த தொடரில் அணியின் தற்காலிக கேப்டனான ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால் அகர்வால் நிச்சயம் இடம் பெறுவார்.
இந்திய அணி நியூசிலாந்து சென்று ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் அல்லது தவான் இடத்தில் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கபடுகிறது.
உலக கோப்பை போட்டியில் கடைசி நேரத்தில் விஜய் சங்கருக்கு மாற்றாக மயங்க் அகர்வால் அனுப்பப்பட்டார். ஆனாலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
உள்ளூர் போட்டி மற்றும் டெஸ்டில் வேகமாக ஆடுவதால் அவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் தேர்வு செய்யப்படுவதை தவிர்க்க முடியாதவராக இருக்கிறார்.

ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஆஸ்திரியா வீரரான டொமினிக் தீம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
லண்டன்:
உலகின் ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச் சுற்று லண்டனில் நடந்தது.
இதன் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா)- ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினார்கள்.
முதல் 3 இடங்களில் உள்ள நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (செர்பியா) ஆகியோரை பின்னுக்கு தள்ளி விட்டு இருவரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தனர்.
இதில் 21 வயதான சிட்சிபாஸ் 6-7 (6-8), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் டொமினிக் தீம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 35 நிமிட நேரம் தேவைப்பட்டது.
அவர் ஏற்கனவே அரை இறுதியில் ரோஜர் பெடரரை தோற்கடித்து இருந்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஸ்டெபானஸ் சிட்சிபாசுக்கு ரூ.9½ கோடி பரிசாக கிடைத்தது. ஏ.டி.பி. இறுதிச்சுற்று பட்டத்தை இளம் வயதில் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த பட்டத்தை பெற்ற முதல் கிரீஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த லைடன் ஹெவிட் 20 வயதில் இந்த படத்தை பெற்றிருந்தார்.
இந்த போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போனாலும் இந்த ஆண்டின் இறுதிப்பட்டியலில் ரபெல் நடால் தொடர்ந்து ‘நம்பர் 1’ இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 2-வது இடத்திலும், பெடரர் 3-வது இடத்தில் உள்ளனர்.
இறுதிப்போட்டியில் விளையாடிய டொமினிக் தீம் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்தார். மெட்வதேவ் (ரஷ்யா) ஒரு இடம் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற சிட்சிபாஸ் 6-வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மார்ஷ் கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது வெஸ் அகர் அடித்த பந்து தாக்கியதில் ஆஷ்டன் அகருக்கு இரத்தம் கொட்டியது.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவில் மார்ஷ் கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டுவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் மேற்கு ஆஸ்திரேலியா-தெற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதில் தெற்கு ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த அணியின் வெஸ் அகர் அடித்த ஒரு பந்து, ‘மிட்ஆன்’ திசையில் கேட்ச் செய்ய முயற்சித்த அவரது சகோதரரான ஆஷ்டன் அகரை (மேற்கு ஆஸ்திரேலியா) பதம் பார்த்தது. அதாவது சில அடி ஓடி வந்து அவர் தடுமாற, பந்து நேராக அவரது நெற்றியில் பலமாக தாக்கி ரத்தம் கொட்டியது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பிறகு அவரது தம்பி வெஸ் அகர் (9 ரன்) கொஞ்சம் பதற்றத்துடனே பேட்டிங் செய்ததை காண முடிந்தது. இந்த ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியா 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
26 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ஆஷ்டன் அகர் ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட், 9 ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் 21 ஆட்டங்களில் ஆடியிருக்கிறார்.

சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 14 பந்தில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மேகாலயா ஆல்-ரவுண்டர் அபாய் நெகி பெற்றுள்ளார்.
வான்கடே:
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் (டி பிரிவு) மிசோரம் அணிக்கு எதிராக மேகாலயா ஆல்-ரவுண்டர் அபாய் நெகி 14 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதத்தை கடந்து பிரமிக்க வைத்தார்.
சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இதுவாகும். இதற்கு முன்பு ராபின் உத்தப்பா 15 பந்துகளில் அரைசதத்தை எட்டியதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
27 வயதான அபாய் நெகி 50 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அவரது அதிரடி ஜாலத்தின் உதவியுடன் மேகாலயா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு போர்ச்சுகல், ஜெர்மனி உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன.
லக்சம்பர்க் சிட்டி:
கால்பந்து போட்டியில் உலக கோப்பைக்கு அடுத்து பெரிய போட்டியாக வர்ணிக்கப்படும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜூன், ஜூலை மாதங்களில் முதல்முறையாக மொத்தம் 12 நாடுகளில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிக்கான தகுதி சுற்று தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ‘பி’ பிரிவில் லக்சம்பர்க் சிட்டியில் நேற்று அரங்கேறிய கடைசி லீக்கில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி, லக்சம்பர்க் அணியை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் புருனோ பெர்னாண்டஸ் (39-வது நிமிடம்), கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (86-வது நிமிடம்) கோல் போட்டனர். ரொனால்டோவுக்கு இது 99-வது சர்வதேச கோலாகும். இதே பிரிவில் செர்பியா- உக்ரைன் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த உக்ரைன் (6 வெற்றி, 2 டிராவுடன் 20 புள்ளி), போர்ச்சுகல் (5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளி) ஆகிய அணிகள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதே போல் நேற்று முன்தினம் இரவு மோன்செங்கிளாட்பாச் நகரில் நடந்த (சி பிரிவு) ஒரு ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் பெலாரசை பந்தாடியது. டோனி குரூஸ் 2 கோலும், ஜின்டர், கோரட்ஸ்கா தலா ஒரு கோலும் அடித்தனர். இன்னும் ஒரு லீக் எஞ்சியுள்ள நிலையில் ஜெர்மனி அணி (6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 18 புள்ளி) யூரோ போட்டிக்கு தொடர்ந்து 13-வது முறையாக தகுதி பெற்றது. இதே பிரிவில் வடக்கு அயர்லாந்து அணியுடன் டிரா கண்ட நெதர்லாந்து அணியும் (16 புள்ளி) யூரோ வாய்ப்பை உறுதி செய்தது.
கடந்த உலக கோப்பை போட்டியில் இறுதிசுற்று வரை வந்து வியப்பூட்டிய குரோஷிய அணி ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி சொந்த ஊரில் நடந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தியதோடு தனது பிரிவில் முதலிடத்தை (5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளி) பெற்று யூரோ போட்டி அதிர்ஷ்டத்தை தட்டிச்சென்றது.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இதுவரை 17 அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

தினேஷ் கார்த்திக் 58 ரன்களும், சாய் கிஷோர் மற்றும் விஜய் சங்கர் தலா மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக் தொடரில் தமிழ்நாடு இன்று விதர்பா அணியை எதிர்கொண்டது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் விதர்பா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்தது. வாஷிங்டன் சுந்தர் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னிலும், முரளி விஜய் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்த வந்த பாபா அபரஜித் 27 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 32 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் விளாசினார்.
விஜய் சங்கர் 17 பந்தில் 26 ரன்களும், ஷாருக் கான் 16 பந்தில் 19 ரன்களும் அடிக்க தமிழ்நாடு 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் வந்தவர்களை விஜய் சங்கர், சாய் கிஷோர் கவனிக்க 14.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த விதர்பா 55 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு 113 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
சாய் கிஷோர் 3.5 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். விஜய் சங்கர் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு ‘பி’ பிரிவில் 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ரன்கள் அடிப்படையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா களம் இறங்கியது. முதல் ஓவரின் 3-வது பந்திலேயே சாய் கிஷோர் தொடக்க பேட்ஸ்மேனை டக்அவுட்டில் வெளியேற்றினார். மற்றொரு தொடக்க வீரரை வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றினார்.